சிவஸ்வர்ணமால்ய ஸ்துதி


1. ஈஷ, கிரீஷ, நரேஷ, பரேஷ, மகேஷ, பிலேஷய பூஷண போ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

ஹே ஈஸ்வரா! உயர்ந்த மலைகளில் வசிப்பவரும், மாதா பார்வதியின் நாயகரும், யோகியும், சரணாகதியளிப்பவரும், தேவாதிபதியும், சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

2. உமையா திவ்ய சுமங்கள விக்ரஹா வலிங்கித வமங்க விபோ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

உமாபதியே, பூமண்டலத்தின் மங்கள அமங்கலங்களை நிர்ணயிப்பவரே, உங்களை இணைந்திருக்கும் மாதா பார்வதிக்கு இடபாகம் அளித்தவரே, சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

3. உரி குறு மம அஜ்னம் அனதம், துரி குறு, மே துரிதம் போ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

நிர்கதியான என் அறியாமையைப் பொருத்தருள வேண்டும். என் சிந்தனை மற்றும் செயல்களால் என் ஆத்மாவிற்கு உண்டான இன்னல்களை நீக்கியருள வேண்டும். சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

4. ரிஷி வர மனச ஹம்ச, சரா சர ஜனன ஸ்திதி, லய காரண போ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

உயர்ந்த யோகிகளான மகாரிஷிக்களின் மனம் அன்னம் போன்று தனக்கு கிடைப்பவற்றை எல்லாம் சுத்தி செய்து, அவசியமானதைப் பகிர்வது போல எனக்கு அவசியமானவற்றை மட்டும் அளிப்பவரே, ஜனன மரணங்களுக்கும், எல்லா ஜீவராசிகளையும் ரக்ஷிப்பவருமானவரே, சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

4. அந்த காரண விஷுதிம் பக்திம், ச த்வயி சதிம் பிரதேஹி விபோ
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

மாதா சதி(பார்வதி)யையும் உங்களையும் நமஸ்கரிக்கும் போதெல்லாம் எனக்கு முன்வினைகளின் குற்றவுணர்வோ பயமோயின்றி மரணத்தை எதிர்கொள்ளும் மனபலத்தையும் ஆத்மசுத்தியும் பக்தியையும் தருபவரே, சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

5. கருணா வருணாலய மயி தச உதஸஸ்தவோசித்தோ ந ஹி போ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

கருணையை மழையாக வருஷிப்பவரே, உன்னையே சரணாகதி என நம்பும் என்னை உதாசீனம் செய்வது சரியில்லை. சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

6. ஜய கைலாச நிவாச, பிரமத கணதிஷா பூ சுர அர்ச்சித போ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

கைலாசநாதருக்கு ஜெயம். குற்றங்களைக் களைந்து அருள்பவரே, கணங்களையும் திசைகளையும் திக்குக்களையும் அணிந்தவரே, சகல ஜீவன்களாலும் வணங்கப்படுபவரே, சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

7. ஜனுத கஜ கிங்கினு ஜ்ஹனுதத் ஷப்தைர் நடசி மஹா நட போ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

பூமண்டலத்தின் அணுக்களனைத்தையும் அசைத்து ஜனு, கஜ, கிண்கிணி ஆகிய சப்தலயங்களை எழுப்பி நடம் புரிபவரே, சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

8. தர்ம ஸ்தாபன தக்ஷ த்ரயக்ஷ குரோ தக்ஷ யஞ்ன ஷிக்.ஷக போ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

தர்மத்தை நிர்மாணிப்பவரும், முக்கண்ணுடையவரும், தக்ஷயாகத்தில் தக்ஷனுக்கு தகுந்த பாடம் புகட்டியவரும்,சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

8. பலம் ஆரோக்யம் ச்ச ஆயுஸ் த்வத் ருசிதாம் சிரம் பிரதேஹி பிரபோ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

ஹே பிரபோ! மனபலத்தையும், உடலாரோக்கியத்தையும், எப்போதும் என் தலை வணங்கியே இருக்க அருளுங்கள். சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

9. பகவான், பார்க்க பயாபஹா பூத பதே, பூதி பூஷிதங்க விபோ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

ஹே பகவானே! பாவங்களை நசிப்பவரே, பயங்களை நீக்குபவரே, உடலெங்கும் நீறு பூசி இருப்பவரே, சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

10. சர்வ தேவ சர்வோத்தம, சர்வத துர்வ்ருத ஹரண ப்ரபோ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

சர்வோத்தமா! நீங்கள் அனைத்தையும் நொடிகளில் அளித்து விடும் வல்லமை கொண்டவர். என்னுடைய அனைத்து துர்குணங்களையும் கருவத்தையும் அழித்துவிடுங்கள். சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

11. ஷத் ரிபு, ஷதூருமி, ஷத் விகார ஹர, சண் முக ஷண்முக ஜனக விபோ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

ஆறுவகை எதிரிகளையும் (ஆசை, பேராசை, கோபம், காமம், கருவம், பொறாமை), ஆறுவகை வியாகூலங்களையும்/ஆவல் (தாகம், பசி, துக்கம், ஈர்ப்பு, முதுமை, மரணம்) ஆறுவகை மாற்றங்களையும் (இருப்பு, பிறப்பு, வளர்ச்சி, முதிர்ச்சி, அழிவு, மரணம்) அழிப்பவரே, ஷண்முகக் கடவுளின் தந்தையாரே, சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

12. சத்யம், ஞானம், அனந்தம், ப்ரம்மே த்யல்ல லக்ஷண லக்ஷித போ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

உண்மை, அறிவு, தெளிவு, அழிவின்மை ஆகிய லக்ஷண குணங்களாலான இறைவா! சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

13. ஹஹா ஹூஹூ முக சுர காயக கீதபாடன பத்ய விபோ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

அப்சரஸுக்களும், தேவ, கணங்களும் வண்டினங்களின் ஒலி போன்ற ஹா ஹா ஹூ ஹூ என்ற த்வனியில் உங்களது புகழைப் பாடுகிறார்கள். சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

இதி ஸ்ரீ சங்கராச்சார்யா க்ருத ஸ்வர்ணமால்ய ஸ்துதி.
ஸ்ரீ ஆதி சங்கரர் இயற்றிய ஸ்வர்ணமால்ய ஸ்துதி முற்றியது.

॥ सुवर्णमालास्तुतिः ॥

ईश गिरीश नरेश परेश महेश बिलेशयभूषण भो ।
साम्ब सदाशिव शम्भो शङ्कर शरणम् मे तव चरणयुगम् ॥ ०४ ॥

उमया दिव्यसुमङ्गलविग्रहयालिङ्गितवामाङ्ग विभो ।
साम्ब सदाशिव शम्भो शङ्कर शरणम् मे तव चरणयुगम् ॥ ०५ ॥

ऊरीकुरु मामज्ञमनाथं दूरीकुरु मे दुरितं भो ।
साम्ब सदाशिव शम्भो शङ्कर शरणम् मे तव चरणयुगम् ॥ ०६ ॥

ऋषिवरमानसहंस चराचरजननस्थितिलयकारण भो ।
साम्ब सदाशिव शम्भो शङ्कर शरणम् मे तव चरणयुगम् ॥ ०७ ॥

अन्तःकरणविशुद्दिं भक्तिम् च त्वयि सतीं प्रदेहि विभो ।
साम्ब सदाशिव शम्भो शङ्कर शरणम् मे तव चरणयुगम् ॥ १४ ॥

करुणावरुणालय मयि दास उदासस्तवोचितो न हि भो ।
साम्ब सदाशिव शम्भो शङ्कर शरणम् मे तव चरणयुगम् ॥ १६ ॥

जय कैलाशनिवास प्रमथगणाधीश भूसुरार्चित भो ।
साम्ब सदाशिव शम्भो शङ्कर शरणम् मे तव चरणयुगम् ॥ २३ ॥

झनुतकजङ्किणुझनुतत्किटतकशब्दैर्नटसि महानट भो ।
साम्ब सदाशिव शम्भो शङ्कर शरणम् मे तव चरणयुगम् ॥ २४ ॥

धर्मस्थापनदक्ष त्र्यक्ष गुरो दक्षयज्ञशिक्षक भो ।
साम्ब सदाशिव शम्भो शङ्कर शरणम् मे तव चरणयुगम् ॥ ३४ ॥

बलमारोग्यं चायुस्त्वद्गुणरुचिताम् चिरं प्रदेहि विभो ।
साम्ब सदाशिव शम्भो शङ्कर शरणम् मे तव चरणयुगम् ॥ ३८ ॥

भगवन्भर्ग भयापह भूतपते भूतिभूषिताङ्ग विभो ।
साम्ब सदाशिव शम्भो शङ्कर शरणम् मे तव चरणयुगम् ॥ ३९ ॥

शर्व देव सर्वोत्तम सर्वद दुर्वृत्तगर्वहरण विभो ।
साम्ब सदाशिव शम्भो शङ्कर शरणम् मे तव चरणयुगम् ॥ ४५ ॥

षड्रिपुषडूर्मिषड्विकारहर सन्मुख षण्मुखजनक विभो ।
साम्ब सदाशिव शम्भो शङ्कर शरणम् मे तव चरणयुगम् ॥ ४६ ॥

सत्यम् ज्ञानमनन्तं ब्रह्मेत्येतल्लक्षण लक्षित भो ।
साम्ब सदाशिव शम्भो शङ्कर शरणम् मे तव चरणयुगम् ॥ ४७ ॥

हाहाहूहूमुखसुरगायकगीतापदानपद्य विभो ।
साम्ब सदाशिव शम्भो शङ्कर शरणम् मे तव चरणयुगम् ॥ ४८ ॥

॥ इति श्री शङ्कराचार्य कृत सुवर्णमालास्तुतिः ॥

(அருண் என்ற ஒருவர் கேட்டுக் கொண்டதற்காக)

1 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஸ்வரணமாய் பொழிந்த துதியை பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள்.

Post a Comment