மௌனம் உடைக்கும் சம்பாஷணைகள்

நதிமீதமைந்திருந்த
அந்தப் பாலத்திலமர்ந்துதான்
பேசிக் கொண்டிருந்தோம்
வார்த்தைகளின் பாரத்தில்
பாலங்கள் உடைகின்றன
கடினமான தருணங்கள்
புன்னகை தர மறுக்கின்றன
வடுக்களின் ஆங்காரத் தீயில்
அனைத்தும் எரிகிறது
உருக்குகிறது, வருத்துகிறது
எறிந்த எல்லாமே மிதந்து செல்கிறது
கரையொதுக்கும் அலைகள்
ஒதுங்கியவை மீதெல்லாம்
காலம் தந்த வயதின் சுருக்கங்கள்
இடைவெளிகள் இன்னும் நீள்கின்றன
விழைந்தும் பேசமுடியாத உணர்வுகள்
நீண்ட நாட்களுக்குப் பின்பான சந்திப்பில்
ஒட்டப்படிருந்த சுவடுகளோடு பாலம் இருந்தது
மௌனம் உடைக்கும் சம்பாஷணைகளால்
பாலம் உடையாமல் பார்த்துக் கொள்
நதியோடிக் கொண்டிருக்கிறது.

11 comments:

Ashok D said...

நல்லாயிருக்குங்க ரொம்ப

கிருஷ்ண மூர்த்தி S said...

வார்த்தைகள் தான் பாலத்தின் பலமென்றும்
வார்த்தைகள் தான் பாலத்தின் பலவீனமென்றும்
தெரிந்துகொள்ளத் தவறும் தருணங்களில் எல்லாம்
வார்த்தைகளால் ஆனபாலம் உடைவதும் சரிதானே!

சிறியன சிந்தியாதான்! வாலிக்குக் கம்பனின் அடைமொழி!
நாகாக்க! இது வள்ளுவனின் குறள்மொழி! படித்ததன் பொருள்
புரிந்து எழுதினால் பலம் சேரும்! இல்லையேல் வம்பு வரும்!
தெரிகிற வரை மௌனமே நல்ல மொழி! மௌனம் உடைப்பதில்லை!

ஓடுகிற நதிவேகம் பாலம் தேவையில்லை தடைகளை அடித்துப் போகும்
பாலத்தின் தேவை கடக்க விரும்பும் மனிதனுக்கேயன்றி ஓடும் நதிக்கில்லை.
பாலம் அமைப்பதும் கடினமில்லை! தேவைகள் அதைப் பார்த்துக் கொள்ளும்
உடைந்தது எதுவென்று தெளிந்து சொல் மனமே! அதுவரை மௌனம் போதும்!

Unknown said...

இரண்டு கவிதைகளும் நன்றாக இருக்கு..
விதூஷ்...
கிருஷ்ணமூர்த்தி இருவருக்கும் பாராட்டுக்கள்

நட்புடன் ஜமால் said...

மெளனத்தையும் உடைத்தல் வேண்டாம்

மெளனமாயும் உடைத்தல் வேண்டாம்

நல்லாயிருக்குங்க விதூஷ் :)

நேசமித்ரன் said...

நதியோடிக் கொண்டிருக்கிறது.


மாப்பிள் மரத்தின் துயர் வயலினின் பாடல்களில் கலப்பதில்லை

கூழாங்கற்களில் இருக்கும் நதி நதியில் இருக்கும் கூழாங்கல் -உடல்/உயிர்

குடித்துக் கொண்டே இருக்கிறது சூரியன் குறைவதே இல்லை கடல்
பெய்து தர இருக்கிறது காடு

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்கு வித்யா.

தமிழ் உதயம் said...

"மௌனம் உடைக்கும் சம்பாஷணைகளும் ஏதோ செய்கின்றன. இனம் புரியா தவிப்பை தந்தது கவிதை.

Unknown said...

நீண்ட நாட்களுக்குப் பின்பான சந்திப்பில்
ஒட்டப்படிருந்த சுவடுகளோடு பாலம் இருந்தது
மௌனம் உடைக்கும் சம்பாஷணைகளால்
பாலம் உடையாமல் பார்த்துக் கொள்
நதியோடிக் கொண்டிருக்கிறது. //

மௌனம் உடைக்கும் சம்பாஷணைகள்.. காத்திருப்புகளுக்குப் பின்.. :)

rajasundararajan said...

//விழைந்தும் பேசமுடியாத உணர்வுகள்//

இதுதான் நதிப்பாலத்தின் மீதுள்ள நமக்கு இப்போதைய இக்கட்டு.

எங்கோ வாசித்து அறிந்தது நினைவுக்கு வருகிறது: சீராக எட்டெடுத்து வைத்து முன்னேறும் போர்ப்படை வீரர்கள் நதிப்பாலங்களின் மீது அணிவகுப்பைக் கால்விட்டு ஒழுங்கின்றி நடப்பார்களாம். சீரான சப்தங்களால் பாலம் தகர்ந்துவிட வாய்ப்பு உள்ளதாம்.

வாக்கியங்களினால் ஆன பேச்சுகளுக்கும் இலக்கண ஒழுங்குண்டு. பேசாமல் இருப்பதே உத்தமம். அல்லது பேசித்தான் ஆகவேண்டும் என்றால் கொள்கையற்ற பேச்சே உகந்தது. கொள்கைகள் ஒழுங்கின்பாற் பட்டவை. பாலம் தாங்காது.

அன்புடன் அருணா said...

நல்ல கவிதை.

எல் கே said...

have given you an award please collect it

http://lksthoughts.blogspot.com/2010/06/blog-post_15.html

Post a Comment