நட்பெனும் ஸ்வரோஸ்கி வைரம்


பொழுது போகலையா

காலச் சக்கரம்

பெரியவங்களுக்கு ... ஒரு ஊர்ல கதை

I kept adrifting

பரிமாணங்கள்

மெளனம்

இனிமே இப்டி செய்வியா

கூடு மாறுதல்

மூன்று பேருமாய் வெறுந்தரையில் படுத்து உறங்குகிறார்கள்

முப்பத்து மூணு வருஷம் முன்னே வீடு பாக்க வந்தப்போ காயாத வராண்டாவில் இளையவன் ஒரு வயசுல வச்சது என்று சின்ன கால் பதிந்த அச்சிருக்கும் சிமெண்ட் தரையை தடவிப் பார்க்கிறார் அத்தை.

என்னை எப்போதும் திட்டிக் கொண்டே இங்கதான் எங்கப்பா படுத்திருப்பார்
என்று சுவற்றில் சாய்ந்து கொள்கிறார் மாமா.

கைப்பிடி சுவற்றில் சாய்ந்து நின்று தடவிப் பார்த்து இது வழியாத்தான் நாங்க ரெண்டு பேரும் மணல் மீது குதிப்போம் என்று மலர்ந்து கொள்ளும் நினைவில் கணவரும் மலர்கிறார்.

என் கவிதை நோட்டு கிடைச்சுதா வித்யா என்று குரல் வழியே பொங்கும் ஆவலில் கொழுந்தன். வேறோரு நாள் வீடியோ சாட்டிங்கில் அவன் எழுதிய காதல் கவிதைகளால் கிண்டல் செய்கிறோம் அனைவரும். நானும் அங்கேயே இருந்திருக்கலாம் பொங்குகிறான்.

பெரிய வீடா, அப்போ இந்த தீபாவளிக்கு வரோம் என்று குதூகலிக்கிறாள் ஓரகத்தி.

அந்த வீட்டில் ஜூலா கட்டலாம், ஜாலியா சைக்கிள் ஓட்டலாம், மாடில ஓடலாம், செடி வளக்கலாம் என்று மகிழும் குட்டி மகள்.

இது முதன் முதலா வாங்கின ஃ பிளாஸ்க் - அது இருக்கட்டும்
எங்கப்பா பென்ஷன் பணத்தில் வாங்கின மெத்தை - இருந்துட்டு போகட்டுமே
இது ரிடையர் ஆன போது என் கலீக்ஸ் கொடுத்தது - ஷோ கேசில் வச்சுடலாமே
இந்தப் பேனாவால்தான் பத்தாவது எழுதினேன் டீச்சர் வேலைக்கு கையெழுத்து போட்டேன் இருக்கட்டும்
இது அவனோட பென்சில் பாக்ஸ் இருக்கட்டுமேடி விடேன்
"என்னோட மிட்டு.. கால்தானே உடைஞ்சிருக்கு.. ஒட்ட வச்சுக்கலாம்." என்று ஆறாவது கார்டன் நிறைக்கும் பொம்மைகள்

முக்கியமான நினைவுகளாய் ஒவ்வொன்றும் பெட்டிகள் நிறைக்கிறது

வீடு மாறுதலில் எல்லோருக்கும் ஒவ்வொன்று இருக்கிறது நினைவு கூற!

போயிட்டு வரேன். அந்தப் புஸ்தகத்தை எல்லாம் கடையில போட்டுராதீங்கோ...

இவர் அவர் அவள் - கடைசி பாகம்

இவர் அவர் அவள் - பாகம் 2

பிஜ்லி கி ராணியும் ஹவா ஹவாயியும்

இவர் அவர் அவள் - பாகம் 1