இறுதிச்சேர்க்கை


வசித்து வந்த  அத்தருணங்களை அனைத்தும் 
ஆகாசகங்கையில் கரைத்துவிடவும்.
பின்னர், 
ஆதியந்தமற்றப் பெருவெளியிலிருந்து எழுந்து 
மிதக்கும் தருணங்களை நிரப்ப
Image Source:  commons.wikimedia.org/wiki/
File:Mithras_banquet_Louvre_Ma3441.jpg
ஒரு ஆழமான கிணறு தோண்டவும்.
தாளிக்க
உணர்வுகளின் எதிரொலிகள்
அவியாத நினைவுகள், மற்றும் 
எதிர்பார்க்கப்படுபவை  வழங்கப்பட்டவை
பெறப்பட்டவை அபகரிக்கப்பட்டவை 
அனைத்தும் இரண்டிரண்டு எண்ணிக்கையில்.
நிராகரிக்கப்பட்டவற்றை அளவாகச் சேர்க்கவும்.
மற்றும் ஒரு இறுதிச் சேர்க்கையாக 
முடிவில்லாத கவிதை கலந்து 
வேள்வித் தீயில் ஹவிஸிடவும்.

1 comments:

nimmathiillathavan said...

Varthai jalangalthan kavithaiyo

Post a Comment