ஊஞ்சல் from Buzz

மழை

Sep 10

நேற்று ஒரு நிகழ்ச்சிக்கு போயிருந்தேன்.அதிருஷ்டவசமாக Dr. R.K.Pachauri அவர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது.

vedic astrology, climatic changes & life sciences மூன்றிற்குமான தொடர்பை பற்றிய சிந்தனை கிளப்பிய சந்திப்பு அது.

நன்றி விக்கி. இன்று விக்கி Tanvi Khanna யின் பஸ்சிலும் அதே போன்றதொரு சிந்தனையை "எல்லாமே கணக்குதான்" என்று vedic maths பக்கமும் திருப்பி விட்டது. நான் maths-சில் பயங்கர டைனோசர் (அழிந்து போனதொரு ஸ்பீசிஸ்) vedic maths மட்டும் எனக்கு தெளிவு படுத்த யாராவது நல்லவர்கள் சிக்குவாங்களா?

==================================================================================

தேநீர்

Sep 8

சோளிங்கர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி மலை கோவிலில் வரும் வெள்ளியன்று (September 10-2010) கும்பாபிஷேகம் நடைபெறப் போகிறது. கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு டிசம்பர் 31 -ஆம் தேதியும் அக்கோவிலில் தெய்வதரிசன அதிருஷ்டம் வாய்த்து வருகிறது.

இப்போ அதுவல்ல செய்தி, இன்று வரை 420 கோடிகள் கோவில்கள் மேம்பாட்டுக்காக கலைஞர் ஆட்சியில் செலவிட்டது, தமிழகத்தில் கோவில்களை மேம்படுத்த கலைஞரின் ஆர்வத்தையே காட்டுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.பெரியகருப்பன் அறிக்கை விடுத்து இருக்கிறார்.

அவரது political rival ஆன AIADMK-ஆட்சியில் இருந்த போது செலவிடப்பட்டது ரூ.147 கோடிகள் மட்டுமே என்பதும் அறிக்கையினூடே கசிய விடப் பட்டதாம்.

நான் என்ன யோசிக்கிறேன்னு கேட்டால்... 420 என்பது ரூபாயை மட்டுமே குறிக்கிறது என்பது read between lines. மேலும் 2006க்கு பிறகு விலைவாசியும் மூன்று நான்கு மடங்கு உயர்ந்து போனதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் இல்லியோ?

==================================================================================

பக்கோடா

2.Sep 7

இன்றைய தினம் இனிதே கழிந்தது என்றே கொள்ளலாம்.. மோதிரக் கையால் குட்டு என்பதும் நிஜம் தான் போலருக்கு... இதே வேலையைத்தான் பல முறை செய்த போதெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்த பலரும், பெரிய தலை பொதுவில் பாராட்டியதும், சகபணியாளர்கள் என்னவோ இன்னிக்குத்தான் என்னை recognise செய்வது போல பாராட்டுவதும், சிலாகிப்பதுமாக நடந்து கொள்வது அதிசயமாய் இருக்கிறது... இத்தனை நாள் நான் எங்கிருந்தேன்... என்னிக்கு என்னை காலி பண்ணப் போறாங்களோ... சீக்கிரம் வழி காட்டி விடு ஈஸ்வரா... # பல உண்மைகளை காட்டிய தினம் :((

ஒன்றும் (அல்லது) எதுவுமே தெரியாத மாதிரியே இருந்துக்கிறது பல விதத்தில் வசதியா இருக்குதானே?

a good manager has only one subordinate அப்டீன்னு Little R Associates-ன் founder லிட்டில் ராம் சொன்னதை இன்று உணர்கிறேன்... :-))

==================================================================================

3. Sep 1

மாவை ரொம்ப நேரம் அரைப்பதால் ஜவ்வுத்தன்மை அதிகரிக்கிறது. அப்படி அரைக்கப்பட்ட மாவு உதவுவதில்லை. அதே மாவை மீண்டும் "கொய்"ன்னு மஞ்சள் பூத்து வரும்போது அரைப்பதால் ஏற்படும் துர்நாற்றம் சகிக்கவியலாது # அலுப்பு, அங்கலாய்ப்பு, சலிப்பு, புலம்பல், வெறுப்பு போன்ற அனைத்து உணர்வுகளும்...

==================================================================================

ஊஞ்சல்

4. Sep 13

பி.பதிவர்: ஹாய்.. நல்லா இருக்கீங்களா..

நான்: நல்லா இருக்கேன் சார். நீங்க?

பி.பதிவர்: ம்ம்.. என்ன புக் படிக்கிறீங்க இப்போ..?

நான்: நேரமில்லை சார். ஏதோ கிடைப்பதை படிக்கிறேன்.

பி.பதிவர்: எழுத்தாளர் யாருங்க?

நான்: தெரிலங்க. நான் கன்டென்ட் நல்லா இருக்கும் போல தெரிஞ்சா மட்டும்தான் படிக்கிறது.

பி.பதிவர்: சமீபத்துல என்ன வாசிச்சீங்க..

நான்: போன வாரம் மயிலாப்பூரில் பழைய புஸ்தக தாத்தா கடையில் ஒரு பைண்டட் நாவல் எனக்குன்னு எடுத்து வச்சிருந்தார். "நூறு ரூவாய்" அப்டீன்னு.. அதையே நூத்தம்பது ரூவான்னாருங்க..

பி.பதிவர்: ஓ... நீங்க அத இப்போதான் படிக்கிறீங்களா.. வெரி லேட்... நான் சின்னப்லையே படிச்சிட்டேன்..

நான்: அப்போ அது நீங்க போட்ட புக்கா இருக்குமோ...

பி.பதிவர்... டொக்...

என்னை ப்ளாக் பண்ணும் அளவுக்கு என்னாங்க சொல்லிட்டேன்? # இன்னும் பிரபலமாகாத அப்பாவி பதிவி

3 comments:

R. Gopi said...

முதல் கமென்ட் போடுற அனுபவம் நல்லாத்தான் இருக்கு. முதல் டிகாக்ஷன் காபி மாதிரி.

என்ன ஒரே மாத்ஸ், எகனோமிக்ஸா இருக்கு.

\\மோதிரக் கையால் குட்டு\\

நீங்களும் பதிலுக்கு யாரையாவது குட்டுங்க. உதாரணத்துக்கு என்னைக் குட்டலாம். 'கோபி அருமையாகப் பின்னூட்டம் போடுகிறார்' அப்படின்னு:)

ஹுஸைனம்மா said...

பகோடா நசநசன்னு எண்ணெயா இருக்கு!! (புரியலங்கிறேன்!)

நேசமித்ரன் said...

ஒண்ணும் விளங்கலியே சாமி

Post a Comment