முள்ளுக் காட்டு யட்சிணிக்கு
மீசை வைத்தவர்கள் ஆகாது
பரம்பரையாக மீசை வைத்திருக்கும்
கருப்பசாமிக்கு கன்னிப் பெண்கள் ஆகாது
ரெண்டும் வதந்திதான்
அருவாளும் சுக்குமாந்தடியும்
வாங்கிண்டு போங்கோ
ஒண்ணும் செய்யாது என்கிறார்
மீசையில்லாத அய்யர்
ஒற்றைக் கால் கொலுசோடு
நாக்குத் தள்ள செத்துப்போனவள்
பெயர் சுமதி
3 comments:
அருமை.
இன்னும் இப்படி நகர்ப்புறங்களில் கூட சில இடங்களில் நம்பிக்கை இருக்கிறது.
நன்றி.
முறைமையா, முரண்பாடா!
நாக்கு தள்ளிய காளியும் வணங்க்கப்பட்டும் பூமியல்லவா இது!
ஏன் என்று சொல்லத்தான் ஆளில்லை.
Post a Comment