ட்வீட்டிய வரிகள்

[1]
தீராத தாகமென கனவுகள் தொடர்ந்தால்
மட்டுமே இப்பயணம் தொடரும்
கனத்தால் சிறிது தலை சாயாதிருந்தால்
மட்டுமே இப்பயணம் தொடரும்

======================================
[2]
யாரும் திறக்காத புத்தகத்திலிருந்த
தூசி விழுந்திருக்கலாம்
விழிகளில் நீர்

======================================
[3]
நினைத்துக் கொண்டேன்
மழை பொழிந்தால் நன்றாக இருக்குமென
தீடீரென நனைந்ததில்
தெய்வமயமானது மனது

======================================
[4]
வீட்டில் நிசப்தத்தின் நிழலாடுகிறது
அமைதியாகத்தான் புயல் வீசுகிறது
ஏதும் பேசவில்லை மனம்

======================================
[5]
**பாடம்***
அழகாய்த்தான் இருக்கிறது,
அதற்காக ஏன் புத்தகத்தில்
வைத்து மூடுகிறேன் அந்தப் பூவை?

======================================
[6]
முழுமையில்லா ஞானம் அபிமன்யுவிற்கான வியூகம்

======================================
[7]
மிகவும் பலஹீனமானதென் அஸ்திவாரங்கள்
இத்தனை உயரத்தில் எழுப்பவேண்டாம்
எனக்கான வீட்டை

======================================
[8]
நதியின் அமைதிக்கு அலைகள் குறைந்தது கூட காரணமாயிருக்கலாம்

======================================
[9]
***அவசிய அனாவசியங்கள்***
ஆலமரத்தின் விதையொன்றை களைந்தேன்
என் வயல்களில் நெல்மணிகள்

======================================
[10]
சேபியா டோனில் இருந்தவொரு புகைப்படத்தில்
என்னையே பார்த்துக்கொண்டு யாரோ

======================================
[11]
அவனுக்கான சாட்சிகள் எப்போதும்
அமைதியாகவே இருந்தன
குறைகளை தலையில்
சுமந்தவனுக்கு கைகளே இல்லை

======================================
[12]
***இரண்டு ஞானிகள்***

பகலில் கோர்த்து வைத்த வார்த்தைகள்
மக்களைக் கூறுகளாய் பிரித்தன
இடையில் சுரண்டிய தமக்கான பங்குகளை
எப்போதும் இரவில்தான் பிரித்துக் கொண்டனர்

======================================
[13]
***தலைப்புச் செய்திகள்***
அகராதியில் தேடிய வார்த்தைகளைக் கொண்டு
அன்று நடந்த விபத்துக்களை
வர்ணித்துக் கொண்டிருந்தான்

======================================
[14]

கரையில் நின்றவன் கையிலிருந்த குவளையில்
ஒரு துளி நீர் எரிக்கிறது என்னை
துளித் துளியாய் திருடிச் சேகரித்த கடல் மூழ்கியும்
என் தாகம் தீரவில்லை

======================================
[15]

என் கனவுகளைத் தராசில் அளந்து
சில கவிதையைக் கடன் வாங்கி இருந்தேன்

15 comments:

சாந்தி மாரியப்பன் said...

//வீட்டில் நிசப்தத்தின் நிழலாடுகிறது
அமைதியாகத்தான் புயல் வீசுகிறது
ஏதும் பேசவில்லை மனம்//

அமைதியான விளக்கம், நல்லாருக்கு.

Chitra said...

*பாடம்***
அழகாய்த்தான் இருக்கிறது,
அதற்காக ஏன் புத்தகத்தில்
வைத்து மூடுகிறேன் அந்தப் பூவை?


.... good ones! பாராட்டுக்கள்!

க.பாலாசி said...

3யை ரசித்தேன்.... நல்லா ட்வீட்டுங்க...

இரசிகை said...

BIRDS NEED YOU THIS SUMMER...nallaayirukkunga!

//
[3]
நினைத்துக் கொண்டேன்
மழை பொழிந்தால் நன்றாக இருக்குமென
தீடீரென நனைந்ததில்
தெய்வமயமானது மனது
//

remba pidichchirukku.........

பத்மா said...

அழகா அமைதியா இருக்கு விதூஷ்

நேசமித்ரன் said...

அட !!!!

டுவிட்டர் வரிகள் டுவிஸ்டர் வரிகளா இருக்குங்க

நல்லா இருக்கு முகுந்த் நாகராஜன், ராஜா சந்திர சேகர் அப்புறம் நரனின் ஜென் கவிதைகளை எல்லாம் தூக்கி சாப்பிட்டுடும் போலயே !!!

இப்படியான வரிகளின் பன்முகத்தன்மை மிக சரியா இழைஞ்சிருக்கு விதூஷ் ”மேடம்”

:)

creativemani said...

***பாடம்***
அழகாய்த்தான் இருக்கிறது,
அதற்காக ஏன் புத்தகத்தில்
வைத்து மூடுகிறேன் அந்தப் பூவை?

வாவ்.. ரொம்ப நாளைக்கு மறக்காதுங்க விதூஷ்..

காமராஜ் said...

நான்காவதும், கடைசியும் அருமை வித்யா.
ஏனையவையும் அருமைதான்.

அன்புடன் அருணா said...

எல்லாமே நல்லாருக்கு!

அம்பிகா said...

அனைத்தும் அருமை என்றாலும்,
அபிமன்யு வின் வியூகம், நதியின் அமைதி ரொம்ப பிடிச்சிருக்கு.

நந்தாகுமாரன் said...

2, 6, 8, 10, 11, 13, 14 - இவை என்னை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் நன்றாக இருக்கின்றன முதல் வாசிப்பில் ... wow nice vidhya

நந்தாகுமாரன் said...

மற்றதெல்லாம் அட்டூழியம் :(

உயிரோடை said...

2,8,14 ரொம்ப பிடிச்சி இருக்கு.

CS. Mohan Kumar said...

கவிதைகள் என்று சொல்ல தயக்கம் ஏன்? சில மிக நன்றாய் உள்ளது.

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி; நீங்களும் தஞ்சை/ திருச்சியில் வளர்ந்தவர் என்பதால் கிராமத்து பொங்கல் பிடித்திருக்கலாம்; அப்போது கருத்து எழுதாமல் இப்போது எழுதுவது ஆச்சரியம் தருது; இன்னும் உங்கள் மனதில் உள்ளது அறிந்து மகிழ்ச்சியும்....

Radhakrishnan said...

அருமையாக இருக்கிறது.

Post a Comment