பூட்டு


இந்த அறைக்குள் உள்ள
நம்பிக்கைமிகுந்த நம்பகமான
சில பொருட்களில் நாமுமிருக்கிறோம்

எங்கும் நகர்த்தப்படாமல்
யாராலும் பயன்படுத்தப்படாமல்
நூற்றாண்டு காலங்களாக
ஓர் இரும்புப் பூட்டுக்காவலில்

அவை இன்றைய எதிர்பார்ப்புக்களைக்
குறுக்கிச் சேமிக்கப்பட்டவை
பல கனவுகளும் நிலவுகளும்
சில பணங்களும்.

யாரெல்லாம் உட்சுவற்றில்
தம்பெயரை பதிந்துள்ளனர்
என்பதும் மறைக்கப்பட்டுள்ளது

இப்பூட்டைத் திறக்கும் இரகசியமும்
அதை உடைக்கும் வலிமையும்
உள்ளே கிடக்கின்றன.

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... வித்தியாசமான சிந்தனை வரிகள்...

வாழ்த்துக்கள்...

Post a Comment