வாய்ச்சொல்லில் வீரரடி - பாரதியார் பாடல்
Posted by
Vidhoosh
on Tuesday, June 29, 2010
Labels:
பாரதி
சீர்காழி கோவிந்தராஜன் குரலில் இங்கே கேட்கலாம்.
இந்தப் பாட்டு சின்ன வயசில் எங்கள் ஆங்கில ஆசிரியர் திரு.பிரணதார்த்திஹரன் அவர்களின் மகள் சொல்லிக்கொடுத்தது. இன்று காலையில் வானொலியில் கேட்க நேர்ந்தது. அருமையான பாடல். உங்களோடு பகிர்தல். முழுதாய் படித்து முடிக்கும் போது "மண்டைக்குள்" உண்மையாகவே ஏற்பட்ட உணர்வை முடிந்தால் சொல்லுங்கள். :)
பாரதியாரின் "நடிப்பு சுதேசிகள்" பழித்தறிவித்தல் / கிளி கண்ணிகள்
நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி - கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி
சொந்த அரசும்புவிச்
சுகங்களு மாண்புகளும்
அந்தகர்க் குண்டாகுமோ? கிளியே
அலிகளுக் கின்பமுண்டோ?
யந்திர சாலையென்பர்
எங்கள் துணிகளென்பர்
மந்திரத் தாலேயெங்கும் - கிளியே
மாங்கனி வீழ்வதுண்டோ?
தேவியர் மானமென்றும்
தெய்வத்தின் பக்தியென்றும்
நாவினாற் சொல்வதல்லால் - கிளியே
நம்புத லற்றாரடீ
தேவிகோ யிலிற்சென்று
தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென்றெண்ணிக் - கிளியே
அஞ்சிக் கிடந்தாரடீ
ஊக்கமும் உள்வலியும்
உண்மையில் பற்றுமில்லை
மாக்களுக்கோர் கணமும் - கிளியே
வாழத் தகுதியுண்டோ?
சிந்தையிற் கள்விரும்பிச்
சிவசிவ யென்பது போல்
வந்தே மாதரமென்பார் - கிளியே
மனதி லதனைக்கொள்ளார்
நாட்டி லவமதிப்பும்
நாணின்றி இழிசெல்வத்
தேட்டில் விருப்பங்கொண்டே - கிளியே
சிறுமை யடைவாரடீ
பஞ்சத்தும் நோய்களிலும்
பாரதர் புழுக்கள்போல்
துஞ்சத் தம் கண்ணாற் கண்டும் - கிளியே
சோம்பிக் கிடப்பாரடீ
கூட்டத்திற் கூடிநின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியே
நாளில் மறப்பாரடீ
கண்க ளிரண்டிருந்தும்
காணுந் திறமையற்ற
பெண்களின் கூட்டமடீ - கிளியே
பேசிப் பயனென்னடீ
உப்பென்றும் சீனியென்றும்
உள்நாட்டுச் சேலையென்றும்
செப்பித் திரிவாரடி கிளியே
செப்பித் திரிவாரடி கிளியே
செய்வதறியாரடி கிளியே
மாதரைக் கற்பழித்து
வன்கண்மை பிறர்செய்யப்
பேதைகள் போலுயிரைக் - கிளியே
பேணி இருந்தாரடீ
அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற்க் கொண்டாரடி - கிளியே
ஊமைச் சனங்களடீ
மானம் சிரிதன்றெண்ணி
வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர்க் குலகந்தனில் - கிளியே
இருக்க நிலைமயுண்டோ?
பழமை பழமையென்று
பாவனை பேசலன்றிப்
பழமை இருந்தநிலை - கிளியே
பாமர ரேதறிவார்?
சொந்த சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே
தாயைக் கொல்லும்பஞ்சத்தைத்
தடுக்க முயற்சியுற்றார்
வாயைத் திறந்து சும்மா - கிளியே
வந்தே மாதரமென்பார்
9 comments:
thanks for sharing :)))
மனதில் உடனே வந்து நின்றது செம்மொழி மாநாடு
//பழமை பழமையென்று
பாவனை பேசலன்றிப்
பழமை இருந்தநிலை - கிளியே
பாமர ரேதறிவார்?//
நச்
உள்ளேன் டீச்சர்
அருமை. பகிர்வுக்கு நன்றி.
///////சொந்த சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே
////////
அருமை. பகிர்வுக்கு நன்றி.
நல்லா பகிர்வு நன்றி தோழி.
ரைட்டு.. நான் எதாவது கொளுத்திப் போடவா;)
1974 ல் திரு.பிராணதத்திஹரன் அவர்களிடம் அமெரிக்கன் கல்லூரியில்..PUC படிக்கும் போது தமிழ் பயின்ற மாணவன்...அடியேன்...பழனிச்சாமி. ப
Post a Comment