ஆயிரங்காலத்து அழுகல் பயிர் - பாகம் 2


பொறுப்பு அறிவித்தல்: இக்கட்டுரை, பொதுவாக நல்லவிதமாக குடும்பம் நடத்தும் / நடத்த விரும்பும் 90 சதவீத பெண்கள் மற்றும் ஆண்களை பற்றி / அவர்களுக்காக எழுதப்பட்டது. இக்கட்டுரையில் exceptions / extraordinary -யாக இருக்கும் பாக்கி 10 சதவீத பெண்கள்/ஆண்களை பற்றி விவாதிக்கப் போவதில்லை. 498 பிரச்சினையெல்லாம் இங்கே வராது.

இக்கட்டுரையில் வரும் எல்லாக் கருத்துக்களும் முழுக்க முழுக்க என் சொந்த கருத்து. இதற்கு மாற்றாக கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கலாம்.

தனி மனித தாக்குதல் அல்லது எந்தவொரு ஜாதி, மதம், இனம் பற்றி பேசுவதற்கு இது இடமில்லை. அப்படி ஜாதி பெயர் குறிப்பிட்டு வரும், அல்லது பெயரில்லாப் (அனானி) பின்னூட்டங்களை நான் வெளியிட மாட்டேன்.
===========================================

பகுதி 2. கன்னிகாதானம்

===========================================

கன்னிகாதானம் என்ற சொற்றொடர் பெரும்பாலும் தவறாகவே interpret செய்யப்பட்டு வருகிறது. அதெப்படி இருபது-இருபத்தைந்து வருடம் வளர்த்த பெண்ணை தானமாக கொடுப்பது, ஆணாதிக்கம் என்றெல்லாம் பேசப்படுகிறது.

உண்மையில் கன்னிகாதானம் என்றால் என்ன?

இதற்கு தானம் என்று சமஸ்கிருதத்தில் குறிப்பிடப்படுவது எதைக் குறித்து என்று அறிய வேண்டும்.

கர்ப்பதானம் வரை பிரபலமாகி, சகஜமாகிவிட்ட இப்போது, தானம் என்றால் gift கொடுப்பது என்றே நம்பிக்கொண்டிருக்கிறோம்.

முதலில், தானம் என்றால் என்ன? என்பதை புரிந்து கொள்வோம்.

சமஸ்கிருத்தத்தில் தானா (dhAnA) என்றால் நெல் மணிகள் என்று பொருள் படுகிறது. இதன்அடிப்படையில், உருவான வார்த்தைகள்தான், தனம் (செல்வம்) மற்றும் தானம் (அன்பளிப்பு).

dhAna is originally the grains of seed from their being "laid" into and " conceived" by the earth.

கன்யாதானம் என்றால் கன்யா + தானம் - இது சரிதான்.

ஆனால், கன்னியையே தானமாக கொடுப்பது என்று சொல்வது ரொம்ப தவறான interpretation.

சமஸ்கிருதத்தில், கன்யாதானம் (கன்யா+தனம்) என்றால், மணமாகாத கன்னியான தம் மகளுக்கு தந்தையின் அன்பளிப்பு / சொத்தில் ஒரு பங்கு / பொருட் பரிசு, என்றே அர்த்தமாகிறது.

kanyAdhana = a girl's property, portion, dowry ; (if a girl dies unmarried her property falls to her brother's share)

மேற்குறிப்பிட்ட இப்படியேதான் சமஸ்கிருதத்தில் பல சுலோகங்களிலும் (hymns & verses) விளக்கப் பட்டுள்ளது. இதையேதான், விவாஹசுக்தம் என்ற திருமண கையேட்டு நூலிலும் விளக்கமளிக்க பட்டுள்ளது.

ஆனால், நாம் வழக்கம் போல, திரித்து கூறி, வேதங்களையும் புராணங்களையும், இன்னும் திட்டிக் கொண்டிருக்கிறோம்.

  • கன்னியை முறையாக தந்தையிடமிருந்து அவளுக்குரிய சொத்துக்களுடன் அனுமதி பெற்றுக் மணந்து கொள்வது "தேவ விவாஹம் (கன்னிகாதானம்)"
  • மாடு கன்றுகளை கன்னியின் தந்தைக்கு கொடுத்து, ஒருவன் அக்கன்னியை மணப்பது "அர்ஷ விவாஹம்"
  • சாமானிய முறையில், எந்தக் கொடுக்கல் வாங்கலும் இலலாமல், பெற்றோர்/பெரியவர்கள் பெண்/பிள்ளை பார்த்து, பெற்றோர் சம்மதத்துடன், முன் பின் அறியாதவர்கள், மணம் புரிந்து கொள்வது "பிரஜாபத்ய விவாஹம்"
  • ஒரு கன்னியை, பணம் கொடுத்து, அதிகாரத்தால், மணந்து கொள்வது "அசுர விவாஹம்"
  • ஆணும் பெண்ணும், பெற்றோர்களுக்கு தெரியாமல் / அவர்களின் இஷ்டத்துக்கு விரோதமாக, தான் காதலிப்பவரை மணப்பது "கந்தர்வ விவாஹம்"
  • யுத்தத்தால் மற்றவரை வென்று, அவர் வீட்டிலிருக்கும் கன்னிப் பெண்ணை, கட்டாயம் செய்து மணப்பது "ராக்ஷஸ விவாஹம்"
  • பெண்ணை ஏமாற்றி கபடம் செய்து, பெண்ணுடைய இஷ்டமில்லாமல் மணப்பது "பைசாச விவாஹம்"
என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.

===========================================================================

பகுதி 3. முகூர்த்தநாள் குறிப்பது எதற்கு?


===========================================================================

இதனால் ஒரு குறிப்பிட்ட நாட்களில் கல்யாண சத்திரங்கள் அதிக வாடகை இருந்தாலும், அலை மோதி, advance booking செய்யப் படுகிறதே?

48000
முதல் 75000 வரை நாளொன்றுக்கு பெருநகரங்களில் கல்யாண சத்திர வாடகை இருந்தாலும், இலட்சம் முதல் கோடி ரூபாய்கள் செலவு செய்து, மூன்று நாள் வரை கல்யாணம் செய்யும் ஆரவாரம் இன்னும் குறையவில்லை என்பதற்கு கல்யாண சத்திர advance booking-கள் சாட்சி.

"கேவலம் குண ஸம்யுக்தோ| தேவானாமபி துர்லப| தோஷானி சர்வான் பரித்யக்தும்| அஸக்யம் பஹி வத்ஸரை| தர்மாத் பரிட்சய குர்வீத் | ஸ்வல்ப தோஷ குணாதிகே"

என்று காலவிதானம் என்ற நூலில் நாரதமகரிஷி கூறுகிறார். இதன் அர்த்தமானது, "தோஷங்களே இல்லாத சர்வ நற்குணங்கள் மட்டும் கொண்ட சுபமுகூர்த்த நேரமானது, தேவர்களுக்கும் கிடைப்பது அரிதாகும். எனவே ஜோதிடர்கள்,
சுபகாரியங்களுக்கு, குற்றம் குறைவாகவும், குணம் அதிகமாகவும் உள்ள முகூர்த்தத்தை தேர்வு செய்து செய்ய வேண்டும்" – என்பதாகும்.

தினங்களை அவற்றின் கிரக நயனங்களின் அமைப்பில் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கின்றனர்.

1. ஒரு கண்ணுள்ள நாட்கள்
2. இரு கண்ணுள்ள நாட்கள்
3. குருட்டு நாட்கள்

“நல்லதோர் வியாழன் வெள்ளி
நற்புதன் இரு கண்ணாகும்
வல்லதோர் இரவி, திங்கள்
வரும் ஒரு கண்ணதாகும்
கல்லவே சுபமுகூர்த்தம்
கருணையாய்ச் செய்வாயென்று
சொல்லினார் உமைக்கு ஈசன்
சுகமான நாள் ஈதென்றே!“

பொதுவாகச் சூரியன் வலது கண்ணாக இருக்கிறார். சந்திரன் இடக்கண்ணாக இருக்கிறார்.

எனவே ஞாயிற்றுக்கிழமையும், திங்கட்கிழமையும் ஒரு கண்ணுள்ள நாட்களாகும்.

புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களும் இரு கண்ணுள்ள நாட்களாகும். சிலர் வளர்பிறைச் சந்திரன் உள்ள திங்கட் கிழமையை இரு கண்ணுள்ள நாட்கள் என்கின்றனர்.

ஏனைய செவ்வாய், சனி ஆகிய நாட்கள் குருட்டு நாட்கள் எனப்படும். குருட்டு நாட்களில் சுபமுகூர்த்தங்கள் செய்யக்கூடாது. தேவாபிரதிஷ்டை, கும்பாபிஷேகத்திற்குக் கண்டிப்பாக இரு கண்கள் உள்ள நாட்களே அவசியமாகும்.

கிரகங்களின் பலத்தை 6 வகையில் காணும் முறைக்கு “சட்பலம் காணல்” என்று பெயர். அவையாவன 1. ஸ்தான பலம் 2. கால பலம் 3. அயன பலம் 4. நைசர்க்கிக பலம் 5. திக் பலம் 6. சேஷ்டாபலம் இவற்றுள் காலபலத்தில் தினபலம் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. தினபலம் என்பது தினஅதிபதிக் கிரகத்தின் பலம் ஆகும்.

காலை சூரிய உதயத்துடன் அன்றைய தமிழ்நாள் தொடங்குகிறது. ஒரு நாள் என்பது இருபத்து நான்கு மணி நேரங்கொண்டது. 1 மணிக்கு 2 ½ நாழிகை வீதம் 60 நாழிகை கொண்டது 1 நாளாகும். இந்த ஒவ்வொரு மணி நேரத்தையும் ஒவ்வொரு கிரகம் ஆட்சி செய்கிறது. இதனை ஓரை என்கிறோம். கிரகத்தின் பெயரையொட்டி சூரிய ஓரை, சந்திர ஓரை என்று வழங்கப்படுகிறது. ராகு, கேதுக்களுக்கு ஓரை கிடையாது. மற்றபடி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களுக்கு ஓரை உள்ளது.

இதனால், பிரபஞ்சத்தின் அடிப்படையில், நம்மை ஆளும் இயற்கை, நமக்கு சாதகமாக இருக்கும் நேரத்தை, முகூர்த்த நேரம் என்று கணக்கிடுகின்றனர். இந்நேரத்தில் செய்யப் படும் எந்த செயலும், தீங்கான விளைவுகளைக் கொடுக்காது என்பது நம்பிக்கை.

"மதி விதியை வெல்லும்" என்று கூறிக் கொண்டே, விதண்டாவாதம் பேசி கொண்டே இருப்பதால் மட்டுமே திருமணங்கள் முறிகின்றன, செய்யும் செயல்கள் தோல்வி அடைகின்றன. விதண்டாவாதம், கர்வம் (ஈகோ), மற்றும் விட்டுக் கொடுக்காமல் இருப்பது (flexibility இல்லாமை) மட்டுமே ஒருவர் தோல்வி அடையக் காரணமாகிறது. இதற்கும் முகூர்த்த நேரத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

-------------------------------------------------------------------------------------------------------

அகநானூறு பாடல் 86-ரில் ,

"எங்கள் திருமணநாளன்று உளுத்தம்பருப்புடன் கூட்டிச் சமைத்த, பக்குவமாகக் குழைந்த பொங்கலோடு, மலைபோல் குவிந்த பெருஞ் சோற்றினை உண்பவர்கள், எனக் அதிகக்கூட்டம் நிறைந்திருந்தது. வரிசையாக பந்தக் கால்களை நட்டுக் குளிர்ந்த மணப் பந்தல் முழுதும் ஆற்றுவெளியிலிருந்து கொண்டுவந்த வெண்மணல் பரப்பப் பட்டிருந்தது. மனையில் விளக்கு ஏற்றி, மலர் மாலைகளை பந்தல் முழுதும் நெருக்கமாகத் தொங்க விட்டு மிக அழகாக அலங்கரித்துள்ளார்கள். திருமண வீட்டில் மனைவிளக்குகளை ஏற்றி வைத்து ஒளிபெறச் செய்துள்ளார்கள்.

புகழினையுடைய திங்களுடன் கூடிய ரோகிணி நன்னாள், குற்றமற்றதும், வாழ்விற்கு நல்லது பயக்கும் என்பதால் அந்நாள் குறித்து, அடர்ந்த இருள் நீங்கி, விடியல் தொடங்கும் வனப்பு மிகு நேரத்தில் திருமண விழா தொடங்குகிறது.

தலையில் நன்நீர்க் குடத்தினைத் தாங்கியும், கையில் அகன்ற பாத்திரத்தை ஏந்திக் கொண்டும், திருமணத்தை செய்து வைக்கும், கலகலப்புடன் கூடிய முதிய மங்கல வாழ்வாங்கு வாழ்ந்த கிழத்தியர், நீர்க் குடங்களை முன்னேயும் பின்னேயும் முறைமுறையாகத் தந்திட மணமகளை நன் நீராட்டினர். நல்ல மக்களைப் பெற்று, அடி வயிற்றில் வரி வரியாகத் தழும்புகள் கொண்ட வயிறு வாய்ந்த சுமங்கலியான மகளிர் நால்வர், தூய ஆடைகளையும் அணிகளையும் அணிந்து கூடிநின்ற மணமகளிடம் "உன்னை அடைந்த கணவனை விரும்பிக் கூடிக் கற்பு நெறியின்றும் பிழறாமல், கணவன் விரும்பத்தக்க மனைவியாக அவனை வாழ்நாள் முழுதும் நன்கு பேணிக் காத்து வாழும் எண்ணத்தைக் கைக் கொண்டு வாழ்வாயாக!" என்று வாழ்த்தி நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும், புதிய நெல்லையும் தூவி வாழ்த்தியதால் மணமகளின் அடர்த்தியான கரிய கூந்தலில் அவை தோற்றமளிக்க, திருமணம் இனிதே நிகழ்கிறது.

அதன்பின் ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் சூழ்ந்த உறவினர் "இன்று முதல் நீயும் பெரியமனைக் கிழத்தி ஆகிவிட்டாய்" என்று கேலி பேசி, கலகலவென சிரித்து,
மெல்லிய அலங்காரங்களைச் செய்து, வனப்புடன் கூடிய முதலிரவு அறைக்குள் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய அன்றிரவே அவளை அனுப்பி வைத்தனர். அவ்வறைக்குள் நுழையும் மணமகள் உடுத்திய புதிய புடவைக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு, தன் இனிய கணவன் இருக்கும் இடம் நோக்கிச் செல்கின்றாள். அப்போது அவள் புத்தாடையில் ஒடுங்கி முகம் புதைத்துக் கிடந்தாள். அவளைத் தழுவும் விருப்பத்தோடு முகத்தை மூடிய துணியைச் சற்றே விலக்க அவள் அதற்கு அஞ்சி பெருமூச்சு விட்டாள். நடுங்கி ஒடுங்கினாள். "ஏன் பயந்தாய்?என்னிடம் உன் மனதில் உள்ளதை உள்ளவாறு கூறு" என வினவினான்.

அப்போது மானைப்போல் மடமை கொண்டவளும், காதற்ச் செருக்கினையுடையதலைவி மெலிந்த மடல் கொண்ட காதில், தான் அணிந்திருந்த சிவந்த மணிகள் பதித்த அழகிய குழைகள் அசைய விரைந்து வந்து, தனக்குரியவனை வணங்கினாள். "அவள் எக்காலத்தும் என்பால் அன்புடையவள். அதனை நீ அறியாய்" என்று தோழியிடம் கூறினான்.

--------------------------------------------------------

வெறும் மனப் பரிமாற்றம் செய்து காந்தர்வத் திருமண முறையில் பூ மாலை மாற்றியே திருமணம் நிகழ்ந்துள்ளது. தொல்காப்பியர் காலத்துக்குப் பின்னர், படிப்படியாக, திருமணத்தைச் சடங்காக மாற்றினார்கள். சிலப்பதிகாரத்தில், கோவலன்-கண்ணகி திருமணம் புரோதிதரை வைத்து நடத்தப் படுவதாக காட்டுகிறது. அதன்மூலம், திருமணத்தில் மந்திரம் ஓதி, குடங்கள் வைத்து, படையல் செய்து, திருமணத்தை இன்று காண்டிராக்ட் தொழிலாகவே மாற்றி, இன்று முறைசொல்லும் (குடும்பப் பழக்கம்) காண்டிராக்டர்கள் கூட வந்துவிட்டார்கள்.


===========================================================================

பகுதி 4. கால்கட்டு மற்றும் திருமணச்சிறை


===========================================================================

இனிமே நீ அவ்வ்ளோதாண்டி" --என்று எனக்கு திருமணம் நிச்சயம் ஆனதும், என் தோழிகள் சொன்னது இன்றும் என் மனதில் அப்படியே இருக்கிறது. இதை நிறைய பெண்களும் ஆண்களும் நிச்சயம் கேட்டிருப்பார்கள். இப்படிச் சொல்லப்படுவதை இன்றும் [ஒட்டுக் :) ] கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.

இந்த "அவ்வ்வ்ளோதான்" என்று பயப்படும் அளவுக்கு கல்யாணம் செய்வது பயமுறுத்துகிறதா? இல்லை கல்யாணம் தரும் பொறுப்புக்கள் நம்மை பயமுறுத்துகிறதா?

wedlock
என்பது dreadlock ஆகவோ அல்லது deadlock ஆகவோ ஆக்குவது என்னை பொறுத்தவரை ஆண்கள் கையிலேதான் இருக்கிறது. இதென்ன, பெண்களை பொறுப்பு-பழியிலிருந்து சௌகரியமாக escape செய்து விட்டீர்களே? என்று கேட்பது தெரிகிறது. பெண்கள் ஏற்கனவே தன் உறவுகள் அனைத்தையும் துறந்துவிட்டுதான் திருமண உறவுக்குள் வருகிறாள். அவளை வாழவைப்பதும், அவனை இவள் வாழ வைப்பதும், ஆண்கள் நடந்து கொள்வதைப் பொறுத்துதான் அமைகிறது. பெண்ணுக்கு அடிமையாகாமல், பெண்ணையும் அடிமையாக நினைக்காமல், இருவரும் ஆரம்பத்திலிருந்தே உறவுக்கு மரியாதை கொடுத்து சிறிது personal space மற்றும் distance கொடுத்து வாழ்ந்தால், வாழ்க்கை இனிக்கும்.

ஏன் ஆண்களே பொறுப்பு என்று கூறுகிறேன் என்றால், பெண் மனைவியாகி புகுந்த வீட்டுக்குள் வந்ததுமே, புகுந்த வீட்டிலிருப்பவர்கள் (மனைவியும்தான்) ஒருவித defensive sense-சோடு நடந்து கொள்ள ஆரம்பிக்கின்றனர்.

ஒவ்வொரு பெண்ணும் (75 சதவீதம்), மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், குடும்பத்தோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். பொதுவான கருத்துகள் ஏற்கனவே கொடுத்திருக்கும் யூகங்கள், இவளுக்கு அவர்கள் மீதும், அவர்களுக்கு இவள் மீதும் ஒருவித சந்தேகம் மற்றும் இடைவெளியைக் கொடுத்து விடுகிறது.

இந்த இடைவெளியை, இருவருக்கும் பொதுவான ஆண் (இவளுக்கு கணவனாக இருப்பவனும், அவர்களுக்கு மகனாக/சகோதரனாக இருப்பவனும்) ஒரு இணைக்கும் பாலமாகவும், இரு உறவுகளையுமே மற்றவர் முன் விட்டுக் கொடுக்காமலும், இருவரையும் முக்கியமாக கருதும் போது, நாளடைவில், ஒரே வீட்டில், கூடவே இருக்கும் காரணத்தால் அவர்களுக்குள் சார்ந்து இருக்கும் தன்மை ஏற்பட்டு விடும். அப்படி இல்லாமல், மனைவி சொன்னாள் என்பதற்காக பெற்றோரையோ, பெற்றோர் சொன்னார்கள் என்பதற்காக மனைவியையோ தூற்றினால், இவர்கள் இருவரில் ஒருவரை அவன் இழப்பது சர்வ நிச்சயம்.

கிரஹஸ்தாஸ்ரமம் (குடும்ப வாழ்க்கை) இந்தியக் கலாச்சாரத்தின் மூலாதாரமாகக் கருதப் படுகிறது. 25-25 வருடமாகப் பிரித்து பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்யாசம் என்று நான்காகப் பிரித்துள்ளனர். ஒருவன் பிரம்மச்சரியத்தில் தகுந்த கல்வி மற்றும் பயிற்சிகளின் மூலம் உடலையும் மனத்தையும் உறுதியாக்கி முழு மனிதனாகிறான். திருமணத்தின் மூலம் கிரஹஸ்தனாகி, குழந்தைப் பேறு பெற்று, தம் குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்காக சேவை புரிகிறான் / உழைக்கிறான். ஐம்பது வயதுக்கு மேல் வானப்ரஸ்த்தம் மற்றும் சன்யாசத்தில் தன் வாழ்வின் அனுபவத்தின் அடிப்படையில் உலக நன்மைக்கான செயல்களில் ஈடுபடுவதும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வண்ணம் தாவரங்கள் மற்றும் மிருகங்களைப் பேணுதல், தன் அனுபவங்களைப் போதித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

திருமணம் ஒரு மனிதனின் மனதை அங்குமிங்கும் அலைபாயாமல் செய்து, ஒருமுகப்படுத்தி, வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் கொடுக்கிறது. திருமணத்தின் போது வாழ்த்த சொல்லப்படும் வேதங்களில் இவையும் உண்டு.

"இஹைவ ஸ்தம் மா வி யுஷ்டம் விஷ்வமாயுர்வ்யஷ்நுதம்
க்ரீளந்தௌ புத்ரைர் னப்ர்ப்ஹிர் மோதமாநௌ ஸ்வே க்ருஹே"
[
ரிக் வேதம், விவாஹ சுக்தம் - மண்டலம் 10, சுக்தம் 85 பாடல் 42]

இதன் பொருளானது: நீங்கள் இருவரும் நீடுழி வாழுங்கள், ஒருவரை ஒருவர் பிரியாதிருங்கள், வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் மகிழ்வோடு வாழுங்கள், உங்கள் மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன், நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை நினைத்து மகிழ்ந்து கொண்டே இருங்கள்.

"சம்ராஜிணி ஷ்வஷுரே பவ ஷ்வர்வாம் பவ
நனான்தரி சம்ராஜ்ணீ பவ சம்ராஜ்ணீ அதி தேவ்ர்ஷு"
[
ரிக் வேதம், விவாஹ சுக்தம் - மண்டலம் 10, சுக்தம் 85 பாடல் 46]

இதன் பொருளானது: உன் மாமியார், மாமனார் ஆகியோருக்கு நீயே இராணி ஆவாய். உன் கணவனின் சகோதர சகோதரிக்கும் நீயே இராணி ஆவாய். (பிரஜைகளை தாய் போல ரக்ஷிக்கும் மகாராணி போல நீயும் அவர்களைச் சம்ரக்ஷிப்பாய்)


===========
அடுத்து வியாழனன்று வரும்...
===========.

37 comments:

R.Gopi said...

//தனி மனித தாக்குதல் அல்லது எந்தவொரு ஜாதி, மதம், இனம் பற்றி பேசுவதற்கு இது இடமில்லை. அப்படி ஜாதி பெயர் குறிப்பிட்டு வரும், அல்லது பெயரில்லாப் (அனானி) பின்னூட்டங்களை நான் வெளியிட மாட்டேன். //

அச‌த்த‌ல் ஆர‌ம்ப‌ம் விதூஷ்...

//முதலில், தானம் என்றால் என்ன? என்பதை புரிந்து கொள்வோம்.//

ச‌ரி... விள‌க்குங்க‌ள்...

//சமஸ்கிருத்தத்தில் தானா (dhAnA) என்றால் நெல் மணிகள் என்று பொருள் படுகிறது. இதன்அடிப்படையில், உருவான வார்த்தைகள்தான், தனம் (செல்வம்) மற்றும் தானம் (அன்பளிப்பு).//

அருமையான‌ விள‌க்க‌ம்.... இது போன்ற‌ ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளை தெளிவுப‌டுத்தி, தெரிய‌ ப‌டுத்தும் வித்யா...உன‌க்கு என் ந‌ன்றி....

//சமஸ்கிருதத்தில், கன்யாதானம் (கன்யா+தனம்) என்றால், மணமாகாத கன்னியான தம் மகளுக்கு தந்தையின் அன்பளிப்பு / சொத்தில் ஒரு பங்கு / பொருட் பரிசு, என்றே அர்த்தமாகிறது. //

ஃப‌ன்டாஸ்டிக்.... என‌க்கு இன்னிக்கு இதை ப‌டிக்க‌ற‌ச்சே தான் தெரியும்....

//இலட்சம் முதல் கோடி ரூபாய்கள் செலவு செய்து, மூன்று நாள் வரை கல்யாணம் செய்யும் ஆரவாரம் இன்னும் குறையவில்லை என்பதற்கு கல்யாண சத்திர advance booking-கள் சாட்சி.//

ச‌மீப‌த்தில் கூட‌ என் உற‌வின‌ர் திருமணம் கூட மூன்று நாள் ந‌டைபெற்ற‌து... முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு, இரண்டாவது நாள் திரும‌ண‌ம், மூன்றாம் நாள் க‌ட்டுசாத‌ம் என்று.

//திருமணத்தில் மந்திரம் ஓதி, குடங்கள் வைத்து, படையல் செய்து, திருமணத்தை இன்று காண்டிராக்ட் தொழிலாகவே மாற்றி, இன்று முறைசொல்லும் (குடும்பப் பழக்கம்) காண்டிராக்டர்கள் கூட வந்துவிட்டார்கள்.//

உண்மை... பெரும்பாலான‌ திரும‌ண‌ங்க‌ள் இப்போது இப்ப‌டிதான் ந‌டைபெறுகிற‌து..

//இந்த "அவ்வ்வ்ளோதான்" என்று பயப்படும் அளவுக்கு கல்யாணம் செய்வது பயமுறுத்துகிறதா? இல்லை கல்யாணம் தரும் பொறுப்புக்கள் நம்மை பயமுறுத்துகிறதா?//

க‌ல்யாண‌ம் த‌ரும் பொறுப்புக‌ள் ந‌ம்மை மேலும் செம்மை ப‌டுத்துகிற‌து...

//பெண்கள் ஏற்கனவே தன் உறவுகள் அனைத்தையும் துறந்துவிட்டுதான் திருமண உறவுக்குள் வருகிறாள். அவளை வாழவைப்பதும், அவனை இவள் வாழ வைப்பதும், ஆண்கள் நடந்து கொள்வதைப் பொறுத்துதான் அமைகிறது.//

க‌ண்டிப்பாக‌.... இதை புரிந்து கொண்டு புது ம‌ண‌ப்பெண்ணை அனுச‌ரித்து செல்லும் போது, அந்த‌ குடும்ப‌த்தில் ம‌கிழ்ச்சி பொங்குகிற‌து...

//மனைவி சொன்னாள் என்பதற்காக பெற்றோரையோ, பெற்றோர் சொன்னார்கள் என்பதற்காக மனைவியையோ தூற்றினால், இவர்கள் இருவரில் ஒருவரை அவன் இழப்பது சர்வ நிச்சயம்.//

உண்மையோ உண்மை... இது நிக‌ழாதிருக்க‌, இருவ‌ருக்கும், ச‌கிப்புத‌ன்மை ம‌ற்றும் விட்டு கொடுத்து போகும் த‌ன்மையிருத்த‌ல் அவ‌சிய‌ம்...

//திருமணம் ஒரு மனிதனின் மனதை அங்குமிங்கும் அலைபாயாமல் செய்து, ஒருமுகப்படுத்தி, வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் கொடுக்கிறது.//

பிர‌ம்மிப்பூட்டும் எழுத்து வித்யா... ரொம்ப அனுபவிச்சு ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌...

ரொம்ப ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க... உண்மையாக‌வே சொல்கிறேன்... வெறும் வாய் வார்த்தை இல்லை...

தொடர்ச்சியை வியாழக்கிழமை, ப‌ல‌ர் போல் நானும் எதிர்பார்க்கிறேன்...

அ.மு.செய்யது said...

//ஆனால், நாம் வழக்கம் போல, திரித்து கூறி, வேதங்களையும் புராணங்களையும், இன்னும் திட்டிக் கொண்டிருக்கிறோம்.//

ஏற்று கொள்கிறேன்.இந்த பதிவுக்கு சம்பந்தமேயில்லாத கருத்து என்றாலும் இந்த கேள்வியை உங்களிடம் கேட்க விழைகிறேன்.உங்களின் அடுத்த பதிவில் விளக்கம் அளித்தால் நன்றாயிருக்கும்.
-----------------------------

//1.யசூர் வேதம்

* " நா தஸ்ய பிரதிம அஸ்தி "

அவனுக்கு எந்தவொரு தோற்றமும் கிடையாது.
( யசூர் வேதம் 32:3 )

*அவன் உருவமற்றவனும் பரிசுத்தமானவனும் ஆவான்( யசூர் வேதம் 40:8 )

இதையேதான் திருக்குர்ஆன் (42:11),

" அவனைப் போன்று எப்பொருளும் இல்லை" என்கிறது.


* " அன்தாதம ப்ரவிஸன்தி ஏ அசம்பூதி முபாசதே"

எவர்கள் இயற்கை வஸ்துகளை வணங்குகிறார்களோ அவர்கள் இருளில் பிரவேசிக்கிறார்கள்.இன்னும் எவர்கள்மனிதனால் படைக்கப்பட்ட பொருட்களை வணங்குகிறார்களோ அவர்களும் இருளில் ஆழமாக மூழ்குகிறார்கள். ( யசூர் வேதம் 40:9)அசம்பூதி - இயற்கை வஸ்துக்கள்; காற்று,நீர் போன்றவை........
சம்பூதி - மனிதனால் படைக்கப்பட்டவை; நாற்காலி,சிலைகள் போன்றவை.......

வேதங்கள் முழுதும் உருவ வழிபாட்டை இழித்துரைக்கும் இந்த‌ உண்மை,பெரும்பான்மையான‌ இந்துக்க‌ளுக்கு
தெரிநதிருக்குமா ??

//எவர்கள்மனிதனால் படைக்கப்பட்ட பொருட்களை வணங்குகிறார்களோ அவர்களும் இருளில் ஆழமாக மூழ்குகிறார்கள். //

இப்ப‌டி ய‌சூர் வேத‌ம் சொல்லியிருக்க‌,ர‌விவ‌ர்மாவால் வ‌ரைய‌ப்ப‌ட்ட‌ ச‌ர‌ஸ்வ‌தி ஓவிய‌த்தை,க‌ட‌வுளாக‌ பாவித்து
இந்துக்க‌ள் தொழுவ‌தேன் ??3.ரிக் வேதம்

* ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்.
( ரிக் வேதம் 1:164:46)
//


------------------------

அ.மு.செய்யது said...

//எவர்கள்மனிதனால் படைக்கப்பட்ட பொருட்களை வணங்குகிறார்களோ அவர்களும் இருளில் ஆழமாக மூழ்குகிறார்கள். //

இப்ப‌டி ய‌சூர் வேத‌ம் சொல்லியிருக்க‌,ர‌விவ‌ர்மாவால் வ‌ரைய‌ப்ப‌ட்ட‌ ச‌ர‌ஸ்வ‌தி ஓவிய‌த்தை,க‌ட‌வுளாக‌ பாவித்து
இந்துக்க‌ள் தொழுவ‌தேன் ??

Vidhoosh said...

நண்பர் கோபி: மிக்க நன்றி.

திரு. செய்யது: உங்கள் கேள்விக்கு ஒரு வரியில் விளக்கம் சொல்லிவிட முடியாது. இந்தத் தொடர் பதிவுக்கு பிறகு நிச்சயம் இதைப் பற்றி ஒரு பதிவு எழுதுகிறேன். மிக்க நன்றி.

--வித்யா

sakthi said...

அருமையான விளக்கம் வித்யா

தெரியாத விளக்கங்கள்

நன்று

நட்புடன் ஜமால் said...

தானா -


தானா தானா மே லிக்காவுவ்வா ...


இப்படி ஒரு சொல் கேள்வி பட்டுள்ளேன்

அதாவது

நாம் சாப்பிடும் உணவில் நமது பெயர் எழுதப்பட்டுள்ளது

உணவு என்று மட்டுமல்லாமல் நமக்கு கிடைக்கும் அனைத்திற்கும் இது பொறுந்தும் கிட்டதட்ட விதி என்று சொல்வது போல.


-------------------

மேலும் ஒரு வேண்டுகோள் -

ஒரு பதிவுக்கு ஒரு பகுதி மட்டும் வெளியிடுங்கள் - அப்பதான் கருத்துரைக்க ஏதுவாகவும் இருக்கும், விடயங்கள் கொஞ்சம் விளங்கினமாதிரியும் இருக்கும்.

Radhakrishnan said...

மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும் படித்தேன். ஏனெனில் இங்கே எழுதப்பட்ட பல விசயங்கள் எனக்குத் தெரியாது. அனைத்தையும் மனனம் செய்து கொள்ள வேண்டும் எனும் ஆவலும் அதிகமாகவே இருந்தது, ஆனாலும் மறந்துவிடுவேன் என்பது சற்று வேதனை தருகிறது.

தானம் பற்றிய விளக்கங்கள் மிகவும் சிறப்பு.

ஏழு வகை விவாஹம் பற்றிய விளக்கங்கள் கண்டு பிரமித்தேன். அசுர விவாஹம், ராஷஸ விவாஹம் வெவ்வேறு எனினும், அசுரர், ராஷஸர் வெவ்வேறா?!

மூவகை தினங்கள் படித்தேன். மூன்று கண் தினம் இல்லாமலிருப்பது அதிசயமே!

அகநானூறு பாடல் சொல்லும் விளக்கம் மிகவும் அருமை.

ரிக் வேதத்தில் இருந்து சுட்டிக் காட்டப்பட்டுள்ள விசயங்கள் பெருமை சேர்ப்பதாக உள்ளது.

மீண்டும் சொல்கிறேன் வித்யா, ஆண்களுக்கு மட்டுமே பொறுப்பு என பெண்கள் அனைத்து உறவுகளையும் விட்டு வந்தவர்கள் எனச் சொல்லி பெண்களுக்கு மட்டும் நியாயம் பேசுவது பொதுக் கட்டுரையின் சாரம்சத்தை உடைத்துவிடும். ஏன் பெண்கள் படிக்கச் செல்லுமிடத்தில், வேலைப் பார்க்குமிடத்தில் பிறருடன் சுமூகமாக பழகுவதில்லையா? இது நாம் புகுந்த குடும்பம் எனும் எண்ணமும், வேற்று மக்கள் என்கிற நினைப்பும் தான் இப்படி பொறுப்பைத் தட்டிக்கழிக்கச் செய்யும். தங்களின் தனிப்பட்ட கருத்து என்பதால் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் எனக்கில்லை. உங்கள் கருத்துப்படியே தொடருங்கள்.

ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் என்று ஆனபின்னரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் விவாஹத்தின் முக்கிய நோக்கம்.

தனித்தனியாக இருந்தபோது அவர்களுக்கு ஏதும் பொறுப்பு இல்லை, விவாஹம் நடந்தபின்னரே பொறுப்பு வருகிறது என வருங்கால சந்ததியினருக்கும் சொல்லிக் கொண்டே வந்தால் பொறுப்பான சமுதாயம் காண இயலாது.

அடுத்த வியாழன் வரை காத்திருக்கிறேன்.

மிகவும் அழகாக, அருமையாக எழுதி இருக்கிறீர்கள். மிக்க நன்றி.

Vidhoosh said...

அசுரர்கள், தைத்யர்கள், ராக்ஷசர்கள், பிசாசுகள் போன்றவை புராணங்களில் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன. இவர்கள் கற்கால மனிதர்களில் அநேக வகைகளாக இருந்திருக்கலாம்.


வேதங்களில்/புராணங்களில் வரும் ராக்ஷசர்கள் - முரட்டுத்தனமான, ஆரோக்கியமான, அதிக உயரத்தோடும், பெருத்த உருவத்தோடும், காமுகர்களாகவும், காட்டில்/இருண்ட பகுதிகளில் வசிப்பர்வர்களாகவும், பிறவிக் குறைகளோடும் (ஒரே ஒரு கண், காதுகள் இல்லாமல், அல்லது அசாதாரண அளவில் உறுப்புகள் கொண்டிருத்தல் போன்ற), சூனியம் மாந்த்ரீகம் போன்றவற்றில் தேர்ந்தவர்கலாகவும் இருப்பவர்கள். (இக்குணம் உள்ளவர்களை இன்றும் நாம் ராக்ஷசன் என்றழைக்கிறோம்).


தைத்யர்கள் - திதி மற்றும் காஷ்யப முனிவரின் பிள்ளைகள் - பாலி சக்கரவர்த்தி ஒரு தைத்தியர். இவர்கள் அடிப்படையில், பாதாள லோகத்தை (southern hemisphere) ஆளுவதாகக் கருதப்படுகிறது.


அசுரர்கள் - இவர்களும் காஷ்யப ரிஷியின் பிள்ளைகள்தான் என்று கருதப்படுகிறது. ஆனால், இவர்கள் தைத்தியர்கள் மாதிரி உருவம் கொள்ளாமல் இருந்தார்கள். உதாரணத்திற்கு இராவணன் ஒரு அசுரன்.


இதில் குறிப்பிடத் தகுந்தது என்னவென்றால், தைத்தியர்களும் அசுரர்களும் ஒரே காலத்தில் இருந்ததாக சான்றுகள் இல்லை. தைத்தியர்கள் அழிந்த பிறகே அசுரர்கள் தோன்றி இருக்கிறார்கள். ஆனால் தைத்தியர்கள் எப்போது அழிந்தார்கள் என்பதற்கு சான்றுகள் ஏதும் இல்லை. சார்லஸ் டார்வின் (charles darwin) குறிப்புகளையும் வேதங்களையும் (புராணங்கள்) equate செய்து பார்க்கும் போது evolution of human race கூற்றுப் படி இதெல்லாம் சாத்தியம் என்றே நம்பத் தோன்றுகிறது.

--வித்யா

Vidhoosh said...

நன்றி சக்தி, ஜமால்.
ஜமால் - நீங்கள் சொல்லியதை முயன்று பார்க்கிறேன்.

-வித்யா

Vidhoosh said...

இராதாகிருஷ்ணன்:

//இது நாம் புகுந்த குடும்பம் எனும் எண்ணமும், வேற்று மக்கள் என்கிற நினைப்பும் தான் இப்படி பொறுப்பைத் தட்டிக்கழிக்கச் செய்யும். //

வேற்று மக்கள் என்பது உண்மைதானே இராதாகிருஷ்ணன். ஒரு செடியை கூட வேறிடத்துக்கு மாற்றும் போது அடி மண் என்று கொஞ்சம் எடுத்துச் செல்கிறோம். ஆனால், திருமணம் முடிந்த அன்றே, பிறந்தகம் விட்டு புகுந்த வீட்டுக்கு போய், பழகாத உறவுகள், புதிய இடம், புதிய வீடு என்று அவளுக்கு முற்றிலும் அந்நியமான சூழலில் தனித்து விடப்படுகிறாள். புதிய சூழல்களை ஏற்பது பெண்ணின் இயல்பாக இருந்தாலும், அதற்கும் சிறிது நேரம் ஆகும் இல்லையா. அந்த கொஞ்சம் காலம் - அனேகமாக ஆறு மாதங்கள் (probation மாதிரி) என்று கொள்ளலாம்) மட்டும், கணவன் இந்த இருவருக்கும் பாலமாக இருந்து விட்டால், உறவுகள் சிறக்கும் என்று கூறியுள்ளேன்.

//ஏன் பெண்கள் படிக்கச் செல்லுமிடத்தில், வேலைப் பார்க்குமிடத்தில் பிறருடன் சுமூகமாக பழகுவதில்லையா? //
படிக்கச் செல்லும் / வேலை பார்க்கும் இடங்களில் அவர்கள் சம வயதுடையவர்களுடன் எளிதில் பழக முடியும். அதுவும் இல்லாமல், நட்பில் எந்த எதிர்பார்ப்பும் இருப்பதில்லை. ஆனால் உறவுகளின் அடிப்படையே எதிர்பார்ப்புகள் தான்.

///விவாஹம் நடந்தபின்னரே பொறுப்பு வருகிறது என வருங்கால சந்ததியினருக்கும் சொல்லிக் கொண்டே வந்தால் பொறுப்பான சமுதாயம் காண இயலாது.///
ஆஹா.. இங்கே பொறுப்பு என்று நான் குறிப்பிட்டது, வாழ்வதன் நோக்கம் மற்றும் சார்ந்திருப்பவர்களின் வாழ்கையை நன்கு பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு. ஒருவர் மற்றவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் எனும் போது, நாம் செய்வதை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்கிறோம் இல்லையா, அந்தப் பொறுப்புணர்வு (கடமையுணர்வோ?)

ஆனால் இது மணமாகாத பெண்களுக்கோ ஆண்களுக்கோ இருப்பதில்லை - காதலிக்கும் போது கூட, ஒரு பூவோ இல்லை teddy bear கொடுத்தாலே மகிழ்வாள் காதலி, அதே போல, காதலன் அவள் கடைக் கண் பார்வைக்கே மகிழ்வான். ஆனால் கணவன் மளிகை சாமானும் வாங்கிப் போடவேண்டும், மனைவி அதை சமைத்துப் போடவேண்டும். இது ஒரு உதாரணம் தான். இது போல பல பொறுப்புக்கள் திருமணத்தின் கூடவே நமக்கு வந்து சேர்க்கிறது.

இல்லையா?

--வித்யா

Radhakrishnan said...

மேலதிக விளக்கங்கள் கண்டு மகிழ்ந்தேன், காஷ்யப ரிஷியைப் பற்றி நேரமிருக்கும்போதுப் படிக்கிறேன்! அறிவியல் தத்துவமும், புராணங்களின் கூற்றும் பல இடங்களில் ஒத்துப் போகத்தான் செய்கிறது.

திருமணம் ஆனபின்னர் உள்ள பொறுப்பு நீங்கள் சொல்வது போல கொஞ்சம் அதிகம் தான்.

சமுதாய நிலையைச் சொல்லும் கட்டுரை என்கிற கண்ணோட்டத்தில் நான் பார்த்தால் எல்லாம் சரியாகிவிடும். இப்போது நீங்கள் எழுதியது சரியாகத்தான் தெரிகிறது.

மிக்க நன்றி வித்யா.

வெட்டி வேலு said...

நல்ல விளக்கம்...

// இதனால், பிரபஞ்சத்தின் அடிப்படையில், நம்மை ஆளும் இயற்கை, நமக்கு சாதகமாக இருக்கும் நேரத்தை, முகூர்த்த நேரம் என்று கணக்கிடுகின்றனர். இந்நேரத்தில் செய்யப் படும் எந்த செயலும், தீங்கான விளைவுகளைக் கொடுக்காது என்பது நம்பிக்கை.//

இது வெறும் நம்பிக்கை மட்டுமே, உண்மையல்ல... இந்துகளை தவிர மற்றவர்கள் யாரும் இந்த மாதிரி நேரம் காலம் பார்ப்பதில்லையே ?

//"மதி விதியை வெல்லும்" என்று கூறிக் கொண்டே, விதண்டாவாதம் பேசி கொண்டே இருப்பதால் மட்டுமே திருமணங்கள் முறிகின்றன,//

"மதி விதியை வெல்லும்" சரிதானே :) அதுஎப்படி விதண்டாவாதம் ஆகும்?

// விதண்டாவாதம், கர்வம் (ஈகோ), மற்றும் விட்டுக் கொடுக்காமல் இருப்பது (flexibility இல்லாமை) மட்டுமே ஒருவர் தோல்வி அடையக் காரணமாகிறது. இதற்கும் முகூர்த்த நேரத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை.//

இது சரி :)

வெட்டி வேலு said...

"ஆயிரங்காலத்து அழுகல் பயிர்" --> இங்கே அழுகல் என்பதன் அர்த்தம் என்ன ?

"அழுகிய" அந்த அர்த்ததில் எடுத்தால் தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லாதது மாதிரி இருக்கே ?

இல்ல அதுக்கு வேறு பொருள் இருக்கா?

Vidhoosh said...

வெட்டி வேலு:
"Introduction to the World's Major Religions By Lee Worth Bailey, Emily Taitz, Greenwood Press, Randall L. Nadean"

"Celestially Auspicious Occasions: Seasons, Cycles, and Celebrations
by Donna Henes"
இந்தப் புத்தங்கங்களை முடிந்தால் படியுங்கள்.

ஒரு உதாரணத்திற்கு "Vesak always takes place during the full moon, a highly auspicious time in Buddhism when monks and nuns will gather to chant the Code of Discipline"

"February 2, May 1, August 2, and November 1 mark the halfway points of winter, spring, summer and fall, respectively. We know and love them as Ground Hog's Day, May Day, Lammas and All Saints' Day/Halloween. All, with the exception of Lammas -- known as Second Planting only in agricultural communities -- are still popular and vital festivals celebrated throughout the United States today. Rooted in ancient pagan and primal observances of cyclical change, these rites have survived through time and retain a strong, if subliminal, resonating relevance for us today."
====
The Latin ditty predicts:

Si sol splendescat Maria purificante,
Major erit glacies post festum quam fuit ante.

The Scottish say:

If Candlemas day be dry and fair,
The half o' winter's to come and mair.
If Candlemas day be wet and foul.
The half o' winter's gane at Yule.

And also:

If Candlemas is bright and clear
There will be two winters in the year.

The Welsh tell:

If Candlemas Day is fair and clear
There'll be two winters in one year.

In Warwickshire, they advise:

If Candlemas Day be wind and rain
Winter is gone and won't come again.

And in Cumbria, they warn:

If Candlemas Day be sunny and warm,
Ye may mend your old mittens
And look for a storm.

=====
இப்போது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறேன். புத்தகங்கள் படிப்பதால் மனம் விசாலமாகிறது. வெறும் அரசியல்வாதிகளின் பிரசங்கங்களை வைத்து எந்த முடிவுக்கும் வந்து விடவேண்டாம்.
நட்புடன்,
---வித்யா

Vidhoosh said...

///"மதி விதியை வெல்லும்" சரிதானே :) அதுஎப்படி விதண்டாவாதம் ஆகும்?///

வெட்டிவேலு:
துர்மதி விதண்டாவாதத்தின் வேர். எப்போது மத்தியில், குதர்க்க எண்ணங்களும், சந்தேகமும் தோன்றுகிறதோ, வெறும் வாதத்திற்காக, "மதி விதியை வெல்லும்" என்று சொன்னால் சரியாகாது என்ற பொருளில் சொல்லப் பட்டிருக்கிறது.

-வித்யா

Vidhoosh said...

//இது சரி :)///

வெட்டிவேலு: நன்றி.

(செய்யது மற்றும் வெட்டிவேலு, இனத்தை குறித்த பின்னூட்டம் இட்டிருந்தாலும், அவர்கள் கேள்வி யாரையும் வேதனைப் படுத்தாது என்பதால் வெளியிட்டுள்ளேன்.)

--வித்யா

வெட்டி வேலு said...

நன்றி வித்யா...

வால்பையன் said...

அது கன்யாதானமாகவே இருந்தாலும் ஒரு கன்னியை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற முறையில் தான் பதிவு இருக்கிறது!
வார்த்தை வார்த்தை ஒரு கன்னியின் தந்தை என்று!?

பெண்ணுக்கு மட்டும் கன்னிதன்மை ஏன்?
அது ஆணுக்கு இல்லையா?

வால்பையன் said...

//"மதி விதியை வெல்லும்" என்று கூறிக் கொண்டே, விதண்டாவாதம் பேசி கொண்டே இருப்பதால் மட்டுமே திருமணங்கள் முறிகின்றன, //


// சிலப்பதிகாரத்தில், கோவலன்-கண்ணகி திருமணம் புரோதிதரை வைத்து நடத்தப் படுவதாக காட்டுகிறது. அதன்மூலம், திருமணத்தில் மந்திரம் ஓதி, குடங்கள் வைத்து, படையல் செய்து,//

விதியும் நாசமாபோச்சு! மதியும் நாசமா போச்சு!
இப்ப நான் என்ன செய்ய!?

Vidhoosh said...

///பெண்ணுக்கு மட்டும் கன்னிதன்மை ஏன்? அது ஆணுக்கு இல்லையா? ///

அதுக்குத்தான் மாப்பிள்ளை அழைப்பெல்லாம். இன்னும் பலவகையான பரீட்சைகள் மாப்பிள்ளைக்கும் இருந்தன. பகுத்தறிவாளர்கள் அதையெல்லாம் "முட்டாள்த்தனம்" என்று ஒதுக்கி விட்டதால், இன்று நடைமுறையில் இருப்பதை மட்டும் கூறியுள்ளேன்.
============
//இப்ப நான் என்ன செய்ய!?//

ஒன்னும் செய்ய வேண்டாம். முகூர்த்த நேரமும், விதியும் ஒன்றும் செய்யது என்றுதான் சொல்லியிருக்கிறேன். விதண்டாவாதமும், நெறிமுறை தவறுதலும் (அதற்குத்தான் கோவலன் கண்ணகி புரோதிதர் உதாரணம்) திருமணங்கள் / குடும்பம் சீரழியக் காரணம். புரோதிதர், நல்ல நேரம் எல்லாம், ஓரளவுக்கு தான் செல்லும் என்றே கூறியுள்ளேன்.
:)
--வித்யா

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்பையன் எப்போதும்போல் சௌகரியமான வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொண்டு சரவெடி ஆரம்பிச்சது:

/வார்த்தை வார்த்தை ஒரு கன்னியின் தந்தை என்று!?

பெண்ணுக்கு மட்டும் கன்னிதன்மை ஏன்?
அது ஆணுக்கு இல்லையா?/

கன்யா அல்லது கன்னிகா என்பது ஒரு வயதுப் பருவம். பாலா, குமாரி, கன்யா, சுமங்கலீ, சுவாசினீ என்று ஒவ்வொருவிதமான வயது, நிலையைக் குறிப்பிடும் வார்த்தை. கன்னி என்றால் virgin என்று சொல்வது மட்டும் இல்லை! அவர்கள் கன்னித்தன்மை கழியாமலும் இருந்தார்கள் என்பது பண்பாடு, வளர்க்கப்பட்ட விதம்!

அப்புறம், பண்பாடு,கற்பு, ஒழுக்கம், இவையெல்லாம் இரண்டு தரப்புக்குமே சொல்லப் பட்டது தான்.

வால்பையன் said...

//
///பெண்ணுக்கு மட்டும் கன்னிதன்மை ஏன்? அது ஆணுக்கு இல்லையா? ///

அதுக்குத்தான் மாப்பிள்ளை அழைப்பெல்லாம். இன்னும் பலவகையான பரீட்சைகள் மாப்பிள்ளைக்கும் இருந்தன. பகுத்தறிவாளர்கள் அதையெல்லாம் "முட்டாள்த்தனம்" என்று ஒதுக்கி விட்டதால், இன்று நடைமுறையில் இருப்பதை மட்டும் கூறியுள்ளேன்./


ஆண்களுக்கு கன்னிதன்மை அறியும் முறை எப்படின்னு வேதட்ர்ஹ்தில் இருக்கா!? இருந்தால் சொல்லுங்களேன்!


//. புரோதிதர், நல்ல நேரம் எல்லாம், ஓரளவுக்கு தான் செல்லும் என்றே கூறியுள்ளேன்.


அப்புறம் எதுக்கு அந்த செலவு!
தாலிய கட்டுனுமா, வேலைய முடிச்சோமான்னு போக வேண்டியது தானே! அய்யர் மந்திரம் ஓதி கல்யாணம் பண்ணா தான் வாழ்க்கை சிறப்பா இருக்கும்னு நிறையா அய்யர் பேசக்கிறாங்களே!

வால்பையன் said...

//பண்பாடு,கற்பு, ஒழுக்கம், இவையெல்லாம் இரண்டு தரப்புக்குமே சொல்லப் பட்டது தான். //

சும்மா சொல்லிக்க வேண்டியது தான்!
எந்த காலத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள் இருந்திருக்கிறது!

ஆம்பளை தப்பு பண்ணினால் சும்மா,
பொம்பளை தப்பு பண்ணினால் கள்ளக்காதல்!

கிருஷ்ண மூர்த்தி S said...

Blogger அ.மு.செய்யது said...
///எவர்கள்மனிதனால் படைக்கப்பட்ட பொருட்களை வணங்குகிறார்களோ அவர்களும் இருளில் ஆழமாக மூழ்குகிறார்கள். ///

என்னைப் படைத்தது, அதாவது இந்த உடலை! தாயும், தகப்பனும் தான்! தாயை வணங்குவதைக் குற்றமென்று நபிகளும் சொல்லவில்லை. ஆதரித்திருக்கிறார்.

உருவமில்லாத, குணங்கள் இல்லாத புலன்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றை, அறிவதற்கு ஒரு ஆரம்ப நிலை வேண்டுமே! யஜுர் வேதம் மட்டுமல்ல, இந்து மதம் என்று பொத்தாம் பொதுவாக அழைக்கப் படுகிற தத்துவ தரிசனம், எல்லாவிதமான நிலைகளையும் ஏற்றுக் கொள்கிறது. ஆனா, ஆவன்னா என்று எழுத்துக் கூட்டி படிப்புச் சொல்லித் தர ஆரம்பிக்கிறார்கள். எழுத்தைக் கூட்டிபடிக்கிற வேகம் வந்தபிறகு எவரும், ஆனா, இம்மன்னா, மானா=அம்மா என்று யாரும் படிப்பதில்லை. அப்படி உண்மையான அறிவு வந்தவர்கள் எவருமே, எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பிக்கிற, ஆரம்பித்திருப்பவர்களைப் பார்த்து நீ படிப்பது தவறு என்று சொன்னதும் இல்லை.

எலிமெண்டரி ஸ்கூலே வேண்டாம், நேரே டாக்டரேட் வாங்கச் சொல்லிக் கொடுக்கிறயுனிவர்சிடி மட்டும் தான் என்று எலிமெண்டரி ஸ்கூல் எல்லாவற்றையும் அழித்து விட்டு, இருப்போமேயானால், வெறும் தற்குறிகளாக மட்டுமே இருப்போம்!

உங்களைச் சுற்றி நடப்பவைகளில் இருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாமே!

Vidhoosh said...

//வால்பையன் எப்போதும்போல் சௌகரியமான வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொண்டு சரவெடி ஆரம்பிச்சது://

கிருஷ்ணமூர்த்தி சார்: ஹா ஹா.. சரிதான்.

ஆனால், ஒரு விதத்தில், அருண் கேட்கும் கேள்விகள், நிறைய பேர் மனதில் இருப்பதாகவே தோன்றுகிறது. அவர் கன்னிகாதானம் பற்றி argue பண்ணாமல், ஏற்றுக் கொண்டதை பார்க்கும் போது, சரியான விதத்தில், ஆதாரங்களோடு விளக்கினால், சொல்லப் பட்ட கருத்துக்கள் ஏற்புடையவையாக இருந்தால், ஏற்று கொள்ளப் போகிறார்.

எனக்கு வேதங்கள்/புராணங்கள் சொன்னவை நேரிடையான விஷயங்கள் என்பது பற்றி ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அவை குறிப்பிட ஜாதி, மதம்/ இனத்திற்காக அல்லது யாரையும் தாழ்த்தியோ, இலாப நோக்கத்துடனோ எழுதப் பட்டவை அல்ல தனி மனித மேம்பாட்டிற்காகவே அவை எழுதப்பட்டன என்பதையும் தீர்மானமாக நம்புகிறேன்.

As always, our sacred texts are only misinterpreted through ages/generations, after invasion of English/British, we were misguided and they created enmity among the races, which is the very fact, though we neglect to accept.

--வித்யா

வால்பையன் said...

//As always, our sacred texts are only misinterpreted through ages/generations, after invasion of English/British, we were misguided and they created enmity among the races, which is the very fact, though we neglect to accept.//


என்ன திட்டறதா இருந்தாலும் தமிழிலேயே திட்டுங்க!
மத்த பாஷை எனக்கு தெரியாது

Vidhoosh said...

//ஆண்களுக்கு கன்னிதன்மை அறியும் முறை எப்படின்னு வேதட்ர்ஹ்தில் இருக்கா!? இருந்தால் சொல்லுங்களேன்!//

செய்யது கேட்டிருப்பது போல, இதையும் விபரமாக தனிப் பதிவில் எழுதுகிறேன். நீங்கள் நிச்சயம் ஆச்சரியம் அடைவீர்கள். ஒருவேளை இதை படித்த பின்பாவது, you will also try to explore about sacred texts. :)

-- வித்யா

வால்பையன் said...

//you will also try to explore about sacred texts. :) //

நான் விளையாட்டுக்கோ, வாதத்துக்கோ சொல்லவில்லை! நான் ஒன்பதாவது வரை தான் படித்திருக்கிறேன்! படிக்கும் போதே ஆங்கிலத்தை தமிழில் எழுதி வைத்து தான் படிப்பேன்!
இப்படி எதாவது எழுதினால் எனக்கு மொழி பெயர்ப்பாளர் தேவைப்படுவார்!
அவரும் வரவர நிறைய பில்லு போடுகிறார்!
தமிழிலேயே எழுதலாமே ப்ளீஸ்.

Vidhoosh said...

///மந்திரம் ஓதி கல்யாணம் பண்ணா தான் வாழ்க்கை சிறப்பா///

சில மந்திரங்களை, குழுவாகவும், முறையாகவும் சொல்வது, அக்னி வளர்த்து, ஆகுதிகள் ஹோமங்கள் செய்வது, இவற்றினால் ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அதிர்வலைகள் மற்றும் ஹோமப் புகையினால் நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் கொல்லப் படுவதாக, மிகச் சமீபத்தில் ஆராய்ந்து நிரூபித்துள்ளார்கள். இந்த ஹோமங்கள் மற்றும் மந்திரங்கள் ஜபிக்க நியமிக்கப் பட்டவர்களே புரோதிதர்கள்.

திருமணங்களில் அதிகக் கூட்டம் சேரும் என்பதால் ஹோமம் செய்வது, contagious diseases பரவுவதை தடுக்கும் என்பதால் இம்முறை புகுத்தப் பட்டிருக்கலாம்.

நீங்கள் சொல்வது போல எல்லா "ஐயரும்" இதை செய்ய முடியாது. ஜாதி அடிப்படையில் புரோதிதர்கள் உருவாவதில்லை. இதையும் விவாதிக்க இன்னும் சில ஆதாரங்கள் தேடிக் கொண்டிருக்கிறேன். இதை பற்றியும், இன்னும் கொஞ்சம் படித்தறிந்து விபரமாக எழுதுகிறேன். எனக்கு சில ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஏனோ தானோ என்று எழுதுவதில் உடன்பாடில்லை.

சரி. அதிருக்கட்டும். ஹோமம் வளர்த்து, மந்திரம் சொல்லி, கூட்டம் சேர்த்துத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் நம் இஷ்டம்தான். அப்படி யாரும் சொன்னால், நிச்சயம் அதில் சுய லாப நோக்கு இருக்கும். அப்படி நடத்தப்பட்ட எத்தனை பேர் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது என்று நாமெல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். எல்லார் கடையிலும் வியாபாரம் ஆக வேண்டாமா? :)

--வித்யா

Vidhoosh said...

//As always, our sacred texts are only misinterpreted through ages/generations, after invasion of English/British, we were misguided and they created enmity among the races, which is the very fact, though we neglect to accept.//

எப்போதும் போல, நம் புனித நூல்களை (வேதா-புராணங்கள்) தவறாக புரிந்து கொண்டு மேல்விளக்கங்கள் கொடுத்து, தவறான கண்ணோட்டத்தை காலம் காலமைச் செய்து வருகிறோம். ஆங்கிலேயர் படையெடுப்பிற்கு பிறகே, இந்தியாவில், இனங்களுக்கு இடையே பகையுணர்ச்சி வளர்ந்திருக்கிறது. இதை உண்மையென்று தெரிந்திருந்தாலும் கூட, நமக்கும் மூத்த தலைமுறையினர், தவறாகவே நமக்கும் செய்தியை கொடுத்து நாமும் அதையே நம்பிக் கொண்டு, இன்னும் ஒருவருக்கொருவர் பகை வளர்க்கிறோம்.

//you will also try to explore about sacred texts. :) //

ஆண்களின் கன்னித்தன்மை அறிய, வேதங்களில் நிச்சயம் அதிக குறிப்புக்கள் இருக்கிறது. உண்மையில், வேதங்கள் ஆண்களின் மேம்பாடுக்கே நிறைய குறிப்புகள் கொடுத்திருக்கிறது. அவற்றை பற்றி நிச்சயம் தனிப் பதிவிடுகிறேன். அவற்றை படித்த பிறகு நிச்சயம் நீங்கள் புனித நூல்கள் (sacred text) படிக்கவும், அவற்றை அறியவும் பேராவல் கொள்வீர்கள்.

--வித்யா

கிருஷ்ண மூர்த்தி S said...

எங்க வால்சுக்குச் சொல்லிக் கொள்வது என்னவென்றால்,ஒவ்வொரு கால கட்டத்திலும், ஒவ்வொருவிதமாக இந்த ஏற்பாடுகள் இருந்திருப்பதை இப்போதும் பார்க்கமுடியும்.

கோத்தகிரி போனீர்களானால், ஹெத்தை அம்மன் கோவில் என்று படகர்களின் குலதெய்வம் இருக்கும் இடத்தில் இளவட்டக் கல் என்று என்று ஒரு உருண்டையான கல், அதைத் தூக்கித் தோலுக்குப் பின்னால் போடுவது தெம்புள்ள இளைஞனைக் கண்டுபிடிக்கும் சோதனையாக இருந்து இருக்கிறது. இதே மாதிரி இளவட்டக் கல் ஒன்று கன்னிவாடிக்கு அருகிலோ வேறெங்கோ இருப்பதையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

கற்பு என்பது இருபாலருக்கும் பொது என்று சொன்னாலும், அதை ஆண்களுக்குச் சாதகமாகவே சிலப்பதிகார காலம் முதல் பயன்படுத்தி இருந்திருக்கிறார்கள், கோவலன் தப்புச் செய்தான் கண்ணகி அதை சாதரணமாகவே, அல்லது தொல்லை விட்டதென்றோ எடுத்துக் கொண்ட மாதிரித் தான் காவியம் சொல்கிறது. அதே சிலப்பதிகாரம், பரத்தைமை என்ற சீரழிவு தமிழர் பண்பாட்டில் ஊறிக் கிடந்ததையும் சொல்கிறது.

கண்ணகிக்குத் தவறு செய்த கோவலன் மீது கோபம் வரவில்லை, ஆனால் கோவலன் தண்டிக்கப் பட்டதும் மதுரையை எரிக்கிறாள்!

வேத காலம், அதில் சொல்லப் பட்டது ஒருபுறம், இப்படி ஒருகாலத்தில் சர்வ சாதாரணமாக இருந்த ஒன்று, இன்னொரு காலத்தில் கடுமையான விதிக்குள்ளாக்கப் படுகிறது. அப்படி மாறிக் கொண்டே இருப்பதை, அது சரி அல்லது தவறு என்று இன்றைய மதிப்பீடுகளின் படி, விமரிசிக்க முற்பட்டால், விவாதம் வளர்ந்து கொண்டே போகுமே தவிர, உண்மையைக் கண்டறிய முடியாது.

மேவி... said...

இங்கிலீஷ் ல ஏதோ சொல்லி இருக்கீங்க ..... அதை தமிழ்யில் என்னக்காக சொன்னால் நல்ல இருக்கும்

Vidhoosh said...

// டம்பி மேவீ said...

இங்கிலீஷ் ல ஏதோ சொல்லி இருக்கீங்க ..... அதை தமிழ்யில் என்னக்காக சொன்னால் நல்ல இருக்கும்///

எதுங்க்ணா???

க.பாலாசி said...

அழகான விளக்கங்களுடன் கூடிய ஆழமான பதிவு. மூழ்கிவிடதான் முடியவில்லை.

நல்ல பதிவு சகோதரி...

"உழவன்" "Uzhavan" said...

மிக அழகான கட்டுரை.
திருமணச் சடங்குகளுக்கான காரணங்களையும், தம்பதிகளுக்கான வாழ்வு முறையையையும் அழகாகச் சொல்லிவிட்டு, ஏன் இதனை "அழுகல்" பயிர் என்று சொல்லவேண்டும்?

அன்புடன்
உழவன்

Vidhoosh said...

நன்றி பாலாஜி.
நன்றி உழவன் - அழுகல் ஏன் என்று வரும் பதிவுகளில் பாருங்களேன். இது ஒரு தொடர் பதிவு..:) நன்றி உங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.

-வித்யா

HEALTH CARE said...

சிறுநீரக நன்கொடையாளர்கள் 500,000.00 அமெரிக்க டாலர் (3 கோடி) மற்றும் வெளிநாட்டு நாணயத்துடன் நாங்கள் அவசரமாக தேவைப்படுகிறோம். இப்போது விண்ணப்பிக்கவும்!, மேலும் தகவலுக்கு மின்னஞ்சல்:
healthc976@gmail.com

Post a Comment