மெளனத்தையுடைக்கும் முயற்சியில்
குவித்துச் சேர்க்கிறேன் என்னையே
இணையாமலும் பிரியாமலும்
இருக்கிறது மெளனமாக
இன்னும் துண்டு துண்டாகிறது
உடையாமலும் ஒட்டாமலும்
மெளனமாக இருக்கிறது
எளிதாக இருக்கிறது
இன்னுமொரு அடி முன்னே வைப்பதும்
மீண்டும் பின்னால் செல்வதும்
போலவே கடினமாகவே
மௌனமும் இருக்கிறது
சொல்லவியலாத பதில்களும்
நிறமிழந்த சில ஓவியங்களும்
அங்கே புதைந்துள்ளன
தோண்டவேண்டாம்
மௌனமும் இருக்கிறது
அதைக்காட்டிலும் உனக்கான
கேடயம் மேலானது
எனக்கானதை வெளிக்கொணரும்
முயற்சியில் நீ வென்றாலும்
அது தரும் ரணங்களைச் சகிக்கவியலாது
அங்கே மெளனம்தான் புதைந்துள்ளது
மெளனமாகவே மௌனமும் இருக்கிறது
19 comments:
நல்லாயிருக்கு...
//மெளனத்தையுடைக்கும் முயற்சியில்
குவித்துச் சேர்க்கிறேன் என்னையே///
ரசித்த வரி...
மொளனத்தில் விளையாடும் மனசாட்சியேன்னு பாலமுரளி பாடும் பாடல் ஞாபகத்துக்கு வந்தது.
அருமை
நான் மௌனமா படிச்சுட்டு போறேங்க
.
நான் இன்னைக்கு மௌன விரதம்....
ரொம்ப நேரமாச்சு படிச்சி
மெளனமாக போகத்தான் நினைக்கிறேன்
மெளனத்தை எழுத்தாக்கும் கலை உங்களை போல் எனக்கு வரவில்லை
Good One!
இனிமே இப்டி செய்வியா? ;)
சொல்லவியலாத பதில்களும்
நிறமிழந்த சில ஓவியங்களும்
அங்கே புதைந்துள்ளன
தோண்டவேண்டாம்
மௌனமும் இருக்கிறது
மெளனமாகவே மௌனமும் இருக்கிறது//
:)
மௌனம் பேசியது!
மெளனத்தையுடைக்கும் முயற்சியில்
குவித்துச் சேர்க்கிறேன் என்னையே
இணையாமலும் பிரியாமலும்
இருக்கிறது மெளனமாக
இன்னும் துண்டு துண்டாகிறது
உடையாமலும் ஒட்டாமலும்
மெளனமாக இருக்கிறது
.... very nice.
ம்ம் !
பேசும் மவ்னத்தின் கனம் அதிகம் பேச்சை விட சமயத்தில் இந்தக் கவிதை பேசாத மவ்னத்தைப் போல்....
மௌனம் எப்போதுமே அழகும் அமைதியும் கூட !
//மெளனமாகவே மௌனமும் இருக்கிறது//
ம்ம்ம்
//மெளனமாகவே மௌனமும் இருக்கிறது //
பிடித்திருந்தது. நல்ல கவிதை வித்யா
//இணையாமலும் பிரியாமலும் // //உடையாமலும் ஒட்டாமலும்//
நல்லா இருக்கு.
உள்ளே பொங்குவது எரிமலையானாலும், அலைபாயும் மனமானாலும், அசையாமல் எரியும் சுடரென்றாலும், வெளியில் மௌனம்...காண்போரின் எண்ணப்பிரதிபலி ப்பாப்பாய் தோன்றி உள்ளக்கிடக்கையின் கேடயமாய்........பழகினால் இது ஒரு நல்ல வசதி தான்....ஒரு ஆயுதமும் கூட.
அதுவே உள் மௌனமானால் ... அது தான் முக்தியோ?
கனமான மவுனதுடன் கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது..வாழ்த்துக்கள்
மௌனம் அருமை.
//அதைக்காட்டிலும் உனக்கான
கேடயம் மேலானது//
இதுவும் இதற்கடுத்ததும் ஆகிய
வரிகள் சலசலக்கின்றன..
கவிதை வாசித்து, ஆகா நசருக்கு விருந்தல்லோ என பின்னூட்ட பகுதிக்கு வந்தால்,
ம்ம்ம்.. போதலை நசர். :-(
sundhar சுந்தர் leads! :-)
நல்ல கவிதை சகோ.
Post a Comment