போட்டி என்பதே ஒரு முயற்சி தான். பரிசு என்பதெல்லாம் அப்புறம்தான். மூன்று வரி கொடுத்து கதை எழுதச் செய்வது கொஞ்சம் புதுசாக இருக்கு, கஷ்டமும் கூட. இருந்தாலும், எத்தனை விதமான கதைகள்.
எனக்குத் தெரிந்து நான் தமிழ் ப்ளாக் எழுத வந்தது முதலே யாருக்கும் எங்கேயும் ஒரு வரி கம்மெண்டோ, விமர்சனமோ எதுவும் பரிசல்காரன் கிருஷ்ணா எழுதி பார்த்ததில்லை. அதுனால இவ்ளோ கதைகள் அவர் தளத்துக்கு வந்தது பற்றி அவர் பிரமிப்பு அடைவதில் எனக்கொண்ணும் ஆச்சரியம் இல்லை. மத்தபடி போட்டி நடத்துபவரும், போட்டியில் கலந்து கொள்பவரும் என ஒருவருக்கொருவர் புதிய பதிவர்களுக்கு அறிமுகமாக ஒரு மீடியமாக இது போன்ற போட்டிகள் ஏதுவாக இருக்கலாம். சமீபமாகவே கொஞ்சம் சுரத்து குறைந்து இருக்கும் பதிவர்களிடம் மீண்டும் கொஞ்சம் சுறுசுறு-வென்று ஆகியும், ஏறத்தாழ 50 பதிவர்களேனும் (ஒருத்தரே இரண்டு மூன்று கதை எழுதி இருப்பதால்) இதில் பங்கு எடுத்துள்ளனர். அலுப்புத் தட்டாமல் இருக்க இது போன்றவை அவ்வப்போது ஏதேனும் ஆக்கபூர்வமாக இருந்து கொண்டிருந்தால் நல்லதுதானே.
வெற்றி தோல்வி என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள்தான். இந்த மூன்று வாக்கியங்களை கோர்வையாக கோர்த்து விதம் விதமாக கதையாக்கிய ஒவ்வொருவரும் வெற்றியாளரே.
அதுனால, முடிவா என்ன சொல்றேன்னா, அந்த 3.நம்பர் கதைக்கும், 24-ம் நம்பர் கதைக்கும் மட்டும் முதல் பரிசு அறிவிச்சு விடும்படி கேட்டுக்கறேன். அதுவரை யாரும் டீ குடிக்க வேண்டாம். வரலாறு முக்கியம் அமைச்சரே.
ஆறுதல் பரிசை பலாபட்டறை ஷங்கர் எழுதிய இந்தக் கதைக்கும் நம்ம தளபதி நசரேயன் எழுதிய இந்தக் கதைக்கும் கொடுத்து விடலாம். மத்த போட்டியாளர்கள் நல்லபடியா எல்லோரும் அவங்கவங்க கதையை வாபஸ் வாங்கிருங்க.
டிஸ்கி: கைத்தட்டணும்னு ஒவ்வொருதரமும் சொல்லிக்கிட்டே இருக்கணுமா? ம்ம்..
பரிசலின் சவால் போட்டியில் வெற்றி பெற ஒரே வழி
Posted by
Vidhoosh
on Wednesday, October 20, 2010
Labels:
சிறுகதைப் போட்டி,
வரலாறு முக்கியம்ங்க
16 comments:
முதல்ல அந்த மூணாம் நம்பரும் 24ம் நம்பரும் கதைன்னு ஆதாரத்தோட நிரூபிங்க. அதுக்கப்புறம் பரிசு குடுக்கச் சொல்லலாம்.
விசா: :)
முகிலன்: ஏன்? நிஜம்மா நடக்கிறது போன்ற உணர்வைக் கொடுத்துவிட்டதா?
அந்த 16வது கதைக்கு தான் முதல் பரிசுன்னு ஏற்கனவே மேட்ச் பிக்ஸ் ஆயிடுச்சே :))
நான் எழுதின கதையை படிச்சுட்டு பரிசு எனக்கு தான் கிடைக்கும்ன்ற பதட்டத்துல போட்ட பதிவு மாதிரி இருக்கே :))
சரி சரி பொழச்சு போங்க... ஆறுதல் பரிசை உங்களுக்கு தான் :)
ஹலோ
பரிசல் எனக்கு நிறைய கமென்ட் போடுகிறாரே !
அப்படின்னா நீங்க நம்ம ப்ளாக் பக்கம் இதுவரை வரலைன்னு அர்த்தம். இதுக்கு தண்டனை என்னன்னா நான் சவால் சிறுகதை என்ற தலைப்பில் பத்து கதைகள் (அல்லது கதை மாதிரி) எழுதி இருக்கேன். அது போக இன்னும் ரெண்டு பதிவு எழுதி இருக்கேன் சவால் சிறுகதைகளைப் பற்றி. அல்லாத்தையும் படிச்சுட்டுப் பின்னூட்டம் போடுங்க.
எல்லாப் பரிசும் எனக்குத்தான். மேட்ச் பிக்சிங் ஆல்ரெடி பண்ணியாச்சு.
ஆதவன் ரிப்பீட்டுக்கிறேன்.
எனக்கு பரிசா வரப்போற பொஸ்தகத்த இரவலா தாரேன். படிச்சுப் பார்த்துட்டு திருப்பிக் கொடுத்திரனும் சரியா:)
ஹாஹாஹா.. கை தட்டியாச்சு விதூஷ்.
ஆறுதல் பரிசை பலாபட்டறை ஷங்கர் எழுதிய//
இருந்த கொஞ்ச நம்பிக்கையும் குழிதோண்டி புதைச்சாச்சு.
சந்தோசமாங்க! :)
வாழ்த்துகள் ஷங்கர் :)))
நேசமித்ரன் :
வாழ்த்துகள் ஷங்கர் :))) //
பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா? :))
உங்கள மாதிரி கதைஞர்களுக்கு பரிசு கிடைக்கட்டுமேன்னு தான் நானெல்லாம் கதை எழுதவில்லை :P
//அந்த 3.நம்பர் கதைக்கும், 24-ம் நம்பர் கதைக்கும் மட்டும் முதல் பரிசு அறிவிச்சு விடும்படி //
அதான் சிக்கல். முதல் பரிசு ஒரு புத்தகம்.
ஒரே புக்கை இரண்டா பிச்சு, இரண்டையுமே ஒரே ஆசிரியருக்கு எப்படிக் கொடுக்கறதுங்கிறதுதான் பிரச்னை இப்ப.
நீங்க ஒரு கதையாவது கொஞ்சம் கம்மியா எழுதியிருக்கலாம். :(
வடை போச்சே
ஹா ஹா! ஏதேனும் வாக்குகள் அளிக்க வேண்டுமா விதூஷ். :)
//அந்த 3.நம்பர் கதைக்கும், 24-ம் நம்பர் கதைக்கும் மட்டும் முதல் பரிசு அறிவிச்சு விடும்படி கேட்டுக்கறேன்//
******
கதை நம்மோடதா??
இல்ல... சும்மா கேட்டேன்....
//அந்த 3.நம்பர் கதைக்கும், 24-ம் நம்பர் கதைக்கும் மட்டும் முதல் பரிசு அறிவிச்சு விடும்படி கேட்டுக்கறேன்//
********
கூடை வச்சு இருக்கறவங்களுக்கு எல்லாம் பரிசு கிடையாது....
Post a Comment