நீலம்
பனைக்காற்று வீசும் ஓலைவிசிறி
பெருங்கூட்டமாயொரு நீலப்பெருவெளி

மரவேர் நரம்புகள்
கலைக்கப்பட்ட நிலவொளி
நட்சத்திரப் பிரதிகள்
குருவிகள் கூடும் பாறையிடுக்குகள்
கொண்ட மலையிருக்கும் பீடபூமி
பாழ் நிலமென்றே விளிக்கப்படும்
பாதியெரிந்த கங்கை வெள்ளம் கலந்த
கடல் அலையை அள்ளும் கைகளில்
பெருநாணற்புல் மோதிரமணிந்த
விரல்களின் எண்ணிக்கை போக
இந்தப் பேனாவின் மையும் நீலம்
-விதூஷ்
2 comments:
படமும் அருமை...
வாழ்த்துக்கள்...
Picture is very very beautiful.
Post a Comment