கதையென்று சொல்லி ஏதாவது எழுதுவது எப்படி

குறிப்பு:- கொஞ்ச நாளைக்கு முன்னால் கதை எழுதுவது எப்படி என்று ஒரு ஜெராக்ஸ் புத்தகம் கிடைத்தது. படிக்க முடிந்தது.

இரண்டு மாதமாக அகம் புறம் அந்தப்புரம் என்ற புத்தகம் ஒன்றை ஒவ்வொரு பக்கமாக படித்து முடித்து விடவே முயற்சிக்கிறேன். முடியவில்லை. ஒரு சின்ன அளவு ஈர்ப்பு கூட ஏற்படாத வகையில் த்ராவையாக இருக்கிறது அந்தப் புத்தகம். குமுதத்தில் தொடராக வந்தது என்று தெரிந்துமே துணிந்து "படிக்கலாமே" என்று நம்பி வாங்கிய என்னைச் சொல்ல வேண்டும்.

பல்வேறு கதைகளை பல்வேறு வகையான ஃபார்மாட்டுகளில் படித்தாயிற்று. இப்போது அதற்கென்ன? ஏதாவது எழுதலாம் என்றால் எழுதியும் ஆகிவிடுகிறது. எப்படி அதை சுவாரசியமாக்குவது? எப்படி முதல் வரிக்கும் அடுத்த பத்திக்குமாக தொடர்பை உண்டு பண்ணுவது? நாமே எழுதுவது எப்படி-ன்னு சொன்னால் என்ன என்று விபரீத யோசனை வேறு பாடாய்படுத்துகிறது. காதல் கதைகள் மலிந்து கிடக்கிறதே. அதனால் காதலையே கதைக்கான குறிப்பாக எடுத்துக் கொள்ளலாம் என்றானது.

கதை எழுத கண்டிப்பாய் பொய் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். எல்லாம் சுத்த-பேத்தல்தான் என்று சொன்னால் கூட போக்குவரத்து நெரிசல் பற்றியும், எதிர்வீட்டில் புதியதாய் குடிவந்து தனியாகவே இருக்கும் பெண்ணைப் பற்றியும், செய்தி வாசிப்பாளினி அணிந்திருந்த நாராயணா பேர்ல்ஸ் பொய்க்கா நகையின் அழகைப் பற்றியும் என தினமும் யாரிடமாவது ஏதோ ஒரு கதை சொல்லித்தானே ஆக வேண்டியிருக்கிறது!

இப்போதெல்லாம் அடுத்த வீட்டு வம்புகளைச் சேகரிக்க வேலைக்காரி இல்லாத கவலைகளை எல்லாம் சோஷியலைசிங் தளங்களின் வருகை தீர்த்து வைத்துவிட்டது. கொட்டாம்பட்டி முதல் பிரிட்டன் வரை இருக்கும் எல்லா வீட்டு அந்தரங்கங்களும் நமக்குக் கிடைத்துவிடுகிறது. லஞ்ச் ரொம்ப நேரம் சாப்பிடுகிறோம். சத்தமாய் சிரிக்கிறோம் என்றெல்லாம் வேறு அலுவலகத்தில் குறைபட்டுக் கொள்கிறார்கள். சாப்பாட்டையா சுவைக்கிறோம், என்பது கூட புரியாமல் இதற்கெல்லாம் கூடவா அலுத்துக் கொள்வார்கள்?

வாழ்க்கையைப் பற்றிப் பேசினாலே கதை மாதிரி தோன்றுவதுதான் வாழ்க்கையின் பெரிய குறையாக இருக்கிறது. சரி போகட்டும் என்று கதையைக் கதையாகவே சொன்னாலும், கதை மாதிரியே இல்லையே என்று புலம்புகிறார்கள். கவிதை எழுதுவதை விடக் கதை எழுதுவது பெரிய கஷ்டம்தான். இல்லை என்கிறீர்களா?

இன்றைக்கானது கதாநாயகனின் கதை. கதாநாயகனின் பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகிறது. சுமார் 28 வயதாக இருக்கலாம். ஏதோ ஒரு பாடத்தில் பட்டதாரியாகவும் இருக்கலாம். ஏதோ ஒரு நிறுவனத்தில் ஏதோ ஒரு வேலையில் இருக்கலாம் என்றும் வைத்துக் கொள்ளலாம். தன் குடும்பத்தோடு தங்கியிருக்கலாம். இல்லையென்றால் ஏதேனும் லாட்ஜில் சின்ன தீப்பெட்டி அறையில் கூட தங்கியிருக்கலாம். எங்கு சாப்பிடுகிறானோ தெரியவில்லை.

காலையில் பிறந்து வந்த சூரியன் கடலுக்கும் அப்பால் புதைக்கப்பட்டு விட்டான். வானின் எல்லா வண்ணங்களும் குழைந்து கலந்து அழுக்கு நிறமாகியிருந்தது. கருப்பென்றும் சொல்லாம். வெளுப்பாய் இருந்துவிடுதில் குளித்தாலும் குளிக்காவிட்டாலும் பளிச்சென்று இருந்துவிடுவதுதான் ஒரே சாதகமான விஷயம்.

மற்றபடி அறிவாற்றல், ரசனை மற்றும் உணர்வுபூர்வமாகவும் இரண்டாம்பட்சமான குணத்தோடே இருக்கிறான் இவன். இவனைப் போன்ற இன்னொருவன் நிச்சயம் இருப்பான். இதனால் நம் கதையில் பெரிய வித்யாசம் ஏற்படப் போவதில்லை. இருந்தாலும் அவன் தனக்கென்று போதுமான அளவு சம்பாதிக்கவில்லை என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது. இல்லையென்றால் கதாநாயகி இந்நேரம் அவனுக்கு மனைவியாகி இருப்பாளே?

கதாநாயகி கதாநாயகனை விட கொஞ்சம் வசதி படைத்தவளாக இருக்கிறாள். இவளும் மிகச் சாதாரண நடுத்தர குடும்பத்து தோற்றத்தோடே இருக்கிறாள். ஆனால் கண்களில் ஒரு மிளிர்வு தென்படுகிறது. அவள் கவிதைகள் எழுதுபவளாய் இருக்கிறாள். அவளைப் பொறுத்தவரையில் அவள் வாழ்க்கையில் இந்த இரண்டரை வருடங்களுக்கும் இதற்கு முன்பான காலங்களுக்கும் எந்த மாற்றமும் தெரியவில்லை என்கிறாள்.

நம் கதாநாயகன் மயிலாப்பூர் ரயில்ஸ்டேஷனில் காத்திருக்கிறான். ரயிலுக்கென்று! நாற்பத்தைந்து நிமிடங்கள் ஓடிவிட்டன. நம் கதாநாயகியை அவன் இங்குதான் முதன்முறை சந்தித்தான். காதலைச் சொல்லி, காதலிக்கத் துவங்கி இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது. கொஞ்சம் முன்புதான் கதாநாயகியோடு பெசன்ட் நகர் கடற்கரையில் சண்டை போட்டுவிட்டு வந்திருக்கிறான். ஏதோ பெரிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். ஊருக்கு வெளியே இருக்கும் தன் அறையில் துணிகள் துவைக்கப்படாமல் இருப்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கலாம். அல்லது ஊரில் இருக்கும் தனது ஏழை விதவைத் தாயை பற்றியோ இல்லை இதோ இப்போது காதலியுடன் போட்ட சண்டையைப் பற்றியோ நினைத்துக் கொண்டிருக்கலாம்.

இந்தப் பெண்கள் எப்போதும் இப்படித்தான் என்று முணுமுணுக்கிறான் கதாநாயகன். ரயில் வந்து விட்டது.

இப்படியொரு கதை எழுதினால் அதை இதிகாசம் என்று சொல்வார்கள்.

ஏன் என்று கேளுங்கள்? என்றுமே மாறாத, மாற்றவியலாத ஒன்றைப் பற்றி நினைத்துக் குறித்து வைப்பதுதானே இதிகாசம். இந்தக் காதல் கதை இதிகாசத்தில் சேராதா என்ன?

குறிப்பு முடிந்தது.

26 comments:

Vidhoosh said...

வடையை பற்றி கவலைப் படவேண்டாம். ஆனால் இதெல்லாம் ஒரு பொழைப்பு!!! என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்.... :))

எல் கே said...

mudiva enna solreenga neenga

Vidhoosh said...

ரெண்டு மூணு நாளா பிரபல இலக்கியவாதிகள் பதிவுகளை படிச்ச effect என்றே நினைக்கிறேன்.

Vidhya Chandrasekaran said...

கண்டிப்பா என்னமோ ஆயிடுச்சு:))

எறும்பு said...

வேற ஒண்ணும் இல்ல, சேர்க்கை சரியில்லை..

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))))

எறும்பு said...

//கண்டிப்பா என்னமோ ஆயிடுச்சு:))//

உங்களக்கும் தெரிஞ்சு போச்சா?

எறும்பு said...

இதெல்லாம் ஒரு பொழைப்பு!!!

சொன்னா கேக்க மாட்டோம்

எல் கே said...

enna kodumai vidhoosh ithu

சங்கர் said...

//இந்தக் காதல் கதை இதிகாசத்தில் சேராதா என்ன//

கதை இதிகாசத்தில் சேருதோ, இல்லியோ, உங்களை எந்த கசத்தில் தள்ளலாம்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்

(கசம் - ஆத்துல வெள்ளம் வரும்போது உருவாகுற சுழல்)

நேசமித்ரன் said...

இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கணும் நீங்க

:))))))

sakthi said...

நேசமித்ரன் said...
இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கணும் நீங்க

:))))))

இதுக்கே இப்படி இன்னும் கொஞ்சம் பயிற்சி வேறயா

sakthi said...

காலையில் பிறந்து வந்த சூரியன் கடலுக்கும் அப்பால் புதைக்கப்பட்டு விட்டான். வானின் எல்லா வண்ணங்களும் குழைந்து கலந்து அழுக்கு நிறமாகியிருந்தது. கருப்பென்றும் சொல்லாம். வெளுப்பாய் இருந்துவிடுதில் குளித்தாலும் குளிக்காவிட்டாலும் பளிச்சென்று இருந்துவிடுவதுதான் ஒரே சாதகமான விஷயம்.


இந்த வரிகள் நன்றாக உள்ளது

ஆனா

Vidhoosh(விதூஷ்) said...
ரெண்டு மூணு நாளா பிரபல இலக்கியவாதிகள் பதிவுகளை படிச்ச effect என்றே நினைக்கிறேன்.

இது மட்டும் நிஜம்ங்க !!!

Radhakrishnan said...

ஏதாவது எழுதி கதையாவது எப்படி அப்படினு கூட தலைப்பு வைக்கலாம். :) நன்றாக இருக்கிறது. எழுத்தை உள்வாங்குதல் என்பது அத்தனை சுலபமல்ல. இப்படித்தான் இருக்கும் என ஒரு விஷயத்தை பற்றிய வாசிப்பில் எழும் கற்பனையில் 'அம்மா' எனும் ஒரு வார்த்தை ஆயிரம் அர்த்தங்கள் கற்பித்துவிடும். அது போலவே ஒரு விஷயத்தை பற்றி என்னவாக இருக்கும் என குறிப்புகள் கூட பெரும் காவியமாகிவிடும். காவியம் படைக்க வேண்டும் என எவருமே எழுதுவதில்லை. அனால் எழுதப்பட்டவைகள் பின்னால் காவியங்களாகி நிற்பது நாம் அறிந்ததே. தொடருங்கள் விதூஷ்.

தமிழ் உதயம் said...

ஒரு விஷயம் விதூஷ். கதை எழுத எந்த ஒரு சூத்திரமும் இல்லை. அந்த வகையில் உங்கள் கதையும் சிறப்பாகவே உள்ளது.

ஆதவா said...

ஆக மொத்தத்தில எங்களுக்கு கிருக்கு பிடிக்க வைக்காம நீங்க விடப்போறதில்ல??


எதையும் எழுத்தாக்கிவிடலாம் என்று நீங்கள் சொல்லாமல் சொல்கிறீர்கள்... எனக்குக் கிடைத்த ஒரு அட்வைஸ்படி, பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படித்துவிட்டு உடனே எழுதுவது, பாதிப்பின் விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும்.... விதிவிலக்குகள் தவிர...


வாழ்த்துகள் விதூஷ்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

என்னங்க நடக்குது இங்க... நெறைய படிச்சா இப்படி தான் ஆகும்னு என் உடன்பிறப்பு அடிக்கடி சொல்லும்...அப்படி ஏதுமா? சும்மா சும்மா... ஹ ஹ ஹ

Paleo God said...

கலி முத்திப்போயிடுத்துடா சங்கரா!! :)

Chitra said...

வாழ்க்கையைப் பற்றிப் பேசினாலே கதை மாதிரி தோன்றுவதுதான் வாழ்க்கையின் பெரிய குறையாக இருக்கிறது. சரி போகட்டும் என்று கதையைக் கதையாகவே சொன்னாலும், கதை மாதிரியே இல்லையே என்று புலம்புகிறார்கள். கவிதை எழுதுவதை விடக் கதை எழுதுவது பெரிய கஷ்டம்தான். இல்லை என்கிறீர்களா?


..... இது நல்ல "கதை" யாய் இருக்கே! வேற எப்படி "கதை" விட்டா ஒத்துப்பாங்க?

சாந்தி மாரியப்பன் said...

என்னவோ ஆயிடுச்சுங்க :-))

Vidhoosh said...

எம் மேல இவ்ளோ பரிவும் பாசமும் வைச்சு எனக்கு 'என்னவோ ஆகி விட்டதை' பற்றி கவலை பட்ட எல்லோருக்கும் நன்றீஸ். :)))

புத்தகம் நல்லாருக்கும்னு நம்....பி காசைக் கொடுத்து வாங்கி ராத்திரி கண்ணு முழிச்சு படிச்சு இந்த மாதிரி பல்பு எத்தனை தரம் வாங்கி இருப்பேன்...

அதையெல்லாம் நினைச்சாவது, எனக்காக நீங்க எல்லாரும் இலக்கியவாதிங்களா ஆகோணும் ... என்ன சரியா...

எறும்பு said...

//புத்தகம் நல்லாருக்கும்னு நம்....பி காசைக் கொடுத்து வாங்கி ராத்திரி கண்ணு முழிச்சு படிச்சு இந்த மாதிரி பல்பு எத்தனை தரம் வாங்கி இருப்பேன்..//

You told last week you read lemon tree
;))

Unknown said...

:))

பா.ராஜாராம் said...

:-))

மதுரை சரவணன் said...

//வாழ்க்கையைப் பற்றிப் பேசினாலே கதை மாதிரி தோன்றுவதுதான் வாழ்க்கையின் பெரிய குறையாக இருக்கிறது. சரி போகட்டும் என்று கதையைக் கதையாகவே சொன்னாலும், கதை மாதிரியே இல்லையே என்று புலம்புகிறார்கள். கவிதை எழுதுவதை விடக் கதை எழுதுவது பெரிய கஷ்டம்தான். இல்லை என்கிறீர்களா?//

நிறைய சொல்ல வந்து நிறைவாய் முடித்து இருக்கீங்க... வாழ்த்துக்கள்

க ரா said...

kuripugaluku nandri madam :)

Post a Comment