பெரியம்மை பாட்டி - திரு.வி கங்காதர்

ஏற்கனவே சொல்லியிருந்தபடி திரு.வி.கங்காதரின் பத்திகளை தமிழில் படித்து ரசிக்கத் தருகிறேன். இந்தப் பத்திகள் என் தனிப்பட்ட ஆவலில் வெளியிடுகிறேன். எப்படிப்பட்ட commercial sense நோக்கு அல்லது எந்தவிதமான இலாபம் கருதியோ வெளியிடப்படவில்லை. இந்தப் பத்திகளை வேறெங்கும் வெளியிடவோ, பிரசுரிக்கவோ, லிங்க் கொடுக்கவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இது முற்றிலும் என் சொந்த விருப்பத்தின் பேரில் vidhoosh.blogspot.com-தளத்தில் வெளியிடப்படுகிறது. எந்த விதமான copyright violation இருந்தாலோ, பின்னாளில் தெரிய வந்தாலுமோ, எனக்கு தெரியவரும்/தெரிவிக்கப்படும் தருணத்தில், இவை உடனடியாக நிரந்தரமாக அழிக்கப்படும்.

பெரியம்மா பாட்டி என்ற பத்தி எந்த வருடம் வந்தது என்று சரியாகத் நினைவில்லை. எனக்கும் தெரியவில்லை. இந்தப் பத்தியை முதலில் மொழிபெயர்க்கக் காரணம், இதன் மெல்லிய, எளிய ஆங்கில மொழி - ஆரம்ப கட்ட ஆங்கில வாசிப்புக்கு, நேட்டிவிடியோடும், பயமுறுத்தாமல் இருந்ததாலும், டென்னிஸ், ஸ்வாமி அண்ட் ஹிஸ் பிரண்ட்ஸ் எல்லோரும் யாருன்னு தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டுமாறு (அப்போது) அமைந்திருந்ததாலும். நீங்கள் இன்னும் ஸ்வாமியை பார்த்தது இல்லை என்றால் கூகுளில் Malgudi Days அல்லது Swami and his friends by R.K.Narayanan என்று தேடித் பாருங்கள். ஒருவேளை pdf கிடைக்கலாம். இல்லையென்றாலும் தேடிப்பிடித்து வாங்கியேனும் படியுங்கள். :)

அதையும் தவிர, இதை இன்று மறுவாசிப்பு செய்த போது பெண்களும் வாழைமரம்போல சாயும்வரை யாருக்கேனும் பயனளிப்பவர்களாகவே இருக்கிறார்கள் என்று யோசிக்கத் தோன்றியது. கூடவே இந்தக் கவிதையும்,

கவிஞர் ராஜாசந்திரசேகர்
அவர்களின் ஒரு கவிதை: *அனுபவ சித்தனின் குறிப்புகள்* -50-
அதுவாக
போகிறது ஆமை
நாம்தான்
மெதுவாக என்று
குறியீடு செய்கிறோம்

இக்கவிதைக்குள் எத்தனையோ வரிகள், வார்த்தைகள், ஆண்கள், பெண்கள், வாழ்க்கைகள்.

என்றும் பெண்ணியவாதிகள் மீது எனக்கு அவ்வளவு ஈடுபாடு இருப்பதில்லை. ஆண் பெண் இருபாலாரிடமும் ஆண்-பெண்ணுக்கான இயல்புகள் இருக்கும். என்றும் பெண்களாகளாகவே இருப்பதுதான் பெண்களின் இயல்பு என்பதை உணர்த்தியது சமீபத்தில் நான் சந்தித்த ஒரு பெண்மணி திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் (LAFTI) !! இரண்டு ஆச்சரியக்குறிகள் குறைவுதான். அவர் எனக்கு ஏனோ இக்கவிதையை நினைவூட்டினார். இத்தனையுரத்திலும், சுயமிழக்காமல், இவர் பெண்ணாகவே இருப்பதில் எனக்கு கர்வம் தோன்றியது.

சரி, வளைந்து நெளிந்து எங்கோ போகிறது விஷயம். :)) மேலும் இந்த முயற்சியில் குறைகள் இருப்பின் தெரிவியுங்கள், என்னை மேம்படுத்திக்கொள்ள உதவும். நன்றிகள்.
=================================================================================
பெரியம்மா பாட்டி
=================================================================================
ஒவ்வொரு பையனுக்கும் ஒரு பாட்டி கண்டிப்பா இருக்கணும். டென்னிஸ் தி மெநேஸ் (Dennis The Menace) உருவாக்கிய ஹான்க் கெச்சம் (Hank Ketcham) இந்த ஐடியாவைப் பற்றி யோசிக்காமல் விட்டது எப்படின்னு கூட நினைப்பேன். ஆனா, நிஜப் பாட்டி இல்லாத குறையை போக்க, டென்னிஸ்ஸுக்கு பக்கத்துலையே, குக்கீஸ், சாக்கலேட் கேக் எல்லாம் கொடுக்கவும், முக்கியமா அன்பாக தன் மடி மேல உட்காத்தி வைச்சுக்கத்தான் அருமையாக மிஸ்ஸஸ்.வில்சன்-தான் இருந்தாங்களே!

பீ-நட்ஸ் காமெடி ஸ்ட்ரிப் உருவாகிய சார்லஸ் ஷுல்ஷ் (Charles Schultz) மறக்காம பாட்டியையும் உருவாக்கினார். ஆனா பாருங்க, தன்னுடைய செக்யூரிட்டி பிளாங்கட்**குள்ளயே ஒளிந்து கொண்டு, பைபிள்-ளை எடுத்துக்காட்டி பேசும் ஹீரோவான லினஸ் (Linus) அவளைப் பற்றி சிந்திப்பதேயில்லை. ஆனால் அவன் பாட்டிக்கோ அந்தப் போர்வையைக் கண்டாலே பிடிக்காது. தன் பேரனிடமிருந்து எப்படியும் அதை பிரித்து விடவேண்டும் என்றே முயற்சிப்பார்.

பாட்டிகள், குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறார்கள். உதாரணத்திற்கு, ஈடு இணையேயில்லாத ஸ்வாமி அண்ட் ஹிஸ் பிரண்ட்ஸ் என்ற கிளாஸிக் தொடரில் ஆர்.கே.நாராயணன் உருவாக்கிய பாட்டி! ஒரு நடுத்தர பிராமணக் குடும்பத்தில் வீட்டின் ஏதோவொரு ஓரத்தில் அவள் வாழ்ந்து கொண்டிருந்தாலும், ஸ்வாமிக்கு அவள் தோழி, நம்பிக்கைக்குரியவள், மேலும் அவ்வப்போது அவனது அப்பா-அம்மா நியாயமில்லாமல் நடந்துகொள்ளும் போதெல்லாம் ஆறுதல் தருபவளாகவும் இருக்கிறாள். அவனோ அவளிடம் எல்லாக்கதையையும் சொல்லுவான் -- பள்ளியில் நிகழ்பவை, நண்பர்களைப் பற்றி, தன் கனவுகளைப் பற்றி -- எல்லாமே. அது மட்டுமா? மால்குடி கிரிக்கெட் கிளப் ஆரம்பிக்கும் காலத்தில், அவளுக்கு கிரிக்கெட் தந்திரங்களைப் பற்றிக் கூட விலாவாரியாக விளக்கவும் முயற்சித்தான்.

பாட்டிகள் அருமையான கதைசொல்லிகள் மட்டுமாக இல்லாமல், குழந்தைகள் பேசும் எல்லாவற்றையும் கேட்டுக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். சின்ன பசங்களுக்கும் பெண்களுக்கும் தாம் தொணதொணவென்று பேசுவதைக் கேட்கவும் ஆள் வேண்டுமே. அதனாலேயேயும் கூடத்தான் குழந்தைகள் தம் பாட்டிகள் மீது அவ்வளவு அபிமானம் வைத்திருக்கிறார்கள்.

இரண்டு பாட்டிகள் இருந்ததால், என் குழந்தைப் பருவம் செழித்திருந்தது. அவர்களில் நாங்கள் "சொந்தம் பாட்டி" என்றழைக்கும் ஒருவர் எங்கள் அப்பாவின் அம்மா. ஆனால் அவர் எப்போதாவதுதான் எங்களோடு இருப்பார். இன்னொரு பாட்டியின் பெயர் காவேரி. நாங்கள் அவரை பெரியம்மை பாட்டி என்றுதான் அழைப்போம். அவர் எங்கள் அப்பாவின் பெரியம்மா. எனக்கு நினைவு தெரிந்தது முதலே அவர் பெரும்பாலும் எங்களோடுதான் இருக்கிறார்.

பெரியம்மை பாட்டி என் குழந்தைப்பருவத்தின் ஒரு அங்கமாகவே இருந்திருக்கிறார். ஒன்பது வயதில் மணமாகி, இரண்டே வருடத்தில் விதவையாகவும் ஆனவர். அக்காலத்தின் குரூரப்பழக்கங்களின் ஆதிக்கத்தில் தலை மழிக்கப்பட்டு வெண்ணிறப் புடவை மட்டுமே எப்போதும் உடுத்துவார்கள். அவருக்கு அவர் கணவரை கூட நினைவில்லை, கணவர் இறந்ததும், பல உறவினர்களின் வீட்டில் தங்கி இருக்கிறார். எப்போதும் வெள்ளையுடையில் மட்டுமே அவரைக் கண்டிருக்கிறோம்.

ஒருநாள் என் பெரியக்கா, அறியாமல் "பாட்டி, நீங்க எப்போலேர்ந்து வெள்ளைப் புடவை கட்டிக்கறதும், விபூதியிட்டுக்கரதையும் ஆரம்பிச்சேள்?" என்று கேட்டுவிட்டார். பெரியம்மா பாட்டி ஒரு நிமிஷம் தடுமாறி, "நான் இப்படியேத்தான் பிறந்தேண்டி" என்று சொன்ன வார்த்தைகளில் இருந்த இறுக்கம் பலவருஷங்கள் கழிந்துதான் எனக்கு உரைத்தது.

எங்கம்மாவும் பாட்டியும் பெரும்பாலும் இணக்கமாகவே இருந்தார்கள். இருந்தாலும், பாட்டி எப்போதும் பிரச்சனைகளை உண்டாக்குவார். அவர் மிகவும் மடி-ஆச்சாரம், அவருக்கான நெறிமுறைச் சடங்குகளை கடைபிடிப்பர். அவரது பூஜையறைக்குள் நாங்கள் நுழைந்துவிட்டால் கூட கோபம் வந்துவிடும். அவரைப் பொருத்தவரைக்கும் எங்கம்மா கூட ஆச்சாரம் கிடையாது.

எங்கம்மா சமைச்ச சாப்பாடுகளை சுத்தி செய்ய, அவற்றின் மேல் பால் தெளித்து மடியாக்குவார். பாட்டியின் ஆச்சாரத்தினால், அவரைக் கிளறிவிட்டு சந்தோஷப்படும் எங்கள் சமையல்காரியுடன் எப்போதும் சண்டையாகிவிடும். எப்போதாவது பாட்டியும் எங்கள் அப்பாவிடம் குத்தம் சொல்லி புலம்பும்போது, அப்பாவும் அவரிடம் கடுமையாக கண்டித்துப் பேசுவார். ஆனால் பாட்டி இந்தக் கண்டிப்புக்கெல்லாம் அசருபவராக இல்லை.

அவர் எனக்கு ரொம்ப பிரியமான பாட்டி. என் சகோதரிகள் போல இல்லாமல், நான் எப்போதும் அவரைக் விளையாட்டுக்குக் கூட கிண்டல் செய்வதில்லை அவரோடு சண்டை போடமாட்டேன். பாட்டி பள்ளிக்குச் சென்றதே இல்லை. எப்படியோ தானாகவே படிக்கக் கற்றுக் கொண்டு, எப்போ பார்த்தாலும் இராமாயணம் மற்றும் மகாபாரதப் பக்ககங்களுக்குள் மூழ்கிக் கிடப்பார். பல பிரபலமான பத்திரிக்கைகள் கூட, குறிப்பாக ஆனந்தவிகடன், படிப்பார். இதனால் அவர் எங்களுக்கு பல அற்புதமான கதைகள் சொல்ல முடியும்படி ஆனார்.

இரவு சாப்பிட்டபின், அவரை அணைத்தபடி, பல நாடோடிக் கதைகள் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு கதையில் நரியொன்று தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொண்டு கிராமத்தில் கலகம் பண்ணியதும் சுவாமி-பக்தி கொண்ட ஒரு சிறுமி அதை வெளிப்படுத்தியதும் எனக்கு பிடிக்கும்.

அவர் சொல்லும் கதைகளில் நல்லொழுக்கம் என்பது முக்கிய கருவாக இருந்தது. குரூரமான கல்நெஞ்சக்காரிகளான மாற்றாந்தாய்கள் எப்போதும் தண்டிக்கப்படுவார்கள். மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்கும் கெட்டவர்களுக்கு, நரகத்திற்கு சித்திரகுப்தன் இழுத்துச் செல்லும் ரத்தகளரியான காட்சிகளையும், கொத்திக்கும் எண்ணெய் கொப்பரையில் தூக்கிப் போடுவதையும், பாட்டி விலாவாரியாக விவரித்து, எங்களை நடுநடுங்கச் செய்யாமல் விடமாட்டார்.

எங்களுக்குக் கதை சொல்லாமல் இருக்கும் நேரங்களில், அவர் எங்களுடன் விளையாட்டுகள் விளையாடுவார். அவர் சோழி வைத்து விளையாடும் பல்லாங்குழி விளையாட்டில் தேர்ந்தவர், யாரும் ஏமாற்ற முனைவதைக் கூட கண்டுபிடித்து விடுமளவுக்கு கூர்மையானவர். அவருக்கு நாங்கள் விளையாடும் கேரம் விளையாட்டைக் கற்று கொடுத்ததில் அதில் கூட கைதேர்ந்தவராகி விட்டார்.

பெரியம்மா பாட்டி அற்புதமாக சமையல் கூட செய்பவர். விரதம் இருக்கும் நாட்களில், ஒரு பொழுது மட்டுமே உணவு உண்பார். அதையும் தானே சமைத்துச் சாப்பிடுவார். இது வழக்கமாய் இருக்கும் சாம்பார்-ரசம்-கறி என்றில்லாமல், சுவையான பலகாரங்களாக இருக்கும். குறிப்பாக, மோர்களி என்று மோர் மற்றும் ஏதோ ஒரு மாவால் செய்யப்படும் ஒரு பலகாரம் எனக்கு நினைவுக்கு வருகிறது. இது விரதம் இருப்பவர்களுக்காகவே செய்யப்படும் என்றாலும், அவர் செய்வதில் அதிகளவு மோர்களி என்னாலேயே சாப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் பாட்டியோ அதைப்பற்றி பொருட்படுத்தாமல், இன்னும் கொஞ்சம் தண்ணீர் குடித்து பசியாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்.

அவர் வெளியே செல்லவே மாட்டார். வெளியே செல்வதும் கூட எப்போதாவது கோவில்களுக்குச் செல்வது மட்டுமே. ஒரு நாள், இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று நான் தீர்மானித்தேன். எங்கள் வீட்டில் பாட்டியோடு நானும் சமையல்காரியும் மட்டுமே இருந்தோம். நாங்கள் பகவான் கிருஷ்ணரின் பிறப்பும் பால்ய காலத்தையும் பற்றிய கிருஷ்ண விஜயம் என்ற திரைப்படத்திற்குச் செல்வதென்று முடிவெடுத்திருந்தோம். திடீரென்று எனக்கு, பாட்டியை ஏன் அழைத்துச் செல்லக் கூடாது? என்ற ஒரு நல்ல ஐடியா உதித்தது.

சமையல்காரி பெரும்வியப்பிலிருந்தாலும், கடைசியில் ஒப்புக் கொண்டார். கார் டிரைவருக்கும், எப்போதுமில்லாதபடியாக எதிர்பாராத நிகழ்வாக பாட்டியம்மா சினிமாவுக்குச் செல்வது பற்றிய திகைப்பு மேலிட்டது. ஹீரோவான பகவான் கிருஷ்ணன் கோபிகளைத் துரத்திக் கொண்டும், அசுரர்களைக் கொன்றும், நல்லவர்களைக் காத்தும் என்றும் சினிமாவும் ரொம்ப ருசிகரமாக இருந்தது. சினிமா முடிந்ததும், அவரை நோக்கி, "ஏன் எதுவும் வேண்டி வணங்கிக்கலை? பகவான் கிருஷ்ணனே உங்கள் முன்னாடி இருந்தாரே?" என்று கேட்டேன். அதற்கு அவர் சிரித்து விட்டு "நீ என்னன்னு நினைச்சாய்? அதென்ன நிஜம் கிருஷ்ணன்னு நான் நம்பிடுவேன்னா? அதெல்லாம் வேஷம்டா! எப்போதும் கிருஷ்ணன் எனக்குள்ளையே இருக்கான்" என்றதும் நான் அசந்தே போனேன்.

ஒரு நிலையில் என் தந்தையார் ஒய்வு பெற்று தற்காலிகமாக பாலக்காட்டில் வசிக்கும்படி ஆனது. நானும் தொழில் நிமித்தம் வீட்டிலிருந்து வெளியூரில் இருந்தேன். குடும்ப சிக்கல்களில், பெரியம்மை பாட்டி எங்களோடு பாலக்காடு வரவியலாமல் போனது. அந்தச் சூழலில் அவர் அவரது சகோதரனோடு தன சொந்த கிராமத்திலேயே தங்கும்படியானது. ஒருநாள், எங்கப்பாவுக்கு கிராமத்திலிருந்து பாட்டி அமைதியான முறையில் உயிர் நீத்ததாக போஸ்ட்கார்டு வந்தது.

சொர்க்கம் என்றெல்லாம் ஏதேனும் ஒரு இடமிருந்தால், அவருக்காக நிச்சயம் மரியாதைக்குரிய இடமொன்று தனியாக அமைந்திருக்கும். இன்று என்னை சுற்றிலும் அவசியமில்லாதவர்களின் எல்லாவித சிலைகளும் அமையப் பெற்றிருக்கிறது. என் ஆயுட்காலத்தில், அதிருஷ்டமிருந்தால் என் அன்புப் பாட்டிக்கென்று ஒரு சிலை அமைத்து குழந்தைகளுக்கென்ற ஒரு கதை-சொல்லும் அமைப்பை ஆரம்பிப்பேன். என் வாழ்வில் என் பெரியம்மை பாட்டி கொண்டு சேர்த்த மகிழ்ச்சிகளை மற்ற குழந்தைகளுக்கும் கொண்டு சேர்க்க முயற்சிப்பேன்.
(நன்றி: காலம்னிஸ்ட் திரு.வி.கங்காதர்)
===================
** Security Blanket. Blanket என்பது போர்த்திக்கொள்ளும் மெல்லிய போர்வை. Peanuts strip-களில் குழந்தையான Linus எப்போதும் தன் வெளிர்நீல நிறப் போர்வையோடும், விரல் சூப்பிக்கொண்டும் இருப்பதால் சார்லஸ் முதன்முதலாக அந்தப் போர்வையை security blanket என்று வர்ணித்தார். அதுவே நிலைத்துப் போனது. :-)
==================
இது ஒரிஜினல்:
Periyaamma patti...
Every young boy should have a grandmother. I am surprised that Hank Ketcham, creator of Dennis the Menace, did not think of the idea. But then, in the absence of a genuine grandmother, Dennis has the good neighbourly Mrs Wilson who keeps him well provided with cookies and chocolate cake and, more importantly, the softest lap in the neighbourhood.

Charles Schultz, the creator of the Peanuts strip, remembered to create a grandmother. But Linus, the Bible-quoting hero attached to his security blanket, does not think much of her. This grandma has no liking for his blanket and tries her best to separate her grandson from it.

Grandmothers are part of the growing up process. Take, for instance, the grandma created by R K Narayan, in his inimitable Swami and Friends. She lived in the shadows of a middle class brahmin family home but, for young Swami, she was the friend, confidante and comforter from the occasionally unreasonable father and mother. He told her everything -- school experiences, friends, ambitions -- and even tried to explain the intricacies of cricket when starting the Malgudi Cricket Club.

Grandmothers are not only great storytellers, but also wonderful listeners. Young boys and girls occasionally need someone to listen to their prattle and that is why they value grandmothers so much.

My childhood was enriched with the presence of two pattis (grandmothers). One of them, whom we called Sondham patti (our own grandmother), was my father's mother but lived with us only occasionally. The other grandmother was named Kaveri. We called her periyaammai patti (roughly translated as 'senior mother grandmother'). She was my father's aunt and, as far as I remember, lived with us most of the time.

Periyaammai patti was a major factor in my young life. She was married at nine and widowed two years later. The cruel customs of those years forced her to have her head shaved and wear white all the time. She did not even remember her husband, and once he died, came to live with various relatives. All of us had seen her only in white.

One day, in all innocence, my elder sister asked her, "Patti, when did you start wearing the white sari and apply holy ash on the forehead?" Grandmother paused a bit and replied, "I was born like this, child." The impact of this statement was to hit me several years later.

Most of the time, mother and Periyaammai patti got along quite well. But, in her own ways, patti created problems. She was very orthodox, observed all the rituals and got irritated when we intruded into her puja room. For patti, even my mother was not orthodox enough.

To 'purify' the food cooked by mother, she used to sprinkle milk on the dishes. This asaram (orthodoxy) was carried to such an extent that patti was always picking quarrels with our cook, who delighted in provoking her. Once in a while, mother complained to father who spoke sternly to grandmother. But I do not think this admonition had any effect on her.

She was my favourite grandmother because, unlike my sisters, I never made fun of her (even in jest) or picked up quarrels with her. Patti had never gone to school. Somehow or other, she taught herself to read and was always found poring over the pages of the Ramayana and the Mahabharata. She even read the popular Tamil magazines particularly Ananda Vikatan. This enabled her to tell us wonderful stories.

After dinner, I snuggled up to her and listened enchanted to her folk tales. In one of these tales, a fox disguised itself as a brahmin and played havoc in the village before it was exposed by a god-fearing girl.

Virtue was the major theme in such stories. Cruel and unfeeling stepmothers were always punished. Grandmother did not spare us the gory details and we shivered in horror as she described how the evil-doers were dragged to hell by Chitraguptan (the assistant to Yama, the God of Death) and flung into cauldrons of boiling oil.

When not telling stories, she played games with us. She was an expert in pallankuzhi (a native game played with a wooden board and sea shells) and was so sharp that she detected any cheating we resorted to. We taught her to play carrom and she became proficient in that game too.

Periyaammai patti was also a wonderful cook. On the days she fasted, she had only one meal and she cooked her own food. This was not the usual rice sambhar-rasam-vegetable-curd dishes, but tasty snacks which we called palaharam. I particularly remember a dish called morkhali made from buttermilk and some kind of dough. Though this was meant for the person who fasted, the best part of the morkali was consumed by me. But grandmother did not mind and drank extra glasses of water to kill her appetite.

She seldom went out. In fact, occasional visits to the temples were her only outings. One day, I decided to change all that. Our cook and I were alone in the house and we had planned to go to a movie called Krishna Vijayam which dealt with the birth and early life of Lord Krishna. Suddenly, I had a bright idea. Why not take patti for the movie?

The cook, who was initially flabbergasted, finally came around. The driver was also thrilled because he was driving pattiamma for an unusual adventure. The movie was quite entertaining with the hero, Lord Krishna, chasing the gopis, killing the demons and supporting virtuous people. When the movie ended, I asked her, "Why didn't you fold your hands and pray? Lord Krishna was before you." She laughed, "Do you think I would believe it was the real Krishna? It was all a vesham (illusion). But all the time, Lord Krishna is within me." I was quite stumped by that answer.

By the time father retired and settled down temporarily in Palakadu, I had left home. Due to some family problems, Periyaammai patti could not live with us in Palakadu and was left to stay with her brother in her native village. One day, my father received a post card that she had died peacefully.

If at all there is a place called Heaven, an honoured place would be reserved for her. Today, looking around me, I see statues erected for all sorts of useless persons. If ever, in my very old age I am fortune enough to acquire a big bungalow, I would erect a statue of my beloved grandmother and arrange story-telling sessions for children. Periyaammai patti brought so much joy to my childhood that I would like to pass on some part of it to other children.

15 comments:

Ananya Mahadevan said...

மனதைத்தொட்ட பதிவு. எனக்கு எங்கள் சுப்பி அவ்வாவை நினைவு படுத்திய பதிவும் கூட.. நன்றி வித்யா!

நேசமித்ரன் said...

மிக நன்றாக வந்திருக்கிறது
தொடருங்கள்

வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றிகள்

உங்களின் இக்னோர் இட் பண்புக்கு ஒரு சலாம்

மாதேவி said...

"பெரியம்மை பாட்டி" மனத்தை நன்றாக இழுக்கிறது.

Chitra said...

Periyaammai patti brought so much joy to my childhood that I would like to pass on some part of it to other children.

....Thats so sweet! Good decision too.....

சைவகொத்துப்பரோட்டா said...

என் பாட்டியை நினைவுக்கு கொண்டு வந்து
விட்டது இந்த பதிவு.
(என் பாட்டியும் நிறைய கதைகள் சொல்லுவார்கள்)

VISA said...

அந்த கவிதை அருமை.

ஷோபா டே (Shabha De) காலம்ஸ் படிப்பீர்களா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்குங்க விதூஷ்

balutanjore said...

please publish other articles also especially about kalchatti and
vatthal kuzhambu


balasubramanyan vellore

நசரேயன் said...

//இந்தப் பத்திகளை வேறெங்கும் வெளியிடவோ, பிரசுரிக்கவோ, லிங்க் கொடுக்கவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இது முற்றிலும் என் சொந்த விருப்பத்தின் பேரில் vidhoosh.blogspot.com-தளத்தில் வெளியிடப்படுகிறது. எந்த விதமான copyright violation இருந்தாலோ, பின்னாளில் தெரிய வந்தாலுமோ, எனக்கு தெரியவரும்/தெரிவிக்கப்படும் தருணத்தில், இவை உடனடியாக நிரந்தரமாக அழிக்கப்படும்.//

அதற்குள்ளேயும் சங்கம் உருவாகிடிச்சுன்னா, கடை அடைப்பு, கும்மி அடிப்பு, உண்ணா விரத போராட்டம் இப்படி பல போராட்டங்களை நடத்தி இடுகையை அழிக்காம இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படும்.

Anonymous said...

I have "Swamy and Friends" in my collection.

Periamma Paati is very touching. Have never heard about Gangathar.

Sundar சுந்தர் said...

மொழி பெயர்ப்பு போல தோன்றவில்லை. நல்ல நடை. ரொம்ப நல்லா எழுதியிருக்கே.

Paleo God said...

அருமை..!

Vidhya Chandrasekaran said...

லவ்லி:)

எம்.எம்.அப்துல்லா said...

/பாட்டிகள் அருமையான கதைசொல்லிகள் மட்டுமாக இல்லாமல், குழந்தைகள் பேசும் எல்லாவற்றையும் கேட்டுக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். //

குழந்தைகள் விரைவாகப் பேசுவதும் பாட்டிகளால்தான். பாட்டி இருக்கும் வீட்டின் குழந்தை பாட்டியில்லா வீட்டின் குழைந்தைவிட விரைந்தும்,புரிந்தும் பேசும் :)

சுந்தர்ஜி said...

பாட்டிகளுக்கும் தாத்தாக்களுக்குமே குழந்தைகள் பேசுவதைப் பொறுமையாகக் கேட்கும் ஆர்வம் குறைந்துவிட்டது.கங்காதரின் மொழியை அப்படியே உரித்துவந்திருக்கிறது உங்கள் நடை.ஒரு கனவுலகத்து அனுபவம் போல் தோன்றுகிறது.இப்படிப் பட்ட பாட்டிகள் இனிக் கிடைக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.அசத்துங்கள் விதூஷ்.

Post a Comment