எந்நேரமும் திறக்கலாம் கால்களுக்குக் கீழ்
புதைந்து கிடக்கும் பாதாளக்கதவுகள்
அதற்குள் பூதம் காக்காதப் புதையல்கள்
சில கவலைகளும் நிராசைகளும்
பழுப்பேறியப் புகைப்படத்தின் சுரணையற்றப் புன்னகை
மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சில கடிதங்கள்
மஞ்சள் பையொன்றில் சுருட்டப்பட்டிருக்கும்
க்ருஹப்ரவேசக் கத்தரிப்பூ புடவை
இன்னும் கூர்ந்து பார்த்தால்
யாரோ அழைக்கும் ஒலி கூடத் தெரியலாம்
இறுகிப் போன ஒரு எபோனைட் பேனா
மற்றும் சில நினைவுகள்
தகரப் பெட்டியினை முன்பே மூடிவிட்டு
மாடிக்குச் செல்ல வேறென்ன காரணம்
ஒரே ஒரு நிலவும் காய்ந்து கொண்டிருக்கும்
சில துணிகளும்
3 comments:
அப்படித்தான் இருக்குமோ...?
அருமை. நன்றி.
அருமை!
Post a Comment