அவர் பெயர் சுண்டு
எப்போதும் வெள்ளைச் சட்டை,
வெள்ளை பேன்டு,
வெள்ளை சூ
மட்டுமே தான் அணிவது
பற்றிய பெருமிதத்தோடு
அலைந்து கொண்டிருப்பதால்
அவர் பெயர் சுண்டு**
என்றே வைத்திருக்கிறோம் செல்லமாய்
ஹி ஹி ஹி ஹி
என்றேனும் மாட்டினாலுமொரு
குறுக்கு சந்தில் புகுந்தேனும்
எப்படியும்
தப்பித்து விடுவதெப்போதும்...
இப்படித்தானொரு நாள்
தற்செயலாய் அவரைச் சந்தித்து
தவிர்க்க முடியாமல் மாட்டிக்
கொண்டபோது கேட்டார் அவர்
"மூன்று கிலோமீட்டர் முன்னாடியே
நான் வருவதைக் கண்டுபிடித்துத்
தெறிப்பார்களே...
என் தொப்பையைப் பார்த்தே!!!!!
நீ மட்டும்
எப்படி அருகாமை வரை வந்துவந்து
தப்பிச் செல்கிறாய்?"
ஒரேயொரு முறைதான்
சொன்னேன்..... இப்படியாக
"சொட்டு நீலம் டோய்...
ரீகல் சொட்டு நீலம் டோய்...
ஆயிரம் ரெண்டாயிர" மென.....
அப்புறம் அவர் என்னைச்
சந்திப்பதேயில்லை... ஏன்?!!!
**சுண்டு - பொடுகு
======= ============ ======== ==========
இஃதொரு ஏழையின் மாளிகை, வேண்டும் இலவச கலர் டி.வி.
அம்மா ஏழை
அப்பாவும் ஏழை
பாவம்! இவர்களின்
குழந்தைகளும் ஏழையாகவே
இருக்கின்றனர்
அங்கிருந்த 4 வேலையாட்களும்
ஏழையாகவேயிருக்கிறனர்
உடைந்த காரில் உடைந்திருப்பது
ஏ.சி. மட்டுமே என்பதாலதை ஓட்டும்
டிரைவரும் ஏழைதான் பாவம்
அவன் மனைவியும் ஏழை
நல்லவேளை ஏழையாயிருக்கவொரு
குழந்தையில்லை அவர்களுக்கு
இப்படியாக வறுமையிலும்
செம்மையாக ஏழையாயிருந்தனர்!!!!
======= ============ ======== ==========
கவிதையெனும் விபத்து
ஒரு சின்ன விபத்தானது இன்று
இந்த விபத்தில் இன்றும்
ஓ...........! வென்று
அழுதுகொண்டிருந்தானொருவன்
ஐயகோ! என் காலொடிந்து போனதே! என்று....
எல்லாவற்றையும் படைத்தவன் உரைத்தது:-
மூர்க்கனே! ஏன் அலறுகிறாயிப்படி
அங்க ஒருத்தனுக்கு
உயிரே போனதே....
கிடக்கிறான் பார்...
மூச்சு கூட விடாமல்!!!
10 comments:
aluthuruven vidhoosh
ஏழ்மை - செம்மை
ரெண்டாவது நமது விருப்பமுங்க... நல்லாயிருக்கு...
விதூஷ், அட்ரஸ் மாறிட்டீங்கன்னு சொல்லவே இல்ல. :))
ஏழ்மை - அசத்தல்!
அங்க ஒருத்தனுக்கு
உயிரே போனதே....
கிடக்கிறான் பார்...
மூச்சு கூட விடாமல்!!!//
அசத்தல் !!
ஏழ்மை அசத்தல்..
விபத்து.. அய்யகோ!!!.உயிர் போன வேதனையைக்கூட சொல்லமுடியாமல் அவனுக்கு துக்கம் தொண்டையை நெரிக்கிறதே....
அட !!! விதூஷ்தான் அட்ரஸ் மாறிட்டாங்கன்னு நெனச்சிட்டு இருந்தேன். இப்போதான் தெரியுது அவங்க ஒரு ”டீம்”மாத்தான் மாறி இருக்காங்கன்னு. 10 தானுங்களே?
அட என்னபா மொறைக்கறீங்க. அட..நான் கூட அதே அட்ரஸ்தான்பா. அய்ய...ஒகேவா?...ம்ம்..
//உயிரே போனதே....
கிடக்கிறான் பார்...
மூச்சு கூட விடாமல்!!!//
உங்க கவுஜைகளைப் பாத்துப் படிச்சு நானும் இப்ப அப்படித்தான் கிடக்கிறேன்!!
கலக்குறீங்க போங்க :-)
Post a Comment