சையனைடு கவிதைகள்

முன்னெச்சரிக்கையறிவிப்பு:

இதைப் படித்தபின் ஒருவேளை சில பல சம்பவங்கள் நிகழலாம். மற்றபடி கதாபாத்திரங்கள் யதுவுமே இந்த நகைச்சுவை பத்தியில் வரவில்லை. அதனால் இதிலுள்ளவை எல்லாமே கற்பனையே. யாரையும் இன்னார் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாதளவுக்கு என்னை வெகுவாக பாதித்த கவிஞர்கள் அனைவரையுமே பற்றியுமே எழுதியது இல்லை. நகைச்சுவைக்காக மட்டுமே. நானே ஒரு கவிஞீ-தான் என்பதையும் இங்கே ஃப்ளாஷ் செய்து கொள்கிறேன்.

விளம்பரம்: அதிக கற்பனை வளத்தோடு வெளுப்பதற்கு ஏரியல் வாஷோமேடிக் வாஷிங் பவுடரையே பயன்படுத்தவும் டிங் டி டிங்

கவிதை, கவிதா, கவிஞர் என்பதே வடமொழி என்பதால் இது வடக்கிந்திய சமையலென்றே கொள்க. கவிஞரைப் புலவர் எனலாம் ஆனால் அவர் சமைக்கும் கவிதையை புலதையென்பா, புவிதையென்பதா? யென்னவென்பது? ஐயகோ! இஃதென்னே தமிழுக்கு வந்த சோதனை?

தேவையான பொருட்கள்.

தெஸாரஸ் - 1
ஆங்கிலம்-ஆங்கிலம் டிக்ஷனரி - 1
லிஃப்கோ ஆங்கில-தமிழ் அகராதி - 1
வேதியில், பொருளியல் - வார்த்தைகளைப் பொடிப்பொடியாக நறுக்கித் தூவவும்
பிரஞ்யை, புணர்ச்சி, இருத்தல், போலும் போன்ற சிலச்சில பலப்பல வார்த்தைகள் - தலா 2 டீஸ்பூன்கள்

பொரித்துக் கொட்ட:
ஜ என்ற எழுத்தை ய என்றே சமைத்தல் வேண்டும்
ஷ என்பது ச
க்ஷ என்பது க்ச
எ என்பது யெ அல்லது ய
யதாவது பொருட்கள் விடுபட்டிருந்தால் கமெண்டிடவும்.

சில குறிப்புக்கள்

முடிந்தவரை அதிகபட்சமாக 5 வார்த்தைகளைக் கோர்த்து கிரந்தமாலை பின்னுவதுபோல நாக்கு பின்னிக்கொள்ளுமாறு சேர்த்துச்சேர்த்தெழுதவேண்டும்.
வாக்கியத்தை முன்பின் போட்டு, அடுத்தடுத்த வரிகளில் சிலவற்றைத் தள்ளி விட வேண்டும்.
கற்பனையைத் தூண்டுகிறோமென முற்றிலும் சட்டென புரிபடாத மாயமாக இருக்கவேண்டும், நடிகர் வடிவேலு காண்பித்த கடவுள் போல....

தாளிக்க:

ஆச்சிரியக் குறிகள் மூன்று முதல் பத்து வரை

செய்முறை-

உன்னையே யெப்போதுமெண்ணுகிறேன்
ஏ கவிதையே...
என்னிதயத்தில் 1000 கவலையிருப்பதும்
கண்களில் இன்ஃனைட் கண்ணீரிருப்பதும்
0 வார்த்தைகளோடு மெளனம் பேசும் வாயும்
முழுதும் நிரம்பியிருக்குமென் 16 ரேனால்ட்ஸும்
10 மில்லியன் எண்ணிக்கையில்
கசக்கியெறிப்பட்டக் சைக்கிளோஸ்டாட்
காகிதங்கள் நிரம்பிய
1 அறையின் நீளமான 1 தரையும்
அதைப் பெருக்க 1 விளக்குமாறுமென
நீயே நிரம்பியிருக்கிறாய் எங்கெங்கும்
என்னோடுறங்கி என்னோடெழுந்து
என்றுமென்னோடேயிருக்கிறாய்
சற்றே நில்லென்னன்பே!
என்னிடமிருந்தும் விலகியேன் செல்கிறாய்!
உன்னைச் செம்மையாகவெழுதவே இப்போராட்டம்
வாழ்க்கை நீண்டதென்றாலும்
கவிதை சமைக்கவியலாத இந்நீளம்
சகிக்கவியலாததாகவேயிருக்கிறதென் கவிதைபோலவே
நீ வராதபோது விடும் பெருமூச்சால் வாழ்கிறேன்
மூச்சே நின்றுவிடுகிறதுன் வரவை நோக்கி
இவ்வநியாயங்களையெப்போதுவரை சகிப்பாய்
ஏ கவிதையே...
என் பேனா மை வழியே வா வெளியே என்பேனா
கவிஞனென்றறிந்தே விலகிசெல்கிறாயோ நீ!!!
உன்னை கவிதாவென்றழைத்தாலென்ன?
யிப்படிக்கு பாச்கரனினாயகி விதூச்!!!!!!!!!

36 comments:

VISA said...

ooooooooch. ipavea kanna katuthea.

வித்யா said...

அய்யய்யோ ஓடி வாங்களேன். இந்த அநியாயத்த கேக்க யாருமேயில்லையா?

வித்யா said...

யக்கோவ் சொல்லிக் கொடுக்கறதாவது புரியற மாதிரி சொல்லிக் கொடுக்கக்கூடாதா?

வித்யா said...

\\நானே ஒரு கவிஞீ-தான்\\

இதப் பார்றா. அப்புறம்..

வித்யா said...

\\கவிதையை புலதையென்பா, புவிதையென்பதா? \\

தெரியலையேம்மா தெரியலையே.

வித்யா said...

தேவையான் பொருட்களில் போலவே என்ற வார்த்தையையும் சேர்த்துக்கிட்டா பதார்த்தம் இன்னும் ருசிக்கும்:)

Vidhoosh said...

ஆ.பு. அதிகமாயிருப்பதாலிப்போது பஸ்ஸிலோ பிம்பில்லாக்கியிலோ தொடர்ந்து வரவியலாத நிலைமை... நீங்க மகிழ்ச்சியுடன் உங்கள் பயணத்தை தொடருமாறு வேண்டுகிறேன். :))

வித்யா said...

மாட்டேன். மாட்டவே மாட்டேன். செய்முறைய மட்டும் படிக்கவே மாட்டேன்.

நட்புடன் ஜமால் said...

தாளிக்க - ஹா ஹா ஹா அருமையா இருக்கே

கடைசி வரி ரொம்ப கீழே இருக்கு

பா.ராஜாராம் said...

:-)))

யப்பே..

வித்யா ஆஜர். ராகவன் அண்ணாச்சி, எறும்பு, சக்தி, நசர் எங்கிருந்தாலும் மேடைக்கு அழைக்கப் படுகிறார்கள்.

பா.ராஜாராம் said...

//வேதியில், பொருளியல் - வார்த்தைகளைப் பொடிப்பொடியாக நறுக்கித் தூவவும்//

நேசா, புரை ஏறுதா? :-)

பா.ராஜாராம் said...

//ஆச்சிரியக் குறிகள் மூன்று முதல் பத்து வரை//

பாச்கரனினாயகி விதூச்!!!!!!!!!

ஒன்று குறைவு.

அய்யா பாச்கரன், அடக்குவார் இல்லாமல் போய்விட்டதே--நன்றி விதூச்!!!!!!!!!! :-))

பா.ராஜாராம் said...

//கவிஞனென்றறிந்தே விலகிசெல்கிறாயோ நீ!!!//

ஹா...ஹா..ஹா..

கலக்கல் சகோ.

க.பாலாசி said...

தலைப்புக்கு அர்த்தம் இப்பதான்ங்க புரியுது... அவ்வ்வ்வ்வ்......... :-))

இராகவன் நைஜிரியா said...

யப்பே... தாங்கமுடியலடா சாமி..

இப்ப ஆணி அதிகமா இருக்கு... அப்பாலிக்கா வந்து கவனிச்சுக்கிறேன்..

பத்மா said...

இது மாதிரி ஒன்று நடக்கும் என்று நான் எதிர்பார்த்தேன் ....
தூள் விதூஷ் ...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஒரு கவிஞனுக்குக் கூட ரோஷம் வரலை பாருங்க..!

என்ன கலிகாலம்டா முருகா..!

நசரேயன் said...

//இதைப் படித்தபின் ஒருவேளை சில பல சம்பவங்கள் நிகழலாம்.//

உங்க கடைக்கு இது வரைக்கும் எதுவுமோ நடக்ககலை

நசரேயன் said...

//மற்றபடி கதாபாத்திரங்கள் யதுவுமே இந்த நகைச்சுவை பத்தியில் வரவில்லை. ///

இதுவே ஒரு நகைச்சுவை தானே

நசரேயன் said...

//அதிக கற்பனை வளத்தோடு வெளுப்பதற்கு ஏரியல் வாஷோமேடிக்
வாஷிங் பவுடரையே பயன்படுத்தவும் //

அப்படியும் போகலைனா உங்க பக்கோடாவை வச்சி அடிக்கனுமா ?

நசரேயன் said...

//கவிதை, கவிதா, கவிஞர் என்பதே வடமொழி என்பதால் இது வடக்கிந்திய
சமையலென்றே கொள்க.//

நான் பச்சை தமிழன்

நேசமித்ரன் said...

//நேசா, புரை ஏறுதா? :-)
//

பாவம் சின்னப் பிள்ளயாப் போச்சு அதுவும் நம்ப பிள்ளையா போச்சு
எழுதிட்டு போவட்டும் :)

இரா கோபி said...

கவிதைங்க்றது இவ்ளோதானா? இதே மாதிரி கடித இலக்கியம், சிறுகதை, நாவல் எல்லாத்துக்கும் recipe போடுங்க

sakthi said...

வேதியில், பொருளியல் - வார்த்தைகளைப் பொடிப்பொடியாக நறுக்கித் தூவவும்
பிரஞ்யை, புணர்ச்சி, இருத்தல், போலும் போன்ற சிலச்சில பலப்பல வார்த்தைகள் - தலா 2 டீஸ்பூன்கள்

hahahahaha

sakthi said...

முடிந்தவரை அதிகபட்சமாக 5 வார்த்தைகளைக் கோர்த்து கிரந்தமாலை பின்னுவதுபோல நாக்கு பின்னிக்கொள்ளுமாறு சேர்த்துச்சேர்த்தெழுதவேண்டும்.

அருமையான குறிப்பு

sakthi said...

ஏ கவிதையே...
என் பேனா மை வழியே வா வெளியே என்பேனா
கவிஞனென்றறிந்தே விலகிசெல்கிறாயோ நீ!!!
உன்னை கவிதாவென்றழைத்தாலென்ன?
யிப்படிக்கு பாச்கரனினாயகி விதூச்!!!!!!!!

சொல்ல வார்த்தையில்ல அப்படியொரு அபாரமான அதிஅற்புதமான கவிதை

sakthi said...

நேசமித்ரன் said...
//நேசா, புரை ஏறுதா? :-)
//

பாவம் சின்னப் பிள்ளயாப் போச்சு அதுவும் நம்ப பிள்ளையா போச்சு
எழுதிட்டு போவட்டும் :

அதான்
அதான்
அதே தான்!!!

sakthi said...

பா.ராஜாராம் said...
:-)))

யப்பே..

வித்யா ஆஜர். ராகவன் அண்ணாச்சி, எறும்பு, சக்தி, நசர் எங்கிருந்தாலும் மேடைக்கு அழைக்கப் படுகிறார்கள்.

அச்சச்சோ நீங்கள் கூப்பிட்டு டைமுக்கு வரமுடியாமல் போயிட்டேனேன்னு வருத்தத்தில் இருக்கின்றேன்

அமைதிச்சாரல் said...

//நீ வராதபோது விடும் பெருமூச்சால் வாழ்கிறேன்//

பொழைச்சோம்டா சாமின்னு மூச்சு விடலை, அதுக்குள்ள அடுத்த வரியில..

//மூச்சே நின்றுவிடுகிறதுன் வரவை நோக்கி//

இப்படி மூச்சை நிறுத்திட்டீங்கப்பா :-)))

மரா said...

@ வித்யா
சீக்கிரம் இதுக்கும் ஒரு வெளக்கவுரை போடுங்க. தன்யனாவோம்...ஒன்னியும் பிரியல :)

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருக்கு.....புரியாத மாதிரியும் இருக்கு........ஆனா சிரிப்பா சிரிக்கு..........

Mohan said...

காலை,மதியம், இரவு என்று மூன்று வேளைகளுக்கும் இதே மாதிரி கவிதை சமைக்க முடியுமா? இல்லை நேரத்திற்கு ஏற்ற மாதிரி சமையலில் சில Changes பண்ணனுமான்னு சொல்லிடுங்க.தகவல் மிகவும் உபயோகமாக இருந்தது!

எறும்பு said...

பா ரா அண்ணாச்சி, இப்பதான் இந்த பதிவ பார்த்தேன். நம்ம பங்குக்கு சக்தியும், நசரேயன் அண்ணாச்சி கொஞ்சம் கும்மி இருக்காங்க.

Next meet panren.

:)

எறும்பு said...

கவுஞர் தலைப்பிலையே வாசகர்களை கொன்று விட்டார்.

:()

எறும்பு said...

//ஒரு கவிஞனுக்குக் கூட ரோஷம் வரலை பாருங்க..!

என்ன கலிகாலம்டா முருகா..!//

அண்ணே, ஒருவேளை அவங்களும் இப்படிதான் கவுஜ எழுதுறாங்களோ என்னமோ

"உழவன்" "Uzhavan" said...

முடியல :-)

Post a Comment