விதுர நீதி 1

விதுர நீதியைத் தமிழில் எழுதிப் பார்க்க வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசையாக இருந்தது. பகுதி பகுதியாகத் தருகிறேன்.
====================
சஞ்சயன் வெறுங்கையோடு திரும்பி, திருதராஷ்டிரனைப் பார்த்து "மகாராஜா! ராயபாரம் தோல்வியுற்றது. யுத்தம் தவிர்க்க முடியாததாகிப் (அனிவார்யம்) போனது" என்றார். திருதராஷ்டிரன் பெருஞ்சஞ்சலத்தில் ஆழ்ந்தார். நம்பிக்கைக் கொடுக்கும் நல்ல வார்த்தைகள் கேட்க விழைந்து விதுரனை அழைக்கிறார்.

விதுரன், யமதர்மராஜனின் அவதாரமாகக் கருதப் படுகிறார். அவர் நிரஹங்காரி (அஹங்காரம் அற்றவர்), நிஷ்ச்சலமனஸ (சலனமற்ற மனமுடையவர்) என்றும் அறியப்படுபவர்.

திருதராஷ்டிரனைக் காண விதுரன் வந்து, அவரை நமஸ்கரிக்கிறார். விதுரனை அமரச் செய்து, திருதராஷ்டிரன் "நல்லவற்றைக் கேட்டு நாளாகிப் போனது. எனக்கு சில ஹிதவாக்கியங்களை (இனிமையான வாக்கியங்கள்) கூறுவாயாக" என்று கேட்கிறார்.

விதுரன் "மகாராஜா. உங்கள் விழிகளில் சிவப்பு நரம்புகள் தெறிக்கிறது. உங்களுக்கு உறக்கமின்றிப் போனது. இது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. ஏனென்றால், பலவந்தர்கள் (பலம் பெற்ற சான்றோர்கள்) மீது விரோதம் கொள்ளும் துர்பலர்கள் (பலத்தை துஷ்ப்ரயோகம் செய்பவர்), மாற்றான் சொத்துக்களை அபகரிப்பவர்கள், காமாந்தகர்கள், திருடர்கள் போன்றவர்கள் மட்டுமே உறக்கமின்றித் தவிப்பார்கள் என்று அனுபவ சாஸ்திரங்கள் உரைகின்றன. நானறிந்த வரையில், தாங்கள் அப்படிப்பட்ட பாதங்கள் புரியவில்லையே! பின்பு தங்களுக்கு ஏன் உறக்கம் வரவில்லை?" என்று வினவுகிறான்.

விதுரனின் எதிர்கேள்விக்கு பதிலுரைக்கமுடியாது திகைத்த திருதராஷ்டிரன் "விதுரா. உன் வாயால் தர்ம பிரவசனம் (தர்மம் குறித்த உரை - lecture) கேட்கவும் ஆவலோடிருக்கிறேன்." என்கிறார்.

விதுரன் தொடர்ந்து: "மகாராஜா! யுதிஷ்டிரன் உத்தமன். உன்னதமான ஆசைகள் கொண்டவன். தர்மத்தை பின்பற்றுபவன். உதாத தர்மவானாகிய (பிரதிபலன் பாராதவன்) அவனே அரசனாகும் தகுதிகள் பெற்றிருக்கிறான். அவனிடம் அரசனாகும் அதிகாரமும் பலமும் இருந்தாலும், உங்களைத் தந்தையாகக் கருதி, அவன் உங்கள் ஆணையை மீறி நடந்ததேயில்லை. அப்படியிருந்தும், அவனை வானப்ரஸ்தம் செய்வித்தீர்கள். இன்று உங்கள் சத்தியத்திற்கு புறம்பாகவும், வாக்கை காப்பற்றமுடியாமலுமான சூழ்நிலையில், ராஜ்ஜியத்தை அவர்களுக்கு அளிக்க முடியாமல் இருக்கிறீர்கள். துரியோதனுக்கு சாம்ராஜ்யபாரத்தை அளித்து, துச்சாதனன், சகுனி, போன்ற காமாதி அயோக்கியர்களுக்கு இடம் கொடுத்து விட்டீர்கள். இப்போது அமைதியை வேண்டுவது நியாயமில்லை? உங்களுக்கு நியாயமாகத் தோன்றுகிறதா? சாத்வீக ஸ்வபாவம் (அமைதியானவன்), உத்யோகயத்னம் (தன் வேலையைச் செவ்வனே செய்பவன்), கிலேஷ சஹனம் (விருப்பு வெறுப்பற்றவன்), தர்மவான் (நியாயமாய் நடப்பவன்), எவனோ அவனுக்கு இன்னல்கள் நேர்ந்தாலும், அவன் குறிக்கோள்களில் அவன் என்றும் தோற்ப்பதில்லை. அப்படிப் பட்ட சுஜனர்கள் (தெளிந்த குறிக்கோளுடையவர்) துர்ஜனர்களிடமிருந்து (குறிக்கோளற்றவர்கள்) விலகி இருப்பார்கள்.

மஹாராஜா! வித்வான் (அறிவிற்சிறந்தவன்) என்பவன் யார்? தர்மார்த்தங்களை பின்பற்றுபவன், லோக விவாகரங்களை நன்கறிந்தவன், குறிப்பால் உணர்பவன்
போக சிந்தனையற்றவன் ஆனால் புருஷார்த்தங்களைப் பின்பற்றுபவன் (குடும்ப வாழ்விலும் ஈடுபடுபவன்), எந்த நிலையிலும் மற்றவன் மீது அவதூறுகள் பேசாதிருப்பவன், நியாயமற்ற இலாபங்களை விரும்பாதிருப்பவன், நிரந்தரமாக இழந்துவிட்ட பொருட்களைக் குறித்த துக்கம் கொள்ளாதிருப்பவன், கஷ்டங்களை எதிர்கொள்ளும் மனஉறுதியும் தைரியமும் பெற்றவன், இடையில் விட்டுவிடாது எச்செயலையும் முழுதாக முடிப்பவன், சோம்பேறித்தனம் இல்லாதவன், இந்த்ரீய நிக்ரஹம் செய்பவன் (உணர்வுகளை அடக்கும் ஆற்றல் பெற்றவன்), போன்ற குணங்களைப் பெற்றவனின் இதயம் பவித்திரமான கங்கையின் ஊற்று நீர் போல சுத்தமாயிருக்கும். கற்றகல்வி எப்போதும் அவர்களுக்கு நல்வழி காட்டும்.

மூர்க்கர்கள் யார்? மூர்க்கர்களுக்கோ கல்வியின் பயன் கிடைக்காது, விவேகம் அழிந்து கர்வம் பெருகும். இப்படிப்பட்ட தாரித்திரியம் (காம-கோப-மூர்க்க-கர்வ குணங்கள்), கொண்டவர்களுக்கு ராஜாங்கச்செல்வங்களை பாதுகாக்கும் கனவு எதற்கு? ஸ்வ-தர்மம் (தனக்கே தன் மீதான மரியாதை) விடுத்தவர்கள், பரதர்மம் (ஸ்வ-தர்மத்தை விடுத்து அடுத்தவனின் நம்பிக்கைகளை பின்பற்றுபவன்), தன் நண்பர்களை அவமதிப்பவன், பலவந்தர்களுடன் விரோதிப்பவன், நண்பர்களே இல்லாதவன், அதிகப் பிரசங்கி (அவசியமில்லாமல் அளவு மீறி பேசுபவன்), க்ருதஞ்ஞம் (நன்றியுணர்வு) இல்லாதவன், மற்றவன் குற்றத்தை மட்டுமே நினைவில் கொள்பவன், காரணமேதுமின்றி அற்ப விஷயங்களுக்குக் கூட ஆவேசப் படுபவன், அனர்த்தர்களுக்கு உபதேசம் செய்பவன் போன்றவர்கள் மூர்க்கர்கள்.

பிரபு! பெருஞ்செல்வமான கல்வி, கேள்வி, வேள்விகளின் அதிருஷ்டம் இருந்தாலும், தானங்கள் செய்த புண்ணியவானாக இருப்பினும், கர்வம் இருந்தால், அவன் வித்துவான் ஆக முடியாது.

பரம மூர்க்கன் என்பவன் யார்? தன்னுடன் ஒரே கூரைக்குள் இருப்பவர்களுக்குக் கொடுக்காமல் உணவு உண்பவனும், உணவுக்காக இறைஞ்சுபவனும் பரம மூர்க்கர்கள்"


------------->இன்னும் வரும்<-------------

22 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

உண்மைதான், கர்வம் புகுந்து விட்டால்,
மற்ற நல்ல விஷயங்கள் வெளியேற ஆரம்பித்து விடும்.

ராகவன் said...

அன்பு வித்யா,

நலம். அதுவே விழைய...

விதுர விதி படித்தேன்... பிரமிப்பாய் இருக்கிறது வித்யா... அநேக நேரங்களில் வியாசர் விருந்தில் வரும் கிளைக்கதைகளை படித்து ஆச்சரியப்படுவேன்... மகாபாரதத்தின் மிகப்பெரிய பலம், அதனுடைய கிளைக்கதைகள் தான் என்பது என்னுடைய எண்ணம், அது மூலக்கதையை விட சுவாரஸ்யமாகவும் அர்த்தம் பொதிந்ததாகவும் இருப்பது அதனுடைய தனித்தன்மை என்பது சத்தியம். விதுரன், பீஷ்மர், அசுவத்தாமன் இவர்கள் எல்லாம் எனக்கு ஏனோ ரொம்ப பிடிக்கும். விதுரனின் பார்வைகள், அவருடைய கருத்துக்கள், பகவதி கீதையின் ஒரு கிளை நதி போல விரவி இருப்பதை பார்க்க முடியும்.

விதுரனின் அரசியல் நுட்பமும், பாசாங்கற்ற நேரடியான பார்வையும் நிறைய நேரங்களில், திருதராஷ்ட்ரனுக்கு பார்வை கொடுத்து கொண்டே இருந்தது எனலாம். விதுரனின் மதிநுட்பம், விஞ்ஞான பூர்வமான அரசியல் அணுகுமுறை, அர்த்தசாஷ்த்ரத்தின் முன்னோடி என்பது மிக சிலபேருக்கு தான் தெரியும் என்பது வருத்தமான விஷயம்... சாணக்யன் பேசப்பட்டது மாதிரி அரசியல் பேசும்போது யாரும் விதுரனை யாரும் மேற்கோள் காட்டுவதில்லை. உங்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராகவன்

எறும்பு said...

நல்ல முயற்சி..

அப்படியே எனக்கு தருவதாய் சொன்ன புத்தகம் என்னாச்சு?

கிருஷ்ண மூர்த்தி S said...

விதுர நீதி ஏற்கெனெவே தமிழில் கிடைக்கிறது. என்னிடம், மூலம், தமிழி மொழிபெயர்ப்பு என்று இரண்டுமே கூடிய புத்தகம் இருக்கிறது.

விதுர நீதியைப் புரிந்து கொண்ட விதம், இன்றைய சூழலோடு எப்படிப் பொருத்திப் பார்க்க முடியும் என்றசிந்தனையாக எழுதினால், அது எவருக்குப் பயன்படுகிறதோ இல்லையோ, தனக்கே பெரும்பயனாகத் தங்குவதை உணர முடியும், விதூஷ்!

ஏற்கெனெவே கர்ணனைப் பற்றிய பதிவில், இன்னமும் பாக்கியிருக்கிறது என்று நினைவு!

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு. தொடருங்கள்.

Vidhoosh said...

சைவகொத்துபரோட்டா: நன்றிங்க.

ராகவன்: நன்றிங்க. :) உண்மைதான். நானும் சாணக்கிய நீதியிலிருந்து சற்றே பின்னோக்கி விதுர நீதியைச் சென்றடைந்தவள்தான். அதுவரை எனக்கும் தெரியாது.

எறும்பு ராஜகோபால்: அது பலாபட்டறை ஷங்கரிடம் இருக்கு. பெற்றுக் கொள்ளுங்கள். குழந்தையை பார்க்க எப்போ வரது?

கிருஷ்ணமூர்த்தி ஐயா: நன்றிங்க. கர்ணன பற்றிய இன்னொரு புத்தகம் ஆடம் பௌலெஸ் எழுதியது அருமையான புத்தகம். இன்னும் வாசிக்கப் படாமலேயே இருக்கு. குறிப்பாய் அந்த புக்கை எடுத்ததுமே தூக்கம் வரும், இல்லையா தர்ஷிணி சீக்கிரமே எழுந்து வந்து அடம் பண்ணும், :)) அதையும் முழுசாய் வாசித்த பின் கர்ணன் என் காதலனாகவே வருவான் புதிய பார்வையோடு. எப்போன்னுதான் தெரியலை.
விதுர நீதியை இன்றைய பார்வையில பொறுத்திப் பார்ப்பதை பற்றி : ம்ம்... யோசிக்க வேண்டிய விஷயம்தான்!!!

நன்றி வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல முயற்சி..

Paleo God said...

தொடருங்கள்.
:)

--

ஏற்கெனெவே கர்ணனைப் பற்றிய பதிவில், இன்னமும் பாக்கியிருக்கிறது என்று நினைவு//

இது வேறயா?? ரைட்டு..:)

creativemani said...

அட்டகாசமான முயற்சி விதூஷ்.. நான் இந்த நேரத்துல தூக்கம் வராம கமெண்ட் போடறதுக்கு விதுரர் சொன்ன விஷயங்கள் காரணமில்லை..
:)

Unknown said...

தமிழில் எழுதியிருக்கேன்னீங்களே?

தமிழ் இதுல எங்க இருக்கு?

Unknown said...

போன பின்னூட்டத்துல ஒன்ன விட்டுட்டேன்..

:))))))))

இதுதான் அது..

ரவி said...

தமிழ் இதுல எங்க இருக்கு////

ஹி ஹி !!! சமஸ்க்ருத்ம் இருக்கு !!

Chitra said...

அருமையான பகிர்வு. :-)

Vidhoosh said...

எல்லோருக்கும் நன்றீஸ்.

முகிலன் மற்றும் செந்தழல் ரவி: க க க போ. என்ன செய்வது மன்னாஸ்? மங்குனிக்கு தெரிந்த தமிழ் அவ்வளவே... கற்றுக் கொள்ளும் ஆசையில்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். உதவி செய்யுங்களேன். உங்கள் உதவிக்கு advance நன்றீஸ்.

Vidhoosh said...

நன்றி சித்ரா மற்றும் ராதாகிருஷ்ணன் சார். :)

Vidhoosh said...

நன்றி மணிகண்டன். ரொம்ப நன்றிங்க. ஆனாலும், blogging சும்மா ஒரு மாற்று மட்டுமே. தூக்கத்தை எல்லாம் இதற்காக கெடுத்துக் கொள்ளாதீர்கள். :)

Vidhoosh said...

நன்றி ஷங்கர். :) ஹுக்கும்

விக்னேஷ்வரி said...

ஹேய், சூப்பர். கண்டினியூ.

creativemani said...

நீங்க வேறங்க விதூஷ்.. நானாவது தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு ப்ளாக்கறதாவது..
நேத்து டின்னர் லேட்டா சாப்பிட்டதுல கொஞ்சம் தூக்கமும் லேட்டாப் போச்சு.. அதான் விஷயம் :)
பை தி வே.. "ஊஞ்சல்" கொஞ்ச நாளா தென்படலையே.. :)

Ahamed irshad said...

தொடரட்டும் முயற்சி...

அம்பிகா said...

மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் விதூஷ்.
ராகவன் கூறியிருப்பதை போல மஹாபாரதத்தின் பலம் அதன் கிளைகதைகள் என நானும் நினைப்பேன்.
தொடருங்கள், காத்திருக்கிறோம்.

பா.ராஜாராம் said...

அருமை வித்யா!

விக்கி உங்களை பிடித்த பத்து பெண்களில் தேர்ந்திருக்கிறார்.நான் சொல்ல விட்டதை விக்கி சொன்னது போல் இருந்தது.

அப்புறம்,

ராகவனை பேச வைப்பதற்கு அன்பும் நன்றியும்!

Post a Comment