ஸ்ரீ அருணாச்சல மகாத்மியம் - பூர்வ பாகம் - அத்தியாயம் 3.2 (தொடர்)



Picture: Thanks to http://sjoneall.net/


शून्यं ज्योतिःप्रचारेण विनाशं प्रत्यपद्यत।
न व्यजृम्भन्त विबुधा न च वेदाश्चकासिरे नाऽपि जीवाः समभवन्नव्यक्तंकेवलंस्थितम्।
जगतामपिसर्वेषामकालेवीक्ष्यसंक्षयम् तपसा लब्धस्फ़ूर्तीनां विचारः समपद्यत।
किमेतत्तमसो जन्म भुवनक्षयकारणम्॥
भगवानपि सर्वात्मा न नूनं कालमाक्षिपत्।
देवी विनोदरूपेण पिधत्ते पुरजिद्दृशः तेनेदमखिलं जातं निस्तेजो भुवनत्रयम्।
अकालतमसा व्याप्ते सकले भुवनत्रये॥
का गथिलैब्धराज्यानां तपसा देवजन्मनाम्।
न यज्ञाःसम्प्रवर्तन्ते न पूज्यन्तेसुराभुवि
इति निश्चत्य मनसा वेक्ष्य ते ज्ञानचक्षुषा।
नित्यास्ते सूर्य भक्त्या शम्भुमानम्य तुष्टुवुः॥३४॥
नमः सर्वजगत्कर्त्रे शिवाय परमात्मने।
मायया सक्तिरूपेण पृथग्मावमुपेयुषे॥३५॥

ஸூன்யம் ஜ்யோதி:ப்ரசாரேண வினாஸம் ப்ரத்யபத்யத|
ந வ்யஜ்ரும்பன்த விபுதா ந ச வேதாஸ்சகாஸிரே நாபி ஜீவா: ஸமபவன்னவ்யக்தம்கேவலம்ஸ்திதம்|
ஜகதாமபிஸர்வேஷாமகாலேவீக்ஷ்யஸம்க்ஷயம் தபஸா லப்தஸபூர்தீனாம் விசார: ஸமபத்யத|
கிமேதத்தமஸோ ஜன்ம புவனக்ஷயகாரணம்||
பகவானபி ஸர்வாத்மா ந நூனம் காலமாக்ஷிபத்|
தேவீ வினோதரூபேண பிதத்தே புரஜித்த்ருஸ: தேனேதமகிலம் ஜாதம் நிஸ்தேஜோ புவனத்ரயம்|
அகாலதமஸா வ்யாப்தே ஸகலே புவனத்ரயே||
கா கதிலைப்தராஜ்யானாம் தபஸா தேவஜன்மனாம்|
ந யஜ்ஞா:ஸம்ப்ரவர்தன்தே ந பூஜ்யன்தேஸுராபுவி
இதி நிஸ்சத்ய மனஸா வேக்ஷ்ய தே ஜ்ஞானசக்ஷுஷா|
நித்யாஸ்தே ஸூர்யஓ பக்த்யா ஸம்புமானம்ய துஷ்டுவு:||34||
நம: ஸர்வஜகத்கர்த்ரே ஸிவாய பரமாத்மனே|
மாயயா ஸக்திரூபேண ப்ருதக்மாவமுபேயுஷே||35||

காரிருள் சூழ்ந்து உலகம் முழுதும் நாசமானது.
தேவர்கள் அனைவரும் அசைவற்றுப் போயினர். வேதங்களை கோஷிக்க யாரும் மிஞ்சவில்லை, உயிருள்ளவையனைந்து நசிந்தன, பிரபஞ்சம் நின்றுபோனது.
இருள் சூழந்தால் உலகிற்கு ஏற்பட்ட இப்படிப்பட்ட அகாலமான பேரழிவால், தவத்தினால் உண்டான ஆற்றலுடன் கூடிய முனிவர்களும் சித்தர்களும், தங்களுக்குள் உரையாடிக் கொண்டனர்.
உலகங்களெல்லாம் முடிவுறுமாகிய இப்படிப்பட்டப் பேரழியை உண்டுபண்ணியதெது?
பகவான் ஈசனின் கோபத்தின் பலனால் உண்டாகியிருக்க முடியாது. என்றும் கூறினர்.
தங்களது யோக ஆற்றல்கள் மூலம் தேவி பார்வதீ விளையாட்டாக பரமபிதாவான ஈசனின் விழிகளை மூடியதே காரணமெனக் கண்டனர்.
மேலும் இதன் பொருட்டே உலகெங்கும் காரிருள் சூழ்ந்ததென்றும் அறிந்தனர்.
கடுந்தவத்தினால் நீண்ட ஆயுள் பெற்று அரசனுக்கு நிகரான மேன்மையான இராஜ்ஜியங்களை அடைந்தவர்களும், தேவஜன்மம் பெற்றவர்களுமானவர்களின் கதியென்னவாயிற்றோ?
யஞ்யங்களும் பூஜைகளும் நிகழ்வதில்லை.
தபோவான்கள் தத்தம் ஞானதிருஷ்டியினால் இதைக் கண்டறியவும் முற்பட்டனர்.
சூரியனின் ஒளிக்கொப்பான தேஜஸ் நிறைந்த தபஸ்விகள் இதயபூர்வமாக பகவான் சம்பூவிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
இறைவ! இவ்வுலகு உருவாகக் காரணமாயிருக்கும் உம்மை நாங்கள் வணங்குகிறோம். ஹே சிவனே! பரமாத்மனே!
நீயே வித்தகன். நீயே சக்தியின் ரூபம்.


अविनाभाविनी शक्तिरद्यैक शिवरूपिणी।
लीलया जगदुत्पत्तिरक्षासंहृतिकारिणी॥३६॥
अर्धाङ्गी सा तवदेवशिवशक्त्यात्मकं वपुः।
एक एव महादेवो न परे त्वद्विना विभो लीलया तव लोकोऽयमकाले प्रलयं गतः।
करुणा त्व निर्व्याजा वर्द्धतां लोकवर्द्धनी ततः प्रसीद करुणामूर्ते काल। सदाशिव।
विरम्प्रणयारब्धादमुष्माल्लोकसङ्क्षयात्
इति तेषां वचः श्रुत्वा भक्तानां सिद्धिशालिनाम्।
विशृजऽक्षीणि गौरीति करुणामूर्त्तिरब्रवीत्॥४१॥

அவினாபாவினீ ஸக்திரத்யைக ஸிவரூபிணீ|
லீலயா ஜகதுத்பத்திரக்ஷாஸம்ஹ்ருதிகாரிணீ||36||
அர்தாங்கீ ஸா தவதேவஸிவஸக்த்யாத்மகம் வபு:|
ஏக ஏவ மஹாதேவோ ந பரே த்வத்வினா விபோ லீலயா தவ லோகோஅயமகாலே ப்ரலயம் கத:|
கருணா த்வ நிர்வ்யாஜா வர்த்ததாம் லோகவர்த்தனீ தத: ப்ரஸீத கருணாமூர்தே கால| ஸதாஸிவ|
விரம்ப்ரணயாரப்தாதமுஷ்மால்லோகஸங்க்ஷயாத்
இதி தேஷாம் வச: ஸ்ருத்வா பக்தானாம் ஸித்திஸாலினாம்|
விஸ்ருஜாக்ஷீணி கௌரீதி கருணாமூர்த்திரப்ரவீத்||41||

தேவி உம்மிடமிருந்தும் தனித்துயில்லை, உம்மிடமிருந்து அன்னியமில்லமலே சிருஷ்டி நியமங்களைச் சிவரூபமாகிச் செய்கிறாள். சிவனும் சக்தியுமொன்றே.
அவளது விளையாட்டு லீலையால் அகாலத்தில் லோகங்கள் சம்ஹரித்தது.
அர்த்தாங்கினிக்கு பாகமளித்த நீ அர்த்தநாரி, சிவ-சக்திகளே, நீங்கள் ஒன்றுதான்.
நீ ஒருவன்தான் மஹாதேவா! வேறாருமில்லை. அகாலப்பிரளயம் உண்டாகும்படியானது இஃதுமுன் லீலைதானோ?
பாரபட்சமில்லாத உம் கருணை கொடுந்துன்பத்தில் இருக்கும் இவ்வுலகில் சுபிட்சமாக வர்ஷிக்கட்டும். ஹே! சதாசிவா! இந்த லீலையில் நீங்களும் ஓர் அங்கம். எங்கள் மீது இரங்கி இந்த லீலையை நிறுத்துங்கள்.
உங்கள் கண்களின் ஒளி ஒரு நொடி மறைந்ததால் எங்களுக்கு யுகாந்திரம் ஏற்பட்டது.
பக்தர்களும் சித்தர்களும் இவ்வாறாக இறைஞ்சி நிற்கவே, பகவான் மனமிரங்கி உரைக்கிறார் -
கெளரீ! என் விழிகளை விடு! என்றார்.

विससर्ज च सा देवी पिधानं हरचक्षुषाम्। सोमसूर्याग्निरूपाणां प्रकाशमभवज्ज्गत्
कियान्कालो गतश्चेतिपृष्टैः सिद्धैश्च वैनतैः।
उक्तंत्वन्निमिषार्द्धनजग्मुर्वत्सरकोटयः अथ देवः कृपामूर्त्तिरलोक्य विहसन्प्रियाम्।
अब्रवीत्परमोदारः पुरं धर्मार्थसंग्रहम्।
अविचर्य कृतं मुग्धे भुवनक्षयकारणात्।
आयुक्तमिह पश्यामि जगन्मातुस्त्वैव हि॥
अहमप्यखिलाँल्लोकान्संहरिष्यामिसङ्क्षये।
प्राप्तेकालेत्वयामौग्द्यादकालेप्रलयंगताः केयं वा त्वादॄशी कुर्यादीदॄशं सद्विगर्हितम्।
कर्म नर्मण्यपि सदा कृपामूर्तिर्न बाधते
इति शम्भोर्वचःश्रुत्वा धर्मलोपभयाकुला।
किं करिष्यामि तच्छान्त्यां इत्यपृच्छत्स्म तं प्रिया॥४८॥
अथदेवःप्रसन्नात्माव्याजहारदयानिधिः।
देव्यास्तेनानुतापेनभक्त्याचतोषितःशिवः॥
मन्मूर्तेस्तव केयं वा प्रायश्चित्तिरिहोच्यते।
अथापि धर्ममार्गोऽयंत्वयैवपरिपाल्यते श्रुतिस्मृतिक्रियाकल्पा विद्याश्च विबुधादयः।
त्वद्रूपमेतदखिलं महदर्थोऽस्मि तन्मयः
मान्ययाभिन्नया देव्या भाव्यं लोकसिसृक्षया॥५२॥

விஸஸர்ஜ ச ஸா தேவீ பிதானம் ஹரசக்ஷுஷாம்| ஸோமஸூர்யாக்னிரூபாணாம் ப்ரகாஸமபவஜ்ஜ்கத்
கியான்காலோ கதஸ்சேதிப்ருஷ்டை: ஸித்தைஸ்ச வைனதை:|
உக்தம்த்வன்னிமிஷார்த்தனஜக்முர்வத்ஸரகோடய: அத தேவ: க்ருபாமூர்த்திரலோக்ய விஹஸன்ப்ரியாம்|
அப்ரவீத்பரமோதார: புரம் தர்மார்தஸம்க்ரஹம்|
அவிசர்ய க்ருதம் முக்தே புவனக்ஷயகாரணாத்|
ஆயுக்தமிஹ பஸ்யாமி ஜகந்மாதுஸ்த்வைவ ஹி||
அஹமப்யகிலாக்ல்லோகான்ஸம்ஹரிஷ்யாமிஸங்க்ஷயே|
ப்ராப்தேகாலேத்வயாமௌக்த்யாதகாலேப்ரலயம்கதா: கேயம் வா த்வாத்ரூஸீ குர்யாதீத்ரூஸம் ஸத்விகர்ஹிதம்|
கர்ம நர்மங்யபி ஸதா க்ருபாமூர்திர்ன பாததே
இதி ஸம்போர்வச:ஸ்ருத்வா தர்மலோபபயாகுலா|
கிம் கரிஷ்யாமி தச்சான்த்யாம் இத்யப்ருச்சத்ஸ்ம தம் ப்ரியா||48||
அததேவ:ப்ரஸன்னாத்மாவ்யாஜஹாரதயானிதி:|
தேவ்யாஸ்தேனானுதாபேனபக்த்யாசதோஷித:ஸிவ:||
மந்மூர்தேஸ்தவ கேயம் வா ப்ராயஸ்சித்திரிஹோச்யதே|
அதாபி தர்மமார்கோஅயம்த்வயைவபரிபால்யதே ஸ்ருதிஸ்ம்ருதிக்ரியாகல்பா வித்யாஸ்ச விபுதாதய:|
த்வத்ரூபமேததகிலம் மஹதர்தோஅஸ்மி தன்மய:
மான்யயாபின்னயா தேவ்யா பாவ்யம் லோகஸிஸ்ருக்ஷயா||52||

தேவியும் உடனே தம் விரல்களை நீக்கி, சோம-சூரிய-அக்னியான சிவனாரின் மூன்று கண்களையும் விடுவிக்கிறாள். பூவுலகெங்கிலும் சிவபெருமானின் தேஜஸ் பரவுகின்றது.
சித்தர்களை நோக்கி பகவான் எவ்வளவு நேரம் கழிந்தது என வினவுகிறார்.
இறைவ! உங்களுக்கு ஒரு வினாடி கணக்கில் எங்களுக்கு யுகங்களாம். என்று பதிலுரைத்தனர். இதைக் கேட்டதும் சிவபெருமான் தம் அன்பிற்குகந்தவளை நோக்கி முறுவலித்தார்.
மிகுந்த பிரியத்துடன் தர்மத்தையும் அர்த்தத்தையும் விளக்கினார்.
தேவீ! முன்யோசனையில்லாமல் நீ செய்த செயலின் பலனாக ஜகங்கள் அனைத்தும் அழிந்து போயின.
நீயே ஜகந்மாதா. லோகத்திலுள்ள உன் குழந்தைகளுக்கு நீயே எப்படி துக்கம் விளைவித்தாய்?
நானே காலன், காலசம்ஹாரங்கள் செய்வதும் பிரளயத்தால் அழிப்பதும் என் செயலே.
உன் கேளிக்கையான செயலால் அகாலத்தில் பிரளயம் உண்டாகியது. இப்படியான தூஷணைக்கான செயலை நீ செய்யலாமா?
கருணை மற்றும் பிரியத்தின் உருவுவேயான தேவி! இப்படிப்பட்ட செயலில் நீ ஈடுபடலாமா?
பகவான் சம்புவின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மாதா பெருந்துக்கத்தில் ஆழ்ந்தாள். அனுதாபம் கொண்டாள்.
தேவதேவ! லோகத்தில் அமைதியுண்டாக நானென்ன செய்ய வேண்டும்? என்று தேவி வினவினாள்.
கருணையுருவேயான சிவபெருமான் மனமிரங்கி,
தேவியின் பச்சாதாபத்தினாலும் பக்தியினாலும் ஆட்பட்டு இவ்வாறு உரைத்தார்.
நானின்றி நீயென்ன தவம் புரிந்து விட முடியும்?
நீ தர்மத்திலேயே இருக்கிறாய். நீயே அனைத்து தர்மங்களாகவும், வேதங்களாகவும், ஸ்ருதி-ஸ்மிருதிக்களாகவும், கர்மங்கள், கல்பங்கள், வித்தைகள், தேவர்களாகவும், மற்ற அனைத்துமாகவும் இருக்கிறாய்.
நீ என்னையே பிரதிபலிக்கிறாய். லோக சிருஷ்டியை உத்தேசிக்கும் நீ என்னிலும் வேறில்லை.
நீ என்னிடமிருந்து விலகியில்லை. நீ மீண்டும் லோக நிர்மாணம் செய்து பிராயச்சித்தம் செய்ய விரும்புகிறாய்.

तस्माल्लोकानुरूपन्ते प्रायश्चित्तंविधीयते।
षड्विधोगदितोधमःश्रुतिस्मृतिविचारतः
स्वामिना नाऽनुपाल्येत यदि त्याज्योऽनुजीविभिः।
न त्वां विहाय शकोमि क्षणमप्यासितुं क्वचित्॥५४॥
अहमेव तपः सर्वं करिष्याम्यात्मनि स्थितः।
पृथ्वी च सकलाभूयात्तपसासफ़लातव त्वत्पादपद्मसंस्पर्शात्त्वत्तपोदर्शनादपि।
निरस्यन्तिस्वसान्नि याद् दुष्टजातमुपद्रवम् कर्मभूमेस्त्वमाधिक्यहेतवेपुण्यमाचर।
तवत्तपश्चरणं लोके वीक्ष्य सर्वोऽपि सन्त्तम् धर्म दॄढतरां बुद्धिं निवध्नीयान्न संशयः।
कृतार्थयिष्यति मही दया ते धर्मपालनैः॥
त्वमेवैतत्सकलंप्रोक्तावेदैर्देवि सनातनैः।
अस्ति काञ्चीपुरीख्यातासर्वभूतिसमान्विता या दिवं देवसम्पूर्णांप्रत्यक्षयति भूतले।
यत्र क्लृप्तं तपः किञ्चिदनन्तफ़लमुच्यते॥६०॥

தஸ்மால்லோகானுரூபன்தே ப்ராயஸ்சித்தம்விதீயதே|
ஷட்விதோகதிதோதம:ஸ்ருதிஸ்ம்ருதிவிசாரத:
ஸ்வாமினா நானுபால்யேத யதி த்யாஜ்யோஅனுஜீவிபி:|
ந த்வாம் விஹாய ஸகோமி க்ஷணமப்யாஸிதும் க்வசித்||54||
அஹமேவ தப: ஸர்வம் கரிஷ்யாம்யாத்மனி ஸ்தித:|
ப்ருத்வீ ச ஸகலாபூயாத்தபஸாஸபலாதவ த்வத்பாதபத்மஸம்ஸ்பர்ஸாத்த்வத்தபோதர்ஸனாதபி|
நிரஸ்யன்திஸ்வஸான்னி யாத் துஷ்டஜாதமுபத்ரவம் கர்மபூமேஸ்த்வமாதிக்யஹேதவேபுங்யமாசர|
தவத்தபஸ்சரணம் லோகே வீக்ஷ்ய ஸர்வோஅபி ஸன்த்தம் தர்ம த்ரூடதராம் புத்திம் நிவத்னீயான்ன ஸம்ஸய:|
க்ருதார்தயிஷ்யதி மஹீ தயா தே தர்மபாலனை:||
த்வமேவைதத்ஸகலம்ப்ரோக்தாவேதைர்தேவி ஸனாதனை:|
அஸ்தி காஞ்சீபுரீக்யாதாஸர்வபூதிஸமான்விதா யா திவம் தேவஸம்பூர்ணாம்ப்ரத்யக்ஷயதி பூதலே|
யத்ர க்ல்ருப்தம் தப: கிஞ்சிதனன்தபலமுச்யதே||60||

நீயே ஜகந்நாயகி. இவ்வாறாக உனக்கொரு பிராயச்சித்தம் உரைக்கிறேன்.
ஸ்ருதி-ஸ்மிருதிக்களின் கூறியுள்ளபடியும், லோக நெறிமுறைகளின்படியும்,
கண்டனத்துக்குரிய செயலைச் செய்து தூஷணைக்காளானவர்களை தலைவன் கூட காக்கக் கூடாது.
என்னாலேயொரு க்ஷணம் கூட உன்னை நீங்கியிருக்கவியலாது.
நானே ஜகந்நாயகன், நானே நீ, நானே உன் ஆத்மாவாக இருப்பேன், நீ தவங்களைப் புரிந்து பிராயச்சித்தம் புரிவாயாக!
உன் தவவலிமையின் ஆற்றலால் இந்த லோகத்தில் வளமையும் அமைதியும் உண்டாகட்டும். ஹே! தபஸ்வினியே! உன் பாதக்கமலத்தில் சரண் புகுவோரும், உன்னை தரிசிப்போரும், துக்க-கஷ்டங்கள் எல்லாம் நீங்கி புண்ணியங்கள் பெறட்டும்.
உன் ஸமீபத்தில் வாசம் செய்து அவர்கள் தம் பீடைகள் பாவங்கள் நசிக்கப் பெறுவார்கள். கர்மபூமியில் வசிக்கும் அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காக தர்ம புண்ணியங்களைச் செய்வாயாக.
உன் தவத்தினால் சகல ஜனங்களும் தர்மத்தின் மீது உறுதியான நம்பிக்கையைப் பெறுவார்கள். இதிலெந்த சந்தேகமுமில்லை.
உன் கருணையால் பூமியும், பூமியில் தர்மமும் என்றென்றுக்குமாய் நிலைத்திருக்கும்.
உன்னுள் அனைத்துமிருப்பதாய் வேதங்கள் உறுதிப்படுத்துகின்றன. நீயே எல்லாமுமாயிருக்கிறாய்.
பூலோக ஸ்வர்க்கமாக காஞ்சீபுரி எனும் க்ஷேத்திரத்தைக் கருதுகிறார்கள். அவ்விடம் அனைத்து தேவர்களும் வாசம் செய்து கொண்டிருப்பதேயதற்குச் சான்று.
இந்தத் திவ்யக்ஷேத்திரத்திற் செய்த எளிதிலுமெளிய தவமானது உயர்ந்த தெய்வாம்சத்தைத் தரக்கூடியது.

देवाश्चमुनयःसर्वेवासंवाञ्छन्तिसन्त्तम्।
तत्र कम्पेतिविख्यातामहापातकनाशिनी॥
यत्र स्थितानां मत्तर्यानां कम्पन्ते पापकोटयः।
तत्र चूतद्रुमश्चैको राजते नित्यपल्लवः सम्पूर्णशीतलछायः प्रसूनफ़लपल्लवैः।
तत्र जप्तं हुतं दत्तमनन्तफ़लदं भवेत्॥६३॥

தேவாஸ்சமுனய:ஸர்வேவாஸம்வாஞ்சந்திஸன்த்தம்|
தத்ர கம்பேதிவிக்யாதாமஹாபாதகனாஸினீ||
யத்ர ஸ்திதானாம் மத்தர்யானாம் கம்பன்தே பாபகோடய:|
தத்ர சூதத்ருமஸ்சைகோ ராஜதே நித்யபல்லவ: ஸம்பூர்ணஸீதலசாய: ப்ரஸூனபலபல்லவை:|
தத்ர ஜப்தம் ஹுதம் தத்தமனன்தபலதம் பவேத்||63||

தேவர்களும் மஹாமுனிக்களும் அங்கு வசிப்பதையே விரும்புகிறார்கள்.
சகல பாவகர்மங்களை அழிக்கும் கம்பா எனும் புண்ணியநதியானது அங்கே தவழ்கிறது.
இந்நதி தீரத்தில் வசிப்பவர்களின் பாபங்கள் நசிக்கின்றன.
அவ்விடத்தில் காய்-கனி அடர்ந்து நிழலுடன் கூடிய பசுமையான தேவவ்ருக்ஷமான மாமரம் ஒன்று உள்ளது.
இம்மர நிழலில் செய்யப் பட்ட ஹோமங்கள், ஜபதபங்கள், சிறிதிலும் சிறிய புண்ணியகாரியங்கள் எல்லையே இல்லாத நற்பயன்களைக் கொடுக்கவல்லது.

गणाश्च विविधाकारा टाकिन्यो योगिनीगणाः।
परितस्त्वां निषेवन्तां विष्णुमुख्यास्त्था पराः॥६४॥
अहं च निष्कलोभूत्वातवमानसपङ्कजे।
सन्निधास्यामि मा भूस्त्वंदेवि। मद्विरहाकुला इत्युक्ता देवदेवेन देवी कम्पान्तिकं ययौ।
तपः कर्तुं सखीयुक्ताविस्मयाक्रान्तलोचना कम्पाच विमलां सिन्धुमुनिसङ्घनिषेविताम्।
आलोक्यकोमलदल्मेकाम्रंद्रुष्टिवारणम् फ़लपुष्पसमाकीर्णं कोकिलालाप्स्ङ्कुलम्।
प्रससाद पुनर्देवं सस्मार च महेश्वरम्॥
कामाग्न्परिवीताङ्गीतपःक्षामेवसाऽभवथ्।
अभ्याभाष्तसागौरीविजयांपार्श्वत्तिनीम्
कामशोकपरीताङ्गी पुरारिविरहाकुला॥७०॥

கணாஸ்ச விவிதாகாரா டாகின்யோ யோகினீகணா:|
பரிதஸ்த்வாம் நிஷேவன்தாம் விஷ்ணுமுக்யாஸ்த்தா பரா:||64||
அஹம் ச நிஷ்கலோபூத்வாதவமானஸபங்கஜே|
ஸன்னிதாஸ்யாமி மா பூஸ்த்வம்தேவி| மத்விரஹாகுலா இத்யுக்தா தேவதேவேன தேவீ கம்பான்திகம் யயௌ|
தப: கர்தும் ஸகீயுக்தாவிஸ்மயாக்ரான்தலோசனா கம்பாச விமலாம் ஸின்துமுனிஸங்கனிஷேவிதாம்|
ஆலோக்யகோமலதல்மேகாம்ரம்த்ருஷ்டிவாரணம் பலபுஷ்பஸமாகீர்ணம் கோகிலாலாப்ஸ்ங்குலம்|
ப்ரஸஸாத புனர்தேவம் ஸஸ்மார ச மஹேஸ்வரம்||
காமாக்ன்பரிவீதாங்கீதப:க்ஷாமேவஸாபவத்|
அப்யாபாஷ்தஸாகௌரீவிஜயாம்பார்ஸ்வத்தினீம்
காமஸோகபரீதாங்கீ புராரிவிரஹாகுலா||70||

பல்வேறு ரூபங்களிலிருக்கும் கணங்களும், யோகினி டாகினிக்களும்
விஷ்ணு சேவார்த்திகளும், மற்ற அனைவரும் உன்னோடு இருக்கட்டும்.
நானும் தவமேற்று உன் ஹ்ருதயத்தில் வாசம் செய்வேன். இதனால் நமக்குள்ளான பிரிவின் துக்கமிறா.
என்றுரைத்த மஹாதேவரின் சத்வாக்கியங்களைக் கேட்ட தேவி தன் தோழியருடன் கம்பை நதியை நோக்கிப் புறப்பட்டாள்.
மஹாமுனிவர்களாலும் கணங்களாலும் கொண்டாடப்படும் அழகுடன்கூடி அமைதியான கம்பா நதிதீரத்தை தேவி சென்றடைந்தாள்.
அத்தீரத்தின் கரையில் அதிதிவ்யமான மரமொன்று காய்கனிகளும் பூக்களுமாய் நிறைந்து, அதில் குயிலினங்கள் முதலான பறவைகள் கூவியும் விளையாடியும் கொண்டிருந்தன.
இவற்றின் நடுவே, மாதா பார்வதி பரமேஸ்வரரைக் குறித்து தியான தபங்கள் செய்யத் துவங்கினார். நீண்ட நெடுங்காலம் தவத்தில் ஆழ்ந்தார்.
பரமேஸ்வரருடன் மீண்டும் இணையும் பொருட்டு மாதா அதிக ஆவலோடும் தவத்தினால் மிகவும் சோர்ந்தும் காணப்பட்டார்.
மாதா தன்னருகே நின்று கொண்டிருந்த தன் தோழியான விஜயாவிடம்,
தாங்கவொணாத் துயரத்தோடும் பிரிவின் வேதனையோடும் இவ்வாறு உரையாடினார்.

इममघरमागनानिशं स्वयमपि पूजयितुं तपोभिरीशम्।
अयमभिनवपल्लवप्रसूनः स्मरयति मां समरबन्धुरेकचूतः॥७१॥
कथमिव विरहः शिवस्य सह्याः क्षुभिताधियाऽत्र भॄशं मनोभवेन।
तदपि च तरुणेण्दुचूडपादस्मरंणमहौषधमेकमेव दृष्टम्॥७२॥

இமமகரமாகனானிஸம் ஸ்வயமபி பூஜயிதும் தபோபிரீஸம்|
அயமபினவபல்லவப்ரஸூன: ஸ்மரயதி மாம் ஸமரபன்துரேகசூத:||71||
கதமிவ விரஹ: ஸிவஸ்ய ஸஹ்யா: க்ஷுபிதாதியாத்ர ப்ரூஸம் மனோபவேன|
ததபி ச தருணேங்துசூடபாதஸ்மரம்ணமஹௌஷதமேகமேவ த்ருஷ்டம்||72||

பரமேஸ்வரரைக் குறித்து தப-ஜபங்களள் தியானஞ் செய்வோர், இம்மாமரத்தை நேரடியாக அடைந்து இம்மர நிழலில் வாசம் செய்வார்கள்.
ஆனால் பாபங்களை நசிக்கும் நிழல் கொண்ட இம்மரம் ஒரேயொரு பழம் மட்டுமே கொண்டு என் பிரிவுத்துயரை அதிகரித்து வலி மேலிடுகிறது.
அவர் குறித்த நினைவுகளை எப்படித் தாங்குவேன்? பிரிவெனும் வலியின் வேதனையை எப்படிப் பொறுப்பது?
ஹ்ருதய பூர்வமாக இளம்பிறையணி சிவனாரைக் குறித்து தியானிப்பதும் அவர் நாமங்களை ஜபிப்பதுமே இவ்வேதனைக்கு மருந்து.

अरुणाचलमाहात्म्ये पूर्वार्द्धे पार्वत्याः शिवनेत्रमीलनेन तमसा
क्षुब्दलोकपापभयेन काञ्च्यां कम्पास्थितैकाम्रतले
तपश्चर्यार्थंमागमनं नाम तृतीयोऽध्यायः॥३॥

அருணாசலமாஹாத்ம்யே பூர்வார்த்தே பார்வத்யா: ஸிவனேத்ரமீலனேன தமஸா
க்ஷுப்தலோகபாபபயேன காஞ்ச்யாம் கம்பாஸ்திதைகாம்ரதலே
தபஸ்சர்யார்தம்மாகமனம் நாம த்ருதீயோஅத்யாய:||3||

அருணாசல மஹாத்மியம் பூர்வ பாகம், பார்வதி விளையாட்டாய் சிவனாரின் மூவிழிகளையும் மூடுதல், மற்றும்
கம்பா நதி தீரத்தில் அமைந்துள்ள பாபங்களை நசிக்கும் புண்ணிய நகராம் காஞ்சியில்
பார்வதி தவம் புரிதல் ஆகிய வர்ணனைகள் கொண்ட மூன்றாம் அத்தியாயம்.

0 comments:

Post a Comment