1. ஓங்கார சூத்திர சதானந்த வாரியில்
ஓரெழுத் தானபரனே,
ஓரியாய் நீயெனக் கஞ்செழுத்தொரு செவியி
லோதிவைத் தவனல்லாவோ
ஆங்காரமற்று சுகமற்று துக்கமுமற்று
ஐம்புலன் பாசமற்று
ஆகா சங்கிடுகிடென் றிடியிடித்தமிர் தமழை
யாராதா ரத்தில் பொழிய
ரீங்கார நாதமணி வந்துவுக்குள்ளாகி
யிரவுச்சி புருவனடுவின்
இரதிமன் மதன்போல் விளையாடுவதைக் கண்டு
ராகமிட்டுனதுமுன்னை
வீங்காமனின்றுனது திருவடியின் மகிமைதனை
விகசிப்பதொக்காலமோ
வேதாந்த பரமசிவ மெய்ஞ்ஞான மூர்த்தியே
வேமனானந்த குருவே.
2. அறியாத பாலனை யழைத்து புத்திகள் சொல்லி
அன்பு வைத் தாள்வதற்கு
ஐயையோ நானுனக் காகாத பாவியோ
அப்பனே யதவீகனே
மரியாதை யாகவெனை ரக்ஷிக்க தருணமிது
மாய்கைசம் மாரதேவா
மனமகிழாதின்றைக்கு வாராமல் போனாயோ
மடியில்கை போட்டிழுப்பேன்
பரியாசமென்றுவுன் சிந்தைதனிலிவ் வார்த்தை
பாராட்ட வேண்டுவதில்லை
பத்தியா யுந்தனை மறவாம லனுதினம்
பாங்குடனிராமயத்தின்
வெரியா கிலுமதந் தகண்ட பரிபூரண
விவேகமறி விக்கொணாதோ
வேதாந்த பரமசிவ மெய்ஞ்ஞான மூர்த்தியே
வேமனானந்த குருவே.
3. பஞ்ச பூதங்களோடு யானுமொரு பூதமாய்
பட்டகுறை மெத்தவுண்டு
பக்ஷமுடன் கேட்பீரேயாமாகில் சொல்லக்கேளும்
பரமனே பரமயோகி
கஞ்சலப்படுகுழியில் கர்மமென்றெண்ணாமல்
சந்தோஷமாய் விழுந்து
சத்யநிலை யின்னை தென்றறியாமல் மூடனாய்
சகிக்காமலன்றுகெட்டு
கொஞ்சாமாகிலு முனக் கஞ்சலிதைசெய்யாமல்
குரங்காய் முழிக்கலாச்சே
கோணாமல் வந்தெனக் குயர்வான வழிகாட்டி
கோரிக்கையின் படிக்கு
வெஞ்சின மறந்துமக ராஜகெம்பீரன்போல்
விந்தைதனில் வுட்காரவை
வேதாந்த பரமசிவ மெய்ஞ்ஞான மூர்த்தியே
வேமனானந்த குருவே.
4. எத்தனை பயந்தடி மைசரணமென்றழுதாலு
மென்மேலுனக்கு கருணை
எள்ளளவிலாதது விதிவசமிதென்னவோ
எப்போது மொருதிட்டமாய்
இதனை கடூர குணமேன் சித்வி லாசனே
இந்த ஜகமாயதைத் தன்னுள்
இரவுபக லச்சமற முச்சந்தில் பத்துவிதமாய்
இங்கிதக் குயில்கள் பாட
முத்தியென் கிறசரியை மோக்ஷவை ராக்கிய
முத்திமிட்டணைவதற்கு
முட்டாளையாட் கொண்டு மெய்ஞ்ஞான மறிவித்து
மூக்கு நுனி மீதல் சதமாய்
வத்திலா மணிவிளக்கவியாம லெரியவே
வரமருள வேண்டுமென்று
வேதாந்த பரமசிவமெய்ஞ்ஞான மூர்த்தியே
வேமனானந்த குருவே.
5. தத்துவக் குப்பையைக் கொளுத்தி தூளிதமாக்கி
தண்ணீரில் கலக்கி விட்டு
தனயனுன் னாளாவதற்கு யெண்ணங் கொண்டு
தாமத குணத்தைவெட்டி
சத்துசித் தொன்றாகியட்டாங்க யோகநெறி
சாதிக்கவே நாடொறும்
சரணமென்றுனை பணியுமடியார்க்கு மடிமையாய்
சதயமாய் கைமுழங்கி
பத்தரை மாற்று தங்கமாய் தங்கமொடுகெம்பாகி
பரமசிவ நாதசுடராய்
பவழமாய் படிகமாய் நீலமாய் கண்கொண்டு
பார்த்ததெல்லாம் பிரம்மமாய்
வித்துவாய் வித்துநடு முளையாகி நிற்கவே
விதமருளச் செய்யவேண்டும்
வேதாந்த பரமசிவமெய்ஞ்ஞான மூர்த்தியே
வேமனானந்த குருவே.
6. எட்டாத வரசிக் கொடிமர வுச்சிதனிலேறி
எச்சரிக்கையாக நின்று
எண்சாண் துருத்தி தனிலெரிகின்ற தீ தணிய
எங்குமேலாடு பொருளாய்
முட்டாத காராம் பசும்பால் தனைவேண்டிய
முக்கண்ணுருட்டி தலமாய்
முலையுண்டதற்கு மொன்றஞ் சாமலைசையாய்
மும்மலங்களை யொழித்து
கட்டாத கட்டுபடுமந்திரம் ஜெபிப்பர்தமைக்
காரணகயிற்றில் கட்டி
காடிலா மலைமீதில் வேறிலமவுனபயிர்
காம்பிலா தரிவாளினால்
வெட்டாக வெட்டுறுத் தொரு நொடியில் சோறாக்கி
வெறிகொண்டு உண்பதன்றோ
வேதாந்த பரமசிவமெய்ஞ்ஞான மூர்த்தியே
வேமனானந்த குருவே.
7. ஆதியா யந்தமாயந்தநடு வாதியாய்
ஆறுமுக ருத்ராக்ஷமாய்
ஆட்டமாய் பாட்டமாய் வோட்டமாய் நாட்டமாய்
ஆனந்த குஞ்சரிப்பாய்
சாதியாய் மின்னலாய் மின்னல் நடு மாசியா
சொக்கலிங்கக் கடவுளாய்
சோகமாய் மோகமாய் தாகமாயென் மனதை
சோதிக்க வந்த கனமாய்
நீதியாய் நேமமாய் நேமனடு முந்தியாய்
நீரோட்ட வெளிகுமிளியாய்
நீட்டமாய் வாட்டமாய் தேட்டமா யெந்நாளும்
நீங்காதா னந்தவடிவாய்
வேதியாய் கோபியாய் கோபமாயணுவாகி
விண்ணேற விட்டகனியே
வேதாந்த பரமசிவமெய்ஞ்ஞான மூர்த்தியே
வேமனானந்த குருவே.
8. தன்னைத்தானறியாமல் தாய்போலுமுளறினால்
தாரகம் வெளியாகுமோ
தானென்ற வாணவப் பேயனைக் கொல்லாமே
தப்பிதங்கட் போகுமோ
பொன்னையும் மண்ணையும் பெண்ணையு மறக்காமல்
பொய் மெய் யொன்றாகுமோ
பேதமாய் நாத சங்கீத மணிகேளாமல்
பம்பரம் பருடலாடுமோ
என்னையா னறியா மல் தலைவனைக் காணாமல்
எட்டுதிக் கொன்றாகுமோ
எச்சிலென் றமிர்தத்தை யுண்ணாக்கி லுண்ணாம
லெந்தனிட பசியாறுமோ
உனை சதா காலமாய் கீழ்மேல் துதிக்காம
லுன்னுடைய மனமுருகுமோ
வேதாந்த பரமசிவமெய்ஞ்ஞான மூர்த்தியே
வேமனானந்த குருவே.
9. மண்ணுநடு வப்பாகி யப்புதனில் விஷ்ணுவாய்
மாய்கைநடு சங்கரனுமாய்
மனதுநடு பிரமமாய் பிரமநடு ஞானமாய்
மாணிக்க கொடிவிளக்காய்
கண்ணுநடு ரூபமாய் காதுநடு சத்தமாய்
கண்டநடு மந்திரமுமாய்
நானல்நடு னாந்தலாய் நாந்தல்நடு நானலாய்
காணாதவெண் சாரையாய்
பெண்ணுநடு வாணுமாய் வாணுநடு பெண்ணுமாய்
பெரிய நாமக்கா ரனாய்
பேயனாய் பித்தனாய் வெறியனாய் ஊமையாய்
பேரின்ப மவுனநெறியாய்
விஷ்ணுநடு விந்துவாய் விந்துநடு நாதமாய்
விளையாடுகின்ற பரனே
வேதாந்த பரமசிவ மெய்ஞ்ஞான மூர்த்தியே
வேமனானந்த குருவே.
10. சித்தியூரைச் சார்ந்த போடிமலை குகையினுட்
சித்தன்பு மீதில் நாட்டி
சிறிதுநா ளின்பதுன் பங்களுட னடிபட்டு
சிறியனுன் நாமதியானம்
பக்கியா யுருவேத் துணைக்காண் பதற்காக
பதினான்கு லோகமெட்டிப்
பஞ்சபூ தங்களை நொடிக்குளுன்னைக் கண்குளிர
பார்க்கலுற் றருமையானே
புத்தியுள் ளப்பிள்ளை என்றனுக் குபதேசம்
புண்டரீ காக்ஷனறியப்
பிரியமாய் நரசிங்க தாசனே கேளென்று
பட்சமென்மீதில் வைத்து
வெற்றிலையும் பாக்கு சுண்ணாம்பு மூன்றொன்றாக
விபரமருளிட்ட துரையே
வேதாந்த பரமசிவ மெய்ஞ்ஞான மூர்த்தியே
வேமனானந்த குருவே.
வேமனானந்த சுவாமி பதிகம் முற்றிற்று.
0 comments:
Post a Comment