இன்று தலைவர் நாற்காலிக்கு
என் பெயரிடப்பட்டிருந்தது
ஆணைகளில் கையொப்பமிடலாம்
எனக்கு விருப்பமானவர்களின்
புன்னகையை இரசிக்கலாம்
எதிர்ப்பவர்களை குற்றவாளியெனலாம்
குற்றவாளிகளுக்கு தண்டனை தரலாம்
புத்தரின் சில சுலோகங்களை ஒப்புவிக்கச் செய்யலாம்
கற்களில் அவற்றை செதுக்கச் செய்யலாம்
செதுக்கிக் கொண்டே இருக்கிறார்கள்
பலவருடங்களாக
சுலோகங்கள் தீரவில்லை இன்னும்
குற்றவாளிகளின் எண்ணிக்கை நீள்கிறது
அடுத்த சுழற்சியில் தலைமையான நாளில்
கற்களைச் செதுக்குவதும் குற்றமென
அறிவித்து, ஆணை எழுதிய
பேனா முனை முறிக்கிறேன்
கருப்பாகவே வழிகிறது இறந்தவர்களின் குருதி
ஞான மரத்தின் கீழமர்ந்து
நகுலா! நீரைத் தேடு!
என்றேதான் மீண்டும் தருமன் அறிவிக்கிறான்
29 comments:
ரொம்ப நல்லாருக்கு வித்யா!
பாராட்டுக்கள் விதூஷ்
நல்லாயிருக்குங்க....
ம்ம் இது வேறு வாசனை உங்கள் கவிதைகளில்
நல்லா இருக்கு விதூஷ்
Good one.!!!
நான் வந்திட்டேன்
உங்கள் ஆக்கங்களை
உடம்புக்கு முடியாமல் இருந்த நாட்களில் கூட
தினமும் படித்தேன். பதில்தான் எழுத முடியாமல் போய்விட்டது.
இனி வரும் நாட்களில் மீண்டும் உங்களுடன் இணைந்திருக்கிறேன்.
நலம் விசாரித்த உங்களுக்கு மீண்டும் நன்றி.
நல்லா இருக்கு வித்யா
முடிவில்லா சுழற்சி
நல்லா இருக்கு
சூப்பர்
நல்லா இருக்குங்கங்க..!!!
நல்லாயிருக்குங்க....
wow!!! wonderful...
அருமை.அருமை.
இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரைவிசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.
கொஞ்சம் புரியுற மாதிரி இருக்கு ..
//செதுக்கிக் கொண்டே இருக்கிறார்கள் ...
குற்றவாளிகளின் எண்ணிக்கை நீள்கிறது//
முற்றிலும் உண்மை. செதுக்கச் செய்ததே பிரச்சனைக்குக் காரணம். அது தலைவர் நாற்காலியால் வந்தது.
//நகுலா, நீரைத் தேடு!//
இதுவும் சரிதான். இப்படித்தான் நடக்கிறது. ஆனால் அது 'ஞானமரம்' என்பதுதான் இட்டுக்கட்டல். தாகமே சாட்சி.
வலிந்துபடக்கூறிய குற்றம் நீங்க இது நல்ல தர்சனம்.
வித்தியாசமான கவிதை. நல்லா இருக்கு வித்யா.
அனுஜன்யா
நல்லாருக்கு வித்யா!
அப்பா என்னம்மா யோச்சிக்கிறீங்க
கவிதை அருமை.
ஞான மரம்!
அருமை.:)
நிஜம்மாகவே ஞானமரம்தான்....ஏதேதோ யோசிக்க வைக்கிறது.பூங்கொத்து!
ரெண்டு மூணு பேரு புரியுதுன்னு வேற சொல்லிட்டுப் போயிட்டாங்க..
ஒரு வேளை நமக்குத்தான் ஞானம் பத்தலையோ?
கவிதையில் வாழ்க்கையின் சூட்சுமம் புரிகிறது, புரிந்தது போலவும் இருக்கிறது. மிகவும் அருமை விதூஸ்.
உங்க கட்சிக்கு நான்தான் கொ.ப.செ
நல்லாயிருக்கு...ஆனா ஒன்னும் வெளங்கல :))
Happy Tamil New year Vidoosh and enjoyed your wonderful post.
வோட்டுப் போட்ட கருவேலநிழல், பாலாசி, ஜ்யோவ்ராம்சுந்தர், யேசுவடியான், கோவிலடி, அண்ணாமலையான், பாலா.கே., மௌனகவி, easylife,
பவன், அம்பிகாஜோதி, சித்ரா, பலாபட்டறை, கீதாச்சல், ராம் சைதன்யா, ஜெட்லி-இட்லி, பின்னோக்கி, பிரின்ஸ்R5
எல்லோருக்கும் நன்றீஸ். :)
தியா: இப்போது உங்கள் உடல்நலம் தேறியது குறித்து மகிழ்ச்சி. என் பதிவுகளை படிப்பதற்கும்.
எல்லோருக்கும் நன்றிங்க.
////செதுக்கிக் கொண்டே இருக்கிறார்கள்
பலவருடங்களாக
சுலோகங்கள் தீரவில்லை இன்னும்
குற்றவாளிகளின் எண்ணிக்கை நீள்கிறது/////
உண்மையை அழுத்தமாக சொல்லி இருக்கிறீர்கள் .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
நல்லாருக்கு ஆனா பக்கோடாவைதான் காணலை
Post a Comment