கோடுகள்


அடக்கவியலா குதூகலத்திலும் கொஞ்சம் கண்ணீர்
வெதும்பி வழியும் துக்கத்தில் கொஞ்சம்
அலங்கரிக்கப்பட்டுள்ள புன்னகை
அழைப்பு மணியொலிக்குப் பூத்து மலரும்
வாயிற் கதவுக்குச் சற்றே யருகுள்ள ஜன்னலில்
திரைச்சீலை மறைத்திருக்கும் முகம்
தலைநகரச் சாலைகளில் தென்படும்
பிரசவக் கோடுகளைச் சுமக்க தயாரான
 மூன்று வயதில் சங்கிலிகளில் பிணைத்து
கருவுறாத நாய்க்கு
செய்யுங்கள் மருத்துவப் பரிசோதனை.
(2001)

2 comments:

rajasundararajan said...

//திரைச் சீலை மறைத்து = சங்கிலிகளில் பிணைத்து// => !

'சாலைகளில்' என்பதில் உள்ள போதாமை என்ன? அது 'தலைநகரச் சாலைகள்' என்பதில் எப்படி நிவர்த்தி ஆகிறது? இதைக் கவிஞர் அல்லது யாராவது அறிஞர் விளக்க வேண்டுமாய் வேண்டுகிறேன்!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்...

/// 'சாலைகளில்' என்பதில் உள்ள போதாமை என்ன? அது 'தலைநகரச் சாலைகள்' என்பதில் எப்படி நிவர்த்தி ஆகிறது? ///

எங்கள் ஊரின் சாலையைப் பார்த்தால் தெரிந்து விடும்...

பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

Post a Comment