ஆயிஷா


காலையில் எழுந்து பல் துலக்குவதை உற்சாகத்தோடேவா செய்கிறோம்? எப்போதாவது புதிய பிரஷ் அல்லது பேஸ்ட்! இங்கே அதுவும் இல்லை. அதே ஓம்ஸ் விதி. ஒரே செல் பிரிதல். புதிதாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வமற்று ஓர் இயந்திரமாய் கிரீச்சிட்டுக் கொண்டிருந்த என்னை என் முகத்தில் கேள்விகளால் ஓங்கி அறைந்தாள் ஆயிஷா. (ஆயிஷா - இரா.நடராசன்)

இந்த முறை தமிழ் பாடத்தில் எம்பொண்ணு வடமொழி எழுத்துக்களான ஸ, ஜ, க்ஷ போன்றவை கற்கிறாள். அப்போது ஸர்ப்பம் என்றாலும் பாம்பு படமே இருப்பதை கண்டு பாம்பையும் சர்ப்பத்தையும் வரைந்து பார்த்தாள். நிஜப் பாம்பு பார்க்கவேண்டும் என்று கேட்டதால், இம்முறை அடையார் பாம்பு பண்ணைக்கு அழைத்து சென்றேன். அங்கேயே அரை நாள் போனது. ரொம்ப பொறுமையாக ஒவ்வொன்றாக பார்த்து, கடைசியில் இறந்து விட்ட ஊர்வன ஜந்துக்களை ஒருவித கெமிக்களில் இட்டு வைத்திருப்பதை கண்டு "ஏன் இப்படி வச்சு இருக்காங்க? இதெல்லாம் காக்காயாக மாறாதா?" என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு எல்லாம் சொல்லி முடித்து, பச்சோந்தி இருக்கும் இடத்துக்குப் போனோம். குட்டிக் குட்டியாக இருந்த நான்கும் கண்டு பிடிக்க முடிந்தது. அவளுக்கு ஒரே மகிழ்ச்சி. ரொம்ப நேரம் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு பள்ளியில் இருந்து கல்விச் சுற்றுலா அழைத்து வந்திருந்தார்கள் போலிருக்கு. எல்லோருமே பத்து வயதுக்கும் குறைந்த குழந்தைகள். யார் கையிலும் தண்ணீர் பாட்டில் இல்லை. எல்லோரும் தண்ணீருக்கு அலைந்து கொண்டிருந்தனர். முதலைகள் பாம்புகள் என்று ஒரு பிராணியைக் கூட நிதானமாய் பார்க்க விடாமல் பின்னந் தலையில் அடித்தும் குட்டியும் 'போ போ' என்று விரட்டி அடித்து கூட்டி சென்றனர். கடைசியில் எல்லா குழந்தைகளும் பச்சோந்தியை கண்டு பிடிக்க முற்பட்டு இருந்த போதும் இப்படியே விரட்டி வெளியே கூட்டிச் சென்று விட்டனர். கொஞ்ச நேரம் கழித்து குழந்தைகள் பூங்காவில் சறுக்குமரம் விளையாடிக் கொண்டிருந்தனர் குழந்தைகள். ஆசிரியை/ஆசிரியர்கள் மரநிழலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். :(

சனிக்கிழமை அன்று அன்பான தம்பதியரை சந்திக்கும் அதிருஷ்டம் வாய்த்தது. முதல் சந்திப்பு அன்பளிப்பாக, "ஆயிஷா" புத்தகமாக கிடைத்தாள். இதை படித்ததும் பாம்பு பண்ணையில் சந்திக்க நேர்ந்த குழந்தைகளையும், ஆசிரியர்களையும் நினைத்துக் கொண்டேன். இன்னொன்று அரசியல் சம்பந்தமானது.


Publishers: பாரதி புத்தகாலயம்
ஆசிரியர்: இரா.நடராசன்
விலை: INR-5.00

தமிழ்: படிக்க சொடுக்கவும்
ஆங்கிலம்: படிக்க சொடுக்கவும்

இந்தப் புத்தகம் மேலிருக்கும் லிங்கில் இலவசமாகவே கிடைக்கிறது. இருந்தாலும் இந்த முறை நவராத்திரி, சந்திப்புக்கள் போன்றவற்றிற்கு இதை போன்ற சின்ன சின்ன புத்தகங்களையே கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். வீட்ல இருக்கும் பெரியவங்க ஒத்துக்கணும். :) ஒத்துக்கொள்ளவில்லை என்றால் ஒத்துக் கொள்ளக்கூடிய அயிட்டங்களோடு சேர்த்து இதையும் கொடுத்து விட வேண்டியதுதான்.

====

பள்ளிச் சிறுமிகளின் வாழ்க்கையில் ஆசிரியைகள் எப்படி, எத்தகைய மாற்றம் கொண்டுவர முடியும் என்று யோசிக்க வைக்கும் சிறுகதை. திடுக்கிடச் செய்யும் நிதர்சனக் கதை. கேள்வியே கேட்காதவாறு மூளைச் சலவை செய்யப் பட்டு எழுதப் படிக்கத் தெரிந்த வெறும் பொருட்களாகவே தயாரிக்கப் படும் குழந்தைகளில் ஆயிஷா எழுந்து நிற்கிறாள். அவளை ஊமையாக்கி உட்காரவைக்கும் முயற்சியில் நிரந்தர உறக்கத்திற்கு கொண்டு செல்கிறார்கள். ஆராய்ச்சி தவளை தண்ணீரில் மிதக்கும் போதே நம் மனம் திடுக்கிட்டு அடுத்த வரிகளைப் படிக்க பயம் வருகிறது.

இதை குழந்தைகளுக்கு வாசித்து காட்டலாம் என்று நினைத்தேன். ஆனால், முடிவில் வரும் மரணம் இக்கதையை குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டி பகிர கொஞ்சம் பயமாக இருக்கிறது.

நாம் குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் குழந்தைகளின் உலகில் வாழவில்லை. தொடர்ந்து வீட்டுப் பாடம் சாப்பிடுதல் தூங்குதல் போன்ற ஒரே மாதிரியான ரொடீன் வேலைகளுக்கே அவர்களைத் தயார் செய்கிறோம். அவர்களது கற்பனைகளைத் தூண்டும் விதமாகவும், அவர்கள் கற்பனை செய்யும் உலகிற்கு தம் கேள்விகளின் மூலமாக நம்மையும் அழைத்துச் செல்கிறார்கள்.

மழைநாட்களில் வரும் மரவட்டையை எப்போதும் பார்ப்பதுதான். அதையே தர்ஷிணி பார்க்கும் போது அவள் கண்களின் வியப்பும், இது ஏன் இப்படி இருக்கு, இவ்ளோ கால் இருக்கே என்றெல்லாம் வியக்கும் போதும், எறும்புக்கும் மரவட்டைக்குமான வித்தியாசங்களை அவள் யோசித்து பகிரும் போதும், வரைந்து பார்க்கும் போதும், எவ்வளவு விஷயங்கள் கற்றுக் கொள்கிறேன் நானும்.

"காலை வணக்கம் சார்" என்று ஒவ்வொரு வாத்தியாருக்கும் எழுந்து நின்று சொல்ல வேண்டும் என்று போதிக்க தெரிந்தவர்களில் எத்தனை பேர் தம் மாணவர்கள் அருமையான கேள்வி கேட்கும் போது தட்டி கொடுத்து பாராட்டத் தெரிந்திருக்கிறது. வக்கத்தவன் வாத்தியாரு என்று ஒரு தொழிலாக மாறிப்போனது ஆசிரியர் தொழில். அதற்கேற்றவாறு வளர்ந்து வந்து கொண்டே இருக்கும் மாணவர் தலைமுறைகளும் ஒவ்வொருநாளும் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு அதிர்சிகளை அளித்துக்கொண்டே இருக்கிறார்கள், ஆயிஷா மாதிரியே..

22 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல விசயம் இணைப்பையும் அளித்தமைக்கு நன்றி விதூஷ்

geethasmbsvm6 said...

அருமை விதூஷ். கண்ணீரே வந்துவிட்டது. ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் படிச்சேன். பகிர்வுக்கு நன்றி.

geethasmbsvm6 said...

என்ன சொல்றதுனே புரியலை! கண்ணீர் மட்டும்!!!!!

குட்டிப்பையா|Kutipaiya said...

சில மாதங்களுக்கு முன் இந்த புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது..சிந்திக்க தூண்டிய, பாதிப்பு ஏற்படுத்திய நூலும் கூட..பகிர்ந்தது நல்ல முயற்சி..
ஏன் எனக்கு தோன்றவில்லை :(
:(

விக்னேஷ்வரி said...

நல்லா சொல்லிருக்கீங்க விதூஷ். புத்தக சுட்டிக்கு நன்றி. அவசியம் வாசிக்கிறேன்.

Paleo God said...

பகிர்வுக்கு நன்றிங்க!

//நாம் குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் குழந்தைகளின் உலகில் வாழவில்லை//

உண்மை! :(

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்வுக்கு நன்றி

Thamiz Priyan said...

பகிர்வுக்கு நன்றி!

sathishsangkavi.blogspot.com said...

வித்தியாசமான பகிர்வு..

Vidhya Chandrasekaran said...

பகிர்விற்கு நன்றி. விக்கித்துப் போனது சுட்டியைப் படித்து.

ராஜவம்சம் said...

முடியலிங்க முலுசா படிச்சதும் மனசு பாரமா இருக்குங்க.

Chitra said...

அருமை. பகிர்வுக்கு நன்றி.

மணிநரேன் said...

ஆயிஷா - ஒரு குறும்படமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்து அதிர்ந்துபோனதை மீண்டும் நினைவுபடுத்துவிட்டீர்கள்.

புத்தக சுட்டிக்கு நன்றிங்க.

மரா said...

ஹலோ சொம்மா வத்தியார்களை குறை சொல்லாதீங்க நீங்க பதிவு போடனுங்கிறதுக்காக :) அவிங்கவிங்களுக்கு அவிங்கவிங்க துன்பம்...........ஆமா உங்களையும் பொண்ணையும் ’சத்யம்’ல பார்த்தா கழுகார் சொன்னார்?

Sundar சுந்தர் said...

அருமை!

a said...

//
நிதானமாய் பார்க்க விடாமல் பின்னந் தலையில் அடித்தும் குட்டியும் 'போ போ' என்று விரட்டி அடித்து கூட்டி சென்றனர்
//
நானும் இதை பல இடங்களில் பார்த்து இருக்கிறேன்...

எறும்பு said...

//ஆமா உங்களையும் பொண்ணையும் ’சத்யம்’ல பார்த்தா கழுகார் சொன்னார்?//

நாம் குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் குழந்தைகளின் உலகில் வாழவில்லை

Radhakrishnan said...

இந்தியாவில் இந்த நிலைமை மிகவும் அதிகம். இந்திய குடும்பங்களிலும் மரியாதை எனும் ஒரு சொல்லில் குழந்தையின் எண்ணங்களை, கவுரவம் எனும் ஒரு சொல்லில் குழந்தையின் கனவுகளை சுட்டுவிடும் பெற்றோர்களாக நாம் வாழ்ந்து விடுகிறோம். எனக்கு கிடைத்த சுதந்திரம் எனது மகனுக்கும் இருப்பது எனக்கு மகிழ்ச்சியே. நிச்சயம் இந்த சிறுகதை ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டியது, ஆசிரியர்கள் பலர் பெற்றோர்கள்தானே.

virutcham said...

விதூஷ்
நன்றி. era . நடராஜனை ஜெய ட.ிவி கண்ணாடி நிகழ்ச்சியில் சந்தித்தேன். குழந்தைகளின் மேல் அவர் வைத்து இருக்கும் பாசம், நம்பிக்கைகள் அவர்களுக்கு ஏதாவது செய்து விட வேண்டும் என்ற ஆர்வம் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.
அவரது பெயர்க் காரணம் தெரியாமல் இருந்தேன். இப்போது புரிந்தது. கதையை படித்து கண்களில் வழியும் நீரோடு அவருக்கு ஒரு கடிதமும் எழுதி விட்டே உங்களுக்கு இதை எழுதுகிறேன்.

மறுபடியும் நன்றி.

இரா.கதிர்வேல் said...

அழுதேவிட்டேன்

பிரியமுடன் குட்டி... said...

ஹாலோ Mr.மயில்ராவணன் நீங்க இன்னும் அரசு பள்ளிகளில் இருக்கும் சில வாத்தியார்களை சந்திக்கவில்லை போலும்.... இல்லை நீங்களும் வாத்தி தானோ.... overa உருகறீங்க...

இரா. சிவா said...

ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒர் கதை...

Post a Comment