இக்கவிதையை பிரசுரித்த அகநாழிகைக்கு நன்றி.
நலமறிய ஆவல்
on Monday, December 21, 2009
Labels: கவிதை
=================
அப்போது
"நான் நலம்
உன் நலனுக்காக இறைவனை
வேண்டுகிறேன்"என்றக் கடிதமொன்றை
அனுப்பியவனுக்குத் தெரியாது
அதென் கையில் கிடைக்கும் போது
அவன் இறந்து பதிமூன்று நாளாகியிருக்குமென.
அப்போது
இக்கடிதத்தை அவன் தோளுக்குப் பின் நின்று
மரணம் படித்திருக்கலாம்
ஒரு எள்ளல் நகைப்பினைச் சிந்தியிருக்கலாம்
இப்போது
எழுதியவன் மரணித்த செய்திக்குப் பின்
இக்கடிதத்தின் அர்த்தங்களுக்கு
எத்தனை மாறுபட்ட கோணங்கள்
இப்போது
நலமாயிருக்கும் சிலர் வேண்டிக்கொண்டிருப்பார்கள்
மரணித்துக்கொண்டிருக்கும் வேறு சிலரின்
நலன் பற்றியும் பற்றாமலும்
இப்போதெல்லாம்
என் கடிதங்களில் "நலம்
உன் நலமறிய ஆவல்"
என்றே எழுதுகிறேன்
==============================================================================
இது ஏற்கனவே அகநாழிகை முதல் இதழில் பிரசுரமானது.
விரும்பாத கவிதை
on Tuesday, July 21, 2009
Labels: கவிதை
இன்று தனிமை இங்கில்லை
கடல் மறுத்த மணல் போல தாகமுள்ள கனவுகள்
இருக்கும் நிறங்களெல்லாம் வானில்
நீண்டதொரு இரவில் ஊமையாய் ஒற்றை நட்சத்திரம்
கருப்பும் வெள்ளையுமாய் உடைந்த நிலவு
சிந்திய புன்னகை போல் சிதறியிருக்கும் மேகங்கள்
அலைகளற்ற அமைதியின்
ஆரவாரத்தில் ஒரு கடல்
திசைகளறியாமல் திரிகின்ற காற்று
யாருமே செலுத்தாமல் அலையாடும் படகு
திரைச்சீலையாய் அசையுமென் நிழல் பார்த்து
ஏதோவொரு தெருவில், ஏதோவொரு சாலையில்,
ஏதோவொரு நகரத்தில், என்னைப் பார்த்து கையசைத்த
யாரோ சுமந்து சென்ற ஒரு தலையில்லா உடல்
நான் நினைவுகளில் வடித்ததைக் கவிதையென்றது
கவிதையே ஆனேன் நான்
இன்னும் எத்தனை இருக்கிறது
எழுதியவற்றின் மிச்சமாய்
நானே விரும்பாத கவிதைகள்.
--விதூஷ்
22 comments:
நானே
விரும்பிய
கவிதைகள்.
அகநாழிகையில வந்துடிச்சா!!!மகிழ்ச்சி. அப்போ பெரிய ஆளாயிட்டீங்க. வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் Vidya
verigood!
ரொம்ப பிடிச்சிருக்கு வித்யா,மேண்டில்! :-)
நல்ல கவிதைகள்.
//ரொம்ப பிடிச்சிருக்கு வித்யா,மேண்டில்! //
ஓ.. அந்த கடைசி வார்த்தைய மாத்தி படிச்சுட்டேன்..
;)
வாழ்த்துகள் விதூஷ்
பா.ரா அண்ணே தோரிய மேண்டில் பத்தி சொல்றீங்களா ? பொருத்தம்தான் ..கதிர் வீச்சு அதிகம்!
வாழ்த்துகள்! விதூஷ்
மக்கா மேண்டில் விளங்கல
கவிதை கவிதையாக இருக்குங்க... வாழ்த்துக்கள்...
இரண்டுமே அருமை வித்யா
//பா.ரா அண்ணே தோரிய மேண்டில் பத்தி சொல்றீங்களா ? பொருத்தம்தான் ..கதிர் வீச்சு அதிகம்//
யாருக்கு தெரியும் நேசா? :-)
கவுண்டமணி தெரியும்,செந்தில் தெரியும்,வாழைப் பழம் தெரியும்,அப்படி மேண்டிலும் தெரியும்.மேண்டிலை மட்டும் மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்தார்கள் இக் கோமுட்டி தலையன். :-) நம் க.நி.தளத்தின் பின்னூட்டத்தில்.
அதை இங்கு இணைத்தேன்.அவ்வளவே...
தோரிய மேண்டில்? பாத்திரம் அறிந்து கேள்வி கேட்பதில்லையா நீ?
துப்பறியும் சாம்பு கதையாவுல இருக்கு. :-)
ஜமால் மக்கா,
நம்ம தளம் வந்து வித்யா பின்னூட்டம் வாசிங்க.புரியும்.
முதல் கவிதை ரொம்ப நல்லா இருந்தது!
வாழ்வின் நிலையாமை இப்படியும் ?
அப்ப பெரிய ஆள் ஆகிட்டிங்க
வாழ்த்துக்கள்
தலைப்பின் வழியே பின்மொழிகிறேன் :)
வாழ்த்துக்கள்! அருமையான கவிதை!
எறும்பு: ரொம்ப நன்றி
விசா: காமெடிக்கும் ஒரு அளவே இல்லையா??? வளர்ந்துருவேன்னுதான் எல்லாரும் நம்பிட்டு இருக்காங்க.. குறுக்காலதான் வளர்ந்து கொண்டிருக்கேன். :))
டி வி ரா: ரொம்ப நன்றி
ராஜாராம் அண்ணே; நன்றிங்கண்ணா :))
செல்வராஜ் ஜெகதீசன்: நன்றிங்க
எறும்பு: மேட்டர் அதுல்லீங்க.... நான்தான் மெல்லினத்தில் மேண்டில் அப்டீங்கரதுதான் ஏற்கனவே தெரிஞ்ச கதையாச்சே.. :))
நேசன்: :))) எல்லாவற்றிலும் நேர்மறை சிந்தனைதான்.. :)) கருவேல நிழல்களில் போன 19 ஆம் தேதி பிடித்த பத்துக்கு பின்னூட்டம் // யெலேய் இதாண்டா மேண்டிலு
இதென்னண்ணே செய்யுங்?
இதாண்டா பளிச்சுன்னு எரியும்
போங்கண்ணே..... இதெப்டிண்ணே பளிச்ன்னு எரியும்?
==================================
பாரா-ண்ணே நன்றிங்கண்ணே..
இப்படிக்கு
மேண்டில் (நட்சத்திரங்களுக்கு நடுவில்)///////////// என்று நான் இட்டிருந்தேன். அதன் விளைவுதான் இது. :))
=================
நன்றி அத்திவெட்டி ஜோதிபாரதி,
நன்றி ஜமால், (இப்ப தெரிஞ்சுதா?)
நன்றி சங்ககவி,
நன்றி தேனம்மை
பாரா...வே சொல்லிட்டார் பாருங்க.. நன்றி பாரா
நன்றி நா.ந.வி.... (அருமையான ப்ளாக் பெயர்.. ரேவதி சங்கரனுக்கு அப்புறம் இப்படியொரு வார்த்தையை கேட்கிறேன்..)
ஏ சிவசங்கர். நன்றிங்க..
"டாக்டர்" அ"ஷோக்கு":: அருமையான பின்னூட்டம் :)) நானும் அப்டியேதான் நினைக்கிறேன் பாவம் :))
நன்றி சித்ரா.
இது ப்ளாக் பெயர் அல்ல.
என் புனை பெயர்.
வாழ்த்துகள் வித்யா
அகநாழிகையிலும் படித்தோம். வாழ்த்துகள் :-)
பிரபல ரவுடிக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் வித்யா, அழகிய கவிதைகள்.
Post a Comment