போஸ்ட் இட் வரிகள்
Posted by
Vidhoosh
on Thursday, April 29, 2010
Labels:
கவிதை,
போஸ்டிட் வரிகள்
/
Comments: (39)
மாதுரி தீக்ஷித் - People I adore
Posted by
Vidhoosh
on Tuesday, April 27, 2010
Labels:
people i adore
/
Comments: (19)
மாதுரி தீக்ஷித்-துக்கு அறிமுகம் தேவையா என்ன? தேவதாஸ், கஜ காமினி மற்றும் ஆஜா நச்லே என்ற படங்கள், பெரியதாக கதையொன்றும் இல்லையென்றாலும், மாதுரியின் நடனத்துக்காகவே சேமித்து வைத்துள்ளேன்.
தேவதாஸ் (2002-ஹிந்தி) ஹிந்துஸ்தானி இசை மீதான ஈர்ப்புதான் என்றாலும், மாதுரி தீக்ஷித்தின் அற்புதமான முகபாவங்களாலும் பிடித்துப் போன பாடல் இது. பொறுமையாய் கேட்டு ரசியுங்கள். கொஞ்சமும் பிசிறாமல், ரொம்ப அழகான முகபாவங்களோடு சிரமமே இல்லாமல், எத்தனை இலகுவாக நடனமாடுகிறார் பாருங்கள்.
அப்புறம் இந்தப் பாடல். 1:00 to 1:18 வரை சற்றே நிதானித்து கவனியுங்கள். தேவதாஸ் வரமாட்டான் என்று Kalibabu (மிலிந்த் குணாஜி) சொன்னதும் சந்த்ரமுகி (மாதுரி) அவன் அப்படி வந்து விட்டால் போகும் போது இந்த சலங்கையை (gungru) நீ அணிந்து செல்ல வேண்டும் என்கிறாள். தேவதாஸும் வந்து விடுகிறான். Stunning expressions:)
மாதுரி என்ற அருமையான artist.. just beyond comparison.

ஒரு தற்கொலைக் குறிப்பு
All fled--all done, so lift me on the pyre;
The feast is over, and the lamps expire.
~~ Robert E. Howard, writer, d. June 11, 1936 (Suicide note)
சும்மாதான். இப்போ படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் இருந்த, ரொம்ப தாக்கம் கொடுத்த, இன்னும் மனசை விட்டு போகாத ஒரு சின்னக் குறிப்பு :-)

பல்லாங்குழி
Posted by
Vidhoosh
on Friday, April 23, 2010
Labels:
nostalgia,
பழம்பஞ்சாங்கம்
/
Comments: (51)
(Photo @ Dakshina Chitra, ECR, Chennai by Vidhoosh)
நன்றி: விபர ஆதாரம் புத்தகங்கள், விக்கிமீடியா, மரத்தடி, திண்ணை, கூகிள் குரூப் மற்றும் இன்னும் சில இணையங்கள். 2001 முதல் பல பத்திரிகைகள் மற்றும் இணைய பக்கங்களில் இருந்து சேகரித்தத் துணுக்குச் செய்திகளின் தொகுப்பே இக்கட்டுரை.
பல்லாங்குழி என்பது பதினான்கு குழி, பரல்+ஆடு்ம்+குழி = பரலாடும் குழி, பண்ணாங்குழி, பள்ளாங்குழி என்றும் பாண்டி விளையாட்டு என்றும் வழங்கப் படுகிறது. சீதைப் பாண்டி என்பது ஒருவர் மட்டுமே தனித்து ஆடும் பல்லாங்குழி விளையாட்டு ஆகும். இது மிக அரிதாகவே ஆடப்படுகிறது. பொதுவாக மரம் அல்லது உலோகத்தால் ஆனது. சில கோவில்களின் மேல் தளத்தில் (மாடி) கருங்கல்லில் குட்டி குட்டி குழிகளாக செதுக்கி இருக்கும். அவ்ளோ வெய்யில்ல அதும் கருங்கல்லுல உக்காந்து எப்படி விளையாடி இருப்பாங்க??
பல்லாங்குழியில் இரு வரிசைகளில் எதிரெதிரே ஏழு ஏழு குழிகள் இருக்கும். புளியங்கொட்டை, முத்துமணி, கழற்சிக்காய், குந்துமணி (குன்றின்மணி?), சிறு கூழாங்கல், அல்லது சோழி வைத்து பல்லாங்குழி ஆட்டம் ஆடப்படுகிறது. ஒவ்வொரு குழிக்கும் எட்டு எட்டு காய்கள் என்று நிரப்பி ஆடப் படும்.
இருவர் சேர்ந்து ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் மரம், இரும்பு, வெண்கலத்தாலான பல்லாங்குழிகள் பயன்படுத்தப்படும். இதில் பதினான்கு குழிகள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஏழு குழிகள் என்று பிரித்துக் கொண்டு எதிரெதிரே அமர்ந்து விளையாட வேண்டும். குழிகள் ஒவ்வொன்றிலும் எட்டு எட்டாக காய்கள் இட்டு நிரப்பப்படும். முதலில் ஆடுபவர் ஏதாவதொரு குழியில் உள்ள காய்களை எடுத்துப் பிரித்து விளையாடத் தொடங்குவார். அவ்வாறு பிரித்து விளையாடி வரும்போது குழி வெறுமையாக இருந்தால் அந்தக் குழியைத் துடைத்து அடுத்த குழியிலுள்ள காய்களை எடுத்துக் கொள்வார். இதனைத் துடைத்து எடுத்தல் என்று கூறுவர். பின் அடுத்தவர் ஆடத் தொடங்குவார். இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர் ஆடிக் கொண்டு வரும்போது காய்கள் அனைத்தும் ஒருவருக்கே சொந்தமாகிவிட்டால் ஆட்டம் முடிவுற்றதாகக் கருதப்படும். அனுபவமும் சிந்திக்கும் திறனும் எண்களின் கணிப்பும் இவ்விளையாட்டில் வெற்றியைத் தேடித் தரும்.
பெண்கள் தீட்டுக்குரிய காலத்திலும் கருவுற்ற பெண்கள் அமர்ந்து பொழுதுபோக்குவதற்கும் இந்த விளையாட்டை ஆடினார்கள். கல்யாண சீரில் பல்லாங்குழியும் ஒன்றாக இடம் பெற்று வந்தது. காலப் போக்கில் விளையாட என்று ஒரு பொழுதே இல்லாமல் போனதால், இந்த விளையாட்டும் மறைந்தே போனது. தற்பொழுது (ஆப்பிரிக்க பழங்குடி விளையாட்டு) Mancala Game என்றும் branding செய்யப்பட்டும், gaming sites-களில் flash games ஆகவும் இருக்கிறது. Bao, Soro (Choro or Solo), Mangola, Gabata, Mulabalaba, Ayo and Sadeqa, என்றெல்லாம் பல் வேறு இடங்களில் பல்வேறு variationகளில் விளையாடப் படும். தென்னமெரிக்காவில் ஒலிம்பியாட் விளையாட்டுக்களில் mind games பிரிவில் இவ்விளையாட்டு இருக்கிறது என்பது கூடுதல் செய்தி. அமெரிக்காக்காரன் கொண்டாடினத்தானே "மதர்ஸ் டே". என்னவோ போடா மாதவா [ இப்போ சந்தோஷமா பலாபட்டறை ஷங்கர்:)) ஆனா பாருங்க ஒரு ஸ்லோகம் மட்டும் மிஸ்ஸிங் :)) ]
பல்லாங்குழி இலங்கையில் ஏதோ ஒரு பெயரில் இவ்விளையாட்டை விளையாடுவதாக ஒரு முறை என் இலங்கைத் தோழி ஒருவள் சொல்லி இருக்கிறாள். அவளது தொடர்பு துண்டித்துப் போனது. அவள் இப்போ கனடாவில் இருக்கலாம் :( இருக்க வேண்டும்! அவளோடு இந்த விளையாட்டின் பெயரும் என் குறிப்பிலிருந்து தொலைந்தே போனது. யாருக்கு தெரிந்தால் பகிரவும்.
Significance:
ஒரு மீனின் வயிற்றை ஒரு பகுதியில் மட்டும் கிழித்து அப்படியே திறந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அமைப்பு. ஒரே மனையாய் மூடியிருந்தது இப்போது பாதி பாதியாய் பிரிந்து, இந்த பக்க ஆட்டக்காரரக்கு பாதி அந்த பக்க ஆட்டக்காரருக்கு பாதி. அவர்களுக்கான பாதியில் இருப்பது ஏழு குழிகள். அவை:
1.சகஸ்ராரம்
2.ஆக்ஞா
3.விசுக்தி
4.அனாகதம்
5.மணிபூரகம்
6.சுவாதிஷ்டானம்
7.மூலாதாரம்
இந்த ஏழின் முழுமையும் இந்த ஆட்டத்தில் சரி பங்காய் பிரிக்கப் பட்டிருக்கிறது.
நம் ஞானியரின் பார்வையில் இந்த ஏழு சக்கரங்களும் இன்னொரு பார்வையில்
சுட்டிக்காட்டபட்டுள்ளன. சகஸ்ராரம் துவங்கி விசுக்திவரை - ஆகாயம் அல்லது மேலோகம் அல்லது சொர்க்கம் எனவும், அனாகதம் துவங்கி சுவாதிஷ்டானம் வரை பூலோகம் எனவும், கடைசி மூலாதாரம் அதற்கு கீழ் நரகம் எனவும் கூறப்பட்டுள்ளது.
முதல் மூன்று குழிகளிலிருந்து துவங்கப்படும் ஆட்டம் மிகுந்த லாபம்
தரக்கூடியதாகவும், பூமி, நரகம் என்று சொல்லக்கூடிய பகுதியில் துவங்கும்
ஆட்டத்தின் போக்குகள் வேறு மாதிரி இருப்பதையும் நீங்கள் விளையாடி பார்த்தால்
கண்கூடாக அனுபவிக்கலாம்.
குழிக்கு எட்டு காய்கள் என்பன, மனிதனின் எட்டு வகையான குணா நலன்களைக் குறிக்கிறது.
1. சுய கட்டுப்பாடு
2. பொறுமை
3. தியாகம்
4. தானம்
5. தூய்மை (அகம் மற்றும் புறம்)
6. தவம்
7. பிரம்ம ஞானம் (அதாவது பிற உயிர்கள் மீதான மரியாதை)
8. திருப்தி
ஆடும் முறை:
ஆட்டத்தில் குழிக்கு எட்டு காய்களாக ஆளுக்கு ஏழு குழிகளாகத் துல்லியமான சமத்தன்மையுடன் ஆட்டம் தொடங்குகிறது.
சுற்றிக் காய்களை இட்டு வந்து ஒரு வெற்றுக்குழியினைத் துடைத்து அடுத்து இருக்கு குழியில் உள்ள கைகளையும் அதற்கு நேர் எதிரே இருக்கும் குழியில் உள்ள காய்களும் அள்ள வேண்டும். அப்போது முதலில் இட்ட எட்டு காய்களுக்குப் பதிலாக நிறையக் காய்கள் கிடைக்கின்றன. (இதற்கும் ஒரு பெயர் சொல்லி எடுப்போம், மறந்து விட்டது)
ஆட்டத்தில் மற்றும் ஒரு இடைநிகழ்வும் ஏற்படுகிறது. ஒரு வெற்றுக் குழியில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு காயினையும் இட்டு வரும்போது அது நாலாகப் பெருகிய உடன் அதனைப் பசு என்ற பெயரில் அந்தக் குழிக்குரியவர் எடுத்துக் கொள்கிறார். இதன் விளைவாக ஆட்டத் தொடக்கத்தில் இருந்த எட்டு காய்கள் மீண்டும் ஒரு குழிக்கும் ஒரு போதும் திரும்பக் கிட்டுவதே இல்லை.
காய்களை இழந்தவர் (காட்டாக 16 காய்கள் குறைவாகக் கிடைத்தன என்றால்) தன்னுடைய பகுதியில் மூன்று குழிகளைக் காலியாக (தக்கம்) விட்டு விட்டு ஆட்டத்தைத் தொடர வேண்டும். அந்தக் குழியில் எதிரி (வென்றவர்) காய்களைப் போட மாட்டார். சில இடங்களில் தோற்றவரும் போடமாட்டார். இப்போது தோற்றவருடைய குழி இழப்புக்கு ஒரு நிரந்தரமின்மை ஏற்படுகிறது.
ஆட்ட இறுதியில் ஒருவர் தோற்றுப் போகிறபோது அவர் கையில் எஞ்சியிருக்கிற காய்கள் ஒரு குழிக்குரிய ஐந்து கூட இல்லாமல் நாலாக இருந்தால் குழிக்கு ஒவ்வொரு காயினை இட்டு ஆட்டம் தொடர்கிறது. இதற்குக் 'கஞ்சி காய்ச்சுதல்' என்று பெயர். கஞ்சி என்ற சொல் வறுமையினை உணர்த்தும் குறியீடாகும்.
தோற்றவர் ஒரு காய் கூட இல்லாமல் தோற்கின்ற போதே ஆட்டம் முழுமை பெறுகிறது.
விளையாடும் முறை 2:
ஒவ்வொரு குழியிலும் முதலில் 5 முத்துக்களை இட வேண்டும். பின்னர் ஒருவர் ஏதாவது ஒரு குழியில் இருந்து ஆரம்பித்து 5 முத்துக்களை குழிக்கு ஒன்றாகப் போட வேண்டும். கையில் இருக்கும் முத்து தீர்ந்த்தும் அடுத்த குழியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அடுத்த குழி காலியாக இருந்து, அதற்கு அடுத்த குழியில் முத்துக்கள் இருந்தால் அவை அனைத்தையும் வென்றதாக பொருள். ஆனால் அடுத்தடுத்து காலியான குழிகள் வந்தால் முதலில் ஆடியவர்க்கு ஒன்றும் இல்லை.
இதனிடையே காலியான குழிகளில் புதிதாய் முத்துக்கள் சேரும். 4 முத்து சேர்ந்ததும் அவரவர் பக்கத்தில் உள்ளதை அவரவரே எடுத்துக் கொள்ளலாம். இதை "பசு" என்று சொல்வோம். எல்லா குழிகளும் காலியானப்பின் மீண்டும் எல்லா குழிகளையும் 5 முத்துகளாக நிரப்ப வேண்டும். ஒருவரிடம் அதிக முத்து இருக்கலாம். மற்றொருவர் குறைவாக வைத்து இருக்கலாம். அதிக முத்து உள்ளவர்கள் தனது பக்கம் உள்ள எல்லா குழிகளையும் நிரப்ப வேண்டும். குறைவான முத்துக்கள் உள்ளோர் எத்தனை குழிகள் நிரப்ப முத்துக்கள் இருக்கிறதோ அத்தனை குழிகளை நிரப்ப வேண்டும். யார் வென்றாரோ அவரிடம் இருந்தே மீண்டும் விளையாட்டு தொடரும்.
விளையாட்டினூடே பாடப்படும் நாட்டுப்புறப் பாட்டு ஒன்று: (நன்றி: என் அம்மா வழிப் பாட்டியார் திருமதி.மீனாக்ஷி கோபாலன்) இப்பாடலின் ஊடாக வயற்காடும்., பூப்படைந்த பெண்மையையும், கருவுற்ற பெண்மணியும் பாதுகாப்பது குறித்த மறைபொருளாக மறைந்திருக்கும் செய்தியைக் கவனியுங்கள். அள்ள அள்ள குறையாத பாரம்பரியம். நம் வாரிசுகளுக்கும் அள்ளித் தருவோம்.
காடு வெட்டிக் கல் பொறுக்கிக் கம்பு சோளம் தினை விதைத்துக்
காலை-மாலை காட்டக் காக்கத் தங்கரத்தினமே
கண் விழித்து கிடந்தாளாம் பொன்னுரத்தினமே.
அள்ளி அள்ளி விதைச்சு வைச்ச அழகுத்தினை சாகாதடி
மொள்ள மொள்ள விதை விதைச்சதங்கரத்தினமே
மொந்தத் தினை சாகாதடி பொன்னுரத்தினமே
கறுப்பானை ஓடிவரக் கள்ளரெல்லாம் தினை விதைக்க
வெள்ளானை ஓடிவரத் தங்கரத்தினமே
வேடரெல்லாம் தினைவிதைக்கப் பொன்னுரத்தினமே
சின்னச்சின்ன வெற்றிலையாம் சேட்டுக்கடை மிட்டாயாம்
மாமன் வைச்ச மல்லிகைப்பூ தங்கரத்தினமே
கொண்டையிலே மணக்குதடி பொன்னுரத்தினமே
சாலையிலே ரெண்டுமரம் சர்க்காரு வச்சமரம்
ஓங்கி வளர்ந்தமரம் தங்கரத்தினமே
உனக்கேத்த தூக்குமரம் பொன்னுரத்தினமே
எல்லோரும் கட்டும்வேட்டி ஏழைக்கேற்ற மல்லுவேட்டி
சந்தனங் கட்டும்வேட்டி தங்கரத்தினமே
சரியான சரிகைவேட்டி பொன்னுரத்தினமே
ஒத்தத்தலை நாகன்வந்து ஒட்டாக்காட்டை அழிச்சிடுத்தே
ஆராரைக் காவல்வைப்போம் தங்கரத்தினமே
அழகான தினைப்பயிர்க்குப் பொன்னுரத்தினமே
தேவானையைக் காவல் வச்சா தீஞ்சிடுமே தினைப்பயிரு
வள்ளியைக் காவல்வைத்தால் தங்கரத்தினமே
வனத்துக்கொரு சேதமில்லை பொன்னுரத்தினமே
மூத்தண்ணன் பொண்சாதியை மூணுமாசம் காவல்வைப்போம்
ஏழையண்ணன் பொண்சாதியை தங்கரத்தினமே
ஏழுமாசம் காவல்வைப்போம் பொன்னுரத்தினமே
சாய்ந்திருந்து கிளிவிரட்டச் சாய்மானமும் பொன்னாலே
உட்கார்ந்து கிளிவிரட்டத் தங்கரத்தினமே
முக்காலியும் பொன்னாலே பொன்னுரத்தினமே
பார்வையற்றவர்களுக்கு படித்துக் காட்ட வாங்க 21-4-2010 மற்றும் 22-4-2010
Posted by
Vidhoosh
on Tuesday, April 20, 2010
Labels:
ஏதாச்சும் செய்யணும் பாஸ்
/
Comments: (15)
Friends,
Few of our visually challenged friends who attend the exams on 21st & 22nd April need our help as "scribes".
Here are the details. Those who would like to volunteer can just click on the "i volunteer" link for the respective day below (or) can also contact us @ 99410 14591.
For more scribe requirements, pls check out http://disha.byethost13.com/ minnal/scribes
Scribes needed:
Date: 21st Apr (Wednesday)
All the Exams are to be written in
Tamil
Student name | Start time | duration | School/college | Enroll as a scribe |
Shakthivel, M.A., Tamil | 09.30 | 3 hrs | Pachayappas College, Chetpet, Chennai | |
Mariyammal, B.A.Tamil | 13.00 | 3 hrs | Queen mary's college,Triplicane | |
Saravanan, BA., Tamil | 09.30 | 4 hrs | New College, Royapettah,Chennai |
Date: 22nd Apr (Thursday)
All the Exams are to be written in
Tamil
Student name | Start time | duration | School/college | |
Parveen Sha, B.A.Tamil | 09.30 | 3 hrs | Queen mary's college,Triplicane | |
Raja, B.A.Tamil | 10:00 | 3 hrs | Madras univ., chennai,Triplicane | |
Gopinath, B.A.Tamil | 10:00 | 3 hrs | Madras univ., chennai,Triplicane | |
Ramesh, B.A.Tamil | 10:00 | 3 hrs | Madras univ., chennai,Triplicane | |
Murali, BA., Tamil | 09:30 | 3 hrs | New College, Royapettah,Chennai | |
Rajendran, M.A., Tamil | 10:00 | 3 hrs | Pachayappas College, Chetpet, Chennai | |
Dharani, M.A., Tamil | 10:00 | 3 hrs | Pachayappas College, Chetpet, Chennai | |
Veda Manikkam, M.A., Tamil | 10:00 | 3 hrs | Pachayappas College, Chetpet, Chennai | |
Shankar, M.A., Tamil | 10:00 | 3 hrs | Pachayappas College, Chetpet, Chennai | |
Shekar, M.A., Tamil | 10:00 | 3 hrs | Pachayappas College, Chetpet, Chennai | |
Mariya Selvam, BA., Tamil | 09:30 | 3 hrs | Queen mary's college,Triplicane |
யார் சுதந்திரத்துக்கு ரெட் அலெர்ட்
பி.ஜே.பியில் இணைந்திருக்கும் புது உறுப்பினர் பசுபதிநாத் முதல் திருப்பதி வரை நக்சல்கள் பரவி இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். அப்படியொண்ணும் குறைச்சு சொல்லிவிடவில்லை. நிகழ்வுகளை பார்த்தால் விஷம் போல தென் மாநிலங்களில் நக்சல்வாதம் பரவி வருகிறது என்றே நம்பத் தோன்றுகிறது. நாம் எதற்ககெல்லாம் கவலைப் படுவது? புல்லாங்குழல் வாசிக்கிறதா, பச்சை விறகு வச்சு மூட்டிய அடுப்பை ஊதுரதான்னு நம்ம அரசியல் தலைவர்கள் எல்லோரும் கையை பிசைந்து கொண்டு, முடிவாக புல்லாங்குழல் ஊதினால் வரும் இன்னிசை மனசுக்கு இதமாய் இருக்கு என்றே முடிவு கட்டி விட்டார்கள். இதில் அண்ணன் தம்பி பிரச்சினை வேறு? குடும்பத் தலைவர்களாக வேறு இருந்துத் தொலைக்க வேண்டி இருக்கிறது. இந்தப் பாடுபடுவதற்கு செல்வியாகவே இருந்திருக்கலாம் போலருக்கு.
ஜவான்களுக்கே மரணக்குழி வெட்டிய பிறகு, முழித்துக் கொண்டு, வேட்டிய மடிச்சு கட்டி வெட்டியான் வேலை செய்ய தலைவர்கள் எதற்கு? ஆளுமை ஆள்வதற்கா ஆள்வதைக்கா?
தவறென்று ஒப்புக் கொண்டார்களாம்... வேறென்ன செய்வீர்கள் அண்ணே!!! சரீன்னு நிரூபிக்க முடிந்திருந்தால் அதையும்தான் செய்திருப்பீர்கள்.
ஆளுமைக்கான ஆள் பலம் கொண்டதால் ஆளும் கட்சியும், கொஞ்சம் குறைந்ததால் பலம் இருப்பதாகக் கருதப் படும் எதிர்கட்சியும் statement கொடுத்து கடமையைத் தீர்த்தாகி விட்டது. எத்தனை நஷ்டம், திறமையான ஜவான்களின் மரணங்கள், அவர்களது training மீதான செலவினங்கள், குடும்பத்துக்கான நஷ்ட ஈடுகள், என்று மக்கள் வரிதானே போகப் போகிறது என்ற அலட்சியமா? கட்சிகாரர்கள் எல்லோரும் வேண்டிய அளவு வாங்கிக் கொண்டுதானே அவர்களுக்கு வாகான போஸ்டிங் பண்ணிக் கொடுத்திருப்பீர்கள்? வெறும் statement என்ன செய்து விடப்போகிறது, வெண்ணைவெட்டி statement?
மேற்கு வங்காளம், ஒரிசா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட், உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டிஸ்கர், ஆந்திரா போன்ற இடங்களில் மட்டுமே நக்சல்கள் ஊடுருவி இருந்தனர், இப்போது மெல்ல உத்திரகண்டம், புது தில்லி, பஞ்சாப் போன்ற இடங்களிலும் இவர்களது காலடிகளின் நாராச ஓசை கேட்க ஆரம்பித்திருக்கிறது. சென்ற நவம்பர் 2006-ல் புது தில்லியில் நடந்த நக்சல் சம்மேளனம், அதை தொடர்ந்து விநியோகிக்கப் பட்ட கை நோட்டீசுகள், போஸ்டர்கள் போன்றவை நம் அரசாங்கத்தின் குறட்டையொலியின் உச்சம்.
காமெடி பீஸ் ஆகிப் போன எதிர்க்கட்சிக்கு இப்போதுதான் நக்சல்கள் தென்னிந்தியாவில் சிகப்பு கம்பளம் விரித்து வைத்திருப்பது தெரிகிறது. அடடா... இப்போ என்ன செய்வது? லட்சுமண ரேகையாச்சே...
மார்ச் 2007-குள்ளேயே நக்சல்கள் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ஊடுருவியாகி விட்டது. சாதாரண மக்களுக்கே இத்தனை செய்திகளும் அதிர்ச்சி தரும்போது, இத்தனை செய்திகள் அரசாங்கத்துக்கு ஏற்கனவே கிடைத்திருந்தும் சிவராஜ் பாட்டில் அவர்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்த அபரிமித நம்பிக்கையோடு statements கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
நக்சல்வாதிகளின் கூடாரமாய் இருக்கும் பஸ்தர், தன்தேவாட், பிஜப்பூர், நாராயண்பூர், கான்கேர், ராஜ்னாந்தகான்வ், என்ற வகையில் சட்டிஸ்கரில் மட்டும் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் நக்சல்களின் ஆளுமையில் இருக்கிறது. ஜனநாயகத்தின் உச்சமாக, ஏதும் குற்றங்கள் நிகழ்ந்தாலும் கூட மாலை ஐந்து மணிக்கு மேல் காவல்நிலையத்திற்கு மக்கள் போகக் கூடாது என்று நக்சல்கள் தடை விதித்துள்ளனர். காவலர்களும் இவர்களுக்கு பயந்து சிவில் உடைகளில்தான் வேலை செய்கிறார்கள். மேற்கு வங்காளத்தின் நிலை இன்னும் கேட்கவே வேண்டாம். வளர்த்த கடா மாரில் பாய்ந்த கதையானது.
தாய்நாடாச்சே!!! இன்னும் "டாய்"ன்னு பயமுறுத்தினால் உச்சா போய்விடும் கைக்குழந்தையாகவே இருக்கும் ஜனநாயகத்தை அரசியல் ஆயாக்கள் பேணுகிறார்கள் போலும், யார் என்ன செய்தால் என்ன? மின்சாரம் வேறு இல்லையடா, கும்பகர்ணா இன்னும் விசிறு!!!
யாருப்பா அங்க.... பாராட்டு விழாவுக்கு பந்தல் கட்டுங்க..
ஞான மரம்
Posted by
Vidhoosh
on Tuesday, April 13, 2010
Labels:
அகநாழிகையில் வெளிவந்தது,
கவிதை
/
Comments: (29)
ஹல்திராம் ரசகுல்லாவும் கொஞ்சம் காராசேவும்
Posted by
Vidhoosh
on Monday, April 12, 2010
Labels:
people i adore
/
Comments: (22)
பதிவுலகில் எளிமையான வார்த்தைகளுடன் கவிதைகள் காணக் கிடைக்கச் செய்யும் யாத்ரா, பா.ராஜாராம் வரிசையில் நான் மிகவும் விரும்பிப் படிக்கும் கவிதை சிற்பி கவிஞர் ராஜா சந்திரசேகர்.
நாம் எளிதில் கடந்து சென்று விடும் தருணங்களை படம்பிடித்துக் காட்டி, இதோ பார், இப்படி இருக்கு அப்படி இருக்கு என்று ஒரு குழந்தையின் மகிழ்வோடு, அவரிடம் பேசும்போதே விழியோரச் சுருக்கங்களில் காணக் கிடைக்கும் மகிழ்வின் ஒளியும், ஒரு perfect கலைஞனாக, கவிதைகளின் நூல் பிடிபடும் போதெல்லாம் குதூகலித்து மகிழ்ந்து, கண்ணாடிவளைச் சில்லு கொண்டு சின்ன வயதில் செய்து மகிழ்ந்த கலீடாஸ்கோப் ஜாலங்கள் தெரியும் இவர் கவிதைகளில். பென்சில் நதி நெகிழ்ந்து வழிந்து போகும் இடமெல்லாம் பசுமை, வளமை, வாழ்வின் நிர்வாணம்.
ராஜா சந்திரசேகர் கவிதைகள் என்றொரு தளத்தில் நிறைய பிரமிக்க வைக்கும் வார்த்தைக் கோர்ப்புக்கள், எண்ணச் சிதறல்கள் என்று இறைந்து கிடக்கின்றன.
இவரது அனுபவ சித்தனின் குறிப்புக்கள் அடர்த்தியானவை. ஒவ்வொரு கவிதையும் ஒரு கட்டுரையாகும் வளமையும், நாவலாகும் உணர்வுகளும், கதையாகும் வாழ்க்கையும் செறிந்தவை.
நிறைய கவிதைகளில் குழந்தையின் பார்வையில் விரியும் உலகமாகவும் சொற்கள் கொஞ்சி மகிழ முடிகிறது. நிறைய கவிதைகளுக்குள் கவிஞன் எட்டி நின்று இரண்டு மனசுக்குள் கூடு பாய்ந்து இரண்டு மனசுகளையும், சிலமுறை அதையும் தாண்டிய எண்ணிக்கையில் பாய்ச்சிய ஒளி வெள்ளமாய் தெறிக்கும் பல வண்ணங்களைப் பீய்ச்சிய பிரமிடை படித்து விட்ட கருவமும் ஓங்குகிறது.
அதுவரை ராஜாசந்திரசேகர் கவிதைகள் மட்டுமே படித்து வந்த நான், சில நாட்கள் முன், நான் இவர் தளத்தை கூகிளில் சிங்கமும் எலியும் என்ற குழந்தைக் கதையை தேடும் போது பென்சில் நதியைச் சென்றடைந்தேன். சிங்கமும் சுண்டெலியும். பிரமித்து நிற்கிறேன்.
சிங்கம் தூங்காது
சுண்டெலிதான் தூங்கும்
நீ சிங்கமா சுண்டெலியா
மகனிடம் கேட்டேன்
உடனே சொன்னான்
நிறைய சிங்கம்
கொஞ்சம் சுண்டெலி
அவரது ஒரு சில கவிதைகளை எடுத்துத் தருகிறேன். மிகுதிய பென்சில் நதியில் பருகிக் கொள்ளுங்கள்.
===========================
அம்மாவுக்கு பெரிய மீசை
குழந்தை கிறுக்கிய
புகைப்படத்தில்
===========================
ஒரு கவிதையில்
வைத்துப் பார்க்க வேண்டும்
பேருந்தில் தரிசித்த
குழந்தையின் புன்னகையை
===========================
கட்டியிருந்த ஆடு
திரும்பி வந்தபோது
தொங்கிக் கொண்டிருந்தது
என்ற இவரது கவிதையைப் படித்ததும், இன்னதென்று சொல்ல முடியாத உணர்வுகள் எனக்கு.
ownership, திருட்டு,
சொத்து, உணவு,
இழப்பு, கொலை,
நேயம், குரூரம்
என்று பல மனித முகங்கள் தொங்கிக் கொண்டிருக்கும் ஆட்டுக்கு பின்னால். கிடாகளுக்கு குழந்தைகளை காக்க வேண்டிய கடமை இருக்கிறதோ என்னவோ, ஆடுகளுக்கு குட்டிகள் இருந்தால் யார் அவைகளுக்கு பாலூட்டுவார்கள்?
எத்தனை வாழ்க்கை இக்கவிதை வரிகளுக்குள்? உங்களுக்கு எத்தனை பேர் தெரிகிறார்கள் என்று கண்டிபிடியுங்கள் பார்க்கலாம்?
===========================
எனக்குள்
மீதி கவிதை
கவிதையில்
முடியாத நான்
என்று கூறும் இவர் எழுதிய மனிதர்களையும், சில வாழ்க்கைத் தருணங்களையும் படித்துக்கொண்டே, ருசிக்கத்தான் வேண்டும் ஹல்திராம் ரசகுல்லாவும் கொஞ்சம் காராசேவும், வித்தியாசமே தெரியாது, கொஞ்சம் தேநீரும் இருந்தால்.

ஊஞ்சல் 7-4-2010
ஊஞ்சல்:
இரண்டு நாட்களாய் இணையப்பக்கம் வரமுடியவில்லை. மீண்டும் ஒரு நண்பர் எங்கள் திருக்காட்டுப்"பள்ளி"யில் இருந்து. சென்ற வாரத்தின் பரபரப்பு இவருக்கு என்னை அடையாளம் காட்டி இருக்கலாம். எங்கள் பள்ளியின் 91-ஆம் வருஷத்து "கணித மேதை ராமானுஜம்" இவர். எங்கள் பள்ளி கணித ஆசிரியர் திரு.ஜி.நாராயணன் அவர்களின் செல்ல மாணவர்களில் ஒருவர்.
பக்கோடா:
போன ஞாயிறு வீட்டில் பக்கோடா செய்தேன். கொஞ்சம் தண்ணீர் ஜாஸ்தியாகி, மசாலா வடையாக செய்து பெயர் மாற்றி பரிமாறியாகிவிட்டது. புதினா சட்டினியும் மிளகாய் சாஸும் என்று அதையும் தின்று, இஞ்சி-எலுமிச்சை ஜூஸ் குடித்து ஜெரித்தோம். தர்ஷிணி மட்டும்தான் இன்னும் அதை "பக்கவடை" என்றே சொல்லிக்கொண்டிருக்கிறாள். :))
தேநீர்:
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் HR&CE அலுவலகத்தின் அனுமதியுடன், மாலை 5 மணி முதல் 6 மணி வரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி முதலான புதினங்கள், வாழ்க்கை வரலாறுகள், கதைகள் போன்றவற்றில் ஒன்றும், குழந்தைகளுக்கான படைப்புகளில் இருந்து ஒரு நன்னெறிக் கதையொன்றும் என என்னிடம் இருக்கும் புஸ்தகங்களை வாசித்து காட்டப் போகிறேன். நான் இல்லாவிட்டாலும் என் நண்பர்களில் வேறு ஒருவர் இப்படி வாசிப்பார். கதை வாசித்துக் கேட்க விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம். (வில்லுப் பாட்டு, கதாகலாட்சேப ஜால்ராப் BGM இசைகளை எதிர்ப்பார்த்து வந்து ஏமாந்தால் பக்கோடா கும்பெனி பொறுப்பாகாது)
மழை:
இட்லி வடை வலைப்பக்கத்தை வாரம் ஒருதரம் மொத்தமாய் படிக்கிறதுண்டு. அப்படி பார்க்கையில் பதிவர் முத்துராமனின் சிறுநீரக சிகிச்சைக்கு நான்கு லட்சம் வரை செலவாகிறது என்றும் உதவி கேட்டிருந்தனர். சிறு துளி பெருவெள்ளம், உங்களால் இயன்றவரை உதவலாம்.
சிறுநீரக சிகிச்சையை இலவசமாகவே TANKER Foundation அமைப்பு நடத்துகிறது. முடிந்தால் அவர்களிடமும் உதவி கோரலாம், அங்கிருந்து யாரேனும் மருத்துவர்கள் தனக்கான fees இல்லாமல் இவருக்கு சிகிச்சையளிக்க முன்வந்தால் இன்னும் சிறப்பு. திரு.முத்துராமன் இறைவன் அருளுடன் விரைவில் குணமாகி நலம் பெற வேண்டுகிறேன்.

விதுர நீதி 1
Posted by
Vidhoosh
on Monday, April 5, 2010
Labels:
samskaras,
sanskrit,
பழம்பஞ்சாங்கம்,
வாசிப்பு
/
Comments: (22)
விதுர நீதியைத் தமிழில் எழுதிப் பார்க்க வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசையாக இருந்தது. பகுதி பகுதியாகத் தருகிறேன்.
====================
சஞ்சயன் வெறுங்கையோடு திரும்பி, திருதராஷ்டிரனைப் பார்த்து "மகாராஜா! ராயபாரம் தோல்வியுற்றது. யுத்தம் தவிர்க்க முடியாததாகிப் (அனிவார்யம்) போனது" என்றார். திருதராஷ்டிரன் பெருஞ்சஞ்சலத்தில் ஆழ்ந்தார். நம்பிக்கைக் கொடுக்கும் நல்ல வார்த்தைகள் கேட்க விழைந்து விதுரனை அழைக்கிறார்.
விதுரன், யமதர்மராஜனின் அவதாரமாகக் கருதப் படுகிறார். அவர் நிரஹங்காரி (அஹங்காரம் அற்றவர்), நிஷ்ச்சலமனஸ (சலனமற்ற மனமுடையவர்) என்றும் அறியப்படுபவர்.
திருதராஷ்டிரனைக் காண விதுரன் வந்து, அவரை நமஸ்கரிக்கிறார். விதுரனை அமரச் செய்து, திருதராஷ்டிரன் "நல்லவற்றைக் கேட்டு நாளாகிப் போனது. எனக்கு சில ஹிதவாக்கியங்களை (இனிமையான வாக்கியங்கள்) கூறுவாயாக" என்று கேட்கிறார்.
விதுரன் "மகாராஜா. உங்கள் விழிகளில் சிவப்பு நரம்புகள் தெறிக்கிறது. உங்களுக்கு உறக்கமின்றிப் போனது. இது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. ஏனென்றால், பலவந்தர்கள் (பலம் பெற்ற சான்றோர்கள்) மீது விரோதம் கொள்ளும் துர்பலர்கள் (பலத்தை துஷ்ப்ரயோகம் செய்பவர்), மாற்றான் சொத்துக்களை அபகரிப்பவர்கள், காமாந்தகர்கள், திருடர்கள் போன்றவர்கள் மட்டுமே உறக்கமின்றித் தவிப்பார்கள் என்று அனுபவ சாஸ்திரங்கள் உரைகின்றன. நானறிந்த வரையில், தாங்கள் அப்படிப்பட்ட பாதங்கள் புரியவில்லையே! பின்பு தங்களுக்கு ஏன் உறக்கம் வரவில்லை?" என்று வினவுகிறான்.
விதுரனின் எதிர்கேள்விக்கு பதிலுரைக்கமுடியாது திகைத்த திருதராஷ்டிரன் "விதுரா. உன் வாயால் தர்ம பிரவசனம் (தர்மம் குறித்த உரை - lecture) கேட்கவும் ஆவலோடிருக்கிறேன்." என்கிறார்.
விதுரன் தொடர்ந்து: "மகாராஜா! யுதிஷ்டிரன் உத்தமன். உன்னதமான ஆசைகள் கொண்டவன். தர்மத்தை பின்பற்றுபவன். உதாத தர்மவானாகிய (பிரதிபலன் பாராதவன்) அவனே அரசனாகும் தகுதிகள் பெற்றிருக்கிறான். அவனிடம் அரசனாகும் அதிகாரமும் பலமும் இருந்தாலும், உங்களைத் தந்தையாகக் கருதி, அவன் உங்கள் ஆணையை மீறி நடந்ததேயில்லை. அப்படியிருந்தும், அவனை வானப்ரஸ்தம் செய்வித்தீர்கள். இன்று உங்கள் சத்தியத்திற்கு புறம்பாகவும், வாக்கை காப்பற்றமுடியாமலுமான சூழ்நிலையில், ராஜ்ஜியத்தை அவர்களுக்கு அளிக்க முடியாமல் இருக்கிறீர்கள். துரியோதனுக்கு சாம்ராஜ்யபாரத்தை அளித்து, துச்சாதனன், சகுனி, போன்ற காமாதி அயோக்கியர்களுக்கு இடம் கொடுத்து விட்டீர்கள். இப்போது அமைதியை வேண்டுவது நியாயமில்லை? உங்களுக்கு நியாயமாகத் தோன்றுகிறதா? சாத்வீக ஸ்வபாவம் (அமைதியானவன்), உத்யோகயத்னம் (தன் வேலையைச் செவ்வனே செய்பவன்), கிலேஷ சஹனம் (விருப்பு வெறுப்பற்றவன்), தர்மவான் (நியாயமாய் நடப்பவன்), எவனோ அவனுக்கு இன்னல்கள் நேர்ந்தாலும், அவன் குறிக்கோள்களில் அவன் என்றும் தோற்ப்பதில்லை. அப்படிப் பட்ட சுஜனர்கள் (தெளிந்த குறிக்கோளுடையவர்) துர்ஜனர்களிடமிருந்து (குறிக்கோளற்றவர்கள்) விலகி இருப்பார்கள்.
மஹாராஜா! வித்வான் (அறிவிற்சிறந்தவன்) என்பவன் யார்? தர்மார்த்தங்களை பின்பற்றுபவன், லோக விவாகரங்களை நன்கறிந்தவன், குறிப்பால் உணர்பவன்
போக சிந்தனையற்றவன் ஆனால் புருஷார்த்தங்களைப் பின்பற்றுபவன் (குடும்ப வாழ்விலும் ஈடுபடுபவன்), எந்த நிலையிலும் மற்றவன் மீது அவதூறுகள் பேசாதிருப்பவன், நியாயமற்ற இலாபங்களை விரும்பாதிருப்பவன், நிரந்தரமாக இழந்துவிட்ட பொருட்களைக் குறித்த துக்கம் கொள்ளாதிருப்பவன், கஷ்டங்களை எதிர்கொள்ளும் மனஉறுதியும் தைரியமும் பெற்றவன், இடையில் விட்டுவிடாது எச்செயலையும் முழுதாக முடிப்பவன், சோம்பேறித்தனம் இல்லாதவன், இந்த்ரீய நிக்ரஹம் செய்பவன் (உணர்வுகளை அடக்கும் ஆற்றல் பெற்றவன்), போன்ற குணங்களைப் பெற்றவனின் இதயம் பவித்திரமான கங்கையின் ஊற்று நீர் போல சுத்தமாயிருக்கும். கற்றகல்வி எப்போதும் அவர்களுக்கு நல்வழி காட்டும்.
மூர்க்கர்கள் யார்? மூர்க்கர்களுக்கோ கல்வியின் பயன் கிடைக்காது, விவேகம் அழிந்து கர்வம் பெருகும். இப்படிப்பட்ட தாரித்திரியம் (காம-கோப-மூர்க்க-கர்வ குணங்கள்), கொண்டவர்களுக்கு ராஜாங்கச்செல்வங்களை பாதுகாக்கும் கனவு எதற்கு? ஸ்வ-தர்மம் (தனக்கே தன் மீதான மரியாதை) விடுத்தவர்கள், பரதர்மம் (ஸ்வ-தர்மத்தை விடுத்து அடுத்தவனின் நம்பிக்கைகளை பின்பற்றுபவன்), தன் நண்பர்களை அவமதிப்பவன், பலவந்தர்களுடன் விரோதிப்பவன், நண்பர்களே இல்லாதவன், அதிகப் பிரசங்கி (அவசியமில்லாமல் அளவு மீறி பேசுபவன்), க்ருதஞ்ஞம் (நன்றியுணர்வு) இல்லாதவன், மற்றவன் குற்றத்தை மட்டுமே நினைவில் கொள்பவன், காரணமேதுமின்றி அற்ப விஷயங்களுக்குக் கூட ஆவேசப் படுபவன், அனர்த்தர்களுக்கு உபதேசம் செய்பவன் போன்றவர்கள் மூர்க்கர்கள்.
பிரபு! பெருஞ்செல்வமான கல்வி, கேள்வி, வேள்விகளின் அதிருஷ்டம் இருந்தாலும், தானங்கள் செய்த புண்ணியவானாக இருப்பினும், கர்வம் இருந்தால், அவன் வித்துவான் ஆக முடியாது.
பரம மூர்க்கன் என்பவன் யார்? தன்னுடன் ஒரே கூரைக்குள் இருப்பவர்களுக்குக் கொடுக்காமல் உணவு உண்பவனும், உணவுக்காக இறைஞ்சுபவனும் பரம மூர்க்கர்கள்"
------------->இன்னும் வரும்<-------------

பெரியம்மை பாட்டி - திரு.வி கங்காதர்
Posted by
Vidhoosh
on Thursday, April 1, 2010
Labels:
Columnist V.Gangadhar,
translated,
வாசிப்பு
/
Comments: (15)