அதீதக் கனவொன்றில் என்னையே அவளாகக் கண்டேன். கவிதைப் பார்வையாளனுக்கும், கவிதைகளை நுகருபவனுக்குமான வித்தியாசங்களை உணர்த்தும்படி கோவிலுக்கும் கல்லறைக்குமான வேறுபாடுகளை உணர்த்தினாள் அவள். என் கனவில் வேற்றுகிரகவாசி ஒருவன் பேசியதும் கவிதை மொழி போலவேயிருந்தது. விழித்து எழுந்ததும் உடனேயே அவளிடம் கவிதையொன்றை வாசிக்கும்படி கேட்டுக் கொண்டேன்.
புத்தகத்தில் இருந்த பூக்களில் இதழ்கள் ஓரிடமும் முட்கள் ஓரிடமுமாகவே இருக்கின்றன. முட்களைப் பறிக்கும் போது மட்டும் விரல்களில் வண்ணம். ஓவியப்பட்டாம்பூச்சிகள் புத்தகத்தில் இருந்த பூக்கள் மேல் அமர்ந்திருந்தன. இறகுகளின் வண்ணங்கள் எல்லாம் அவன் விரல்களில் ஒட்டிக்கொண்டன. விரல்களைப் பட்டாம்பூச்சியாக்கி பறக்க விட்டபடியே கனவுகளையே மீண்டும் மீண்டும் அவள் வாசித்தவை எல்லாம் ஊமைக் கவிதைகளாகவே ஒலித்தன.
தத்தம் காலைப் பொழுதுகளைச் சென்றடையும் என்ற நம்பிக்கைகளைச் சுமந்து கனவுப் பயணங்கள் ஊர்ந்துகொண்டிருக்கின்றன. இப்போது தலை குனிந்து என்ன பயன். வெட்கங்கெட்டவர்கள் பயணிக்கும் பாதையாகவே இது இருக்கிறது, கனவுச் சாலை, கவிதைச் சாலை. இங்கே கடவுளர்கள் கூட தத்தம் அடையாளங்களைத் தொலைத்தாக வேண்டியிருக்கிறது.
ஒரேயொரு நிபந்தனையின் பேரில் என் மகிழ்ச்சித் தருணங்களை எல்லாம் உங்களோடு பகிர்வேன், உங்கள் கண்ணீரின் முகவரி எங்கள் கவிதைகள், உங்கள் துக்கங்களின் அடையாளம் எங்கள் கவிதைகள். பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை உணர்த்திய காலங்கள் கை மீறிப் போகும் முன், ஒன்றே ஒன்றை உணர்த்துகிறேன், பொறுத்தார் பூமி ஆள்வார், பொறுக்காதார் பற்றி ஏதும் சொல்வதற்கில்லை. எங்கள் முயற்சிகள் எல்லாவற்றையும் கவிதைகள் மேலாக்கி விட்டாயிற்று, இனிமேல் உங்கள் விதிகளையும் எவ்வளவுதான் நோவீர்கள்?
இதைத் தம் பாணியிலேயே தொடர எங்கள் பெருமைக்குரிய சமகால கவிஞர் நேசமித்ரனையும், இன்னதென்று பிரித்தறிய முடியாத பதிவர் எல்.கே. என்ற எல்.கார்த்திக்கையும், மொக்கை நாயகர்கள் ஆர்.கோபி விஜி, மற்றும் ஸ்கிரிப்ளிங்க்ஸ் வித்யாவையும் வேண்டி விரும்பி அழைக்கிறேன்.
8 comments:
முதல்ல கோனார் நோட்ஸ் அனுப்புங்க, பிரிஞ்சுட்டு வந்து கவனிச்சுக்கறேன் :))
//இன்னதென்று பிரித்தறிய முடியாத பதிவர் எல்.கே. என்ற எல்.கார்த்திக்கையும், /
இதுக்கு முதலில் அர்த்தம் சொல்லுங்கள்
இதோட சேர்த்து ஆறுமுறை படிச்சிட்டேன். புரிஞ்சும் புரியாமல் இருக்கு
கொஞ்சம்தான் புரிகிறது எனக்கும். நேசமித்திரன், விஜி , கோபி, எல்.கே, வித்யா, இப்பவரைக்கும் இவ்வளவே புரிகிறது.( எனக்குப் பெயர் எல்லாம் டக்குன்னு புரிஞ்சிரும். கேட்டீங்களா?)
பேசாம, நீங்க கவிதை மட்டும் எழுதலாம் வித்யா. மடங்கி மடங்கி இருந்தாலும் ரெண்டு டக்குல புரிஞ்சுப்போம்
இப்படிக்கு,
பயணிகள்,
நீதி கேட்டு நெடிய பயணிகள் சங்கம்,
ஆல் ஓவர் த வேர்ல்ட்.
//
பா.ராஜாராம் said...
கொஞ்சம்தான் புரிகிறது எனக்கும். நேசமித்திரன், விஜி , கோபி, எல்.கே, வித்யா, இப்பவரைக்கும் இவ்வளவே புரிகிறது.( எனக்குப் பெயர் எல்லாம் டக்குன்னு புரிஞ்சிரும். கேட்டீங்களா?)
//
siruchu mudiyala........:))
சாகித்ய அகாடமி வாங்க தகுதி படைத்த ஒரே பதிவராகிய என்னை வெறும் கவிதைப் பார்வையாளனாக எண்ணி அளப்பரிய ஆற்றல் கொண்ட என் விரல் நுனிகளில் நாளும் நாளும் பூத்திடும் எழுத்துப் பூக்களைத் தொடுத்து கணினி என்னும் நார் தொடுத்து நான் பின்னிடும் கவிதைகளைப் புறக்கணித்த வித்தகக் கவிஞர் விதூஷின் இவ்விடுகையைப் புறக்கணிக்கிறேன்.
:)))
ஒண்ணியும் ப்ரியல!! ஆனா, இத்தினி நா எங்கே போய்ட்டு வந்திருப்பீங்கோன்னு நெல்லாவே ப்ரியுது!! ;-))))))
Post a Comment