லதா


லதா

தூறலின் ஈரம்கசிந்த 
மண் வாசனையில்
நீ.

நீ
காலம்.
உன் பெயர்
வாழ்க்கை.

நீ
விட்டுச் சென்ற அத்தருணங்களுக்கு
விடைகொடுக்க முடியவில்லை.

எல்லோருக்கும் பரிமாறிக்
களைத்திருந்த உனது கைகளை நீட்டு
என் வளைக்காப்பு வளையல்களை
 சாற்றுகிறேன் நடுங்கும் கரங்களுடன்
தொட்டிலிட்டக் காப்பரிசி
மண் குளித்த துரௌபதிக்கு
கூறைப்புடவை நிறத்துச் சுடிதார்.

ஏற்றுக்கொள்.
வருவதற்கில்லை நீ
இனி எப்போதும்

ஏற்றுக்கொள்!

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விடை கொடுக்க முடியாது...!

Avargal Unmaigal said...

அருமையான அஞ்சலி கவிதை

ஸ்ரீராம். said...

அருமை. ப்ளாட்டிங் தாளில் உறியப்பட்ட மை போல நினைவுகளை உறிஞ்சிய மனம். அழிக்க முடிவதில்லை.

Post a Comment