சூரியக்கசிவுகளைச் சிதைக்கும் மின்னல்

thanks: google images
எங்கிருந்தோ தெறிக்கும்
ஒற்றை மழைத்துளியின் வேகத்தில்
தண்ணீர்  கிழிக்கும் துடுப்புக்கள்
உடைந்த ஓடுகள் சிப்பிகள் சங்குகள்

தலையுயர்த்தி எழும்பும் கதிரொளி
தெறிக்கும் முகடுகள் - பற்கள்
மெல்-உதட்டு அடிவானம்
மற்றும்
கடலலைகளைப்  போன்று
பேசிக்கொண்டே இருக்கின்றாய் நீ..

நிசப்தமாய் சூரியக்கசிவுகளைச்
சிதைக்கும் மின்னல்
முடிவில்லா உப்புக்காற்றில்
பூஜ்ஜிய நடுக்கத்தில் ஒளிர் தீபம்
நான்
என் மௌனத்துடன்.

6 comments:

பொன். வாசுதேவன் said...

கவிதையை என்னால் ஓரளவு உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. ஆனால் //சூரியக் கசிவுகளை சிதைக்கும் மின்னல்// என்ற இந்த தலைப்பும், கவிதையுள் புழங்கும் இவ்வரியும் இயல்பற்றதாயிற்றே. சூரியக் கசிவுகளை சிதைக்கும் மின்னல் என்பது முரணாக இருக்கிறது.

வித்யாவின் கவிதை போலவே இல்லை. இது வேறு மொழி. ஆச்சர்யம்தான்.

:)

நேசமித்ரன் said...

க்ளாஸ் விதூஷ் !

Vidhoosh said...

வாசு: எல்லோராவில் எழுதினது இது. ;)

பூரா அர்த்ததைதையும் சொல்லிட்டா நான் கவிதைக்குள் ஆக்கிரமிச்சுடுவேன்..

சூரியக் கதிர்கள் இருக்கும்போது மின்னல் வருமா? மின்னல் வெட்டும்போது சூரியக் கதிர்கள் தெரியுமா? அலைகளுக்கு முன் மௌனம் நல்லதுதானே.. ஆனால் மௌனத்தைத் தரும் அலைகள் தான் மௌனம் உடைத்து பேச வைக்கிறது.

விதூஷை கடல் ஆக்கிரமிப்பு செய்துடுச்சு.

நந்தாகுமாரன் said...

தர்க்கங்களை யோசிக்க விடாமல் போதை கொள்ளச் செய்வதில் தான் கவிதையின் வெற்றி இருக்கிறது ... அவ்வகையில் இது எனக்குப் பிடித்திருக்கிறது ...

கே. பி. ஜனா... said...

தீபாவளி வாழ்த்துக்கள்!

உயிரோடை said...

விதூஷ் சூரியக்கசிவுகளை சிதைக்கும் மின்னல் என்ற ஒரு வரி உதித்தவுடன் கவிதை எழுதி விட்டீங்களோன்னு சந்தேகம்.

கவிதைக்கான கரு மௌனமா இல்லை மேற்சொன்ன வாக்கியமா?

Post a Comment