வேப்பம்பூ உதிரும் வாசல்கள்

யாருமற்ற நிலையங்களில்
எனக்கான இரயில்கள்
வருமுன்பே சென்று விடுகின்றன
இதுவரை சென்றேயிராத
சில நகரங்களின் வீதிகளில்
மிதிவண்டியிலிருந்து விழுகிறேன்
முற்றத்துச் சருகுகளின் தனிமை மீது
இளநீல வண்ணங்கொண்ட
மாடியிலிருந்து குதிக்கிறேன்
கனவுகளை அறியுங்கள் என்ற
புத்தகத்தின் பக்கங்கள் கிழிந்து
காற்றில் பறக்கின்றன
கனவுகளில் எப்போது(ம்) வரும்
வேப்பம்பூ உதிரும் வாசல்கள்

(இந்தக் கவிதைக்கான வெளக்கவுரை இங்கே உலக பக்கோடா வரலாற்றிலேயே முதல் முறையாக வெளிவந்துள்ளது.)

39 comments:

நேசமித்ரன் said...

ம்ம் நல்லா இருக்கு

இன்னும் கொஞ்சம் தீட்டி இருக்கலாமோ ?

:)

எல் கே said...

யாருக்காவது புரிஞ்சா சொல்லுங்க எனக்கு

ஆதவா said...

அந்த கடைசி இரண்டு வரிகள் மட்டும் கொஞ்சம் இடிக்கிறது. இருந்தாலும் நன்று.
வாழ்த்துகள்

VISA said...

//இன்னும் கொஞ்சம் தீட்டி இருக்கலாமோ ?//

YES. :)

Vidhoosh said...

@ நேசன்: ரொம்ப முயற்சித்தேன்.

@LK: காணமல் போய் விட்ட பால்ய நட்புக்கள்

@ஆதவா: அவற்றைத்தான் தேடிக் கொண்டிருக்கேன்..

sakthi said...

யாருமற்ற நிலையங்களில்
எனக்கான இரயில்கள்
வருமுன்பே சென்று விடுகின்றன

அதுக்கு தான் சரியான நேரத்திற்கு செல்லவேண்டுமென சொல்வது

இதுவரை சென்றேயிராத
சில நகரங்களின் வீதிகளில்
மிதிவண்டியிலிருந்து விழுகிறேன்

அப்போ டேமேஜ் கம்மி

இளநீல வண்ணங்கொண்ட
மாடியிலிருந்து குதிக்கிறேன்

குதிக்கிறதுக்கு எதுக்கு வண்ணம் பார்த்திட்டு குதிக்கனும் முடிவு பண்ணினா டபார்ன்னு குதிச்சிடனும்

Vidhoosh said...

@LK: உங்களுக்காக


///யாருமற்ற நிலையங்களில்
எனக்கான இரயில்கள்
வருமுன்பே சென்று விடுகின்றன// time & tide


///இதுவரை சென்றேயிராத
சில நகரங்களின் வீதிகளில்
மிதிவண்டியிலிருந்து விழுகிறேன்/// exploring life


///முற்றத்துச் சருகுகளின் தனிமை மீது
இளநீல வண்ணங்கொண்ட
மாடியிலிருந்து குதிக்கிறேன்/// socialising trials

///கனவுகளை அறியுங்கள் என்ற
புத்தகத்தின் பக்கங்கள் கிழிந்து
காற்றில் பறக்கின்றன
கனவுகளில் எப்போதும் வரும்
வேப்பம்பூ உதிரும் வாசல்கள்///
still longing for all those child-hood innocence

sakthi said...

கனவுகளை அறியுங்கள் என்ற
புத்தகத்தின் பக்கங்கள் கிழிந்து
காற்றில் பறக்கின்றன

பைண்ட் பண்ணியிருக்கலாமே

கனவுகளில் எப்போதும் வரும்
வேப்பம்பூ உதிரும் வாசல்கள்

அப்போ மல்லிகைப்பூ ஓகே வா

Vidhoosh said...

நன்றி விசா: :) செய்யலாம்..

நன்றி சக்தி : you too Brutus?? :))))

sakthi said...

விதூஷ் எல்லோரும் தங்களின் பால்ய கால தோழமைக்காக ஏங்கிக்கொண்டுதான் இருக்கின்றோம்

sakthi said...

அழகான கருத்துசெறிவுமிக்க கவிதை

sakthi said...

அழகான கவிதை

அருமை

அருமை

sakthi said...

பிரமாதம் விதூஷ்

sakthi said...

கலக்கிட்டேடா மக்கா

sakthi said...

ஹே கோபம் வேண்டாம் சும்மா

Vidhoosh said...

@சக்தி:
ஒரு முடிவோடத்தான் கிளம்பி இருக்கீங்க போலருக்கு. :))

sakthi said...

முடிவென்று ஒன்றுமில்லை

என்னவோ ஷார்ட் அண்ட் சுவீட்டா ஒரு கவிதையை பார்த்ததும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நீங்களும் கனவோடு வந்திருக்கிறீர்களா? :)

லதானந்த் said...

A very good pre historical and humourous essay. Keep writing such essays

பா.ராஜாராம் said...

இன்று வாசித்த மிக சிறந்த கவிதை இது!

நசருக்கு பதிலா சக்தி கிளம்பியாச்சா? :-)

வால்பையன் said...

இன்செப்ஷன் படம் பார்த்திங்களா?

வால்பையன் said...

//இன்னும் கொஞ்சம் தீட்டி இருக்கலாமோ ?//


அவ்வளவு மழுங்கியா இருக்கு?

:-)

வால்பையன் said...

//LK said...
யாருக்காவது புரிஞ்சா சொல்லுங்க எனக்கு//

பேராசை பெருநஷ்டம்!
கவிதை புரிஞ்சா சுவாரஷ்யம் இருக்காது!

வால்பையன் said...

//LK said...
யாருக்காவது புரிஞ்சா சொல்லுங்க எனக்கு//

பேராசை பெருநஷ்டம்!
கவிதை புரிஞ்சா சுவாரஷ்யம் இருக்காது!

வால்பையன் said...

//ஆதவா said...
அந்த கடைசி இரண்டு வரிகள் மட்டும் கொஞ்சம் இடிக்கிறது.//


இடிச்சா தள்ளி நில்லுங்க

வால்பையன் said...

//லதானந்த் said...
A very good pre historical and humourous essay. Keep writing such essays//


நல்லா தானே இருந்தாரு

பா.ராஜாராம் said...

வால்ஸ்..

:-))

பத்மா said...

கவிதையின் விளக்கம் அருமை .திரும்ப படிக்கும் போது பல பரிமாணங்களில்

கிருஷ்ண மூர்த்தி S said...

ஆஹா, ஓஹோ. பேஷ், பேஷ்!

இனிமேல் கவிதை எழுதறவங்க எல்லாம் அதன் பொழிப்புரை, பொழிப்புரைக்குக் கோனார் நோட்செல்லாம் சேர்த்தே போட்டுடுங்க!

குறைந்தபட்சம்,நர்சிம் கவிதைக்கு வால் பையன் ஓடிவந்து, பொழிப்புரை சொன்ன மாதிரியாவது!

:-))

Vidhya Chandrasekaran said...

எனக்குப் புரியல. அப்படின்னா இது கவிதை தான்:))))))

நட்புடன் ஜமால் said...

கனவுகளை அறியுங்கள் என்பதை அழியுங்கள்ன்னு படிச்சிட்டு யோசிச்சிகிட்டு இருக்கேன் ...

நேசமித்ரன் said...

@ வால் :))))

மரா said...

இதே கவுஜய மனிஜி எழுதியிருந்தா கடேசி 2 வரிகள்:
//கனவுகளில் எப்போது(ம்) வரும்
வாழைப்பூ வாசனை :)

கிருஷ்ண மூர்த்தி S said...

மயில்ராவணன்! என்ன சொல்ல வர்றீங்க!?

அப்ப, பகோடா கவிதையில் வெங்காய வாசனை வரலைன்றீன்களா?

:-((

Unknown said...

நல்ல கவிதை. :)

Unknown said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாளிகளிடமும் ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும்
வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

Unknown said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாளிகளிடமும் ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும்
வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

உயிரோடை said...

வேப்பம் பூ உதிரும் வாசல்கள் எவ்வளவு சுகந்தம்...

//எனக்கான இரயில்கள்
வருமுன்பே சென்று விடுகின்றன//

பல பரிமாணம் கொண்ட வரிகளிவை.

சில கவிதைகளாக வேண்டிய ஒரு கவிதை

Chitra said...

Vidhoosh(விதூஷ்) said...

@LK: உங்களுக்காக


///யாருமற்ற நிலையங்களில்
எனக்கான இரயில்கள்
வருமுன்பே சென்று விடுகின்றன// time & tide


///இதுவரை சென்றேயிராத
சில நகரங்களின் வீதிகளில்
மிதிவண்டியிலிருந்து விழுகிறேன்/// exploring life


///முற்றத்துச் சருகுகளின் தனிமை மீது
இளநீல வண்ணங்கொண்ட
மாடியிலிருந்து குதிக்கிறேன்/// socialising trials

///கனவுகளை அறியுங்கள் என்ற
புத்தகத்தின் பக்கங்கள் கிழிந்து
காற்றில் பறக்கின்றன
கனவுகளில் எப்போதும் வரும்
வேப்பம்பூ உதிரும் வாசல்கள்///
still longing for all those child-hood innocence




...... இப்போ இன்னும் ரசிக்கிறேன். :-)

Post a Comment