ஸ்ம்ருதி-க்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல.
"கொட்டாய் பல்லிக்குட்டி குடமாடி உலகளந்த மட்டார் பூங்குழல் மாதவனை வரச் சொல்லிக் கொட்டாய் பல்லிக்குட்டி" என்று அவர் வரக் காத்திருக்கும் நேரங்களில் வலைப்பூத் தொடுக்கும் நானும், டொங்க் என்று காலிங்பெல் அடித்து கதவு திறக்கும் என்னிடம் "நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா" என்று அவரும் என உணர்வுகளைத் தாண்டிய நேசத்தின் சரணாகதி என எங்களைக் குறித்த நேசமித்ரனுக்கு நன்றிகள்.
த்யாயதோ விஷயாந் பும்ஸா: ஸங்கஸ் தேஷுபாஜயதே
ஸங்காத் சஞ்ஜயதே காம: காமாத் க்ரோதோபீஜயதே - 2.62
க்ரோதாத் பவதி ஸம்மோஹ, ஸம்மோஹாத் ஸ்ம்ருதிவிப்ரம:
ஸ்ம்ருதிப்ரம்ஸாத் புத்திநாசோ, புத்திநாசாத் ப்ரணஷ்யதி - 2.63
இவ்வரிகளை நினைவூட்டியமைக்கு பிரிய நேசனுக்கு, நன்றிகள். கீதையின் இரண்டாம் அத்தியாயத்தில் உரைக்கப்பட்ட மிக முக்கியமான வரிகள் இவை.
இவ்விரு ஸ்லோகங்களுமே மிகவும் அற்புதமான பொருளடக்கியவை. பிறப்பு போகம் மற்றும் உணர்வுகளின் சக்கரங்களுக்களுக்கான அச்சாணியாக சிக்கிக் கொண்ட ஒருவன், இவற்றிலிருந்தும் விடுபடுவது எப்படி என்று நறுக்குத் தெரித்தாற் போல கண்ணன் உரைத்த வரிகள். ரொம்ப தத்துவார்த்தமாக இருந்தாலும் பொறுமையாக படித்தால் பெரிய செய்தி காணக் கிடைக்கலாம்.
சென்ற வாரம் முழுதும் ஏகப்பட்ட ஆணியில், நிறைய பேரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அதில் ஒருவர் கார்ப்பரேட் மென்டார், 9 மணிக்கு கார் அனுப்பி, 10 மணி வரை காரைக் காக்க வைத்து, 12 மணிக்கு மீட்டிங்குக்கு வந்து சேர்ந்த அவரை at-least so-called corporate mentor என்றும் கொள்ளலாம்.
அவர் சொன்னதுக்கும், நேசனின் பின்னூட்டத்தைப் படிக்கவும், ஒப்புமை செய்யத் தோன்றியது. கிருஷ்ணனின் பகவத்கீதையை கனவில் கூட கார்ப்பரேட் மென்டார்களின் உரைகள் நெருங்க முடியாது. அதனால்தான் அது அதுவாக இருக்கிறது, இது இதுவாக இருக்கிறது :-)). யாரையும் தாழ்த்த வில்லை, கிருஷ்ணனைப் போல ஒரு மென்டார் கிடைப்பானா என்ற ஏக்கம் ... கொஞ்சம் கலவையான எண்ணங்களாக வெளிப்பட்டு உள்ளது. பொறுமையாக படிக்கவும்.
இதில் மோகம் என்பது, வெறும் காமம் என்பதாக மட்டும் இல்லாமல் மனித உணர்வுகள் அனைத்தையுமே குறிக்கிறது. பண்பு (அ) இயல்பு தவறுதல் (இந்த சொற்றொடர் நான் சொல்லவரும் செய்திக்கு கொஞ்சம் மிகையாக இருக்கிறது) என்பதற்கு முழுமையான அர்த்தத்தை உள்ளடக்கி இருக்கிறது. எனக்கு எளிதாக இருக்கிறது என்பதாலும், ஆங்கிலத்தில் சொல்லினால், இலகுவாக புரிந்து கொள்ள வேண்டுமானால் இமோஷனல் பிரேக் டவுன் / emotional break-down (அ) லாஸ் ஆஃப் கன்ட்ரோல் / loss of control (அ) லாஸ் ஆஃப் சென்சஸ் / loss of senses என்றும் கொள்ளலாம்.
ஏதோவொன்று ஒருவரிடம் நம்மை ஈர்த்து, அவரோடு இணைந்து கொள்கிறோம், இந்த ஈர்ப்பை வெறும் கவர்ச்சி என்று ஒதுக்கிவிட முடிவதில்லை, இதே ஈர்ப்புதான் நட்பு, பாசம், அன்பு, நேயம் எல்லாவற்றிற்கும் காரணமாகிறது. நாளாக ஆக இந்த இணை பந்தமாகி அடிமைப்படுகிறோம். பந்தத்தைத் தந்த பொருளோ (அ) மனிதரோ இல்லாத தருணங்கள் நரகமாகிறது. உணர்வுச் சிக்கல்கள் தோன்றுகின்றன.
உதாரணத்திற்கு, காஃபி அடிக்ஷன் :-) பொருட்களை மீதான அடிக்ஷனைப் போன்றே மனிதர்கள் மீதான பாச-பந்தங்களும். சில நேரங்களில் உணர்வுகளாலும் அவர்களிடம் அடிமைப்பட்டுப் போகிறோம். அவர்கள் ஆதரவு அற்றுப் போகும் போது நாமும் அற்றுப் போகிறோம். இல்லையா?
இணைதல், காமத்திற்கு முதற் படி என்கிறார் கிருஷ்ணன். இணைதலால் உணர்வுகளின் மாயவலை பின்னப்பட்டு மீளமுடியாமல் சிக்கிக் கொள்கிறோம். நம் எண்ணங்கள் மூலம் நம் உள்ளுணர்வுக்கு மீண்டும் மீண்டும் இச்செய்தி செலுத்தப்பட்டு உக்கிரமான ஆசையாகவோ, பாசமாகவோ, காமமாகவோ, கோபமாகவோ, குரோதமாகவோ அந்த உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. நம் டார்கட் ஆப்ஜக்ட் (target object) அல்லது நாம் குறித்து வைத்த மனிதர் வேறு ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தும் போது ஆங்காரம் அல்லது பகையுணர்ச்சி தோன்றுகிறது. இந்த நொடியிலிருந்து நம் கால்களுக்கு கீழுள்ள பூமி நழுவி நாம் அதளபாதாளத்தில் படு வேகமாக விழத் துவங்குகிறோம் என்கிறார் கிருஷ்ணன். ஆங்காரம், குரோதம் மற்றும் கோபம் இருக்கும் போது வேறு புலன்கள் ஏதுமே செயல் படுவதில்லை. சடக்.....கென்று "அதெப்படி என் கைமீறிப் போவாய்" என்று ஒரு துளி பொறியொன்று போதுமானதாக இருக்கிறது உடலெங்கும் கார்டிஸால் (cortisol) பரவி, தீக்குள் விழுந்த சருகு போல தன்னுடலும் சுற்றியுள்ள அனைத்துமே பரபரவென பற்றி எரிகிறது. வெறும் சாம்பலை வைத்து என்ன செய்வது....???
உன் மேலுள்ள பாசம்தான், உன் மேல் பகையும் தோன்றச் செய்கிறது என்பது கண்ணன் சொல்லும் செய்தி. அன்பெனும் ஆயுதங்கொண்டு பகைவனுக்கருள்வாய்!?
கண்ணன் உரைக்கிறார்: க்ரோதாத் பவதி ஸம்மோஹ -- கோபம் (அ) குரோத உணர்வுகள் ஒரு நொடிக்குள் கண்மூடித்தனமாக பொய்க் காட்சிகளை கண்முன் விரிக்கிறது. மாயை?!
எத்தனை உண்மையாக வார்த்தைகள்!! கோபத்தின் அடிப்படையில் இல்லாத காரணங்களை உருவாக்குகிறோம். செய்யாத செயல்களைச் செய்கிறோம். தவறான புரிதல்களுக்கு ஆளாகிறோம். அடர்த்தியான திரை விழுந்து மனிதம் கிழிக்கப் படுகிறது. எதிராளி இறந்து கிடக்கிறான் - உடலாக அல்லது உணர்வாக.... favouritism மற்றும் judgement-டுக்கிடையே போராட்டம் நிகழ்கிறது. உலகமே நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது. நாம் அகதிகள் ஆகிறோம். ஓடுகிறோம் ஆதரவுகள் கிடைப்பதில்லை. செயலற்று வீழ்கிறோம். நாமும் இறக்கிறோம். இப்படிப்பட்டக் கோபத்தால் குரோதத்தால் யாருக்கு பயன்?
இதைத்தான் கிருஷ்ணன் "ஸம்மோஹாத் ஸ்ம்ருதிவிப்ரம:" என்றுரைத்து கோபத்தால் (அ) உணர்ச்சிவசப் படுவதால் நம் குறிக்கோளையும் கவனத்தையும் இழக்கிறோம் என்கிறார். இலகுவிலும் இலகுவான காரியங்கள் செய்வதில் கூட மலைப்பு தோன்றுகிறது. வாய்ப்புகள் கை நழுவுகின்றன. தனித்தன்மை (அ) அறிவை இழந்து உணர்வுகளின் அடிமையாகிப் போகிறோம்.
கதோபனிஷத், உடல் என்பது தேர் என்றும், ஐந்து புலன்களும் ஐந்து குதிரைகளாகவும், மனம்-லகான் என்றும், அறிவு - தேரோட்டி என்றும், வரித்துள்ளது. தேரோட்டி இறந்து விட்டால் குதிரைகளின் ஓட்டம் சீர் குலையும். தேர் அச்சு முறியும். தேரின் அச்சு முறிந்து விட்டால் அழிவு வெகு தொலைவிலா இருக்கப் போகிறது? இதைத்தான் கிருஷ்ணன் "புத்திநாசாத் ப்ரணஷ்யதி" என்கிறார்.
ஈர்ப்பு பாசத்தை உருவாக்குகிறது. பாசம் பந்தங்களை, பந்தங்கள் ஏமாற்றத்தையும், ஏமாற்றம் குரோதத்தையும், குரோதம் துரோகத்தையும், துரோகம் அழிவையும் கொடுக்கிறது. இந்த பேரழிவு ஒருவருக்குத் தொடர்ச்சியான ஜனன-மரணங்களை அளிக்கிறது என்கிறார் கிருஷ்ணன்.
பிறப்பில்லா மரணத்தைப் பெற காம கோப குரோத உணர்வுகளை அடக்க வேண்டும். கீதையில் கண்ணன் பிரச்சினையை மட்டும் பேசாமல் தீர்வையும் சொல்கிறார். சில தீர்வுகள் மிகவும் சுலபமானதாக இருக்கிறது, சில தீர்வுகள் கடினமானதாக இருக்கிறது. எப்படியாகினும் கீதையின் தீர்வுகள், முறையாக பின்பற்றப் பட்டால் நல்ல பயன்கள் கிடைக்கும் என்பது உறுதி. எதுவுமே முடியவில்லையா? நிர்பந்தங்களோ கோரிக்கைகளோ ஏதுமின்றி என்னை சரணடைந்து விடு என்கிறார்...
தனியாக நின்றுகொண்டிருக்கிறீர்கள். உங்கள் பாதங்களுக்கு மிக சமீபத்தில் கிடக்கும் கைக் குழந்தையை நீங்கள் தூக்குவீர்களா மாட்டீர்களா?? அதே போலத்தான் கண்ணனும்... யாரேனும் ஒருவரிடம் சரணடைந்துதான் பாருங்களேன்!!
இதைவிட எளிதான, இதைப் போன்றக் கடினமான தீர்வு ஏதும் இருப்பதாக அறியவில்லை. சத்யம் ராஜூவைப் போன்ற கார்பரேட் மென்டார்களிடம்தான் கேட்க வேண்டும்.
எல்லாம் சரிதான்? அப்படியானால் உணர்வுகளினால் பந்தித்து மணம் புரிந்து சந்ததி வளர்ப்பது பாவமா? புனர்ஜன்மம்தானா? அப்படியானால் மறுஜன்மாவிலும் எனக்கு கொட்டடி பல்லிக்குட்டிதானா?
அதுதான் இல்லை. அதுக்குத்தான் அறுபதாம் கல்யாணம் என்றொன்று இருக்கிறதே!! வாய்த்தால் பின்பு பேசலாம் இதைப் பற்றியும், வானப்ரஸ்தம் மற்றும் சன்யாச ஆஸ்ரமங்களைப் பற்றியும்... 72 வயதுக்கு மேல்தான் சன்யாசியாம்.. சொல்லியிருக்கு வேதங்களிலே!
20 comments:
arumai.. keep up ur good work. waiting for next part
கொஞ்சம் புரிஞ்சிச்சி
இன்னும் புரிந்து கொள்ளவே முயல்கிறேன்
மிக மிக அழகான நடையில், தெளிவான விளக்கங்களுடன், உங்கள் வழக்கமான ஸ்டைலுடன் இருக்கிறது..
வாழ்த்துக்கள் விதூஷ்...
ரொம்ப நாளாச்சு இல்ல நான் இங்க வந்து...
ஆனாலும், நல்லவற்றை தேடி கண்டுபிடித்து படித்து விடாமல் விடுவதில்லை...
:)
வணக்கம் சகோ!
இந்த வணக்கத்தை கை கூப்பி செய்ததாக எடுங்கள். அதாவது கும்பிடுவதாக.
இடுகைக்கு என வேறு கும்பிடா உண்டு?
ஓரளவுக்குப் புரிஞ்சது.
//இடுகைக்கு என வேறு கும்பிடா
உண்டு?//
இருந்தா என்னக்கும் சொல்லி அனுப்புங்க
ம்ம்ம்ம்
உண்மையில் மிக நெகிழ்வாய் உணர்கிறேன் விதூஷ்
காலையில் இருந்து வருவதும் போவதுமாய் என்ன பின்னூட்டம் போடுவது என்றுத்தெரியவில்லை
மீண்டும் வாழ்த்துகிறேன் இலையே வாசமாய் வளரும் துழாய் என வாழி
நன்றி சொல்லி விட முடியுமா என்ன தங்கைகளுக்கும் அம்மாக்களுக்கும்
காயேன வாசா மனசேந்திரியைர்வா புத்யாத்மனாவ ப்ரக்ருதே ஸ்வபாவாத்
கரோமி யத்யத் சகலம் பரஸ்மை .................ஸமர்ப்பயாமி
இந்த கோடிட்ட இடங்களில் கடவுளர் பெயர் மாறலாம் ஒவ்வொருவருக்கும் ஆனால் உண்மையில் மாறிக் கொண்டே இருப்பது கடவுளர் அல்ல உறவுகள்
பாஸ்கர் சாரோ நேயா வோ தர்ஷினியோ ....
சந்நியாசம் பற்றி பேசியிருந்தீர்கள்
ம்ம்
எங்களூரில் வெள்ளை வேட்டி சந்நியாசி என்று ஒருபதம் உண்டு
வாழ்ந்து காட்டுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
பார்த்தும் இருக்கிறேன் ம்ம் தெருக் கல்லை எடுத்துக் கொள்ள சொல்லிவிட்டு விட்டு தூரத்தில் போய் திறந்து பார்க்க சொல்வார்கள் உலோகமாய் விரும்பிய உருவம் கிடைக்கும்
:)
மேடம் தமிழ்ல எப்ப பதிவு எழுதுவீங்க? :) (ஃபங்க்சனுக்கு வரலில்ல!!)
கை கூப்பி ஒரு வணக்கம்! :))
நன்றி கார்த்திக்: எழுதணும்... உம்... ம்ம்ம்... பலாபட்டர ஷங்கர் கிட்ட கேளுங்க இந்த உம்..ம்ம்ம்..களுக்கான பின்னணியை. :))
நன்றி ஜமால்: ஈசிதான், ஆனால் ரொம்ப கஷ்டம், ஈகோ-ன்னு ஒன்னு இருக்கே அதை தாண்டனும், பெரிய ராக்ஷஷன் இந்த ஈகோ. ஈகோவை தாண்டிச் செல்வது தற்கொலைக்கு சமம். தாண்டி விட்டால் திரும்பிப் பார்க்கும் போது தலை நிமிர்ந்தே இருக்கும்... :-)
கோபி: நலம்தானே, நன்றீஸ். :)
அப்துல்: நன்றீஸ்.
பா.ரா. அண்ணே. மகளுக்கு சீர் செய்யும் போது திருக்குறளும், கீதை ஒன்றையும் கொடுத்து விடுங்க.
நன்றி ஜீவ்ஸ்.
நன்றி பேராண்டி நசர். இந்தியா பக்கம் தலை வச்சு கூட படுக்கரதில்லைன்னு சபதமா..
நன்றி வித்யா.. ம்ம் நடக்கட்டும். எவ்ளோ அட்டை பெட்டி பிரிக்காம கட்டிலுக்கு அடில மறச்சு வச்சிருக்கீங்க. வீட்டை ஒரு வழியா செட்டில் பண்ணீங்களா? நடக்க இடம் இருக்கா? :))
நேசன்: அதான் நன்றி சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டீங்களே. :-))
வெள்ளை வேட்டிக்காரரை உங்கள் கவிதைக்குள் கொண்டு வாங்களேன். கண்டு பிடிக்க முடியுதான்னு பார்க்கலாம்.
நன்றி ராவணா. அது சரி ! நீங்க எழுதின பின்னூட்டத்தில் எத்தனை தமிழ் இருக்குன்னு எண்ணிச் சொல்லுங்கோ! :-)) கருப்பட்டி காப்பியோட கைமுறுக்கு பார்ட்டியும் வச்சு, கல்கோனா விருந்து வைப்பதாயிருந்தால் எல்லா வேலையையும் விட்டுட்டு வரேன். :))
நன்றி வருங்கால கவுன்சிலர் ஷங்கர். ம்ம்ம்..
வணக்கம் சகோதரி..
இந்த மாத லேடீஸ் ஸ்பெசல் இதழில் உங்களை பற்றி உங்களுடைய கட்டுரை கண்டேன்.. வாழ்த்துகள்
உங்கள் மின்னஞ்சல் முகவரி தெரியாதென்பதால் இங்கேயே வாழ்த்து சொல்லிவிட்டேன். ;-) மற்றபடி காட் பிராமிஸாக இந்த பதிவை நான் படிக்கவில்லை
\\Maria Mcclain said...
You have a very good blog that the main thing a lot of interesting and useful!hope u go for this website to increase visitor.
\\
மேற்கண்ட அந்த வெள்ளைகார அம்மனிக்கே புரிஞ்சு நல்லா இருக்குன்னு பாராட்டுறாங்க அதிஷா! தெகிரியமா படிச்சு பாருங்க புரியாட்டி என் கிட்ட கேட்க வேண்டாம்:-))
adhisha and abhi appa: yenna adhisayamaa irukku... athaan mazhai peyyudhaa.. nandrees.
நல்ல நினைவுகள்...சிந்திக்க தூண்டும் வரிகள்.
//கிருஷ்ணனைப் போல ஒரு மென்டார் கிடைப்பானா என்ற ஏக்கம் ... கொஞ்சம் கலவையான எண்ணங்களாக வெளிப்பட்டு உள்ளது. பொறுமையாக படிக்கவும்.//
//கிருஷ்ணனின் பகவத்கீதையை கனவில் கூட கார்ப்பரேட் மென்டார்களின் உரைகள் நெருங்க முடியாது//
ஏக்கம் புரிகிறது. but I think your search is misplaced. Not fair to compare some odd consultant as epitome of corporate world. not that there is no wisdom outside Geethai or religions.
தேடுதலில் தெரிவு .....தெரிவதில் தெளிவு கிடைப்பதற்கு முதல் படி என்றே நான் நினைக்கிறேன்.
good one vidhoosh!!!
உங்கள் எழுத்து என்னை மிகவும் கவர்ந்து விட்டது! உங்கள் விளக்கம் கீதைக்கு மிக அழகாக அமைந்துள்ளது!
வாழ்த்துக்கள்!
Post a Comment