ப்ரபல கவுஞ்சரான எனக்கு பொறாமை நோய் தாக்கிவிட்டது. போதாக்குறைக்கு பிரபல பதிவர் கோபி ஆர் வேறு எனக்கு ஃப்லோ விட்டுப் போச்சு என்று சொல்லிட்டார். எங்க அடுத்த வீட்டு பதிவர் மற்றும் என் ஒரே தம்பிக்கு வாழ்க்கை கொடுத்த புண்ணியவதி மற்றும் பிரபல கதாசிரிய எழுத்தாள இலக்கியவாதி ஸ்கிரிப்ளிங்க்ஸ் வித்யா-வுக்கு உலகெங்கும் வாசகர்கள் பறந்து விரிந்து இருக்கிறதைப் போலவே எனக்கும் நைஜீரியாவில் (ஒரே) ஒரு வாசகர் இருக்கார்.... ஒலக இலக்ஸ் ஆகலாமா ... ன்னு ஒரே இன்செப்ஷன்... அதுக்கு தனியா ப்ரொஜெக்டர் ஏதாவது வாங்கணுமா...ன்னு ஒரே ரோசனை.
உடனே பக்கத்தில் சிப்ஸ்சை நொறுக்கியபடி அமர்ந்திருந்த ஆஸ்திரேலிய நண்பர் அமேரிக்கா போனால்தான் குறைந்த விலையில் நயமான தரமான நல்ல ப்ரொஜெக்டர்ஸ் கிடைக்கும் என்றார்.
அமெர்க்காவெல்லாம் நம்பிள்கு அடுத்த வீடு மாதிரி.. இப்படித்தான் போன தரம் போன வாரம் லண்டன் மாநிலம் போயிருக்கும்போது ஒரு வாசகர் வந்து அப்படியே கையில் இருக்கும் பர்சை எல்லாம் அடிச்சு கிட்டு போயிட்டார்.. .எவ்ளோ பிரியம் நம்ம மேலன்னு அப்டியே புல்லரிச்சுப் போயி, ரோட் சைட்ல துண்ட விரிச்சு உக்காந்துகிட்டேன்... என் கவுஜை புக்கு ரிலீஸ் பண்ணிருந்தாக்கூட அவ்ளோ கலெக்ஷன் வந்திருக்காது என்பதை நினைச்சு அப்பிடியே கண்ணெலாம் கலங்கிடுச்சு.
முடிவா நானும் இலக்கியவாதி ஆகோனும்னு எங்க சங்கத்துல முடிவாயிடுச்சு. அதுனால அடுத்த வருஷம் பொஸ்தக காட்சிக்கு பல கலைஞர்கள் ஒன்று கூடும் விழாவொன்றை உங்கள் செலவில் நடத்தி, என் புஸ்தகத்தை வெள்யீடு பண்ணிரலாம்னு தீர்மானமாயிருச்சு.
கவுஜை புத்தகத்துக்கு முன்னுரை எழுத எங்கள் தளபதி நசரேயன், பொழிப்புரை எழுத என் பொறாமைக்கு வித்திட்டு கவுஜை புத்தகம் ரிலீஸ் பண்ண ஒரே காரணமாய் இருக்கும் போட்டியாளர் ஸ்கிரிப்ளிங்க்ஸ் வித்யா ஆகியோரை அழைக்கிறேன்.
புத்தக விமர்சனம் பண்ணுவதற்கும், என் கவுஜை புஸ்தகத்தை பெற்றுக் கொண்டு விலாவை சிறப்பிக்கவும் தான் ஆளே கிடைக்கலை... அப்போ உங்கள்ள யாரு அந்த அதிர்ஷ்டசாலி...?
சோடா ப்ளீஸ்.
15 comments:
புக் வந்தப்பறம் சொல்லுங்க ஒரு பேட்டி எடுத்திடறேன் :)
விலா வை சிறப்பிக்கனுமா இதோ நான் வரேன் விதூஷ்....
ஆனால் விலா வா விழா வா???
என்னதிது இது..?
பதிவில் உள்ளதை காப்பி செய்யவே முடியவில்லை..!
பின்பு நாங்கள் எப்படி மேற்கோள்காட்டி பின்னூட்டமிடுவது..?
வன்மையாகக் கண்டிக்கிறோம்..!
விஜி: வயித்திலே வத்த குழம்பை கரைக்காதீங்க :))
சக்தி: விலா-தான்.. ரொம்ப நாளா கழுத்து, விலா, முதுகு எல்லாம் பயங்கர வலி... அப்டியாவது குறையுமான்னு ...:))
உ.த அண்ணரே... அப்படியே post comment பக்கத்தில் show original post என்ற link தலைப்புக்கு பக்கத்தில் இருக்கும்...அங்கேர்ந்து காபி பண்ணுங்க. :))
இதெல்லாம் நீங்க நேத்து வந்த உயிர்மை
கவிதை தொகுப்புக்கு வந்த effect ஆ?
பிரபல பதிவர் கோபி அப்படிங்கறது யாரு:)
அப்புறம் விதூஷ், வித்யா அடுத்த கட்டத்துக்குப் போய்ட்டாங்க. மேடம் இந்திப் படமெல்லாம் பாக்குறாக. விமர்சனம் வேற எழுதுறாக. You are still lagging:)
நான் வேணா விமர்சனம் போடறேன். மானே தேனே பொன்மானே போட்டு ஜமாய்ச்சிடலாம். புக்கு வாங்கிக்க விஜியைக் கூப்பிடுங்க:)
புக்கு வாங்கிக்க விஜியைக் கூப்பிடுங்க:)//
கோபி காசு கொடுத்தெல்லாம் நான் புக் வாங்க மாட்டேன்..... :)))
புத்தக அறிமுக விழா வெளியிடுறேன்
//கவுஜை புஸ்தகத்தை பெற்றுக் கொண்டு விலாவை சிறப்பிக்கவும் தான் ஆளே கிடைக்கலை...//
எச்சூஸ்மி... நான் ரெடி... ஒரே ஒரு ரிட்டர்ன் டிக்கெட்டு (அபுதாபி-சென்னை, NOT அபுதாபி-சொர்க்கலோகம்) மட்டும் கொடுத்தாப் போதும்.
இப்பிடிக்கு
எதையும் தாங்கும் இதயம் கொண்ட
ஹுஸைனம்மா
//கவுஜை புத்தகத்துக்கு முன்னுரை எழத எங்கள் தளபதி நசரேன்//
இதை நான் வலி மெலிகிறேன். ;-)
ஆகா... வாங்க வாங்க வாங்க... பா.ரா. அண்ணே... நீங்க இல்லாம பதிவுலகே அழுவாச்சி காவியமா போயிருச்சும்வே.. இப்போ வந்த்துட்டீர் இல்ல...எப்பா... இப்பத்தான் களை கட்டும் ... கலக்குங்க கலக்குங்க.... கைவசம் கவிதைகள் நிறையா இருக்கும்.. ஓலை படிச்சதென்ன, புதுப் புடைவ தந்ததென்ன, நலங்கு சாத்தியதென்ன அப்டீன்னு ஒவ்வொண்ணுத்தையும் வீடியோ படமா கவிதையில் காட்டும்... :)))
:)) காவேரி கணேஷ்..அப்பிடியும் இருக்கலாம் இப்படியும் இருக்கலாம் எப்படியும் இருக்கலாம்..
கோபி: avaru kadhaiyellaam eluthuvaarunga..
viji: :)))) ungalukku free...
nasareyan: aang... athuthaan sari.
hussainamma: :))))))) kandippaa.. chennai-ku vanthu vittu kamukkamaa pona aal thaane neenga. :))
:)
//நசரேயன் said...
புத்தக அறிமுக விழா வெளியிடுறேன்
December 27,2010 6.24 PM//
இரயிலடி இரங்கரே, எல்லாம் சொல்லி வெச்சித்தான் நடக்குதா? நடக்கட்டு...நடக்கட்டு!!
Post a Comment