அம்மா


என்னவோ இரண்டு நாட்களாக அம்மாவைப் பார்க்க வேண்டும் என்றே தோன்றிக் கொண்டிருக்கிறது.

என் அம்மாவே என் ஹிந்தி டீச்சர். :) ஆறுவயதில் இருந்தே பரிச்சய பரீட்சைக்கு தயார் செய்ய காலையில் நான்கு மணிக்கு எழுப்பி, சிறப்பு வகுப்புக்கள் எடுத்து , அம்மா எனக்கு சொல்லித்தந்தவை ஹிந்தியும் சமஸ்கிருதமும். நான் அழுதபடியே படித்த ஹிந்தியும், சமஸ்கிருதமும், எனக்கு வருமானம் ஈட்டித் தரும் வேலையாகவே ஆகும் என்று சிறிதும் நினைக்கவில்லை அப்போது. :)

இன்று என் மனதைத் தொட்ட இரண்டு பாடல்களை ஹிந்தியிலிருந்து மொழி பெயர்த்துள்ளேன்.

=====================================================

Movie : தாரே ஜமீன் பர் (21/12/2007)
Singers : ஷங்கர் மகாதேவன்
Song : துஜே சப் ஹை பதா மேரி மா
Lyricist : பிரசூன் ஜோஷி
Actors : தர்ஷீல் சபாரி, அமீர்கான், டிஸ்கா சோப்ரா, விபின் ஷர்மா
Music Director : ஷங்கர் - எஹசான் - லாய்   (main kabhi bathlaatha nahin)
உன்னிடம் நான் சொன்னதே இல்லை
இருளென்றால் எனக்கு பயம்தான் அம்மா
உன் மீது நிறைய அன்பு கொண்டுள்ளேனென்று
உன்னிடம் சொன்னதே இல்லையே அம்மா

உனக்கு எல்லாம் தெரிந்திருக்குமே அம்மா

கூட்டத்தில் என்னைத் தொலைத்துவிடாதே
நான் வழிதவறி விடுவேனே அம்மா
உன் நினைவில் கூட வரமுடியாத அளவுக்கு
என்னைத் நெடுந்தொலைவு அனுப்பாதே அம்மா

நான் அத்தனை மோசமில்லை அம்மா?

அப்பா என்னை திட்டும் போதெல்லாம்
பத்திரமாய் தாங்கிக் கொள்வாய் என
என் கண்கள் உன்னைத் தேடுமே அம்மா
அப்பாவிடம் சொல்ல முடியாது அம்மா
என்னிதயத்தின் தவிப்புக்களை என்
முகத்தில் தெரியாமல் மறைத்து கொள்கிறேன்
ஆனாலும் மனதுள் அச்சமிருக்கிறதே அம்மா

உனக்கு
எல்லாம் தெரிந்திருக்குமே அம்மா
சொன்னதே இல்லை அம்மா
உன் மீது நிறைய அன்பு கொண்டுள்ளேனே அம்மா

==================================================================

A beautiful song sung by Siza Roy in Jagjit Singh's Ghazal Album Cry for Cry.
-----------------------------
(maa sunavo muje voh kahani)
அம்மா, எனக்கு இப்படி ஒரு கதை சொல்
அதில் ராஜாவும் ராணியும் இருக்க வேண்டாம்

எந்தக் கதை உன்னையும் என்னையும் காட்டுகிறதோ
எல்லார் இதயத்திற்கு பிடித்தமான கதை ஒன்று
உன் பொருட்களின் வாசம் கொண்டிருக்கும் கதையது
தேவதைகளும் அதிசயங்களும் இல்லாத கதையது

என்னை சிரிக்க வைக்குமே அந்தக் கதை
என் வயிற்றுப் பசியைக் கூட போக்குமே
நிதர்சனங்களின் நிலவுகள் ஒளிருமே
நம்பிக்கைகளின் ஒளி இருக்குமே யதில்
பழைய நிகழ்வுகளின் நிழலில்லாத ஒரு கதை
அம்மா, எனக்கு இப்படி ஒரு கதை சொல்
அதில் ராஜாவும் ராணியும் இருக்க வேண்டாம்


.

0 comments:

Post a Comment