சதுரங்கம்





சதுரங்கப் பலகையின்
கட்டங்களைப் போன்றதொரு காதல்
முதல் வெள்ளைச் சிப்பாயை அவனே நகர்த்துகிறான்
எனது முறையில் குதிரைகளை
நகர்த்தும் உபாயமும் சொல்லித்தருகிறான்

நான் விளையாடுவதை மட்டும்
எப்போதுமே
தந்திரமாய் பார்க்கிறான்
அவனருகிலுள்ள குறிப்பேட்டுப்பக்கங்களில்
கணிதங்கள் எழுதித் தீர்க்கின்றான்

எப்போதுமே ஏன்
ஒரு ஊரிலே ஒரு ராஜாவாம்
அவனுக்கு ஒரு ராணியாம்
என்றே ஆரம்பிக்கிறது பழங்கதைகள்?

2 comments:

ரிஷபன் said...

நான் விளையாடுவதை மட்டும்
எப்போதுமே
தந்திரமாய் பார்க்கிறான்

விளையாட்டு எப்போதுமே தந்திரம் இணைந்ததுதானே
சிப்பாய்களுக்கான காதலுடன் ஆரம்பித்து விடலாம் புது யுகக் கதைளை.!

ராமலக்ஷ்மி said...

அருமை.

Post a Comment