நாராயணீயம் ப்ரத²மத³ஶகம்
ப்ரத²மத³ஶகம் (3)
ஸத்த்வம் யத்தத்புராப்⁴யாமபரிகலனதோ நிர்மலம் தேன தாவத்-
பூ⁴தைர்பூ⁴தேந்த்³ரியைஸ்தே வபுரிதி ப³ஹுஶ꞉ ஶ்ரூயதே வ்யாஸவாக்யம் |
தத்ஸ்வச்ச²த்வாத்³யத³ச்சா²தி³தபரஸுக²சித்³க³ர்ப⁴னிர்பா⁴ஸரூபம்
தஸ்மின் த⁴ன்யா ரமந்தே ஶ்ருதிமதிமது⁴ரே ஸுக்³ரஹே விக்³ரஹே தே || 1-3 ||
सत्त्वम् यत्तत्पुराभ्यामपरिकलऩतो निर्मलम् तेऩ तावत्-
भूतैर्भूतेन्द्रियैस्ते वपुरिति बहुशः श्रूयते व्यासवाक्यम् |
तत्स्वच्छत्वाद्यदच्छादितपरसुखचिद्गर्भऩिर्भासरूपम्
तस्मिऩ् धऩ्या रमन्ते श्रुतिमतिमधुरे सुग्रहे विग्रहे ते || 1-3 ||
sattvam yattatpurābhyāmaparikalaṉato nirmalam teṉa tāvat-
bhūtairbhūtendriyaiste vapuriti bahuśaḥ śrūyate vyāsavākyam |
tatsvacchatvādyadacchāditaparasukhacidgarbhaṉirbhāsarūpam
tasmiṉ dhaṉyā ramante śrutimatimadhure sugrahe vigrahe te || 1-3 ||
மகா வியாசர்
இறைவனை சுத்த சத்வ வடிவில் அடையாளம் காட்டியுள்ளார். மற்ற இரண்டு குணங்களுடன்
(ரஜஸ் மற்றும் தமஸ்) ஒப்பிடும்போது, அந்த சத்வ குணம் முற்றிலும் தூய்மையானது. அவற்றால் (அவ்விரு குணங்களால்)
கறைபடாதது. அத்தகைய தூய சத்வ குணத்தில் இருந்து உமது வடிவம் பிறந்தது. நுட்பமான
கூறுகள் மற்றும் புலன்கள் மற்றும் செயல் உறுப்புகளால் ஆனது. பல சாஸ்திரங்களில்
வியாச முனிவர் இவ்வாறு மீண்டும் மீண்டும் கூறுகிறார். இத்தகைய தூய்மையின் காரணமாக
இறைவனின் திருவடிவம், இந்த தூய
தெய்வீகத்தை தியானிப்பதன் நிமித்தம் (இது ஒளிமயமான பிரம்மம்) உள்ளிருக்கும்
உன்னதமான பேரின்பத்தையும் உணர்வையும் எந்தத் தடையுமின்றி மிகவும் பிரகாசமாக,
முழுமையாக
வெளிப்படுத்துகிறது. அந்த வடிவம்
மனதுக்கும் செவிகளுக்கும் இன்பம் தருவதாக உள்ளது. அந்த வடிவத்தில் அதிர்ஷ்டசாலிகள்
(நல்ல செயல்களைக் கொண்டவர்கள்) கண்டு மகிழ்ச்சி கொள்கிறார்கள். அந்த வடிவம்
மனதுக்கும் செவிகளுக்கும் இன்பம் தருகிறது, இப்படியான வடிவத்தால் உமது திருவுருவத்தை
பக்தர்கள் எளிதில் கிரகிக்க முடியும்.
=======================
ஆயுர்வேதத்தின் படி, மனிதன் இயற்கையின் ஐந்து அடிப்படைக் கூறுகளான பஞ்ச மகாபூதங்களால் ஆனவன், அதாவது ஆகாசம் (ஈதர் அல்லது விண்வெளி), வாயு (காற்று), தேஜஸ் (நெருப்பு), அப் (நீர்) மற்றும் பிருத்வி (பூமி). இந்த ஐந்து கூறுகளும் வெவ்வேறு உடல் உறுப்புகள் மற்றும் உறுப்பு அமைப்புகளை உருவாக்க மனிதனில் உருவாகியுள்ளன, அவற்றில் ஐந்து புலன்கள் (காது, தோல், கண், நாக்கு மற்றும் மூக்கு) புலன்களை உருவாக்குகின்றன, இதன் மூலம் மனிதன் வெளியுலகத்தை ஐந்து வித்தியாசமான வழிகளில் உணர்கிறான். இந்த உணர்வு உறுப்புகள் மூலம், வெளிப்புற பொருள் உணரப்படுவது மட்டுமல்லாமல், ஆற்றல் வடிவில் உட்புறமும் மனித உடலில் உறிஞ்சப்படுகிறது. இந்த ஆற்றல் திரிதோஷம் (மூன்று தோஷங்கள்) எனப்படும் (இன்பத்தை நுகரும்) மூன்று அடிப்படை மனப்பாங்குகளின் (humors) வடிவத்தில் மனித உடலை உருவாக்குகிறது.
Hippocrates; The four humors, or fluid substances, of the body were blood, yellow bile, black bile, and phlegm. This theory was closely related to the theory of the four elements: earth, fire, water, and air.
திரிதோஷங்களும் பஞ்ச மகாபூதங்களிலிருந்து உருவாகின்றன, வாத தோஷத்தில், சம்பந்தப்பட்ட மகாபூதங்கள் காற்று (வாயு) & விண்வெளி (ஆகாசம்); பித்த தோஷத்தில், நெருப்பு (அக்னி) மற்றும் நீர் (ஜலம்) ஈடுபடுகின்றன, மேலும் கப தோஷத்தில், நீர் (ஜலம்) மற்றும் பூமி (பிருத்வி) மஹாபூதங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த மனப்பாங்குகள் (திரிதோஷங்கள்) உளவியல் ரீதியாக திரிகுணங்களுக்கு (சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்) ஒத்திருக்கிறது. இது மனிதர்களில் ஆளுமையின் வெளிப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.
(த்ரி)குணம் என்ற கருத்து அதர்வ வேதத்திற்கு முந்தையது, இது பகவத் கீதையில் முதலில் விவாதிக்கப்பட்டது மற்றும் பின்னர் சாங்கிய தர்சனத்தில் சேர்க்கப்பட்டது. நவீன காலத்திலும் ஆளுமை பற்றிய கருத்தை விளக்க திரிகுணத்தின் கருத்து பயன்படுத்தப்பட்டுள்ளது.
நனவின் வளர்ச்சியானது திரிகுணத்தின் இந்த கருத்தில் வேரூன்றியுள்ளது. இவை (சத்வ) நிலைத்தன்மை எனப்படும்; ரஜாக்கள் செயல்படுத்தல் என்றும் தமஸ் செயலற்ற நிலை என்றும் அழைக்கப்படுகிறது. மனச் செயல்பாடுகள் மற்றும் மன செயல்முறைகள் (மனோவிருத்தி, மனோபிரவித்தி) ஆகிய செயல்பாடுகளை மனஸ் கூறுகிறது. அவை திரிகுணத்தின் வெளிப்பாடுகளாகக் கருதப்படுகின்றன. இந்த உளவியல் அம்சங்கள் மனிதர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, நாம் உண்ணும் உணவு, நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் மற்றும் நாம் வாழும் சூழலில் உள்ள மற்ற அனைத்து கூறுகளும் உட்பட கிட்டத்தட்ட அனைத்து உயிரினங்களுக்கும் காரணமாக இருக்கின்றது. ஒவ்வொரு உயிரினமும் குண/பிரகிருதி என்ற ஒன்று அல்லது மற்ற அம்சங்களின் ஆதிக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது, இது அந்த விஷயத்திற்கு அதன் தனித்துவமான தரத்தை அளிக்கிறது.
அனைத்து
மனிதர்களும் மூன்று குணங்களின் கலவையாக இருக்கிறார்கள், எனவே இந்த மூன்று அம்சங்களும் ஒன்று அல்லது
மற்ற குணங்களின் ஆதிக்கத்தின் அடிப்படையில் வெவ்வேறு வகையான ஆளுமைகளை
ஊக்குவிக்கின்றன. ஒவ்வொரு ஆளுமையும் அவரவர் வழிபாட்டு முறை, உட்கொள்ளும் உணவின் வகை மற்றும் அன்றாட
வாழ்க்கையின் பிற செயல்பாடுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படலாம்.
சங்க காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் சைன பௌத்த சமயங்கள் செல்வாக்குப் பெற்றன. துறவறத்திற்குப் பெருமை ஏற்பட்டது . அதனால் மக்களின் காதல் வாழ்வுக்கும் இல்லறத்திற்கும் இருந்த பெருமை குறையத் தலைப்பட்டது . இந்த உலகில் உள்ள இன்பங்களை வெறுத்து , மறுமையை மட்டும் நாடுவதே கடமை என்ற மனப்பான்மை வலுத்தது . ஆடல்பாடல் ஓவியம் சிற்பம் முதலிய கலைகளின் மதிப்புக் குன்றியது . இந்த நிலையிலும் சிலப்பதிகாரம் இருவகை நிலைகளையும் எடுத்துரைத்து இரண்டிற்கும் பாலம் போலவே அமைந்தது . சிலப்பதிகாரத்தில் துறவறம் பெருமையுறக் கூறப்படுகிறது ; இல்லறமும் கற்பும் பெருமை பெறப் பேசப்படுகின்றன . நிலையாமையும் வற்புறுத்தப்படுகிறது ; கலைகளும் போற்றப்படுகின்றன . காப்பியத்தின் முடிவில் மட்டுமே தேகத்துக்கு உறுதுணை தேடுமின் என மறுமைக்கு உரிய முயற்சி வலியுறுத்திக் கூறப்படுகிறது . மற்ற இடங்களில் எல்லாம் , இரண்டும் மாறி மாறி விளக்கப்படுகின்றன . ஆழ்வார் நாயன்மார் பாடல்களில் துறவறம் பழிக்கப்படவில்லை ; இல்லறம் வெறுக்கப்படவில்லை . நிலையாமை உணர்த்தப்படுகிறது ; கலைகளும் போற்றப்படுகின்றன . இந்த உலக இன்பங்களை நுகர்ந்தவாறே இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம் என்ற தெளிவைப் பக்தி இலக்கியம் தருகிறது . உலக வாழ்வைக் கண்டு அஞ்சும் அச்சம் நீங்கி , மக்கள் கூடி வழிபாடு செய்து பக்தியுணர்ச்சியில் திளைத்திருக்க ஊக்கமூட்டுகிறது . மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்கிறது திருஞானசம்பந்தர் பாடிய தேவாரத்தில் உள்ள அறிவுரை. சைனத் துறவியாக , துறவிகளில் தலைவராக இருந்து சைவ சமயத்திற்குத் திரும்பியவர் எனக் கூறப்படும் திருநாவுக்கரசர் பாடியுள்ள தேவாரம் பின்வரும் பாடலில் இயற்கை தரும் இன்பங்களும் இயற்கையைப் பயன்படுத்திப் பெறும் இன்பங்களும் கலை இன்பங்களும் எல்லாம் இறைவன் தரும் இன்பங்களே என்ற உண்மை விளங்குகிறது.
குருகாம் வயிரமாம் கூறு நாளாம்
கொள்ளும் கிழமையாம் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டில் பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாக னுமாம்
உள் நின்ற நாவிற்கு உரையா டியாம்
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும்
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே .
இதே போல உண்ணும்
சோறு , பருகும் நீர் , தின்னும் வெற்றிலை முதலிய எல்லாம் கண்ணனாகிய
எம்பெருமானே , அவன் அருளால்
பெறும் இன்பங்களே என்று கண்ணீர் மல்கி உருக வேண்டும் என்பது நம்மாழ்வாரின் அறிவுரை
. இவ்வாறே மற்ற ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடிய பாடல்களிலும் இறைவனை நினைந்து
உருகும் பக்தியே மேலோங்கி நிற்க , மற்ற விருப்பு
வெறுப்புகளும் கொள்கைகளும் அச்சங்களும் பின்னிலை அடைகின்றன.
ஆழ்வார்
நாயன்மார்களின் பக்திப் பாடல்கள் விளைத்த புரட்சி ஒன்று ; கடவுளுக்குமுன் மக்கள் எல்லோரும் சமமானவர்கள் , கடவுள் ஒருவரே
எல்லா மக்களுக்கும் தலைவர் என்ற கருத்தைப் பரப்ப அந்தப் பாடல்கள் உதவின. அதனால் , அரசர்களையும் செல்வர்களையும் பாடுவதற்குப் பயன்பட்ட தமிழ் , கடவுளைப் பாடுவதற்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்ற கொள்கை வளர்ந்தது .
அரசர்களுடைய அரண்மனைகளையும் செல்வர்களின் மாளிகைகளையும் நாடிச் சென்று ஏங்கி நின்றவர்களைத்
திருப்பிக் கோயில்களை நாடி நிற்கச் செய்தார்கள் . அரண்மனைக்குப் பெயராக அதுவரையில்
வழங்கிவந்த கோயில் என்ற சொல்லே கடவுளின் ஆலயத்துக்கு உரிய சொல்லாகுமாறு மாறுதல்
ஏற்பட்டுவிட்டது . நாட்டில் அதுவரையில் மிக உயர்ந்த கட்டடமாக இருந்தவை அரண்மனைகளே
. பக்திப் பாடல்கள் செய்த புரட்சியின் விளைவாக , அரண்மனைகளுக்கு
இருந்த சிறப்பெல்லாம் கோயில்களுக்கு உரியன ஆயின . அரண்மனைகளைவிட உயர்ந்த
கட்டடங்களாகக் கோயில்களின் கோபுரங்கள் ஓங்கி நிற்கும்படியான மாறுதலைச் செய்த
பெருமை பக்திப் பாடல்களுக்கே உண்டு . அரண்மனைக்குச் சென்று விடியற்காலையில் அரசன்
துயிலெழுமாறு பாடிவந்த இசைப்புலவர்களையும் மற்றவர்களையும் கோயிலை நாடிச் சென்று
வைகறையில் துயிலெழுப்பும் பாடல் (திருப்பள்ளியெழுச்சி ) பாடும்படியாகச்
சமயத்தலைவர்கள் செய்துவிட்டார்கள் . அரண்மனையில் இருந்த அரசனும் வைகறையில் எழுந்து கோயிலுக்குச் சென்று மக்களோடு சேர்ந்து
திருப்பள்ளியெழுச்சி வழிபாட்டில் கலந்துகொள்ளும்படியான நிலைமை ஏற்பட்டது.
அரண்மனையில் நிகழ்ந்துவந்த விழாக்கள் பல , கோயில்களில்
கடவுளுக்கு உரிய திருவிழாக்களாக மாறின . மனிதர்க்குள் இருந்து வந்த
உயர்வுதாழ்வுகளும் சாதிவேறுபாடுகளும் ஒருவாறு புறக்கணிக்கப்படுவதற்கும் இந்தத்
திருப்பம் பயன்பட்டது எனலாம்.
இந்த உடம்பின் இயல்பு எப்படி இருக்கிறது? சூட்சும தேகம் வெளியாவது என்றால் என்ன? நெல் முளைத்தால், அதை பார்க்கும்போது வெண்டாகி(முளைகட்டு நெல்) இருக்கும். அந்த நெல் முளைத்துவிடும். அந்த நெல் வெண்டாகி விடும்.
நெல் முளைத்து அதன் இலைகள் விரிய ஆரம்பிக்கும்போது அந்த நெல்லை அதுவரை பாதுகாத்து வந்த மேலே இருந்த உமி நெற்பயிரை விட்டு தானே கழன்று கீழே விழுந்துவிடும். இதை தஞ்சை பகுதியில் வெண்டாதல் என்பார்கள். அதுவரை நெல்லாயிருந்த அந்த அரிசியானது தக்க சூழ்நிலையில் முளைத்து நெல் என்ற நிலையிலிருந்து செடியாக மாறிவிட்டதால் அங்கே நெல் இல்லை, ஆக ஒன்றுமில்லாமல் ஆகி விடும்.
அது போன்று, இந்த புறதேகம் வீழ்ச்சியடைகிறது, வெண்டாகி விடுகிறது, ஒன்றும் வலுவில்லாமல் போய்விடுகிறது. பதர் போன்று ஆகிவிடும். வெண்டு – முளைத்ததற்கப்புறம் வெண்டாகி விடுமென்று சொல்வார். அது மாதிரி, முளைக்கக் கூடிய ஒன்று சூட்சும தேகம். இப்படி ஒரு உண்மை இருக்கிறது. எனவே முளைக்கக்கூடிய ஒன்றுதான் உண்மையான ஆன்மிகம். ஒவ்வொருவரும் அந்த தேகத்தைப் பற்றியே தெரியாமல் இருக்கிறார்கள்.
இப்படி ஒரு தேகம் நம்மிடம் இருக்கிறது. அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும்? இப்படி ஒன்று இருக்கிறது. பிடித்துக் கரையேறிக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருக்காது. ஏன் ஒரு சிலருக்கு மட்டும்தான் அந்த ஆர்வம் இருக்கிறது? யாரொருவன் ஞானிகளை தினம் பயபக்தியோடு வணங்கி பூஜை செய்கிறானோ, அவர்களுக்கு இது கைகூடுகிறது. கழிக்கின்ற மக்கள் அந்த வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள்.
வழிபாடு எப்பொழுது மனிதன் துவங்குகிறான் என்று எதார்த்தமாக சிந்தித்துப் பாருங்கள் தான் தன்னுடையது என்று எண்ணம் கொண்டு என்னால் எல்லாம் முடியும் என்ற எண்ணம் இருப்பவர்கள் பெரும்பாலும் வழிபாடு செய்வதில்லை எப்பொழுது தன்னால் ஒன்றை செய்யமுடியவில்யோ அப்பொழுது இயற்கையாகவே அவன் ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் வழிபாடு நோக்கி செல்கிறான். சிறுவயதில் ஆசிரியர் வரக்கூடாது என்று வேண்டுவான் அல்லது விடுமுறை வேண்டும் என்று வேண்டுவான் இப்படி தன்னால் முடியாததை ஏதோ ஒன்று அதை செய்யும் என்ற நம்பிக்கையில் அதை நோக்கி வழிபாடு செய்கிறான் அது நாளடைவில் அதிதீவிரமாக செயல்படுவது காரணம் என்னவென்றால் தன்னை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறான் அந்த சக்தி தான் நம்மை வழி நடத்துகிறது என்பதை உணர்கிறான் அந்த உணர்வு எப்பொழுது நம்மிடம் தோன்றும் என்றால் நம்மிடம் இருக்கும் ஆணவம் நெகிழ்ந்து போகிறதோ அப்பொழுது தான் நம்மிடம் வழிபாடு என்ற எண்ணமே தோன்றுகிறது இது மனிதன் இயற்கை ஆகும்.
அந்த வகையில் வழிபாட்டை நான்கு விதமாக சுருக்கமாக வகைபடுத்தி உள்ளார்கள் நம் முன்னோர்கள்
சரியை - தாதமார்க்கம் (தாச மார்க்கம்)
கிரியை - சற்புத்திர மார்க்கம்
யோகம் - சகமார்க்கம்
ஞானம் - சன்மார்க்கம்
இதன் விரிவு ஒவ்வொன்றிலும் நான்காக பிரிந்து பதினாறாக விதமாக விரிவு பெறுகிறது. அவை
சரியையில் நான்கு
சரியையிற் சரியை - சரியை நெறியில் திருக்கோயிலில் திருவிளக்கிடுதல் முதலான தொண்டுகள்.
சரியையிற் கிரியை - ஒருமூர்த்தியை வழிபடல்.
சரியையில் யோகம் - வழிபடும் கடவுளையும் சிவனையும்தியானித்தல்.
சரியையில் ஞானம் - சரியை வழிபாட்டால் அனுபவம் வாய்க்கப் பெறுவது.
கிரியையில் நான்கு
கிரியையிற் சரியை - பூசைப் பொருட்களைத் திரட்டல்.
கிரியையிற் கிரியை - புறத்தில் பூசித்தல்.
கிரியையில் யோகம் - அகத்தில் பூசித்தல்.
கிரியையில் ஞானம் - மேற்கூறிய கிரியைகளால் ஓர் அனுபவம் வாய்க்கப் பெறுதல்.
யோகத்தில் நான்கு
யோகத்திற் சரியை - இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்.
யோகத்திற் கிரியை - பிரத்தியாகாரம், தாரணை.
யோகத்தில் யோகம் - தியானம்.
யோகத்தில் ஞானம் - சமாதி.
ஞானத்தில் நான்கு
ஞானத்திற் சரியை - ஞானநூல்களைக் கேட்டல்.
ஞானத்திற் கிரியை - ஞானநூல்களைச் சிந்தித்தல்.
ஞானத்தில் யோகம் - ஞானநூல்களைத் தெளிதல்.
ஞானத்தில் ஞானம்
- ஞான நிட்டை கூடல்.
Sloka
1:https://vidhoosh.blogspot.com/2021/11/11.html
Sloka
2: https://vidhoosh.blogspot.com/2021/11/12.html
Sloka 3: https://vidhoosh.blogspot.com/2021/12/13.html
0 comments:
Post a Comment