ஊஞ்சல்:
இரண்டு நாட்களாய் இணையப்பக்கம் வரமுடியவில்லை. மீண்டும் ஒரு நண்பர் எங்கள் திருக்காட்டுப்"பள்ளி"யில் இருந்து. சென்ற வாரத்தின் பரபரப்பு இவருக்கு என்னை அடையாளம் காட்டி இருக்கலாம். எங்கள் பள்ளியின் 91-ஆம் வருஷத்து "கணித மேதை ராமானுஜம்" இவர். எங்கள் பள்ளி கணித ஆசிரியர் திரு.ஜி.நாராயணன் அவர்களின் செல்ல மாணவர்களில் ஒருவர்.
பக்கோடா:
போன ஞாயிறு வீட்டில் பக்கோடா செய்தேன். கொஞ்சம் தண்ணீர் ஜாஸ்தியாகி, மசாலா வடையாக செய்து பெயர் மாற்றி பரிமாறியாகிவிட்டது. புதினா சட்டினியும் மிளகாய் சாஸும் என்று அதையும் தின்று, இஞ்சி-எலுமிச்சை ஜூஸ் குடித்து ஜெரித்தோம். தர்ஷிணி மட்டும்தான் இன்னும் அதை "பக்கவடை" என்றே சொல்லிக்கொண்டிருக்கிறாள். :))
தேநீர்:
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் HR&CE அலுவலகத்தின் அனுமதியுடன், மாலை 5 மணி முதல் 6 மணி வரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி முதலான புதினங்கள், வாழ்க்கை வரலாறுகள், கதைகள் போன்றவற்றில் ஒன்றும், குழந்தைகளுக்கான படைப்புகளில் இருந்து ஒரு நன்னெறிக் கதையொன்றும் என என்னிடம் இருக்கும் புஸ்தகங்களை வாசித்து காட்டப் போகிறேன். நான் இல்லாவிட்டாலும் என் நண்பர்களில் வேறு ஒருவர் இப்படி வாசிப்பார். கதை வாசித்துக் கேட்க விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம். (வில்லுப் பாட்டு, கதாகலாட்சேப ஜால்ராப் BGM இசைகளை எதிர்ப்பார்த்து வந்து ஏமாந்தால் பக்கோடா கும்பெனி பொறுப்பாகாது)
மழை:
இட்லி வடை வலைப்பக்கத்தை வாரம் ஒருதரம் மொத்தமாய் படிக்கிறதுண்டு. அப்படி பார்க்கையில் பதிவர் முத்துராமனின் சிறுநீரக சிகிச்சைக்கு நான்கு லட்சம் வரை செலவாகிறது என்றும் உதவி கேட்டிருந்தனர். சிறு துளி பெருவெள்ளம், உங்களால் இயன்றவரை உதவலாம்.
சிறுநீரக சிகிச்சையை இலவசமாகவே TANKER Foundation அமைப்பு நடத்துகிறது. முடிந்தால் அவர்களிடமும் உதவி கோரலாம், அங்கிருந்து யாரேனும் மருத்துவர்கள் தனக்கான fees இல்லாமல் இவருக்கு சிகிச்சையளிக்க முன்வந்தால் இன்னும் சிறப்பு. திரு.முத்துராமன் இறைவன் அருளுடன் விரைவில் குணமாகி நலம் பெற வேண்டுகிறேன்.
26 comments:
குட் மார்னிங்..
Present vidya
Present ma'am..
ஊஞ்சலில் ஆடி பக்கவடை கொறித்தேன்
பதிவர் முத்துராமன் சார், சீக்கிரம் தேவையான சிகிச்சை பெற்று குணமாக பிரார்த்தனைகள்.
அங்க பக்கவடை - இங்க பட்டோக்கா:)))
தேநீர் சிறக்க வாழ்த்துக்கள்.
பதிவர் முத்துராமன் விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்.
பக்கவடை அருமை!!
:)
பக்கவடை
ம்ம்ம் தர்ஷினி ....!
நல்லா இருக்கு பகிர்ந்த விதம் விதூஷ்
குட் ஆஃப்டர்நூன்... :)
பக்கோட செஞ்சு பக்கோட பேப்பர்ல மடிச்சு இங்க ஒரு பார்சல் அனுப்புங்க.
மணிஜீ - குட் மார்னிங்
குட் ஆப்டர்னூன்
மிகவும் சிறப்பான ஊஞ்சல்.
//பக்கவடை" என்றே சொல்லிக்கொண்டிருக்கிறாள். :))//
சரியாத்தான சொல்லியிருக்காங்க...
//வந்து ஏமாந்தால் பக்கோடா கும்பெனி பொறுப்பாகாது//
பிழை உள்ளது மேடம்.. பக்கோடா அல்ல "பக்கவடை" என்று இருக்கவேண்டும் :-)
:)
அறிமுகத்திற்கு மிக்க நன்றி வித்யா!!!
"எங்கள் பள்ளியின் 91-ஆம் வருஷத்து "கணித மேதை ராமானுஜம்" இவர்"
கணித ஆசிரியர் இதைப் படிக்காமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்:):).
உண்மையில் கணிதத்தைப் பொறுத்தவரை நான் ஒரு பாரதி. கணித அறிவில் மட்டும். கவிதையில் அல்ல. கணக்கு , பிணக்கு , வணக்கு , மனக்கு , ஆமணக்கு....
Thanks again!!
பக்கோடா சாரி பக்கவடை... நைஸ்!
திரு.முத்துராமன் அவர்கள் விரைவில் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
பக்கோடாவை பத்திரமா வச்சுருங்க, கலவரம் நடக்கும் போது தேவைப் படும், முகிலன், டி.வி.ஆர் ஐயா உள்ளேன் போட்டு இருக்கிறதைப் பார்த்தா ரெண்டு கிலே பக்கோடா கேட்டு உங்ககிட்ட ஆர்டர் கொடுத்து இருக்காங்களா?
ஆன்லைன் டெலிவரி வசதி இருந்தா ரெம்ப உதவியா இருக்கும்..
அட! தேநீர் சுவை அருமை!
பக்கவடை குட்.
கண்டிப்பா இஞ்சி எலும்மிச்சை தேவை தான்
//தர்ஷிணி மட்டும்தான் இன்னும் அதை "பக்கவடை" என்றே சொல்லிக்கொண்டிருக்கிறாள்//
பாவம் தர்சினி.. ஒரு குழந்தையை போய்... என்ன கொடுமை சார் இது..
பதிவர் முத்துராமன் குணமைடைய ப்ரார்த்திக்கிறேன் வித்யா
ஊஞ்சல்
நன்னாவே ஆடறது... முத்துராமனின் சிறுநீரக கோளாறுக்கு எல்லோரும் உதவலாமே... நீங்கள் சொன்னது போல், சிறு துளி பெரு வெள்ளம்..
தோழமைகள் அனைவரும் ஒரு கை கொடுக்கலாம்...
பக்கோடா பேர் காரணம் புரிந்தது
:)
Tea is sweet ! so is vadai :)
கதைப் படித்துக் கேட்ட அனுபவம் நிறைய உண்டு. அந்த மரபு தொடர்வது சந்தோஷம்!
பெங்களூரில் அதுமாதிரி இருக்கான்னு பாக்கணும்.
படைத்துக் காட்டுவதோடு படித்தும் காட்டுகிறீர்கள்! வாழ்த்துகள்!
பக்கவடைப் பேப்பர்கள் - இது கூட நல்லாயிருக்கே :))
Post a Comment