ஸ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ரம் தமிழாக்கம்

Translation Transliteration
ஸ்ரீராமரக்ஷாஸ்தோத்ரம்ஸ்ரீராமரக்ஷாஸ்தோத்ரம்
ஸ்ரீ சீதா ராமசந்திர பகவான் புகழைப் பாட, அனுஷ்டுப் சந்தத்தில் அமைந்த, சீதா சக்தி, ஹனுமான் கீலக, இலக்கண அடிப்படையில் புதகௌசிக மாமுனிவரால் இயற்றப்பட்ட ராமரக்ஷா ஸ்தோத்திரத்தை ஸ்ரீ சீதா ராமருடைய அனுக்ரஹத்தைப் பெற வேண்டி ஜபம் செய்யத் துவங்குகிறேன்.ஓம் அஸ்ய ஸ்ரீராமரக்ஷாஸ்தோத்ரமந்த்ரஸ்ய பு³த⁴கௌஸி²க ருஷி: ஸ்ரீ ஸீதாராமசந்த்³ரோ தே³வதா அனுஷ்டுப்‌ ச²ந்த³: ஸீதா ஸ²க்தி: ஸ்ரீமான் ஹனுமான்‌ கீலகம்‌ ஸ்ரீராமசந்த்³ரப்ரீத்யர்தே² ராமரக்ஷாஸ்தோத்ரஜபே வினியோக³: |
த்யானம்அத² த்⁴யானம்‌
தன் தொடை பாகம் வரை நீண்டுள்ளக் கரங்களோடும், வில் அம்புகளைத் தரித்தும், பத்மாசனத்தில் அமர்ந்தும், மஞ்சள் நிற ஆடைகளை அணிந்தும், அப்போது மலர்ந்த தாமரை இதழ்களுக்கு ஒப்பான விழிகளைக் கொண்டும், காண்பதற்கு இனிமையானவராகவும், கருமேகங்களுக்கு ஒப்பான நிறத்தைக் கொண்டவராகவும், தன் கனிவான பார்வையினாலே தன் இடதுமடியில் அமர்ந்துள்ள சீதாதேவியின் தாமரைவிழிகளை நோக்கியவாரும், ஒளிமயமான அலங்காரங்களில் ஜொலித்துக் கொண்டும், ஜடாமுடியைக் கொண்டவராக இருக்கு மாறு உருவகப்படுத்திக் கொண்டு ஸ்ரீ ராமசந்த்ர மூர்த்தியைத் த்யானம் செய்கிறேன்.த்⁴யாயேதா³ஜானுபா³ஹும் த்⁴ருதஸ²ரத⁴னுஷம் ப³த்³த⁴பத்³மாஸனஸ்த²ம் பீதம் வாஸோ வஸானம் நவகமலத³லஸ்பர்தி⁴னேத்ரம் ப்ரஸன்னம்‌ | வாமாங்காரூட⁴ஸீதாமுக²கமலமிலல்லோசனம் நீரதா³ப⁴ம் நானாலங்காரதீ³ப்தம் த³த⁴தமுருஜடாமண்ட³லம் ராமசந்த்³ரம் | |
புகழாரம் துவங்குகிறது[ஸம்பாதி³த கரேம்]ஸ்தோத்ரம்
ரகுராம சரித்திரம் நூறு கோடி வார்த்தைகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அவற்றில் ஒரேயொரு அக்ஷரத்தைப் படித்தாலும் பாவங்கள் செய்யும் எண்ணங்கள் நசியும்.சரிதம் ரகு⁴னாத²ஸ்ய ஸ²தகோடிப்ரவிஸ்தரம் ‌ | ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதகனாஸ²னம்‌ | | 1 | |
நீலத் தாமரை மலர் போன்று கருவண்ணமாக இருக்கும் ஸ்ரீராமரை த்யானித்து, தாமரை விழியோடு, சீதை மற்றும் லக்ஷ்மணன் உடனிருக்க, ஜடை முடி தரித்த தலையோடு, வாள், வில், அம்புகள், அம்புறாத்துணி ஆகியவற்றைத் தரித்து, ராக்ஷசவதங்களை லீலையாகச் செய்யும் வம்சத்தில் பிறந்து, இவ்வுலகைப் பாதுகாத்து ரக்ஷிக்கவும், இம்மையில்லாதவருமாகிய ஸ்ரீ ராமசந்த்ர மூர்த்தியைக் குறித்து இந்த ஸ்ரீராமரக்ஷாஸ்தோத்ரத்தை ஜபம் செய்பவருக்கு அனைத்து ஆசைகளும் ஈடேறும் வாய்ப்பு கிட்டும்.த்⁴யாத்வா நீலோத்பலஸ்²யாமம் ராமம் ராஜீவலோசனம்‌ | ஜானகீலக்ஷ்மணோபேதம் ஜடாமுகுடமண்டி³தம்‌ | | 2 | | ஸ்வலீலயா ஜக³த்த்ராதுமாவிர்பூ⁴தமஜம் விபு⁴ம்‌ | | 3 | | ஸாஸிதூணத⁴னுர்பா³ணபாணிம் நக்தஞ்சராந்தகம்‌ | ராமரக்ஷாம் படே²த்ப்ராஜ்ஞ: பாபக்⁴னீம் ஸர்வகாமதா³ம்‌ |
எனது தலையை ஸ்ரீ ராகவன் காக்கட்டும். எனது நெற்றியை தசரத புத்திரன் காக்கட்டும். எனது கண்களை கோசலை மைந்தன் காக்கட்டும். என் காதுகளை விஸ்வாமித்ரப்ரியன் காக்கட்டும். தன் நேர்மையான நடத்தையினால் ஸ்ரீ ராமனின் தலை எவ்விதம் உயர்ந்திருந்ததோ அவ்விதமே என் தலையும் நிமிர்ந்திருக்கட்டும். சூரியத்திலகம் அணிந்த நெற்றியை உடைய ராமனைப் போல என் நெற்றியிலும் ஒளி நிறைந்து இருக்கட்டும். ஸ்ரீராமனின் கண்கள் தன் தாயாரை காணும் போது நிறைந்திருக்கும் அன்பு என் கண்களில் எப்போதும் நிரம்பி இருக்கட்டும். எவ்விதம் ஸ்ரீராமனின் செவிகள் விஸ்வாமித்ரரின் கேட்டு நல்லாணைகளை செயலாக்க உதவியதோ என் செவிகளும் நல்வார்த்தைகளையே கேட்கட்டும்.ஸி²ரோ மே ராக⁴வ: பாது பா⁴லம் த³ஸ²ரதா²த்மஜ: | | 4 | | கௌஸல்யேயோ த்³ருஸௌ² பாது விஸ்²வாமித்ரப்ரிய: ஸ்²ருதீ |
என் மூக்கை தியாகங்களை ரக்ஷிப்பவனான ராமன் காக்கட்டும். சௌமித்ரி குமாரனான லக்ஷ்மணனுக்கு ப்ரியமான ராமன் என் முகத்தைக் காக்கட்டும். என் நாக்கை கல்வி கேள்விகளில் ஞானம் பெற்ற ராமன் காக்கட்டும். பரதனால் வணங்கப்படும் ராமன் என் கழுத்தைக் காக்கட்டும். திவ்யமான ஆயுதங்களை தரித்த ராமன் என் தோள்களைக் காக்கட்டும். வில்லை முறித்த ஸ்ரீராமன் என் புஜங்களைக் காக்கட்டும். என் கரங்களை சீதாபதியான ராமன் காக்கட்டும். ஜமதக்னியை(பரசுராமர்) வென்ற ஸ்ரீ ராமன் என் ஹ்ருதயத்தைக் காக்கட்டும். கராசுரனைக் கொன்ற ஸ்ரீராமன் என் உடலின் மத்தியப் பகுதியைக் காக்கட்டும். ஜாம்பவானுக்கு அருளிய தெய்வமான ஸ்ரீராமன் என் வயிற்றைக் காக்கட்டும். சுக்ரீவர் வணங்கும் தெய்வமான ஸ்ரீராமன் என் இடையைக் காக்கட்டும். என் பின்புறங்களை ஹனுமான் வணங்கும் ஸ்ரீராமன் காக்கட்டும். கொடிய ராக்ஷசர் குல நாசம் செய்த ரகோத்தமன் என் தொடைப் பகுதியைக் காக்கட்டும். என் முழங்கால்களை சேது பந்தன (இலங்கைக்கு பாலம் அமைத்த) ஸ்ரீராமன் காக்கட்டும். தசமுக ராவணனை அழித்த ஸ்ரீராமன் என் குதிகால்களைக் காக்கட்டும். என் பாதங்களை விபீஷணனுக்கு பாதுகாப்பு அளித்த ஸ்ரீராமன் காக்கட்டும். என் உடல் முழுதையும் ஸ்ரீராமன் காக்கட்டும்.க்⁴ராணம் பாது மக²த்ராதா முக²ம் ஸௌமித்ரிவத்ஸல: | | 5 | | ஜிஹ்வாம் வித்³யானிதி⁴: பாது கண்ட²ம் ப⁴ரதவந்தி³த: | ஸ்கந்தௌ⁴ தி³வ்யாயுத⁴: பாது பு⁴ஜௌ ப⁴க்³னேஸ²கார்முக: | | 6 | | கரௌ ஸீதாபதி: பாது ஹ்ருத³யம் ஜாமத³க்³ன்யஜித்‌ | மத்⁴யம் பாது க²ரத்⁴வம்ஸீ நாபி⁴ம் ஜாம்ப³வதா³ஸ்²ரய: | | 7 | | ஸுக்³ரீவேஸ²: கடீ பாது ஸக்தி²னீ ஹனுமத்ப்ரபு⁴: | உரூ ரகூ⁴த்தம: பாது ரக்ஷ:குலவினாஸ²க்ருத்‌ | | 8 | | ஜானுனீ ஸேதுக்ருத்பாது ஜங்கே⁴ த³ஸ²முகா²ந்தக: | பாதௌ³ விபீ⁴ஷணஸ்ரீத³: பாது ராமோ(அ)கி²லம் வபு: | | 9 | |
ராமரின் பராக்ரமத்தின் மீது நம்பிக்கை கொண்டு எவரொருவர் நன்நெறியோடு இந்த ரக்ஷா மந்திரத்தை ஜபிக்கிறாரோ அவருக்கு நீண்ட ஆயுள், வம்சவ்ருத்தி, வெற்றி, தன்னடக்கம் ஆகியவை கைகூடும்.ஏதாம் ராமப³லோபேதாம் ரக்ஷாம் ய: ஸுக்ருதீ படே²த்‌ | ஸ சிராயு: ஸுகீ² புத்ரீ விஜயீ வினயீ ப⁴வேத்‌ | | 10 | |
இந்த ராமரக்ஷா மந்திரத்தைப் படிப்பவரை பாதாளம், பூலோகம், ஆகாசம் ஆகிய மூவுலகிலும் மறைந்து அலைந்து திரியும் துர்சக்திகளால் காண இயலாது.பாதாலபூ⁴தலவ்யோமசாரிணஸ்²ச²த்³மசாரிண: | ந த்³ருஷ்டுமதி ஸ²க்தாஸ்தே ரக்ஷிதம் ராமனாமபி⁴: | | 11 | |
ராமா, ராமபத்ரா, ராமசந்த்ரா என்ற இந்த மூன்று பெயர்களையும் ஸ்மரணம் (சதா ஜபம் செய்தல்) செய்து கொண்டே இருக்கிறாரோ அவரிடம் பாவங்கள் அடையாது, நல் வாழ்க்கையில் பூரணமடைந்து முக்தி பெறுவார்.ராமேதி ராமப⁴த்³ரேதி ராமசந்த்³ரேதி வா ஸ்மரன்‌ | நரோ ந லிப்யதே பாபைர்பு⁴க்திம் முக்திம் ச விந்த³தி | | 12 | |
ராம நாம ஜபத்தை மாலையாக்கி (துளசி மாலையில் ஜபத்தால் உருவேற்றி) யாரொருவர் அணிகிறாரோ அவரை துர்சக்திகள் அண்டாது.ஜக³ஜ்ஜைத்ரைகமந்த்ரேண ராமனாம்னாபி⁴ரக்ஷிதம்‌ | ய: கண்டே² தா⁴ரயேத்தஸ்ய கரஸ்தா²: ஸர்வஸித்³த⁴ய: | | 13 | |
இந்த ரக்ஷா மந்திர கவசத்தை யாரொருவர் இடைவிடாது ஜபிக்கிறாரோ அவருக்கு வைரகவசம் (கூண்டு) போல இந்த மந்திரத்தின் சக்தி தலைவணங்கி செல்லும் இடமெல்லாம் துணையிருந்து ஒவ்வொரு செயலிலும் மங்களகரமான வெற்றியைத் தந்து காக்கும்.வஜ்ரபஞ்ஜரனாமேத³ம் யோ ராமகவசம் ஸ்மரேத்‌ | அவ்யாஹதாஜ்ஞ: ஸர்வத்ர லப⁴தே ஜயமங்க³லம்‌ | | 14 | |
புதகௌசிக மாமுனிவரின் கனவொன்றில் சிவபெருமான் இந்த ராமரக்ஷா மந்திரத்தை ஜபிக்க, மறு நாள் காலையில் ஒரு அக்ஷரம் கூட விட்டுவிடாமல் புத கௌசிகர் இதை எழுதினார்.ஆதி³ஷ்டவான்யதா² ஸ்வப்னே ராமரக்ஷாமிமாம் ஹர: | ததா² லிகி²தவான்ப்ராத: ப்ரபு³த்³தோ⁴ பு³த⁴கௌஸி²க: | | 15 | |
வேண்டியதை அள்ளிக் கொடுக்கும் கர்ப்பக வ்ருக்ஷம் போன்ற ஸ்ரீராமனுக்கு இணையானவர் வேறொருவருமில்லை, சர்வலோகத்தில் சகல இடங்களிலும் நிறைந்திருக்கும் ஸ்ரீராமன் அனைத்துலகிலும் உத்தமமானவன்.ஆராம: கல்பவ்ருக்ஷாணாம் விராம: ஸகலாபதா³ம்‌ | அபி⁴ராமஸ்த்ரிலோகானாம் ராம: ஸ்ரீமான்ஸன: ப்ரபு⁴: | | 16 | |
ராம லக்ஷ்மண சகோதரர்களால் நாம் காக்கப்படுவோமாக. நற்குணவான்களும், உத்தமர்களும், பலபராக்கிரமர்களும், தாமரையையொத்த விழிகள் கொண்டவர்களும், மரவுரி தரித்தவர்களும், பழங்களையும், கிழங்குகளையும் புசிப்பவர்களும், தன்னடக்கமிக்கவர்களும், உயர்ந்த சிந்தனையுடையவர்களும், ப்ரம்மசாரிகளும், தசரத புத்திரர்களும் (தன்னை நம்பிய) அனைத்து ஜீவராசிகளுக்கும் பாதுகாப்பு தந்தவர்களும், பெருமை மிக்கவர்களும், வீராதிவீரர்களிலெல்லாம் மிகச்சிறந்த வில்வீரர்களும், ராக்ஷச குலத்தை அழித்தவர்களுமான இவர்கள் நம்மைக் காப்பாற்றுவார்களாக.தருணௌ ரூப ஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹாப³லௌ | புண்ட³ரீகவிஸா²லாக்ஷௌ சீரக்ருஷ்ணாஜினாம்ப³ரௌ | | 17 | | ப²லமூலாஸி²னௌ தா³ந்தௌ தாபஸௌ ப்³ரஹ்மசாரிணௌ | புத்ரௌ த³ஸ²ரத²ஸ்யைதௌ ப்⁴ராதரௌ ராமலக்ஷ்மணௌ | | 18 | | ஸ²ரண்யௌ ஸர்வஸத்த்வானாம் ஸ்²ரேஷ்டௌ² ஸர்வத⁴னுஷ்மதாம்‌ | ரக்ஷ:குலனிஹந்தாரௌ த்ராயேதாம் நோ ரகூ⁴த்தமௌ | | 19 | |
எப்போதும் வில் அம்பில் நாணேற்றித் தயாராக வைத்திருப்பவர்களும், அம்புகளின் வரிசைத் தீர்ந்தே போகாத அம்புறாத்துணி வைத்திருப்பபர்களுமான ராம லக்ஷ்மணர்கள் எப்பொதும் என் முன் இருந்து என்னைக் காக்கட்டும்.ஆத்தஸஜ்ஜத⁴னுஷாவிஷுஸ்ப்ருஸா²வக்ஷயாஸு²க³னிஷங்க³ஸங்கி³னௌ | ரக்ஷணாய மம ராமலக்ஷ்மணாவக்³ரத: பதி² ஸதை³வ க³ச்ச²தாம்‌ | | 20 | |
கவசமணிந்து வில் அம்பு ஏந்தி தன் ரதத்தில் ப்ரயாணித்தபடி எப்போது வேண்டுமானாலும் தர்மயுத்தம் செய்ய தயாராக இருக்கும் ராம லக்ஷ்மணர்கள், என் மனமெனும் ரதத்தில் ஏறி என்னைக் காக்கட்டும்.ஸன்னத்³த⁴: கவசீ க²ட்³கீ³ சாபபா³ணத⁴ரோ யுவா | க³ச்ச²ன்மனோரதா²ன்னஸ்²ச ராம: பாது ஸலக்ஷ்மண: | | 21 | |
தசரத புத்திரனான ராமன், அனைத்துக்கும் நாயகன், எப்போதும் லஷ்மணனோடு இருப்பவன், காகுஸ்த வம்சத்தவன் (அடிக்குறிப்பு 1), பூரண புருஷோத்தமன், கோசலை மைந்தன், ரகோத்தமன், வேதாந்தாங்களால் மட்டுமே அறியப்படக்கூடிய வேதன், யாகங்களுக்கெல்லாம் நாயகன், தொன்மையானவன், புருஷோத்தமன், சீதையின் நாயகன், நிர்மலமானவன், பராக்ரமி ஆகிய சகல நற்குணங்களும் கொண்ட ஸ்ரீராமனை த்யானம் செய்து, தினமும் ஸ்ரீராம நாமத்தை எந்தவொரு பக்தர் பக்தியோடு ஜபிக்கிறாரோ அவருக்கு அஸ்வமேத யாகம் செய்த பலனைக் காட்டிலும் பன்மடங்கு பலன் கிடைக்கும்.ராமோ தா³ஸ²ரதி²: ஸூ²ரோ லக்ஷ்மணானுசரோ ப³லீ | காகுத்ஸ்த²: புருஷ: பூர்ண: கௌஸல்யேயோ ரகூ⁴த்தம: | | 22 | | வேதா³ந்தவேத்³யோ யஜ்ஞேஸ²: புராணபுருஷோத்தம: | ஜானகீவல்லப⁴: ஸ்ரீமானப்ரமேயபராக்ரம: | | 23 | | இத்யேதானி ஜபன்னித்யம் மத்³ப⁴க்த: ஸ்²ரத்³த⁴யா(அ)ந்வித: | அஸ்²வமேதா⁴தி⁴கம் புண்யம் ஸம்ப்ராப்னோதி ந ஸம்ஸ²ய: | | 24 | |
தர்ப்பைப் புல்லில் உண்டாகும் மொட்டைப் போன்ற கருவண்ணம் கொண்ட, தாமரையை போன்ற விழிகளைக் கொண்ட, மஞ்சள் பட்டு அணிந்த, ஸ்ரீராமனின் பெயரை யாரொருவர் தினமும் பக்தியோடு நாமஜபம் செய்கிறாரோ, அவர் மீண்டும் இந்தப் பூமியில் ஜன்மம் எடுத்து சம்சாரத்தில் உழலமாட்டார்.ராமம் தூ³வார்த³லஸ்²யாமம் பத்³மாக்ஷம் பீதவாஸஸம்‌ | ஸ்துவந்தி நாமபி⁴ர்தி³வ்யைர்ன தே ஸம்ஸாரிணோ நரா: | | 25 | |
ராமனாக இருப்பவரும், லக்ஷ்மணனின் மூத்த சகோதரனும், ரகுவரனும் (ரகு குலத்துக்கு வரமாக வந்தவன்), சீதாபதியும், ராவணனை வதம் செய்தவனும், உத்தமனும், காகுஸ்த வம்சத்தைச் சேர்ந்தவனும், கருணாகரனும், நற்குணசீலனும், வேத தர்மங்களை போற்றுபவர்களை விரும்புபவனும், தர்மசீலனும், அரசர்களில் சிறந்தவனும், சத்தியசீலனும், தசரத புத்திரனும், கருவண்ணம் கொண்டவனும், மென்மையே உருவானவனும், சாந்த ஸ்வரூபியுமான ஸ்ரீராமனை நமஸ்கரித்து வணங்குகிறேன்.ராமம் லக்ஷ்மணபூர்வஜம் ரகு⁴வரம் ஸீதாபதிம் ஸுந்த³ரம் காகுத்ஸ்த²ம் கருணார்ணவம் கு³ணனிதி⁴ம் விப்ரப்ரியம் தா⁴ர்மிகம்‌ | ராஜேந்த்³ரம் ஸத்யஸந்த⁴ம் த³ஸ²ரத²தனயம் ஸ்²யாமலம் ஸா²ந்தமூர்திம் வந்தே³ லோகாபி⁴ராமம் ரகு⁴குலதிலகம் ராக⁴வம் ராவணாரிம்‌ | | 26 | |
வேதங்களுக்கெல்லாம் ஆதாரமான ராமன், ராமபத்ரன், ராமசந்திரன், ரகு வம்சத்திலேயே சிறந்த நாயகன், சீதபதியான ஸ்ரீராமனுக்கு என் நமஸ்காரங்கள்.ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே | ரகு⁴னாதா²ய நாதா²ய ஸீதாயா: பதயே நம: | | 27 | |
ஸ்ரீ ராமா ராமா ரகு நந்தனா ராமா ராமா. ஸ்ரீ ராமா ராமா பரதனுக்கு மூத்தவனே ராமா ராமா. ஸ்ரீ ராமா ராமா தலை சிறந்த போர் வீரனே ராமா ராமா. ஸ்ரீ ராமா ராமா உன்னைச் சரணடைகிறேன் காப்பாய் ராமா ராமா.ஸ்ரீராம ராம ரகு⁴னந்த³ன ராம ராம ஸ்ரீராம ராம ப⁴ரதாக்³ரஜ ராம ராம | ஸ்ரீராம ராம ரணகர்கஸ² ராம ராம ஸ்ரீராம ராம ஸ²ரணம் ப⁴வ ராம ராம | | 28 | |
ஸ்ரீ ராமசந்திரனின் பாதங்களை நான் மனதால் த்யானிக்கிறேன். ஸ்ரீ ராமசந்திரனின் பாதங்களைப் பற்றி நான் வாக்கால் ஜபம் செய்கிறேன். ஸ்ரீ ராமசந்திரனின் பாதங்களில் என் தலையை வைத்து வணங்குகிறேன். ஸ்ரீ ராமசந்திரனின் பாதங்களைச் சரணடைந்து எனக்கு பாதுகாப்பு வேண்டுகிறேன்ஸ்ரீராமசந்த்³ரசரணௌ மனஸா ஸ்மராமி ஸ்ரீராமசந்த்³ரசரணௌ வசஸா க்³ருணாமி | ஸ்ரீராமசந்த்³ரசரணௌ ஸி²ரஸா நமாமி ஸ்ரீராமசந்த்³ரசரணௌ ஸ²ரணம் ப்ரபத்³யே | | 29 | |
என் தாயாக ஸ்ரீ ராமன் இருக்கிறார் என் தந்தையாக ஸ்ரீ ராமன் இருக்கிறார். என் தெய்வமாக ஸ்ரீ ராமன் இருக்கிறார் என் நண்பனாக ஸ்ரீ ராமன் இருக்கிறார். தயாள குணம் கொண்ட ஸ்ரீ ராமனே எனக்கு எல்லாமாகவும் இருக்கிறார். அவனைத் தவிர எனக்கு வேறு ஏதும் தெரியவேத் தெரியாதுமாதா ராமோ மத்பிதா ராமசந்த்³ர: ஸ்வாமீ ராமோ மத்ஸகா² ராமசந்த்³ர: | ஸர்வஸ்வம் மே ராமசந்த்³ரோ த³யாலு-ர்னான்யம் ஜானே நைவ ஜானே ந ஜானே | | 30 | |
ரகு நந்தனான ஸ்ரீ ராமனை வணங்குகிறேன். ஸ்ரீ ராமனின் இருக்கைக்குத் தென்பகுதியில் இருக்கும் லக்ஷ்மணனை வணங்குகிறேன். ஸ்ரீ ராமனுக்கு இடப்பாகத்தில் இருக்கும் தாயார் சீதையை வணங்குகிறேன். முற்பக்கம் வீற்றிருக்கும் ஹனுமானை வணங்குகிறேன்.த³க்ஷிணே லக்ஷ்மணோ யஸ்ய வாமே து ஜனகாத்மஜா | புரதோ மாருதிர்யஸ்ய தம் வந்தே³ ரகு⁴னந்த³னம்‌ | | 31 | |
உலகத்திலுள்ளவர் அனைவருக்கும் ப்ரியமான ஸ்ரீராமா, போர்களத்தில் அசகாய தீரனே, தாமரை கண்ணனே, ரகுவம்சத்தின் தலைவனே, கருணையின் உருவமே, கருணாகரனே, நான் ஸ்ரீ ராமசந்திரனின் பாதங்களைச் சரணடைகிறேன்.லோகாபி⁴ராமம் ரணரங்தீ⁴ரம் ராஜீவனேத்ரம் ரகு⁴வம்ஸ²னாத²ம் | காருண்யரூபம் கருணாகரம் தம் ஸ்ரீராமசந்த்³ரம் ஸ²ரணம் ப்ரபத்³யே | | 32 | |
மனதை வென்றவனே, வாயுதேவனுக்கு இணையான வேகம் உள்ளவனே, தன் உடல் உறுப்புக்களைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவனே, அதிபுத்திசாலியே, சிறந்தவனே, வாயு புத்திரனே, வானரப் படைகளில் முக்கியமானவனே, ஸ்ரீ ராமனின் தூதுவனாக இருப்பவனே, உன்னைத் தலை வணங்குகிறேன்.மனோஜவம் மாருததுல்யவேக³ம் ஜிதேந்த்³ரியம் பு³த்³தி⁴மதாம் வரிஷ்ட²ம்‌ | வாதாத்மஜம் வானரயூத²முக்²யம் ஸ்ரீராமதூ³தம் ஸி²ரஸா நமாமி | | 33 | |
எவ்விதம் வானம்பாடி மரக்கிளையில் அமர்ந்து இனிமையாக தன் மதுரக் குரலில் கூவிக் கொண்டே இருக்கிறதோ அவ்விதமே எப்போதும் ராம ராம ராம இதி என்று மதுரமான அக்ஷரங்களைத் தன் கவிதைகளின் மூலம் ஜபிக்கும் குயிலாக இருக்கும் ஸ்ரீ வால்மீகி முனிவருக்கு என் நமஸ்காரங்கள்.கூஜந்தம் ராம ராமேதி மது⁴ரம் மது⁴ராக்ஷரம்‌ | ஆருஹ்ய கவிதாஸா²கா²ம் வந்தே³ வால்மீகிகோகிலம்‌ | | 34 | |
நமக்கு வரும் ஆபத்துக்கள் அனைத்தையும் களைந்து சகல செல்வங்களையும் அருளும் ஸ்ரீராமா, உலகத்திலுள்ளவர் அனைவருக்கும் ப்ரியமான ஸ்ரீராமா, உன்னை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.ஆபதா³மபஹர்தாரம் தா³தாரம் ஸர்வஸம்பதா³ம்‌ | லோகாபி⁴ராமம் ஸ்ரீராமம் பூ⁴யோ பூ⁴யோ நமாம்யஹம்‌ | | 35 | |
ராமா ராமா இதி என்றொலிக்கும் ஜப முழக்கம் எங்கும் பரவி சர்வ லோகத்திலும் உள்ள துக்கங்களை நீக்குகிறது. எங்கும் சுக சந்தோஷங்களைத் தருகிறது. யமதூதர்களை விரட்டுகிறது.ப⁴ர்ஜனம் ப⁴வபீ³ஜானாமர்ஜனம் ஸுக²ஸம்பதா³ம்‌ | தர்ஜனம் யமதூ³தானாம் ராம ராமேதி க³ர்ஜனம்‌ | | 36 | |
அரசர் குல மாணிக்கமான ஸ்ரீ ராமா, உனக்கு எப்போதும் வெற்றியே. மஹாலக்ஷ்மி ஸ்வரூபமான சீதையின் நாயகனே, உனக்கு என் நமஸ்காரங்கள். இரவில் உலவி மக்களைத் துன்புருத்தும் ராக்ஷசர்களை அழிக்கும் ஸ்ரீ ராமனே, உனக்கு என் வணக்கம். ஸ்ரீ ராமனைச் சரண் புகுதலுக்கு ஒப்பான பாதுகாப்பு இவ்வுலகில் வேரறெங்கும் இல்லை. நான் ஸ்ரீராமனுக்கு என்றும் தாசன். என் மனமெல்லாம் ஸ்ரீ ராம ஜபமே நிறைந்துள்ளது. என் இறைவா. ஸ்ரீ ராமா. எனைக்காப்பாயாக.ராமோ ராஜமணி: ஸதா³ விஜயதே ராமம் ராமேஸ²ம் ப⁴ஜே ராமேணாபி⁴ஹதா நிஸா²சரசமூ ராமாய தஸ்மை நம: | ராமான்னாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தா³ஸோ(அ)ஸ்ம்யஹம் ராமே சித்தலய: ஸதா³ ப⁴வது மே போ⁴ ராம மாமுத்³த⁴ர | | 37 | |
ஹே. ராமா. நீ மனதிற்கு இனிமையானவன். நான் எப்போதும் ராமனோடே இருக்கிறேன். ஸ்ரீ ராம ஜபத்தையே பாடுகிறேன். ராமா ராமா என்று உச்சரித்துக் கொண்டே இருக்கிறேன். பக்தியோடு ஒரு முறை ராமா என்று அழைப்பது நூறாயிரம் முறை ராமா ராமா என்று ஜபிப்பதற்கு இணையாகும்.ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே | ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராமனாம வரானனே | | 38 | |
இப்படியாக புத கௌஸிகர் இயற்றிய ராம ரக்ஷா ஸ்தோத்திரம் முற்றுப் பெறுகிறது.இதி ஸ்ரீபு³த⁴கௌஸி²கமுனிவிரசிதம் ஸ்ரீராமரக்ஷாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

அடிக்குறிப்பு

also refer ராமரக்ஷா ஸ்தோத்திர விளக்கம் 1

1. காகுஸ்த வம்சம் - இஷ்வாகு பரம்பரை அரசர்களது பெயர்கள் ராமாயணம், மஹாபாரதம், ஹரிவம்சம், மற்றும் புராணங்களில் காணக்கிடைக்கிறது. காளிதாசரின் ரகுவம்சத்திலும் இத்தகைய இஷ்வாகு அரசர்களின் பெயர்கள் கிடைக்கின்றன. ராமாயணத்தில் பாலகாண்டத்தில் 70வது அத்தியாத்தில், இஷ்வாகு அரசர்களின் வம்சம் விவரிக்கப்பட்டுள்ளது. ப்ரம்மா 10 ப்ரஜாபதிகளை உருவாக்கினார். அவர்களில் ஒருவர் மரீச்சி. மரீச்சிக்கும் கலாவுக்கும் காஷ்யபர் பிறந்தார். விவாஸ்வான் (சூரியன்) காஷ்யபருக்கும் அதிதிக்கும் பிறந்தார்.

சத்தியவ்ரதன் என்ற வைவஸ்வத மனு, திராவிடர்களுக்கு அரசராக விளங்கியவர். இவன் விவாஸ்வானின் மகன் ஆவார். இஷ்வாகு சாம்ராஜ்யத்தில் முதன்முதலில் முடிசூட்டிக் கொண்ட மன்னனாகக் கருதப்படுகிறார்.

வைவஸ்வத மனுவின் மகன் இஷ்வாகு. இஷ்வாகுவின் மகன் குக்ஷி. குக்ஷியின் மகன் விகுக்ஷி. விகுக்ஷியின் மகன் பாணன். பாணபனின் மகன் ஆநரண்யன். ஆநரண்யனின் மகன் ப்ரிது. ப்ரிதுவின் மகன் ஹரிசந்திரன்/திரிசங்கு. ஹரிசந்திரன்/திரிசங்குவின் மகன் துந்துமாறன். துந்துமாறனின் மகன் யுவான்ஷுவான். யுவான்ஷுவானின் மகன் மந்ததன். மந்ததனின் மகன் சுசாந்தி. த்ருவசாந்தியும் ப்ரஸேன்ஜீத்தும் சுசாந்தியின் மகன்கள். த்ருவசாந்தியின் மகன் பாரதன். பாரதனின் மகன் பாகு. பாகுவின் மகன் ஆசமஞ்சன். ஆசமஞ்சனின் மகன் அங்ன்சுமன். அங்ன்சுமனின் மகன் திலீபன். திலீபனின் மகன் பகீரதன். பகீரதன் மகன் காகுஸ்தன்.
காகுஸ்தன் மகன் ரகு. (ரகுவம்ஸம் இவ்வாறு துவங்குகிறது) ரகுவின் மகன் ப்ரவிரதன். ப்ரவிரதன் மகன் சங்கணன். சங்கணன் மகன் சுதர்சனன். சுதர்சனன் மகன் அக்னிவர்ணன். அக்னிவர்ணன் மகன் ஷிகரன். ஷிகரன் மகன் மரூ. மரூவின் மகன் பர்ஷுஷ்ருகன். பர்ஷுஷ்ருகனின் மகன் அம்பரீசன். அம்பரீசன் மகன் நகுசன். நகுசன் மகன் யயாதி. யயாதியின் மகன் நபாகன். நபாகன் மகன் அஜன். அஜனுடைய மகன் தசரதன். தசரதனுக்கு ராமன், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகியோர் மகன்கள். ராமனுக்கு லவன், குசன். குசனுடைய மகன் அதிதி. அதிதியுடைய மகன் நிஷாடன். நிஷாடன் மகன் நளன். நளன் மகன் நபன். நபன் மகன் புண்டரீகன். புண்டரீகன் மகன் க்ஷேமதன்வன். க்ஷேமதன்வன் மகன் தவநீகன். தவநீகன் மகன் அகிநாகு. அகிநாகுவின் மகன் பாலன். பாலன் மகன் உக்தன். உக்தன் மகன் வஜ்ரநாபன். வஜ்ரநாபன் மகன் சங்கணன். சங்கணன் மகன் விஸ்வாசகன். விஸ்வாசகன் மகன் வியுஷ்தச்வன். வியுஷ்தச்வன் மகன் ஹிரண்யநாபன். ஹிரண்யநாபன் மகன் புஷ்யன். புஷ்யன் மகன் த்ருவசாந்தி. த்ருவசாந்தியின் மகன் அக்னிவர்ணன். அக்னிவர்ணன் மகன் சிகரன். சிகரன் மகன் மரூ. மரூவின் மகன் ப்ரஷுஸ்ருதன். ப்ரஷுஸ்ருதன் மகன் சுசாந்தி. சுசாந்திக்கு அமரசன் மற்றும் சஹசவந்தன் ஆகியோர் மகன்கள். அமரசன் மகன் விஸ்ருவந்தன். விஸ்ருவந்தன் மகன் ப்ருஹத்பாலன். ப்ருஹத்பாலன் மகன் உருக்ரியன். உருக்ரியன் மகன் வத்ஸவ்யூகன். வத்ஸவ்யூகன் மகன் ப்ரதிவ்யோமன். ப்ரதிவ்யோமன் மகன் திவாகரன். இதன் பிறகு விரிவாக இல்லாவிட்டாலும் மன்னர்களாக ப்ரதிகஸ்வன், சுப்ரதீகன், சுனகசாஸ்த்ரன், புஷ்கரன், அந்தரிக்ஷன், சுபர்ணன், அமித்ரஜீத், ப்ருஹத்விராஜன், பர்கீ, க்ருதஜன்யன், ரணஜன்யன், சஞ்சயன், சாக்யன், சுத்தோதசாக்யன் (புத்தரின் தந்தையார்), ராகுலன் (புத்தர் மகன்), ப்ரசேன்ஜீத், க்ஷூதவகன், ரணகன், சுராதன், சுமித்ரன் ஆகியோர் பற்றியக் குறிப்புக்களுள்ளன. சுமித்ரனுக்கு வாரிசு இல்லாததால் ரகுவம்சத்துக்கு சுமித்ரனே கடைசி மன்னராக இருந்திருக்கலாம்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

Tamil Meaning of the Sloka - Gadget -ல் சென்று விடுவதால், பகிர்வை வாசிக்க வருபவர்கள் ?m=1 என்று url-ல் இணைத்து படிக்கவும்... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

http://vidhoosh.blogspot.in/2013/07/blog-post_29.html?m=1

Unknown said...

விதோஷ் ராம ரக்க்ஷ ஸ்தோதிரத்தின் தமிழாக்கத்தை பதிவு செய்து என் போன்ற பல பேரை படிக்கச் செய்த உங்களுக்கு ஸ்ரீ சீதா ராம லக்ஷ்மண ஆஞ்சநேயர் அருள் பரிபூர்ணமாக கிடைக்கும் என்பது உறுதி

Post a Comment