நாராயணீயம் ப்ரத²மத³ஶகம்
ப்ரத²மத³ஶகம் (1) – ப⁴க³வத꞉ ஸ்வரூபம் ததா² மாஹாத்ம்யம்
ஸாந்த்³ரானந்தா³வபோ³தா⁴த்மகமனுபமிதம் காலதே³ஶாவதி⁴ப்⁴யாம்
நிர்முக்தம் நித்யமுக்தம் நிக³மஶதஸஹஸ்ரேண நிர்பா⁴ஸ்யமானம் |
அஸ்பஷ்டம் த்³ருஷ்டமாத்ரே புனருருபுருஷார்தா²த்மகம் ப்³ரஹ்ம தத்த்வம்
தத்தாவத்³பா⁴தி ஸாக்ஷாத்³கு³ருபவனபுரே ஹந்த பா⁴க்³யம் ஜனானாம் || 1-1 ||
सान्द्रानन्दावबोधात्मकमनुपमितं कालदेशावधिभ्यां
निर्मुक्तं नित्यमुक्तं निगमशतसहस्रेण निर्भास्यमानम् ।
अस्पष्टं दृष्टमात्रे पुनरुरुपुरुषार्थात्मकं ब्रह्म तत्वं
तत्तावद्भाति साक्षाद् गुरुपवनपुरे हन्त भाग्यं जनानाम् ॥ १ ॥
முதல் ஸ்லோகத்தின் பொருள்:
கடக்கவியலாத பேரின்பம் இது, தூய நனவின் தன்மை கொண்டது, இதற்கு இணையானது அல்லது ஒப்பானது ஏதும் இல்லாதது, கால-நேரம் மற்றும் இட வரம்புகள் முற்றிலும் இல்லாதது. எப்போதும் மாயையிலிருந்து விடுபட்டுள்ளது. பிரம்மஞானத்தை நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான உபநிடத விளக்கங்கள் தெளிவாக்க முயல்கின்றன, இன்னும் தெளிவாக இல்லை. பிரம்மதத்துவம் ஆரம்பத்தில் எளிதில் புரிந்து கொள்ள முடியாதது. ஆனால் முயன்று அதை உணர்ந்து கொள்வதே மிக உயர்ந்த புருஷார்த்தம், அதாவது விடுதலை, அது மிகவும் யதார்த்தமானதாக நம் மானுடக் கண் முன்னே குருவாயூர் கோவிலில் (ஸ்ரீ கிருஷ்ணரின் உருவமாக) ஒளிர்கிறது. அற்புதமானது, ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைத் தேடும் மக்களின் அதிர்ஷ்டம்தான் இது.
====================
உன்னத யதார்த்தமான பிரம்ம தத்துவம் என்ற உன்னத உண்மை, வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அது மனதுக்கும் புலன்களுக்கும் எட்டாதது. இது அறிவுக்கு அப்பாற்பட்டது. இது மற்ற அனைத்திற்கும் வெளிச்சமாய் இருக்கிறது, ஆனால் எதுவும் அதற்கு ஒளி அல்ல. வார்த்தைகளால் அதை வெளிப்படுத்த முடியாது. மனம் அதை நினைக்க முடியாது. புத்தியால் அதை புரிந்து கொள்ள முடியாது. புலன்களால் அதை உணர முடியாது. அப்படிப்பட்ட அற்புதம்தான் உண்மை. பிரம்மஞானம் என்பது எதையாவது பற்றிய அறிவு அல்ல, மாறாக முழுமையான அறிவாக மாறுவது. அது எல்லையற்றது. அது ஒரு அனுபவம். கருத்து அல்ல. இது முழுமையானது, எனவே, இருமை (கடவுள் - உலகம், பொருள்-ஆன்மா, உடல் - மனம் போன்ற dualistic elements) மற்றும் முரண்பாடான நிகழ்வுகளுக்கு அல்லது கருத்துக்கு (இல்லாத - இருக்கிற, நிறைய - அரிதாக, பின் - முன், முடியும் - முடியாது, ஆபத்து - பாதுகாப்பு, இருள் - ஒளி, கிழக்கு - மேற்கு, தோல்வி - வெற்றி, நன்மை-தீமை போன்ற pairs of opposites) அப்பாற்பட்டது. அதை அறிவதே மிகப் பெரிய பாக்கியம், அதை அறியாமலேயே இறக்கும் ஆன்மா துரதிஷ்டசாலி.
அழிவுக்கு ஏதுவான விஷயங்கள் தற்காலிகமானவை, அவற்றை பின்தொடர்வது மதிப்புக்குரியது அல்ல. அதனால் பல வருட வாழ்க்கை கூட மிகவும் சிறியதாகி விடக்கூடும். பொருட்களை அனுபவிப்பதால் எந்தப் பயனும் இல்லை. மனிதன் செல்வத்தில் திருப்தி அடைவதில்லை. எவ்வளவு பெருகிறோமோ, அவ்வளவு தேவைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இன்னும் இன்னும் தேவைகள் கூடிக் கொண்டே போவதால், இன்னும் செல்வம் வேண்டியதாகி விடுகிறது.
தனது மனசாட்சிக்குத் தெரிந்தாலும் கூட மனிதன் அழியாதவராகவே மாற விரும்புகிறார். துரதிர்ஷ்டவசமாக, அவர் உண்மையில் நல்லவற்றுக்குப் புறம்பாக தனக்கு இன்பமானதைப் பின்பற்றுகிறார். நல்லது ஒன்று, இன்பமானது மற்றொன்று. ஒன்று விடுவிக்கிறது, மற்றொன்று பிணைக்கிறது. அந்தக் கணம் நமக்கு அது கவர்ச்சியாக இருந்தாலும் இன்பத்தை பற்றிக் கொள்ளக்கூடாது.
வெறும் பக்தி மூலம், தினசரி குடும்ப வாழ்க்கையின் தேவைகளை முடித்து விட்டு, சாதாரண பூஜை விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அல்லது எதுவும் செய்யாமல் வெறும் சிந்தனையை ஒருமித்து சில நொடிகள் பிரார்த்தனை செய்வதன் மூலம், நாம் materialistic வாழ்வு வாழ்ந்து கொண்டே, ஆன்மசக்தி பெற முடியுமா?
Retrocausality கோட்பாடு காரணம் (cause) மற்றும் விளைவு (effect) பற்றிய ஒரு கோட்பாடு, அதில் ஒரு விளைவு அது நிகழ்ந்ததன் காரணத்தை காலப்போக்கில் முன்வைக்கிறது, எனவே பிந்தைய நிகழ்வு (காரணம்) முந்தையதை (விளைவு) பாதிக்கிறது. நாம் இன்று செய்யும் ஒவ்வொரு செயலும் (action) என்றோ ஒரு நாள் முன்பே நாம் செய்த செயலுக்குக் காரணமாக இருந்திருக்குமா? இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் நாராயணீயத்தில் பேசப்பட்டிருக்கும் பிரம்மதத்துவத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.
இதை மிகவும் நமக்கு எளிதாகப் புரியும்படி நம்மைச் சுற்றியே நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஆனால் அவற்றை நாம் கவனக்குறைவால் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். நாம் பின்னாளில் ஏதாவது (விளைவு) நடக்கும் என்று முன்னறிவிப்பு செய்யும் போது (காரணம்) அது ஒரு retrocausality.
ஒரு நல்ல உதாரணம் ஒரு சபரிமலைக்குச் செல்லவதற்காகக் குடிப்பழக்கத்தை விட்டுவிடுவது, உடல்எடை குறைய உடற்பயிற்சி செய்வது, ஜுரம் சரியாக மருந்து சாப்பிடுவது, ஆபரேஷன் செய்து கொள்ள ஆஸ்பத்திரியில் சேருவது, மாதக் கடைசியில் சம்பளம் வரும் என்று மாதம் முழுக்க வேலை செய்வது, என்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்கிறோம் என்பது உண்மையாய் இருக்க முடியாது, அப்படித்தானே?
0 comments:
Post a Comment