18 Aug 2020
The Art of Letting Go
I had two consequent sessions with a client on specific phobia. As I ended the session, was writing the report. Generally counselling reports are not written in the perspective of the client or therapist. But, are written in reader's perspective. The reason for this is to create an awareness of the condition the client is going through and to prevent any personal biases of the counsellor. Rarely, verbatim statements are reported. It contains observations, interventions and suggestions and not the diagnosis unless needed, in general. In case, a learned professional reads the report, they will be able to easily interpret based on the assessment tools administered by the predecessor.
As I finished writing the report, a ray of enlightenment about the verses in Chapter 2 of Bhagavad Gita in a different perspective. The way I have been interpreting the following verses, has changed entirely, now, this moment. I don't know, if this will also change in future as I learn more. That's the reason, when I listened to Mahabharata during Sivaratri nights "theru koothu" in our village, it was just a story. I admired Karna as he was glorified for the sacrifices he made. But today, I can only see him as a person who is emotionally weak for his loved ones, just like many of us. He is no more a hero in my perspective. Then, when I was 17, I borrowed from one of my friends, commentaries on Mahabharata from the viewpoint of Advaita Vedanta. I don't remember the title of the book. That book triggered the craving for me to learn more about Mahabharata as it shook the every understanding I had about Mahabharata. I read, read and read. Then, I literally couldn't read any book for about 5-6 years. But my search was on.
Coming back to the point of discussion, the sloka I referred is:
कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन। मा कर्मफलहेतुर्भूर्मा ते संगोsस्त्वकर्मणि।।(BG2.47)
This shloka or verse is generally interpreted as "Do your duty, and leave the rest to God".
I madly refer to Mahabharat and Bhagavad Gita, insanely have collected and read every commenteries. There's no religion. There's no reference to God in Mahabharata, correct me, if I'm wrong. There are only prescriptions about Dharma (moral) and Adharma (immoral), Svadharma (duties for self) and Paradharma (duties for others). Then what is karma (the act)? Who is Karta (the doer)? What about sankalpa (the intentions)? What about the consequences of your doing? Are we releived of the consequences just because they are done as a duty? What impact did my karma (the act) create? Was it catharsis (fear of punishment) the reason for one to be dharmic (being moral)? Is fear an influencing factor to let go of what we want? What about the physical or emotional benefits that are derived of my act? Are they a part of duty I performed?
--To be continued.
ஒரு கிளையண்ட்டுடன் இரண்டு மனநல கவுன்சிலிங் அமர்வுகள் இருந்தன. அவர் போபியா சிகிச்சைக்காக என்னிடம் வந்தவர். நான் அமர்வை முடித்தவுடன், அவருக்கான ஆலோசனை அறிக்கையை எழுதுகிறேன். பொதுவாக ஆலோசனை அறிக்கைகள் கிளையண்ட் அல்லது சிகிச்சையாளரின் பார்வையில் எழுதப்படுவதில்லை. அவை படிப்பவரின் பார்வையில் எழுதப்பட்டவை. இதற்குக் காரணம், இவ்வகை அறிக்கைகளைப் படிப்பவருக்கு கிளையண்ட் அனுபவிக்கும் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஆலோசகரின் தனிப்பட்ட சார்புகளைத் தடுப்பதும் ஆகும். அரிதாக, வாக்குமூலங்களையும் அறிக்கைகளில் உள்ளடக்கப்படும். இயன்றவரை தனிநபர் இரகசியம் காக்க பொது அறிக்கைகளில் வாக்குமூலங்கள் தவிர்க்கப்படும். இது அவதானிப்புகள், இடையீடுகள் மற்றும் பரிந்துரைகளைக் உள்ளடக்கியது. பொதுவாக தேவைப்படாவிட்டால் இதில் மனநோய் குறித்த விபரங்கள் ஏதும் தரப்படாது. ஒரு கற்றறிந்த நிபுணர் அறிக்கையைப் படித்தால், முன்னோடி நிர்வகிக்கும் மதிப்பீட்டு கருவிகளின் அடிப்படையில் அவர்கள் எளிதாக கிளையண்டின் நிலையை விளக்க முடியும்.
நான் அறிக்கையை எழுதி முடித்தவுடன், பகவத் கீதையின் 2 ஆம் அத்தியாயத்தில் உள்ள சுலோகங்களைப் பற்றிய புரிதல் வேறு கோணத்தில் உதித்தது. பின்வரும் வசனங்களை நான் புரிந்து கொண்ட விதம், இப்போது, இந்த தருணத்தில் முற்றிலும் மாறிவிட்டது. நான் இனிவரும் நாட்களில் படித்து அறியும்போது, எதிர்காலத்திலும் இந்தப் புரிதலும் மாறுமா என்று எனக்குத் தெரியாது.
எங்கள் கிராமத்தில் சிவராத்திரி இரவு தெரு கூத்தில் நான் மகாபாரதத்தைக் கேட்டபோது, அது ஒரு கதை மட்டுமே. கர்ணன் செய்த தியாகங்களுக்காக மகிமைப்படுத்தப்பட்டதால் நான் அவரை ஒரு நாயகனாகப் பார்த்தேன். ஆனால் இன்று, நம்மில் பலரைப் போலவே, அவரது அன்புக்குரியவர்களுக்காக உணர்ச்சி ரீதியாக பலவீனமான ஒரு நபராக மட்டுமே அவரை நான் பார்க்க முடிகிறது. எனது பார்வையில் அவர் இனி ஒரு ஹீரோ அல்ல. பின்னர், எனக்கு 17 வயதாக இருந்தபோது, எனது நண்பர் ஒருவரிடமிருந்து வாங்கிப் படித்தேன், அத்வைத வேதாந்தத்தின் பார்வையில் இருந்து மகாபாரதம் பற்றிய வர்ணனைகள். புத்தகத்தின் தலைப்பு எனக்கு நினைவில் இல்லை. அந்த புத்தகம் மகாபாரதத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது, அது மகாபாரதத்தைப் பற்றி எனக்கு இருந்த ஒவ்வொரு புரிதலையும் அசைத்துப் போட்டது. நான் தேடித் தேடிப் படித்தேன். பின்னர், சுமார் 5-6 ஆண்டுகளாக எந்த புத்தகத்தையும் என்னால் படிக்க முடியவில்லை. ஆனால் எனது தேடல் தொடர்ந்தது.
சரி, விஷயத்துக்கு வருவோம், நான் குறிப்பிட்ட ஸ்லோகம் இதுதான்:
मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूर्मा ते s स्त्वकर्मणि ।। (BG2.47)
இந்த ஸ்லோகம் அல்லது வசனம் பொதுவாக "உங்கள் கடமையைச் செய்யுங்கள், மீதமுள்ளவற்றை கடவுளிடம் விட்டு விடுங்கள்" என்பதாகவே பொதுவாகப் பொருள் கொள்ளப்படுகிறது.
நான் மகாபாரதத்தையும் பகவத் கீதையையும் தினமும் ஒருமுறையாவது refer செய்கிறேன், ஒவ்வொரு வர்ணனைகளையும் வெறித்தனமாக சேகரித்து படித்திருக்கிறேன். மகாபாரதத்தில் எந்த மதமும் இல்லை. கடவுளைப் பற்றி எந்த குறிப்பும் இல்லை, நான் தவறாக இருந்தால், என்னைத் திருத்துங்கள்.
தர்மம் (ஒழுக்கம்) மற்றும் அதர்மம் (ஒழுக்கக்கேடு), ஸ்வதர்மம் (தனக்கான கடமைகள்) மற்றும் பரதர்மம் (மற்றவர்களுக்கான கடமைகள்) பற்றிய பரிந்துரைகள் மட்டுமே உள்ளன. பின்னர் கர்மா (செயல்) என்றால் என்ன? கர்த்தா (செய்பவர்) யார்? சங்கல்பம் (நோக்கங்கள்) என்றால் என்ன? நீங்கள் ஒரு வினையைச் செய்வதால் ஏற்படும் விளைவுகள் என்ன? அவை ஒரு கடமையாக செய்யப்படுவதால் மட்டுமே அதன் விளைவுகளிலிருந்து நாம் விடுவிக்கப்படுகிறோமா? எனது கர்மா (செயல்) என்ன தாக்கத்தை உருவாக்கியது? Catharsis அல்லது தண்டனைக்கு பயப்படுவதால் தர்மத்தைப் (ஒழுக்கமாக இருப்பது) பின்பற்றுகிறோமா? நாம் விரும்புவதைச் செய்யமல் விட்டுவிட பயம் காரணமாய் இருக்கிறதா? எனது செயலால் பெறப்பட்ட காணக்கூடிய பொருள்சார்ந்த அல்லது உணர்ச்சிகள் சார்ந்த நன்மைகளை என்னென்ன? அவை நான் செய்த கடமையின் ஒரு அங்கமா?
--தொடரும்.
====================
19 Aug 2020
PS: This will be a little tough to process. May be I have lost the touch of writing in simple terms as I did during my blogging days. I need to work on this all again. Thank you for trying anyway.
Art of letting go - 2
The basic inquiry is who is letting go? And what one wants to let go of? Is it liberating oneself from what one lets go?
Then, the primary condition of liberation is to be free from all kinds of wants and desires. There should not be any innate force to hold back. Given this as a thumb rule to interpret कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन। मा कर्मफलहेतुर्भूर्मा ते संगोsस्त्वकर्मणि।।(BG 2.47) throws a ray of spectrum to a principle that one can only do their duties, the result of your act is beyond your control. Then I understand this principle to be "I, as Karta (the doer), am only responsible for my karma (the act). Here my sankalpa (intention) is to execute the karma with dharma (moral), ngyaya (righteous), bhakti (devotion) and prapanna (dedication)”. By doing this we are relieved the burden of the krutaphala (consequences of the act). But only when your act is moral, righteous, and done with devotion and dedication. Otherwise, you become the parinama (consequence of the change) and are responsible for the anubhava (consequence of the experience of intention). bhAva here is to be comprehended as the prescience or the intention of the act.
Carl Jung’s Psychodynamic theory speaks almost the same tone. Like Freud and Erikson, Jung viewed the mind as comprised of various independent however interacting systems. The three fundamental ones were the ego, the personal unconscious, and the collective unconscious. The first layer called the personal unconscious is basically the same as Freud's version of the unconscious. Jung laid out a significant component of the personal unconscious called complexes. A complex is a collection of thoughts, feelings, attitudes, and memories that focus on a single concept.
Now how do we link these western ideologies and BG? bhAva is the collective unconscious. It is the "objective psyche," refers to the idea that a part of the deepest unconscious mind is genetically inherited and is not shaped by personal experience. This means pApakarma or dushkarma (an act done with immoral intentions) or a moral conflict affects this objective psyche, thereby binding us to the consequences or the anubhava or the personal unconscious. The accumulation of such pApakarma will not liberate you, but sukarma (the duty done with dharma, ngyaya, bhakti and prapanna) will liberate one from all the consequences.
-To be continued
டிஸ்கி: இந்த பத்தி கொஞ்சம் படிக்கக் கடினமாக இருக்கும். எனது பிளாகிங் நாட்களில் நான் எழுதியதைப் போல எளிமையானச் சொற்களில் எழுதும் பழக்கத்தை நான் இழந்துவிட்டேன் போலிருக்கிறது. மீண்டும் எளிமையாய் எழுதிப் பயிற்சி செய்ய வேண்டும். எப்படியும் படித்துப் புரிந்து கொள்ள முயற்சித்ததற்கு நன்றி.
விடுவிக்கும் கலை - 2
இப்போது முதலில் புரிந்து கொள்ளப் போவது அடிப்படைக் கேள்விகளான யார் விடுவிக்கிறார்? எதை விடுவிக்க விரும்புகிறார்? பிறிதொன்று தன்னை விட்டுச் செல்ல அனுமதிப்பதினால் தன்னையே விடுவித்துக் கொள்கிறாரா?
அப்படியென்றால், விடுதலின் முதல் நிபந்தனை எல்லா வகையான விருப்பங்களிலிருந்தும், ஆசைகளிலிருந்தும் விடுபட வேண்டும். பின்வாங்க எவ்விதமான உள்ளார்ந்த சக்தியும் இருக்கக்கூடாது. இதை கட்டைவிரல் விதியாகக் கொண்டு कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन। मा कर्मफलहेतुर्भूर्मा ते संगो s स्त्वकर्मणि (பகவத்கீதை 2.47) என்ற ஸ்லோகம் ஒருவர் தங்கள் கடமைகளை மட்டுமே செய்ய முடியும், தங்கள் செயலின் முடிவு தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்ற ஒரு கோணத்தில் புரிபடுகிறது. இந்த கொள்கையை நான் இவ்வாறாகப் புரிந்துகொள்கிறேன் "நான், கர்த்தாவாக (செய்பவனாக), என் கர்மாவுக்கு (செயலுக்கு) மட்டுமே பொறுப்பு. இங்கே என் கர்மாவை தர்ம (தார்மீக), ந்யாய (நீதியுள்ள), பக்தி (பக்தி) மற்றும் பிரபண்ண (அர்ப்பணிப்பு) ஆகியவற்றோடு செய்வதுதான் சங்கல்பமானது (நோக்கம்). அப்படி கர்மாவைச் செய்வதன் மூலம் க்ருதபலன் (செயலின் விளைவுகள்) சுமைகளில் இருந்து விடுபடுகிறேன். ஆனால் என் செயல் தார்மீகமாகவும், நீதியுடனும், பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் செய்யப்படும்போது மட்டுமே பலனிலிருந்து விடுபடுகிறேன். இல்லையெனில், பரிணாம (மாற்றத்தின் விளைவு) மற்றும் அனுபவ (எண்ண அனுபவத்தின் விளைவு) பொறுப்பாகிறேன். இங்கே "bபாவ" என்பது செயலின் எண்ணம் அல்லது உள்நோக்கமாக புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
கார்ல் யங்கின் (Carl Jung) சைக்கோடைனமிக் கோட்பாடும் இப்படியே கிட்டத்தட்ட ஒரே தொனியில் பேசுகிறது. ஃப்ராய்ட் (Freud) மற்றும் எரிக்சன் (Erikson) போலவே, யங் (Jung) மனதை பல்வேறு சுயாதீனமானதென்றும், ஆனால் ஊடாடும் அமைப்புகளைக் கொண்டதாகக் கருதினார். நிதரிசனம் (ego), உணர்வு மாயைகள் (unconscious) மற்றும் உள்ளுணர்வு மாயைகள் (collective unconscious) ஆகிய மூன்றும் அடிப்படையானவை. உணர்வு மாய நிலை என்று அழைக்கப்படும் முதல் அடுக்கு, அடிப்படையில் ஃப்ராய்டின் பதிப்பைப் போன்றது. காம்ப்ளக்ஸ் எனப்படும் உணர்வு மாயத்தின் ஒரு முக்கிய அங்கத்தை யங் அமைத்தார். அடுக்கு மனப்பாங்கு (complexes) என்பது எண்ணங்கள், உணர்வுகள், அணுகுமுறைகள் மற்றும் நினைவுகளின் தொகுப்பாகும்.
இப்போது இந்த மேற்கத்திய சித்தாந்தங்களையும் பகவத்கீதையையும் எவ்வாறு இணைப்பது? bபாவ என்பது உணர்வு மயக்கமாகும். இது "புறநிலை ஆன்மா" என்ற ஆழ்ந்த மாய மனதின் ஒரு பகுதி ஆகும், மரபணு ரீதியாக மரபுரிமை பெற்றது. மேலும் தனிப்பட்ட அனுபவத்தால் வடிவமைக்கப்படவில்லை என்ற கருத்தை வலியுறுத்துகிறது. இதன் பொருள் பாபகர்மா அல்லது துஷ்கர்மா (ஒழுக்கக்கேடான நோக்கங்களுடன் செய்யப்பட்ட ஒரு செயல்) அல்லது ஒரு தார்மீக முரண்பாடுகள், இந்த புறநிலை ஆன்மாவை பாதிக்கிறது, இதன் மூலம் விளைவுகள் அல்லது அனுபவ அல்லது உணர்வு மாயத்தில் நம்மை பிணைக்கிறது. அத்தகைய பாபகர்மங்களின் திரள் நம்மை எதிலிருந்தும் விடுவிக்காது, ஆனால் சுகர்மா (தர்ம, ந்யாய, பக்தி மற்றும் பிரபண்ண-வுடன் செய்யப்படும் கடமை) ஒருவரை எல்லா விளைவுகளிலிருந்தும் விடுவிக்கும்.
-தொடரும்
https://facebook.com/story.php?story_fbid=pfbid028rjdiXY8GKgnARkExGAfM8w7HBhMKjWvknxk5LHL8oNy9MNCtDFxF5jVbm8ye7HNl&id=1393410315&mibextid=Nif5oz
https://facebook.com/story.php?story_fbid=pfbid026gi1PtDJmQxh7AB525xXEp8KFNL8nVMgwNqTx1VUj5L5FGiGBhhNqKWGwRspo3RFl&id=1393410315&mibextid=Nif5oz
0 comments:
Post a Comment