அன்பே!
ஸ்ம்ருதிகளிலான நத்தையின் நகர்வில்
எதையும் இழக்காமலிருக்கவே விருப்பம்
நீண்ட பயணத்தின் ஒவ்வொரு
ஊசி முனை வளைவுகளையும்
உன் தோள் சாய்ந்தே கடந்திருப்பதை
நினைவிலிருத்துவதும் மறப்பதும்
என் வசத்திலிருப்பதில்லை
நினைவுகளை எப்படி ஸ்ருங்காரிப்பாய்
இவ்வுடலாக நானில்லாதபோது
விழுதுகளைச் சுமக்கும் மரம் போல நீ!
(பாஸ்கருக்காக)
28 comments:
சில சமஸ்கிருத வார்த்தைகள் தொக்கி நிர்ப்பது போலி இருக்கு வித்யா.
நன்றி லாவண்யா. ஸ்ம்ருதியாக சில compromise-களையும் , ஸ்ருங்காரம் என்பது முழுமையாக விரும்பி ஏற்பதையும் குறித்து அமைகிறது. வேறு வார்த்தைகள் சிக்கவில்லை.
நேசன் வந்தால் வேறு தளம் அமையக் கூடும்.
நைஸ்.
nice
அருமை சகோ!
பாஸ்கருக்கு பிறந்த நாளா? :-)
//நினைவுகளை எப்படி ஸ்ருங்காரிப்பாய்
இவ்வுடலாக நானில்லாதபோது
விழுதுகளைச் சுமக்கும் மரம் போல நீ!//
superb!
பிறந்தநாளுக்கு பிறந்த நாள் மட்டும்தான் 'பாஸ்கருக்காக' கவிதையா? :-))
(ஹி..ஹி.. மணிஜி ஸ்டைலில் நம்மாள் 'முடிஞ்சது')
பிறந்த நாள் இல்லை, திருமண நாள், ஏழாம் தேதி
very good!
வாழ்த்துகள் இருவருக்கும்! :-)
பட்டுசேலை கேளுங்கள் பாஸ்கரிடம். ( இப்பவும் அதே 'முடிஞ்சது') :-))
//நினைவிலிருத்துவதும் மறப்பதும்
என் வசத்திலிருப்பதில்லை//
அருமை
கேட்கப் பெறுவதற்கும் நினைவிலிருத்துவதற்கும் மீண்டும் மீண்டும் நினைவு கொள்வதற்குமான
சொல் ஸ்மிருதி ..ஸ்மரணத்தில் இருந்து பிறந்திருக்கக் கூடும்
”கரோதாத் பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரமா”
ஸ்ம்ருதி ப்ரம்சாத் புத்தி நாச: புத்தி நாசாத் ப்ரணச்யதி
(சம்ஸ்கிருதம் நமக்கு தள்ளாட்டம்தான்
பிழை இருப்பின் சுட்டுக)
----------------------------
பாஸ்கர் சாருக்கும் உங்களுக்கும்
பெருவழிப்பாதையின் இடறேதும் வடு செய்யாதிருக்க வளமான நாட்களை கொண்டு சேர்க்கும்
தரிசனப் புன்னகை பரவட்டும் நாளும்
-----------------------------
மஜ்ஜா ஸம்ஸ்தா
உன் தோள் சாய்ந்தே கடந்திருப்பதை
இவ்வுடலாக நானில்லாதபோது
எப்படி ஸ்ருங்காரிப்பாய்
ஸ்ம்ருதிகளிலான நத்தையின் நகர்வில்
-----------------------------
மிக ஆழமான பிரியத்தின் பரியந்தம் பேசும் இவ்வரிகளில் இருக்கும் ஆராதிப்பு கடந்த ஆதுரம் வாத்சல்யத்தால் ததும்புகிறது
ராதா-கிருஷ்ண பாவம் சைதன்யபதி என்னவெல்லாமோ கடக்கிறது
மனோஜவம் மாருத துல்ய வேகம்
----------------------------
தளமாற்றம் கடந்து பிரியம் என்ற புள்ளியில் நின்று கொள்கிறேன் :)
----------------------------
சம்ஸ்கிருதம் அறிய எத்தனித்தது.
ஆனால் ராகுல்ஜீயும் இனிய சே’ யும் என் ஆதர்ஷங்கள் ஆன பின் வெகுதூரம் வந்து விட்டேன்
:)
இனிய மண நாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்!! :)
கவிதை அருமை. வாழ்த்துக்கள்.
பூங்கொத்துக்களுடன் வாழ்த்துகள் இருவருக்கும்! :-)
Good!!! வாழ்த்துகள்!! :)
வாழ்க வளமுடன்..
வாழ்த்துக்கள்.
:)
அன்பே!
நினைவு நத்தையின் நகர்வில்
எதையும் இழக்காமலிருக்கவே விருப்பம்
நீண்ட பயணத்தின் ஒவ்வொரு
கொண்டை-ஊசி வளைவுகளையும்
உன் தோள் சாய்ந்தே கடந்திருப்பதை
நினைவில் இருத்துவதும் மறப்பதும்
என் வசத்தில் இருப்பதில்லை
நினைவுகளை எப்படிக் காமுறுவாய்
இவ்வுடலாக நானில்லாதபோது
விழுதுகளைச் சுமக்கும் மரம் போல நீ!
இப்படி இருந்தால் நீங்கள் கருதிய துல்லியம் வசப்படாதோ?
இருவருக்கும் வாழ்த்துகள்.
விதூஷ் அருமை :)))
திருமணநாள் வாழ்த்துக்கள்!!
இந்நாளில் கணவர் தங்களுக்கு ஏதாவது இனிய பரிசுகள் அளித்திருக்கக் கூடும்.
ஸ்ம்ருதி அவருக்கு விலைமதிப்பற்ற பரிசாக இருக்கட்டும்!
நேசனின் பின்னூட்டம் சுவாரஸ்யம்..
கவிதையைச் சீர்படுத்திய விதம் அருமை.
அவரது தளம் மட்டுமில்லாமல் வேறு இடங்களிலும் அவரின் எழுத்துக்களை இப்போது வாசிக்க முடிகிறது.
ராஜு சாரின் சீர்படுத்தலும் இன்னும் சிறப்பா எளிமையா இருக்கு.
இனிய மணநாள் வாழ்த்துக்கள்.
திருமணநாள் வாழ்த்துக்கள் வித்யா.
Wife : Darling Today is our anniversary, what should we do?
Husband : Let us stand in silence for 2 minutes.
அது எனக்கு வந்த SMS அதுக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை..
இனிய மண நாள் வாழ்த்துக்கள்......
:)
வைரத்துல எதாவது கேளுங்க...
இங்கயும் அதே 'முடிஞ்சது')
எட்டை எட்டி விட்டதிற்கு வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்..!!
அருமையான கவிதை! பாராட்டுக்கள்!
அருமையான கவிதை! பாராட்டுக்கள்!
நீண்ட பயணத்தின் ஒவ்வொரு
ஊசி முனை வளைவுகளையும்
உன் தோள் சாய்ந்தே கடந்திருப்பதை
நினைவிலிருத்துவதும் மறப்பதும்
என் வசத்திலிருப்பதில்லை//
அருமை வித்யா..:))
இனிய மணநாள் நல்வாழ்த்துகள். அருமை.
Post a Comment