பல்லாங்குழி


(Photo @ Dakshina Chitra, ECR, Chennai by Vidhoosh)

நன்றி: விபர ஆதாரம் புத்தகங்கள், விக்கிமீடியா, மரத்தடி, திண்ணை, கூகிள் குரூப் மற்றும் இன்னும் சில இணையங்கள். 2001 முதல் பல பத்திரிகைகள் மற்றும் இணைய பக்கங்களில் இருந்து சேகரித்தத் துணுக்குச் செய்திகளின் தொகுப்பே இக்கட்டுரை.

பல்லாங்குழி என்பது பதினான்கு குழி, பரல்+ஆடு்ம்+குழி = பரலாடும் குழி, பண்ணாங்குழி, பள்ளாங்குழி என்றும் பாண்டி விளையாட்டு என்றும் வழங்கப் படுகிறது. சீதைப் பாண்டி என்பது ஒருவர் மட்டுமே தனித்து ஆடும் பல்லாங்குழி விளையாட்டு ஆகும். இது மிக அரிதாகவே ஆடப்படுகிறது. பொதுவாக மரம் அல்லது உலோகத்தால் ஆனது. சில கோவில்களின் மேல் தளத்தில் (மாடி) கருங்கல்லில் குட்டி குட்டி குழிகளாக செதுக்கி இருக்கும். அவ்ளோ வெய்யில்ல அதும் கருங்கல்லுல உக்காந்து எப்படி விளையாடி இருப்பாங்க??

பல்லாங்குழியில் இரு வரிசைகளில் எதிரெதிரே ஏழு ஏழு குழிகள் இருக்கும். புளியங்கொட்டை, முத்துமணி, கழற்சிக்காய், குந்துமணி (குன்றின்மணி?), சிறு கூழாங்கல், அல்லது சோழி வைத்து பல்லாங்குழி ஆட்டம் ஆடப்படுகிறது. ஒவ்வொரு குழிக்கும் எட்டு எட்டு காய்கள் என்று நிரப்பி ஆடப் படும்.

இருவர் சேர்ந்து ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் மரம், இரும்பு, வெண்கலத்தாலான பல்லாங்குழிகள் பயன்படுத்தப்படும். இதில் பதினான்கு குழிகள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஏழு குழிகள் என்று பிரித்துக் கொண்டு எதிரெதிரே அமர்ந்து விளையாட வேண்டும். குழிகள் ஒவ்வொன்றிலும் எட்டு எட்டாக காய்கள் இட்டு நிரப்பப்படும். முதலில் ஆடுபவர் ஏதாவதொரு குழியில் உள்ள காய்களை எடுத்துப் பிரித்து விளையாடத் தொடங்குவார். அவ்வாறு பிரித்து விளையாடி வரும்போது குழி வெறுமையாக இருந்தால் அந்தக் குழியைத் துடைத்து அடுத்த குழியிலுள்ள காய்களை எடுத்துக் கொள்வார். இதனைத் துடைத்து எடுத்தல் என்று கூறுவர். பின் அடுத்தவர் ஆடத் தொடங்குவார். இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர் ஆடிக் கொண்டு வரும்போது காய்கள் அனைத்தும் ஒருவருக்கே சொந்தமாகிவிட்டால் ஆட்டம் முடிவுற்றதாகக் கருதப்படும். அனுபவமும் சிந்திக்கும் திறனும் எண்களின் கணிப்பும் இவ்விளையாட்டில் வெற்றியைத் தேடித் தரும்.

பெண்கள் தீட்டுக்குரிய காலத்திலும் கருவுற்ற பெண்கள் அமர்ந்து பொழுதுபோக்குவதற்கும் இந்த விளையாட்டை ஆடினார்கள். கல்யாண சீரில் பல்லாங்குழியும் ஒன்றாக இடம் பெற்று வந்தது. காலப் போக்கில் விளையாட என்று ஒரு பொழுதே இல்லாமல் போனதால், இந்த விளையாட்டும் மறைந்தே போனது. தற்பொழுது (ஆப்பிரிக்க பழங்குடி விளையாட்டு) Mancala Game என்றும் branding செய்யப்பட்டும், gaming sites-களில் flash games ஆகவும் இருக்கிறது. Bao, Soro (Choro or Solo), Mangola, Gabata, Mulabalaba, Ayo and Sadeqa, என்றெல்லாம் பல் வேறு இடங்களில் பல்வேறு variationகளில் விளையாடப் படும். தென்னமெரிக்காவில் ஒலிம்பியாட் விளையாட்டுக்களில் mind games பிரிவில் இவ்விளையாட்டு இருக்கிறது என்பது கூடுதல் செய்தி. அமெரிக்காக்காரன் கொண்டாடினத்தானே "மதர்ஸ் டே". என்னவோ போடா மாதவா [ இப்போ சந்தோஷமா பலாபட்டறை ஷங்கர்:)) ஆனா பாருங்க ஒரு ஸ்லோகம் மட்டும் மிஸ்ஸிங் :)) ]

பல்லாங்குழி இலங்கையில் ஏதோ ஒரு பெயரில் இவ்விளையாட்டை விளையாடுவதாக ஒரு முறை என் இலங்கைத் தோழி ஒருவள் சொல்லி இருக்கிறாள். அவளது தொடர்பு துண்டித்துப் போனது. அவள் இப்போ கனடாவில் இருக்கலாம் :( இருக்க வேண்டும்! அவளோடு இந்த விளையாட்டின் பெயரும் என் குறிப்பிலிருந்து தொலைந்தே போனது. யாருக்கு தெரிந்தால் பகிரவும்.

Significance:

ஒரு மீனின் வயிற்றை ஒரு பகுதியில் மட்டும் கிழித்து அப்படியே திறந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அமைப்பு. ஒரே மனையாய் மூடியிருந்தது இப்போது பாதி பாதியாய் பிரிந்து, இந்த பக்க ஆட்டக்காரரக்கு பாதி அந்த பக்க ஆட்டக்காரருக்கு பாதி. அவர்களுக்கான பாதியில் இருப்பது ஏழு குழிகள். அவை:

1.சகஸ்ராரம்
2.ஆக்ஞா
3.விசுக்தி
4.அனாகதம்
5.மணிபூரகம்
6.சுவாதிஷ்டானம்
7.மூலாதாரம்

இந்த ஏழின் முழுமையும் இந்த ஆட்டத்தில் சரி பங்காய் பிரிக்கப் பட்டிருக்கிறது.
நம் ஞானியரின் பார்வையில் இந்த ஏழு சக்கரங்களும் இன்னொரு பார்வையில்
சுட்டிக்காட்டபட்டுள்ளன. சகஸ்ராரம் துவங்கி விசுக்திவரை - ஆகாயம் அல்லது மேலோகம் அல்லது சொர்க்கம் எனவும், அனாகதம் துவங்கி சுவாதிஷ்டானம் வரை பூலோகம் எனவும், கடைசி மூலாதாரம் அதற்கு கீழ் நரகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

முதல் மூன்று குழிகளிலிருந்து துவங்கப்படும் ஆட்டம் மிகுந்த லாபம்
தரக்கூடியதாகவும், பூமி, நரகம் என்று சொல்லக்கூடிய பகுதியில் துவங்கும்
ஆட்டத்தின் போக்குகள் வேறு மாதிரி இருப்பதையும் நீங்கள் விளையாடி பார்த்தால்
கண்கூடாக அனுபவிக்கலாம்.

குழிக்கு எட்டு காய்கள் என்பன, மனிதனின் எட்டு வகையான குணா நலன்களைக் குறிக்கிறது.

1. சுய கட்டுப்பாடு
2. பொறுமை
3. தியாகம்
4. தானம்
5. தூய்மை (அகம் மற்றும் புறம்)
6. தவம்
7. பிரம்ம ஞானம் (அதாவது பிற உயிர்கள் மீதான மரியாதை)
8. திருப்தி

ஆடும் முறை:

ஆட்டத்தில் குழிக்கு எட்டு காய்களாக ஆளுக்கு ஏழு குழிகளாகத் துல்லியமான சமத்தன்மையுடன் ஆட்டம் தொடங்குகிறது.

சுற்றிக் காய்களை இட்டு வந்து ஒரு வெற்றுக்குழியினைத் துடைத்து அடுத்து இருக்கு குழியில் உள்ள கைகளையும் அதற்கு நேர் எதிரே இருக்கும் குழியில் உள்ள காய்களும் அள்ள வேண்டும். அப்போது முதலில் இட்ட எட்டு காய்களுக்குப் பதிலாக நிறையக் காய்கள் கிடைக்கின்றன. (இதற்கும் ஒரு பெயர் சொல்லி எடுப்போம், மறந்து விட்டது)

ஆட்டத்தில் மற்றும் ஒரு இடைநிகழ்வும் ஏற்படுகிறது. ஒரு வெற்றுக் குழியில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு காயினையும் இட்டு வரும்போது அது நாலாகப் பெருகிய உடன் அதனைப் பசு என்ற பெயரில் அந்தக் குழிக்குரியவர் எடுத்துக் கொள்கிறார். இதன் விளைவாக ஆட்டத் தொடக்கத்தில் இருந்த எட்டு காய்கள் மீண்டும் ஒரு குழிக்கும் ஒரு போதும் திரும்பக் கிட்டுவதே இல்லை.

காய்களை இழந்தவர் (காட்டாக 16 காய்கள் குறைவாகக் கிடைத்தன என்றால்) தன்னுடைய பகுதியில் மூன்று குழிகளைக் காலியாக (தக்கம்) விட்டு விட்டு ஆட்டத்தைத் தொடர வேண்டும். அந்தக் குழியில் எதிரி (வென்றவர்) காய்களைப் போட மாட்டார். சில இடங்களில் தோற்றவரும் போடமாட்டார். இப்போது தோற்றவருடைய குழி இழப்புக்கு ஒரு நிரந்தரமின்மை ஏற்படுகிறது.

ஆட்ட இறுதியில் ஒருவர் தோற்றுப் போகிறபோது அவர் கையில் எஞ்சியிருக்கிற காய்கள் ஒரு குழிக்குரிய ஐந்து கூட இல்லாமல் நாலாக இருந்தால் குழிக்கு ஒவ்வொரு காயினை இட்டு ஆட்டம் தொடர்கிறது. இதற்குக் 'கஞ்சி காய்ச்சுதல்' என்று பெயர். கஞ்சி என்ற சொல் வறுமையினை உணர்த்தும் குறியீடாகும்.

தோற்றவர் ஒரு காய் கூட இல்லாமல் தோற்கின்ற போதே ஆட்டம் முழுமை பெறுகிறது.

விளையாடும் முறை 2:

ஒவ்வொரு குழியிலும் முதலில் 5 முத்துக்களை இட வேண்டும். பின்னர் ஒருவர் ஏதாவது ஒரு குழியில் இருந்து ஆரம்பித்து 5 முத்துக்களை குழிக்கு ஒன்றாகப் போட வேண்டும். கையில் இருக்கும் முத்து தீர்ந்த்தும் அடுத்த குழியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அடுத்த குழி காலியாக இருந்து, அதற்கு அடுத்த குழியில் முத்துக்கள் இருந்தால் அவை அனைத்தையும் வென்றதாக பொருள். ஆனால் அடுத்தடுத்து காலியான குழிகள் வந்தால் முதலில் ஆடியவர்க்கு ஒன்றும் இல்லை.

இதனிடையே காலியான குழிகளில் புதிதாய் முத்துக்கள் சேரும். 4 முத்து சேர்ந்ததும் அவரவர் பக்கத்தில் உள்ளதை அவரவரே எடுத்துக் கொள்ளலாம். இதை "பசு" என்று சொல்வோம். எல்லா குழிகளும் காலியானப்பின் மீண்டும் எல்லா குழிகளையும் 5 முத்துகளாக நிரப்ப வேண்டும். ஒருவரிடம் அதிக முத்து இருக்கலாம். மற்றொருவர் குறைவாக வைத்து இருக்கலாம். அதிக முத்து உள்ளவர்கள் தனது பக்கம் உள்ள எல்லா குழிகளையும் நிரப்ப வேண்டும். குறைவான முத்துக்கள் உள்ளோர் எத்தனை குழிகள் நிரப்ப முத்துக்கள் இருக்கிறதோ அத்தனை குழிகளை நிரப்ப வேண்டும். யார் வென்றாரோ அவரிடம் இருந்தே மீண்டும் விளையாட்டு தொடரும்.

விளையாட்டினூடே பாடப்படும் நாட்டுப்புறப் பாட்டு ஒன்று: (நன்றி: என் அம்மா வழிப் பாட்டியார் திருமதி.மீனாக்ஷி கோபாலன்) இப்பாடலின் ஊடாக வயற்காடும்., பூப்படைந்த பெண்மையையும், கருவுற்ற பெண்மணியும் பாதுகாப்பது குறித்த மறைபொருளாக மறைந்திருக்கும் செய்தியைக் கவனியுங்கள். அள்ள அள்ள குறையாத பாரம்பரியம். நம் வாரிசுகளுக்கும் அள்ளித் தருவோம்.


காடு வெட்டிக் கல் பொறுக்கிக் கம்பு சோளம் தினை விதைத்துக்
காலை-மாலை காட்டக் காக்கத் தங்கரத்தினமே
கண் விழித்து கிடந்தாளாம் பொன்னுரத்தினமே.

அள்ளி அள்ளி விதைச்சு வைச்ச அழகுத்தினை சாகாதடி
மொள்ள மொள்ள விதை விதைச்சதங்கரத்தினமே
மொந்தத் தினை சாகாதடி பொன்னுரத்தினமே

கறுப்பானை ஓடிவரக் கள்ளரெல்லாம் தினை விதைக்க
வெள்ளானை ஓடிவரத் தங்கரத்தினமே
வேடரெல்லாம் தினைவிதைக்கப் பொன்னுரத்தினமே

சின்னச்சின்ன வெற்றிலையாம் சேட்டுக்கடை மிட்டாயாம்
மாமன் வைச்ச மல்லிகைப்பூ தங்கரத்தினமே
கொண்டையிலே மணக்குதடி பொன்னுரத்தினமே

சாலையிலே ரெண்டுமரம் சர்க்காரு வச்சமரம்
ஓங்கி வளர்ந்தமரம் தங்கரத்தினமே
உனக்கேத்த தூக்குமரம் பொன்னுரத்தினமே

எல்லோரும் கட்டும்வேட்டி ஏழைக்கேற்ற மல்லுவேட்டி
சந்தனங் கட்டும்வேட்டி தங்கரத்தினமே
சரியான சரிகைவேட்டி பொன்னுரத்தினமே

ஒத்தத்தலை நாகன்வந்து ஒட்டாக்காட்டை அழிச்சிடுத்தே
ஆராரைக் காவல்வைப்போம் தங்கரத்தினமே
அழகான தினைப்பயிர்க்குப் பொன்னுரத்தினமே

தேவானையைக் காவல் வச்சா தீஞ்சிடுமே தினைப்பயிரு
வள்ளியைக் காவல்வைத்தால் தங்கரத்தினமே
வனத்துக்கொரு சேதமில்லை பொன்னுரத்தினமே

மூத்தண்ணன் பொண்சாதியை மூணுமாசம் காவல்வைப்போம்
ஏழையண்ணன் பொண்சாதியை தங்கரத்தினமே
ஏழுமாசம் காவல்வைப்போம் பொன்னுரத்தினமே

சாய்ந்திருந்து கிளிவிரட்டச் சாய்மானமும் பொன்னாலே
உட்கார்ந்து கிளிவிரட்டத் தங்கரத்தினமே
முக்காலியும் பொன்னாலே பொன்னுரத்தினமே

51 comments:

பத்மா said...

படம் அழகாய் இருக்கிறது. வெள்ளியில கூட பல்லாங்குழி இருக்கு தெரியுமா?

நல்ல கட்டுரை .வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

விளக்கமான பதிவு. முதல் முறைபடி விளையாடியதாகவே நினைவு:)!

பகிர்ந்து கொண்டுள்ள படத்தில் பல்லாங்குழிகளின் அமைப்பு வித்தியாசமாய் உள்ளது. அருமை. நன்றி.

Vidhoosh said...

நன்றி பத்மா.

நன்றி ராமலக்ஷ்மி : என்னிடம் இருக்கும் பல்லாங்குழி மீன் போன்றது. ஆனால் போட்டோவில் (பாட்டரி தீர்ந்து போய் நோக்கியா 6233 மொபைல் காமெராவில் அவசரத்துக்கு எடுத்ததுங்க)இருக்கும் பல்லாங்குழிகளில் கிளி , மீன், மற்றும் பலகை வடிவங்கள் இருக்கு பார்த்தீங்களா? :)

ராமலக்ஷ்மி said...

கவனித்தேன்:)!

ட்ரெடிஷனல் பலகையில் எல் ஷேப்பில் ஏழு குழிகள் வரும் ஒருவருக்கு.

Chitra said...

இங்கே Mancala என்ற பெயரில் விளையாடி இருக்கேன். ஆனால், இந்த விளயாட்டில் இவ்வளவு விஷயங்களா? அருமையான தொகுப்பு.

நேசமித்ரன் said...

:)

Vidhoosh Special !!!

creativemani said...

மாத்திரைக் கொட்டை (சிவப்பாய் மாத்திரை போல இருக்கும்), சிறிய சூடு கொட்டை, சோழிகள் கொண்டு தங்கைகளுடன் பலமுறை விளையாடியதுண்டு... சலிக்கவே செய்யாது..

//அள்ள வேண்டும். அப்போது முதலில் இட்ட எட்டு காய்களுக்குப் பதிலாக நிறையக் காய்கள் கிடைக்கின்றன. (இதற்கும் ஒரு பெயர் சொல்லி எடுப்போம், மறந்து விட்டது)
//
அட.. ஆமாங்க.. எனக்கும் சட்டுன்னு நினைவுக்கு வரல..

பல்லாங்குழியை யோகசக்கரங்களுடன் விளக்கியிருப்பது சூப்பர்..

க.பாலாசி said...

எங்கூட்டுல ரொம்ப நாளு மரக்கட்டையில ஒண்ணு இருந்துச்சுங்க...

இவ்ளோ விசயம் இதுல இருக்குறத இப்பதான் பாக்குறேன்.... நன்றி....

Vidhya Chandrasekaran said...

சின்ன வயசுல விளையாடின ஞாபகம் மட்டும் இருக்கு. பகிர்விற்கு நன்றி.

Vidhya Chandrasekaran said...

சின்ன வயசுல விளையாடின ஞாபகம் மட்டும் இருக்கு. பகிர்விற்கு நன்றி.

நசரேயன் said...

// அவளது தொடர்பு துண்டித்துப் போனது//

உங்க கவுஜையை படிச்சி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்

நசரேயன் said...

//ஒரு மீனின் வயிற்றை ஒரு பகுதியில் மட்டும் கிழித்து அப்படியே திறந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அமைப்பு.//

வீட்டிலே மீன் குழம்பா ?

நசரேயன் said...

//அதற்கு கீழ் நரகம் எனவும் கூறப்பட்டுள்ளது. //

அதாவது நீங்க இருக்கிற இடம்

நசரேயன் said...

//முதல் மூன்று குழிகளிலிருந்து துவங்கப்படும் ஆட்டம் மிகுந்த லாபம்
தரக்கூடியதாகவும்//

ஒரு கோடி ரூபா கிடைக்குமா ?

நசரேயன் said...

//குழிக்கு எட்டு காய்கள் என்பன, மனிதனின் எட்டு வகையான குணா நலன்களைக் குறிக்கிறது.
//

மனிதனுக்கு பதிலா என் பேரை சொல்லி இருக்கலாம்

நசரேயன் said...

// (இதற்கும் ஒரு பெயர் சொல்லி எடுப்போம், மறந்து விட்டது) //

போங்கு ஆட்டம்

//காய்களை இழந்தவர் (காட்டாக 16 காய்கள் குறைவாகக் கிடைத்தன என்றால்) தன்னுடைய பகுதியில் மூன்று குழிகளைக் காலியாக (தக்கம்) விட்டு விட்டு ஆட்டத்தைத் தொடர வேண்டும்//

குழி காலி இல்லைனா வீட்டை எழுதி கொடுத்திட்டு ஆட்டத்தை தொடர வேண்டும்

//அந்தக் குழியில் எதிரி (வென்றவர்) காய்களைப் போட மாட்டார்//

ஏன்னா அவரு ரெம்ப நல்லவரு

//இதற்குக் 'கஞ்சி காய்ச்சுதல்' என்று பெயர். கஞ்சி என்ற சொல் வறுமையினை உணர்த்தும் குறியீடாகும்.//

காய்ச்சல் வந்தாலும் கஞ்சி குடிக்கிறோம், கவலை வந்தா கஞ்சாக் குடிக்கிறோம்

பா.ராஜாராம் said...

இன்னும் வாசிக்கலை..

வேலைக்கு கிளம்பும் நேரம்.இரவு வந்து வாசிச்சு பின்னூட்டனும்.

கடவுளே,நசரேயன் பின்னூட்டங்களை இங்கயே மறக்க கடவுது. :-)))

ஏற்கனவே, வேலை பார்க்கிற இடத்தில்"ஒரு மாதிரி குன்சாவா இருக்கிறானே?" என்று சக தொழிலாளிகள் பார்ப்பது உண்டு. :-(

கஷ்டம்தான்.முயற்சி பண்ணனும். :-)

Paleo God said...

//இப்போ சந்தோஷமா பலாபட்டறை ஷங்கர்//

நண்பர்களும், சகோதர, சகோதரிகளும் இவ்வாறு எழுதி மகிழ்வாறேயானால் எனக்கும் சந்தோஷமே!!
:))

--
இது போன்ற நம் பழைய விளையாட்டுகளை ஒரு பெண்மணி மவுண்ட்ரோடு ஸ்பென்சர் சமீபம் பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு மீண்டும் அதன் பழமை கெடாமல் விற்பதாய் ஒரு முறை ஹிண்டுவில் படித்திருக்கிறேன். (7 ஆண்டுகளுக்கு முன்) இப்போதும் உள்ளதா? தெரியாது.

--

கல்லாங்காய் ஆடியதுண்டு. ஒரே கல்லை தூக்கிப்போட்டு அள்ளு அள்ளென்று அள்ளி பெரும்பாலும் எனக்கு பெப்பே காட்டியவர்களே (பெண்கள்) அதிகம். :(

அந்த சிறிய கருங்கல் துண்டுகளுக்குத்தான் எத்தனை மதிப்பு!
--

@ நசரேயன் சிரிச்சு மாளலைங்க!

இரசிகை said...

nasereyan.........sirichchu sirichchu......iyo:))


pallaanguzhi...naanum aadiyiruken.

ungal sila vilakkangal azhaku!

அம்பிகா said...

அருமையான பதிவு விதூஷ். நான் சிறுமியாக இருந்த போது வயதான பாட்டிகள் விளையாடுவதை பார்த்திருக்கிறேன். எந்த குழியில் முத்தெடுத்தால் எதில் முடியும். நமக்கு எத்தனை முத்து கிடைக்கும், என்பது வரை எல்லாமே கணக்கு வைத்திருப்பார்கள், கால்குலேட்டர் மாதிரி. இங்கே ராஜா பாண்டி என்று ஒருவகை ஆட்டம் ஆடுவார்கள்.
ஆனால் நிறைய விஷயம் அழகாக தொகுத்து தந்திருக்கிறீர்கள். நன்றி விதூஷ்.

கல்வெட்டு said...

//
பெண்கள் தீட்டுக்குரிய காலத்திலும் கருவுற்ற பெண்கள் அமர்ந்து பொழுதுபோக்குவதற்கும் இந்த விளையாட்டை ஆடினார்கள். //

தீட்டு என்றால் என்ன?
தீண்டத்தகாதவர்களா?

ஏன் இப்படி அழைக்கவேண்டும் காரணம் இருந்தால் சொல்லுங்கள்.

இது உங்கள் மொழியாயின் (அதாவது இப்படி அழைப்பது/ அழைத்துக் கொள்வது) கண்டனங்கள்.

**

//1.சகஸ்ராரம்
2.ஆக்ஞா
3.விசுக்தி
4.அனாகதம்
5.மணிபூரகம்
6.சுவாதிஷ்டானம்
7.மூலாதாரம்//

சாதரண‌ விளையாட்டிற்கு ஏன் இப்படி வலிந்து விளக்கம்?
"ஆத்தா இந்தப் பிள்ளைகளக் காப்பாத்து" என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களின் மிக எளிய வாழ்க்மை முறையை "ஸ்தோத்திரம் தரணமாம் புண்ணாக்கு" என்று ஏன் கடினப்படுத்த வேண்டும். பல்லாங்குழி அப்படியே இருக்கட்டும்.

:‍-(((

கல்வெட்டு said...

நாம் தொலைத்த விளையாட்டுகள் - பல்லாங்குழி
http://dailycoffe.blogspot.com/2008/01/blog-post_2105.html

பல்லாங்குழி ,தாயம் மற்றும் பெண்ணிய நுண்ணரசியல்
http://valpaiyan.blogspot.com/2008/07/blog-post.html

http://en.wikipedia.org/wiki/Oware

http://en.wikipedia.org/wiki/Mancala

http://nabataea.net/games3.html

http://en.wikipedia.org/wiki/Mancala

http://www.tradgames.org.uk/games/Mancala.htm

ஹேமா said...

எனக்கும் ஞாபகம் வருகிறது.என் அக்காமார்கள் விளையாடியது.நீங்கள் சொன்னது போல வேற பெயர் இருக்கான்னு தெரில.நல்ல விளக்கமான பதிவு.பாராட்டுக்கள்.

நசர்.....இங்கயுமா !

அது சரி(18185106603874041862) said...

வித்யா,

நேத்தி பிபிசில ஒரு நியூஸ் படிச்சேன்..சூடான்ல இதை ஆம்பளைங்க மட்டும் தான் விளையாடுறாங்களாம்...

வேற பேரு...ரூல்ஸ் கூட கொஞ்சம் வேற மாதிரி இருக்கும் போலருக்கு...ஆனா, கான்செப்ட் ஒரே மாதிரி தான் தெரியுது..

அது சரி(18185106603874041862) said...

Sorry, missed the link.

http://news.bbc.co.uk/1/hi/world/africa/8635258.stm

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல கட்டுரை

மாதேவி said...

நல்ல விளக்கமான பதிவு.

பல்லாங்குளி என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.பார்த்ததில்லை.

செ.சரவணக்குமார் said...

பகிர்வுக்கு நன்றி மேடம்.

உயிரோடை said...

ஆஹா பல்லாங்குழு ஆடணும் போல இருக்கே.

நல்ல பகிர்வு பக்கவடை வித்யா

Cable சங்கர் said...

அருமையான பதிவு..

Vidhoosh said...

ஆமாம் பத்மா.. வெள்ளியில் இருக்கு... அதெல்லாம் கூடத்துல வைச்சு விளையாட முடியுமா? மரமென்றால் விளையாடி முடிச்சதும், அப்படியே மடிச்சு அலமாரில தள்ளிட்டு போயிடலாம் :))
===============================
நன்றி ராமலக்ஷ்மி. :)
===============================
நன்றி சித்ரா. கோழி முதலா முட்டை முதலா என்கிற மாதிரி, இந்த விளையாட்டின் துவக்கம் இங்கேதான் அங்கேதான் சண்டை போட்டுக் கொண்டிருக்காங்க. :)) எப்படியோ, கணித அறிவு, கவனம் மற்றும் கூர்மை இந்த விளையாட்டால் கிடைக்கிறது என்பது மட்டும் எல்லோராலும் ஒத்துக் கொள்ளப் பட்ட ஒன்று.
===============================
நன்றி நேசன். :))
===============================
நன்றி மணிகண்டன்: தெரிஞ்சால் கண்டிப்பாய் பகிரவும், இந்தப் பதிவோடு இணைத்து விடுவேன். சூட்டுக்கொட்டையால் கட்டாந்தரையில் தேய்த்து சூடு பட்டு இருக்கிறோம். :)) oh! feeling so nostalgic. :(
===============================
நன்றி பாலாசி :) விளையாடியும் பாருங்க.
===============================
நன்றி வித்யா.
===============================
நசரேயன்: இதென்ன எதிர் கும்மியா? :)) சூப்பர் கமெண்ட்ஸ். :)) ரொம்ப ரசிக்கிறேன், எப்போதும் போல். ஆனாலும் எப்படியாவது ஒரு நாள் உங்கள மாதிரி நகைச்சுவை எழுதிடுவேன் பாருங்கோ. :))
"அண்ணன் மாதிரி பிரிட்டானியா மில்க் பிக்கீஸ் சாப்பிடுவேன்" :))
===============================
ராஜாராம் அண்ணே: :)) என் ஆரம்ப காலத்து கவுஜைகளில் நசரேயன் பின்னூட்டம் படிச்சிருக்கீங்களா... :)) நசரேயன் தான் நான் நகைச்சுவை முயற்சிகள் செய்ய ஒரே காரணம்... அதனால் அவருக்கு ஆட்டோ ஆணுப்பவதை பற்றி எனக்கு ஒரு ஆட்சேபமும் இல்லை. :)) குன்சாவா இருத்தல் நமக்கெல்லாம் சகஜம் தானே அண்ணே, என்னை பார்த்து கூட நிறையா பேர் இப்போதெல்லாம் "நமக்கேன் வம்பு" என்கிறா மாதிரி நகர்ந்து வழி விட்டு விடுகிறார்கள். :)) நசரேயன் பதிவுகளை இரவிலும், அலுவலகத்திலும் படிக்கிறதில்லைன்னு வைத்துக் கொண்டாலும் முடியல... அவரு girl friend வளவளத்தாளை வரச்சொல்லி இருக்கிறேன். இனிமே அங்க அதகளம்தான் :))
===============================
நன்றி ஷங்கர். ஆமாம். இருந்தது. தக்ஷின் சித்ரா ஓனர்கள் தான் என்றே நினைக்கிறேன். சரியான வரவேற்ப்பு இல்லை, அதிக விலை வேறு. காணும் இப்போ.
http://vidhoosh.blogspot.com/2009/07/blog-post_28.html
கல்லாங்காய் விளையாட்டுப் பாடல்கள் என்ற பதிவும் இருக்கு பக்கோடாவில் :))
===============================
நன்றி ரசிகை. நசரேயன் அப்டித்தாங்க. ரொம்ப முக்கியமா ஒரு பதிவு எழுதி இருப்பேன், இவர் வந்து அதை பயங்கர காமெடி பீசாக்கிட்டு போயிடுவார். ஹா ஹாஹ்ஹா ன்னு வாய் விட்டு சிரிச்சுக்குவேன். :))
===============================
நன்றி அம்பிகா.
===============================
நன்றி கல்வெட்டு சார். எனக்கு தெரிந்த லக்ஷணம் அவ்ளோதான் சார். தமிழில் தானே எழுதி இருக்கேன், "தீட்டு" மற்றும் "தீண்டத்தகாத" என்ற வார்த்தைக்குமான அடிப்படை வித்தியாசம் உங்கள் வயசுக்கும் அனுபவத்துக்கும், உங்களுக்கு தெரிந்தே இருக்கும், இருக்க வேண்டும். அப்படித் தெரியவில்லை என்றால், விரைவில் parents club வலைப்பூவிற்காக womanhood பற்றிய பதிவு ஒன்று எழுதிக் கொண்டிருக்கேன். இன்னும் முடிய வில்லை. வெளி வரும் போது சொல்லி அனுப்பறேன். தெரிந்து கொள்ளுங்கள்.

"தீட்டு" என்றால் புத்தியைத் தீட்டு என்றும் அர்த்தம் கொள்ளலாம். நானும் கொஞ்சம் புத்தியைத் தீட்டிகிறேன் சார். கண்டனத்தை பத்திரமாய் லாக்கரில் வைத்துக் கொண்டேன், நன்றி சார். எத்தனையோ பதிவு எழுதி இருக்கேன். தீட்டு, ஸ்லோகப் புண்ணாக்கு என்று ஒரு வரி எழுதினால் தானே நீங்கள் எல்லாம் பதிவுக்கே வருகிறீர்கள். எப்படி சார்? ஏதாவது ப்ரோக்ராம் வைத்து கொண்டு எங்கே இந்த வார்த்தைகள் வந்து இருக்கு, கும்மி அடிக்கலாம்னு கண்டுபிடிப்பீர்களா? எனக்கும் கொஞ்சம் அந்த ரகசியத்தை சொல்லிக் கொடுங்க ப்ளீஸ்.

தவிர, நீங்கள் கொடுத்த லிங்குகள் எல்லாம் அருமையாக இருக்கு. நன்றிகள் சார். :)
===============================
நன்றி ஹேமா: நசர் அப்படித்தான். அப்டியே இருக்கட்டும்.
===============================
நன்றி அது சரி. அழகான லிங்க். ரொம்ப நன்றாக இருந்தது article.
===============================
நன்றி TVR சார்.
===============================
நன்றி மாதேவி.
===============================
நன்றி சரவணக்குமார்
===============================
நன்றி கேபிள் சங்கர்
===============================

Anonymous said...

என் பாட்டியோடு சின்ன வயதில் பல்லாங்குழி ஆடிய ஞாபகம் சோழியும் புளியங்கொட்டையும் வைத்து. அழகான பதிவு வித்யா.

தளபதி நசரேயன் :)

பா.ராஜாராம் said...

nostalgic பகிர்வு சகோ!

எவ்வளவு விதமான விளையாட்டுகள்...

எல்லாம் எங்கு போச்சு? :-(

relatted-ஆக,எவ்வளவு விவரங்கள் தருகிறீர்கள்!

great! pls continue...

pudugaithendral said...

இந்தப் பல்லாங்குழி விளையாடுவதை மறந்துப்போய் கூகுள் ஆண்டவர்கிட்ட கேட்டுப்போ கிடைச்ச ஒரு தளத்தை பத்தி பேரண்ட்ஸ் கிளப்பில் ஒரு பதிவு போட்டேன். அருமையான தகவல்கள் வித்யா. மிக மிக மிக நன்றி

நட்புடன் ஜமால் said...

இதுல இம்பூட்டு இருக்கா

நிறைய விளையாடியதுண்டு இந்த ஆட்டம் - பழைய ஞாபகங்கள் தூண்டுகின்றன ...

கல்வெட்டு said...

//தமிழில் தானே எழுதி இருக்கேன், "தீட்டு" மற்றும் "தீண்டத்தகாத" என்ற வார்த்தைக்குமான அடிப்படை வித்தியாசம் உங்கள் வயசுக்கும் அனுபவத்துக்கும், உங்களுக்கு தெரிந்தே இருக்கும், இருக்க வேண்டும். அப்படித் தெரியவில்லை என்றால், விரைவில் parents club வலைப்பூவிற்காக womanhood பற்றிய பதிவு ஒன்று எழுதிக் கொண்டிருக்கேன். இன்னும் முடிய வில்லை. வெளி வரும் போது சொல்லி அனுப்பறேன். தெரிந்து கொள்ளுங்கள்.//


விதூஷ்,
தீட்டு என்றால் என்ன என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று யாரும் சொல்லி எனக்குத் தெரியவேண்டியது இல்லை.

பெண்களின் இயல்பான பருவங்களை கொச்சை மொழியில் , எதோ விலக்கப்பட வேண்டிய காலம் என்ற தொனியில் பேசும் அந்த வார்த்தைகளைத் கண்டித்தேன்.

ஏன் இந்த தீட்டு என்ற வார்த்தைப் பிரயோகத்தை நான் வெறுக்கிறேன்?
தகவலுக்காக நேரம் இருந்தால் படியுங்கள்....

5 வருடங்களாக‌ இன்னும் நான் போராடி வருகிறேன். வலிகள் உண்டு இந்தசச் சமூகத்தில் உங்களைப் போன்றவர்களின் அறியாமை வார்த்தைப் பிரயோகங்களைப் பார்த்து.

They don't use ANYTHING during menses ..felt criminal
http://kalvetu.blogspot.com/2007/03/they-dont-use-anything-during-menses.html

மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?
http://kalvetu.blogspot.com/2006/07/blog-post.html

கல்வெட்டின்-தமிழக முதல்வருக்கு கடிதம் (முதல் அமைச்சர் ஜெயலலிதா)
http://kalvetu.blogspot.com/2005/09/07.html

சானிடரி நாப்கின் தமிழக அரசு திட்டம்
http://kalvetu.blogspot.com/2005/10/08_06.html

தினமலரில் சானிடரி நாப்கின் விசயம்!
http://kalvetu.blogspot.com/2005/10/14.html

கல்வெட்டின்- தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம் (முதல் அமைச்சர் கலைஞர்)
http://kalvetu.blogspot.com/2006/05/blog-post_114913553794167251.html

****

//தீட்டு, ஸ்லோகப் புண்ணாக்கு என்று ஒரு வரி எழுதினால் தானே நீங்கள் எல்லாம் பதிவுக்கே வருகிறீர்கள். எப்படி சார்? ஏதாவது ப்ரோக்ராம் வைத்து கொண்டு எங்கே இந்த வார்த்தைகள் வந்து இருக்கு, கும்மி அடிக்கலாம்னு கண்டுபிடிப்பீர்களா? எனக்கும் கொஞ்சம் அந்த ரகசியத்தை சொல்லிக் கொடுங்க ப்ளீஸ்.//

என்னைப் பற்றி நானாக உங்களுக்குச் சொல்லாதவரை , என்மீது நீங்கள் கொண்டுள்ள முன் முடிவுகளைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை.

.

கல்வெட்டு said...

//எங்கே இந்த வார்த்தைகள் வந்து இருக்கு, கும்மி அடிக்கலாம்னு கண்டுபிடிப்பீர்களா? //



என்னை உங்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லையெனில், நீங்கள் என்னைப்பற்றி என்ன தெரிந்துகொண்டாலும் புரிந்துகொண்டதாக நினைத்தாலும் அதுகுறித்த அக்கறையோ மரியாதையோ எனக்கில்லை.

பா.ராஜாராம் said...

கல்வெட்டு சார்,

அவரவர் பாடு.

ஏன் திணிக்கிறீர்கள் என்பதுதான் புரியவில்லை.(நீங்கள் இவரிடம் கேட்ட கேள்வியேதான்,இதுவும்)

இயல்பா,

யாரும்,யாரையும் உறுத்தாது இருக்கலாமே..

//என்னைப் பற்றி நானாக உங்களுக்குச் சொல்லாதவரை , என்மீது நீங்கள் கொண்டுள்ள முன் முடிவுகளைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை//

//என்னை உங்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லையெனில், நீங்கள் என்னைப்பற்றி என்ன தெரிந்துகொண்டாலும் புரிந்துகொண்டதாக நினைத்தாலும் அதுகுறித்த அக்கறையோ மரியாதையோ எனக்கில்லை.//

இங்கு,

என்னை,நான் என்பது யார் சார்?:-(

அக்கறையும் மரியாதையும் பிறகு.

பொது வெளியில் வைக்கிற கேள்விகளுக்கு,அல்லது பதில்களுக்கு பொதுவா எல்லோருமே கேள்வி கேட்கலாம் அல்லது பதில் விரும்பலாம்.அப்படி..

பா.ராஜாராம் said...

@கல்வெட்டு

தயவு செய்து நேரம் இருந்தால் படியுங்கள் என லிங்க் எதுவும் கொடுத்து விடாதீர்கள் சார்.

படிச்சு,பார்த்து,கேட்டு, என்றெல்லாம் எனக்கு பக்குவம் இருந்ததில்லை.

உணர்ந்ததுதான் யாவும்.அதன் அடிப்படை கேள்வி இது.

கல்வெட்டு said...

.

.

பா.ராஜாராம்,

எழுத்து மூலம் உரையாடும் இந்த பதிவு ஊடகத்தில், படிக்காமல் உணர முயற்சிக்கும் உங்களிடம் எப்படி எதையும் உணரவைப்பது என்று தெரியவில்லை.

விதூஷிடம் , தீட்டு(1) மற்றும் பல்லாங்குழிக்கு சமஸ்கிரக விளக்கத் திணிப்பு (2) என்ற இரண்டு கேள்விகள் கேட்டேன்.

அதற்கான பதில் இல்லை. சொல்லப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் கேட்கப்பட்ட கேள்விகள் தாண்டிய //எங்கே இந்த வார்த்தைகள் வந்து இருக்கு, கும்மி அடிக்கலாம்னு கண்டுபிடிப்பீர்களா? // என்ற என்னைப்பற்றிய பொதுவான அவரின் விமர்சனத்திற்கு (அபிப்ராயம் ??) சொன்னபதிலை நீங்கள் படிக்காமல் உணர முயற்சிக்கிறீர்கள். :-((((

**
//பா.ராஜாராம் said...பொது வெளியில் வைக்கிற கேள்விகளுக்கு,அல்லது பதில்களுக்கு பொதுவா எல்லோருமே கேள்வி கேட்கலாம் அல்லது பதில் விரும்பலாம்.அப்படி..//

உண்மைதான்.
அதுவே எனது நிலைப்பாடும்.
பேசப்படும் பொருள் குறித்து யாரும் எதுவும் பேசலாம்.
ஆனால் , பதிவில் பேசப்படும் பொருளைத்தாண்டி விமர்சனம் செய்ததற்கான ப‌தில் மட்டுமே நான் சொன்னது.

**

ஆப்ரிக்கா மற்றும் தமிழ்நாட்டு வேர்கள் உள்ள இந்த பல்லாங்குழி ஈரான் /பார்சிய /பனியா தொடர்புகள் அற்றது. (நான் இன்று அறிந்த வரையில் ..அப்படி இல்லை என்றால் நிச்சயம் மாற்றிக்கொள்வேன்)‌

இதற்கு வலிந்து சமஸ்கிரக விளக்கம் ஏன்? என்பதற்கான பதில் சொல்லியிருந்தால் அது பேசுபொருள் சார்ந்தது. நிச்சயம் ஆரோக்கியமான ஒன்றாய் இருக்கும்.

அல்லது மாதந்தோரும் வரும் இயல்பான இரத்தப்போக்கு எப்படி தீட்டாக ஆகியது என்று சொன்னால் அதில் நேர்மை உள்ளது. அதைவிடுத்து "கும்மி அடிக்கிறேன்" என்று சொல்வது அவருக்கு சுலபமான ஒன்றாக இருக்கலாம்.
நாப்கின் மற்றும் பெண்களின் இந்த கருப்பை இரத்த சுழற்சி சம்பந்தமாக களத்தில் இறங்கி நிஜமான பங்களிப்பைச் செய்யும் என்போன்றோருக்கு,இது கும்மிக்காக பேசப்பட்ட ஒன்று என்று சொன்னால் வருத்தமே வரும்.

பா.ராஜாராம், எழுதுவதை வாசிக்காமல் உணர்ந்து கொள்ள காட்சி ஊடகம் இல்லையே பதிவு? உங்களுக்குஎப்படி புரிய வைப்பது. நீங்களோ வாசிக்க மாட்டேன் என்று சொல்கிறீர்கள். எப்படி உணரப்போகிறீர்கள் தெரியவில்லை. :-(((

**

ராகவன் said...

அன்பு வித்யா,

நல்ல பதிவு வித்யா, நிறைய விஷயங்கள்தெரிந்து கொண்டேன். நிறைய உழைப்பும், ஆர்வமும் வேண்டும் இது போன்ற பொருட்களை, விஷ்யங்களை எடுத்தாள்வதில்... அழகாய் இருந்தது, கடைசியில் இருக்கும் பாடல்.

அன்புடன்
ராகவா...

காமராஜ் said...

பல்லாங்ககுழி அட்டத்துக்குப்பின்னாடி இவ்வளவு தகவல்களா.
நல்ல பயனுள்ள தகவல்கள் வித்யா.

suryesh said...

@ கல்வெட்டு
அவரவர் கோணங்களில் எழுத அவரவர்க்கு உரிமை உண்டு. கல்வெட்டு ஆட்டம் என்று நீங்கள் ஒரு ஆட்டத்தை கண்டுபிடித்து அதற்க்கு நங்கள் ஏழு சக்ரங்கள் பெயர் வைத்தால் தவறு.

நீங்கள் கடவுளை மறுப்பதற்கு எவ்வளவு அனுமதி உள்ளதோ அதேபோல் எங்கள் இறைநம்பிக்கையில் தலையிட உங்களுக்கு அனுமதி இல்லை.

தீட்டு என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது தூமை என்றா, இல்லை வேறு ஏதாவது சொல் தமிழில் இருக்கிறதா ?

ஹுஸைனம்மா said...

////அள்ள வேண்டும். அப்போது முதலில் இட்ட எட்டு காய்களுக்குப் பதிலாக நிறையக் காய்கள் கிடைக்கின்றன. (இதற்கும் ஒரு பெயர் சொல்லி எடுப்போம், மறந்து விட்டது) ////

"கொத்து”ன்னு சொல்லி எடுப்போம்!! அது “பசு”வா, “பஸ்”னு சொல்லுவோம்!!

அந்த “மைண்ட் கால்குலேஷன்ஸ்”, பாட்டிகளிடம் தோற்றேயாக வேண்டிருக்கும்!! அதனால், இன்னொரு பாட்டியை ஆலோசனை மந்திரியாய் வைத்துக் கொண்டு விளையாடுவதுண்டு!!

பதிவுலகில் இப்போ “கொசுவத்தி” காலமோ!!

பா.ராஜாராம் said...

@கல்வெட்டு சார்,

என்னா சார் நீங்க?

ரொம்ப குழப்புறீங்க.

//தீட்டு என்றால் என்ன?
தீண்டத்தகாதவர்களா?//

இப்படியே நிறுத்தியிருக்கலாம்.

//இது உங்கள் மொழியாயின் (அதாவது இப்படி அழைப்பது/ அழைத்துக் கொள்வது) கண்டனங்கள்.//

இதையும் வைக்கும் போது நீங்கள் யார் என உணர்த்துகிறீர்கள்

.உணர்கிறீர்களா இல்லையா?

உணர்கிறீர்களோ இல்லையோ.உணர்த்துகிறீர்கள்.

//ஆத்தா இந்தப் பிள்ளைகளக் காப்பாத்து//

சரி,இது நம் அல்லது உங்கள் மொழி.

இதே போல் ஏன் இருக்க கூடாது அவர்கள் மொழி?

முக்கியமான (!) உங்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதற்கு நீங்களே தான் சார் இடம் கொடுத்தது..(இதையும் கட்டுரையாளர் இப்பவரையில் சொல்லவில்லை.சும்மா,உணர்கிறேன்)அது உங்களுக்கே தெரியும்.ஒருவேளை உணர வாய்க்காமல் போகலாமோ வென

// "ஸ்தோத்திரம் தரணமாம் புண்ணாக்கு" //

// எழுத்து மூலம் உரையாடும் இந்த பதிவு ஊடகத்தில், படிக்காமல் உணர முயற்சிக்கும் உங்களிடம் எப்படி எதையும் உணரவைப்பது என்று தெரியவில்லை.//

// எழுதுவதை வாசிக்காமல் உணர்ந்து கொள்ள காட்சி ஊடகம் இல்லையே பதிவு? உங்களுக்குஎப்படி புரிய வைப்பது. நீங்களோ வாசிக்க மாட்டேன் என்று சொல்கிறீர்கள். எப்படி உணரப்போகிறீர்கள் தெரியவில்லை//

துரதிர்ஷ்ட்டவசமாய் இவ்வளவையும் வாசித்துதான் உணர்ந்தேன். அதே துரதிர்ஷ்டவசமாய் ஏன் வாசித்தேன் என்பதும் உணர்கிறேன்.

முக்கியமாய்,

விருப்பத்திற்கு செவிமடுத்ததற்கு(லிங்க்) நன்றி சார்.

இந்த நன்றியைக் கூட ஏன் சொல்லணும்?. உணர்ந்தால் போதாதா?என்று தோனுகிறது.

சரி சொன்னால்தான் என்ன புண்ணாக்கு?என்று உணர்வதால் சொல்கிறேன்...

நன்றி கல்வெட்டு சார்!

Vidhoosh said...

ராஜாராம் அண்ணா: மிக்க நன்றிகள். நான் பேச நினைத்தவற்றை சொன்னதற்கு.
======================
கல்வெட்டு சார்: அடுத்தவரைக் கடுமையாக விமர்சிக்கும் போது, அதே த்வனியில் நாம் விமர்சிக்கப்படவும் தயாராக இருக்க வேண்டும்.

மனித உடலின் நாடிச் சக்கரங்களை அப்படி பிரித்திருப்பதால் எங்கோ யாரோ இணைத்து பார்த்திருந்தது பொருத்தமாக தோன்றியதாலும், பிடித்திருந்ததாலும் என்றேனும் நானே திரும்பி படித்துக் கொள்ளவும், இங்கே சேமித்தேன்.

தவிரவும், தீட்டு பெண்மையைப் பற்றியது மற்றும் "தீண்டாமை" என்பது வேறொன்று சம்பந்தமானது என்று தெரிந்தே controversial கேள்வியை, பதிவுக்கு சம்பந்தமே இல்லாமல் நீங்கள் கேட்டதன் நோக்கம் வெறும் "argument" அல்லது வார்த்தைச் சண்டைக்கான "பொறி" என்பதைத் தவிர எனக்கு நேர்மையான, ஆரோக்கியமான விவாதத்துக்கான கேள்வியாகத் தோன்றவில்லை. அதனால் அதைப் பற்றி மேலும் விவாதிக்க விரும்பவில்லை.

எனக்கு தெரிந்தது, படித்தது பற்றிய மகிழ்ச்சிப் பகிர்வு மட்டுமே பக்கோடா பேப்பர்கள். மேலும் நான் எழுதிய வரிகளில் எங்கேயும், பக்கோடா முழுதுமே, "hate" ரக எழுத்துக்களை எழுதியதில்லை. எனக்கு தெரிந்த சிலவற்றை compare செய்து பார்ப்பது என் ரசனையாகவே இருக்கிறது. அதையே எல்லோரும் நம்பித்தான் ஆகவேண்டும் என்று திணித்ததில்லை, அப்படி எங்கேயும் குறிப்பிடவும் இல்லை. ஆரம்பத்திலும் சரி, இப்போதும் சரி, என்றும் என் பதிவுகளை, யாருக்கும் தனிப்பட்ட ஈமெயில் முகவரிக்கு அனுப்பி "படியுங்கள்", "வோட்டு போடுங்கள்" என்று நான் சொல்வதே இல்லை. அப்படி சொல்லி இருந்தால் கூட அது திணிப்பு என்று கொள்ளலாம்.

ஆனால் நீங்கள் குறிப்பிட்ட வரிகளில் சமஸ்கிருதத்தின் மீதான உங்கள் hate நன்றாகத் தெரிகிறது. நீங்கள் விரும்பவதை நான் எப்படி சார் எழுத முடியும்? நீங்கள் உங்கள் கேள்வியை மீதும் ஒரு முறை படித்து பாருங்கள், பொதுவெளியில் கூட ஒப்புக் கொள்ள வேண்டாம், how controversial your comment is! அதற்கு மேல் உங்கள் இஷ்டம்.

வயதில் மூத்தவராகவும், நல்ல பதிவராகவும் உங்களை மிகவும் மதிக்கிறேன். உங்கள் இடக்கு முடக்கான கேள்விகளுக்கு நான் ஆளாக விரும்பவில்லை என்பது என் நேரிடையான பதில். தவிரவும், பிரயோஜனமே இல்லாத வாக்கு வாதங்களை செய்வதில் எனக்கு விருப்பமும் இல்லை.

நான் கமென்ட் மாடரேட் செய்வதில்லை, உங்கள் கமெண்டுகள் உடனடியாகவே வெளி வரும், அழிக்கவும் மாட்டேன். ஆனால் அவற்றுக்கு respond செய்வதும் செய்யாமல் இருப்பதும் என் தனிப்பட்ட விருப்பம் என்பதையும் நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன். நன்றிகள் பல.

நான் எழுதியது உங்களைப் புண்படுத்தி இருந்தால் அதைபற்றிய வருத்தம் தெரிவிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

என்கிட்டே ரவா உப்புமா இருக்கு, உங்களிடம் இருக்கு ரவா கேசரி. ஆளுக்கு கொஞ்சமாய் பகிர்ந்து கொண்டால் சந்தோஷம் தானே? அடுத்த முறை கொஞ்சம் சக்கரை தூக்கலாய் போடுங்கள் சார்.

தெரிந்ததை பகிருங்கள். நாங்களும் கற்றுக் கொள்கிறோம். எரிச்சல் கொள்ள ஆயிரம் காரணங்கள் இருக்கிறது, புன்னகைக்க காரணமே தேவையில்லை. எதுக்கு சார் controversy ?

கல்வெட்டு said...

.


விதூஷ்,
நீங்கள் "தீட்டு" என்று சொன்னபோது வலித்தது உண்மை.

அதன் உண்மையான அர்த்தம் விலக்குதல், விலக்கி வைக்கப்பட வேண்டிய நிகழ்வு, தெரிந்ததால் வலித்தது.

இந்த வார்த்தை பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும் அந்த நிகழ்வு , "தீண்டத்தகாததோ" அல்லது "விலக்கப்படவேண்டியதோ" அல்லது "வெட்கப்பட வேண்டியதோ" இல்லை என்று நான் உரக்கச் சொல்லிக் கொண்டு இருப்பதால், வலைப்பதிவுகளில் அப்படி வார்த்தைப் பிரயோகங்களைக் காணும்போது வருத்தமாய் இருக்கும்.

ஆனால் நீங்கள் "தெரியாவிடில் அடுத்துவரும் பாடங்களில் படித்துக்கொள் , கும்மியா" என்று சொன்னதெல்லாம் நீங்களாகவே, பேசப்படும் கருத்து தாண்டி, என்மீது கொண்ட முன் அனுமானங்கள் என்பதால் சுயவிளக்கம் சொல்ல வேண்டியதாய்ப் போயிற்று.

**

பி.ஜே.பி ஆட்சிக் காலத்தில் பாடப்புத்தகத்தில் வரலாற்றுத் திணிப்புகள் செய்ய முயற்சி நடந்தது. அது மிகவும் கண்டனத்திற்கு உள்ளானது. அதுபோல இயல்பான விளையாட்டுகளில் அவரவர் அவர் நம்பிக்கையை ஏற்றிப் புனையும்போது உண்மைத்தன்மை சிதைந்துவிடுகிறது. :-(((


**

சமஸ்கிரகம் .. ஆம் மறுக்கவில்லை. சமஸ்கிரக ஒவ்வாமை எனக்கு உண்டு.

ஆனால் நான் குறிப்பிட்டது சமஸ்கிரகத்திற்காக அல்ல. பல்லாங்குழியை குரானுடம் (அரபி) சம்பந்தப்படுத்தி எழுதியிருந்தாலும் நான் எதிர்க்கவே செய்து இருப்பேன்.

ஏன் என்றால் பல்லாங்குழி விளையாட்டாகவே இருக்கவேண்டும் மதப் புனைவுகள் கூடாது என்று நினைப்பதால்.
பல்லாங்குழிக்கான உங்களின் விளக்கம் சம்ஸ்கிரகமாய் இருந்துவிட்டது அவ்வளவே.

**

சண்டை எனது நோக்கம் அல்ல. அப்படி ஒரு தொனி தெரிந்தால் அது இந்தப் பதிவிற்கான கருத்து குறித்தானது மட்டுமேயன்றி வேறு அஜென்டா இல்லை.

மற்றபடி என்னை சார் என்று அழைக்க வேண்டாம் என்பது வேண்டுகோள். :-)))


*****

பின்னூட்டங்கள் எனது கருத்தைச் சொல்ல மட்டுமேயன்றி உங்களின் பதிலை எதிர்பார்த்து அல்ல.

எனவே பதில் சொல்வது என்பது உங்களின் உரிமை மற்றும் நேரம் சார்ந்த ஒன்று.


.

கல்வெட்டு said...

//
பா.ராஜாராம் said...
துரதிர்ஷ்டவசமாய் ஏன் வாசித்தேன் என்பதும் உணர்கிறேன்.
//

:-(((

உங்களின் வாசிப்பை துர்-அதிர்ஸ்டமாய் ஆக்கிவிட்டேன்.

இனிமேல் எனது பெயர் கண்டாலே நீங்கள் விலகிச் செல்லலாம். உங்களின் கேள்விகளுக்கு மெளனமாய் இருக்க பழகிக்கொள்கிறேன்.

நன்றி!

.

கல்வெட்டு said...

.
விதூஷ்,
தீட்டு என்ற வார்த்தைப் பிரயோகம் குறித்து இந்தப்பதிவின் பின்னூட்டத்தில் உரையாடல் உண்டு

http://nunippul.blogspot.com/2007/03/blog-post_17.html

பெண் உடலின் இயற்கையான நிகழ்வான உதிரப்போக்குக்குத்தான் எத்தனை பெயர்கள்? -‍ சந்திரவதனாவின் பதிவு
http://mahalir.blogspot.com/2004_05_09_archive.html

.

பா.ராஜாராம் said...

@கல்வெட்டு சார்

விதூசிற்கான விளக்கத்திற்கு வந்தனம்.

உங்களின் நேர்மையான பின்னூட்டத்தை நர்சிம் தளத்தில்(சமீபத்திய controvarsiyal ஒன்று குறித்து) வாசித்து உங்கள் தளம் வந்து அனேகமாக சகலமும் வாசித்தேன்.

நிறைய உடன்பாடான,உடன்பாடில்லாததுமான கருத்துகள் என்பதால்,தெளிவின்மையில் பின்னூட்டம் செய்யவில்லை.ஆனால் வாசித்தேன்.அதனால்தான் ஒரு சார்பான கருத்தோ என உங்களை இங்கு விமர்சிக்கவும் நேரிட்டது.

எவ்வளவு உன்னதமான தொணி கல்வெட்டு சார் இந்த பின்னூட்டம்.இந்த தொணி நீங்கள் சொல்ல வந்ததை சுர்ரென ஏற்றுவது போல் முன் தொணி வாய்க்கவில்லை.இதனால் கூட,இதே தொணியில் பேச நேரிட்டு விட்டது கல்வெட்டு சார்..

இதற்காக வருந்துகிறேன்.பெரிய மனது கொண்டு மன்னியுங்கள்.

மற்றபடி,

//இனிமேல் எனது பெயர் கண்டாலே நீங்கள் விலகிச் செல்லலாம். உங்களின் கேள்விகளுக்கு மெளனமாய் இருக்க பழகிக்கொள்கிறேன்.//

அப்படி இல்லை சார்,

எனக்கு தேவையானதை,(உங்கள் எழுத்தில்)நீங்கள் விரும்பாவிட்டாலும் எடுப்பேன்.அது,என்னிடம்தானே இருக்கிறது.

மீண்டும்,

சகலதிற்கும் வருந்துகிறேன் சார்.

Vidhoosh said...

ராஜாராம் அண்ணே. போகட்டும் விடுங்கண்ணே. தொடங்கிட வேண்டியதுதான் போலருக்கு, நாம ஆண்டிமடத்துக்கே போயிடலாம். :)) அப்புறம் அண்ணியை ரொம்ப கேட்டேன்னு சொல்லுங்க. எதக் கேட்கறன்னா கேட்டீங்க, அதான? ராகவன் சொன்ன சமையல் குறிப்பு.. அண்ணே மறந்டீங்க பாத்தீங்களா.. :))

Post a Comment