பரிசலின் சவால் சிறுகதை போட்டிக்காக
--------------------------------
அவளது இதழ்கள் சிவந்திருந்தன. மரணத்தை உணருவது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. அவள் மெல்ல மெல்ல, கொஞ்சம் கொஞ்சமாக இறப்பதையே விரும்பினாள். கொஞ்சம் கொஞ்சமாக உடல் உணரும் மழைநாளின் மெல்லிய வெயில் போல, துளித்துளியாய் மரணத்தை நெருங்கி இறப்பை முழுமையாய் உணரவேண்டும் என்ற ஆவலோடு இருக்கிறாள்.
"என் கழுத்தை மெதுவாக நெறிக்கமுடியுமா?" என்று புன்னகைத்தபடியேதான் கேட்டாள் அவள்.
"முடியும்" என்றேன் நான்.
வெண்சங்கு போல் நீண்டிருந்த அவளது கழுத்தை அழுத்திப் பிடிக்க ஆரம்பித்தேன். அவள் எந்தவித எதிர்ப்போ வேதனையோ இல்லாமல் சுவற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் இன்னும் நெறிக்கத் துவங்கியதும் மெல்லக் கண்களை மூடிக்கொண்டாள். என் விரல்கள் அவளது குரல்வளையை உணரத்துவங்கியது. ஒருவித நடுக்கமும் பதைபதைப்பும் எனக்குள் பரவ ஆரம்பித்தது. அவள் முகமோ எவ்வித பயமுமின்றி நிச்சலனமாய் இருந்தது.
அவள் உளரல் போன்ற குரலில் மெல்லக் கூறினாள் "வஜ்ரபானிக் குமாரியான தேவானையை மணக்க இந்திரசபை நோக்கி வருகிறான் முருகன்" என்றாள்.
அவள் குரல்வளையின் நரம்புகள் முறுக்கிக் கொண்டு வெளியே தெரிய ஆரம்பித்தது. நீலம் பாய ஆரம்பித்தது. எனக்கு படபடப்பு அதிகமாகிக் கைகளை விலக்கிக் கொண்டேன்.
"சிவா" என்றழைத்தாள் காமினி.
"என்ன" என்றேன். கோபமாய் இல்லாத போது மட்டும்தான் முழுப்பெயரிட்டே அழைப்பாள். மற்ற சமயங்களிலெல்லாம் சிவா.
"நீயொரு பயந்தாங்கொள்ளி... எத்தனை அற்புதமான காட்சி அது. முட்டாள், முருகனின் அழகுக்கு ஈடாகுமா. இன்னும் இப்படியே பயந்து கொண்டிருந்தால் எப்படி நம் ப்ராஜக்டை முடிக்கப் போகிறோம்" என்றவளை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தேன்.
பழங்கதைகளில் வர்ணிக்கப்படும் இளவரசி போலவே காட்சியளித்தாள். இவள் சொல்வதெல்லாம் ஒருவேளை உண்மையாகவும் இருக்குமோ என்ற ஒருவித மயக்கத்திலும், பழம்புராணங்களின் மீதான என்னையும் மீறிய ஆவலும் அவளோடு இந்தப் ப்ராஜக்டில் இருக்கச் செய்கிறது. இப்படி ஒவ்வொரு முறை அவள் கழுத்தைப் நெறிப்பதும் விடுவதும் அப்புறம் அவள் சொல்லும் காட்சிகளை எழுதி வைப்பதும் என ஒவ்வொரு நாளும் பதைபதைப்புடனேயே செல்கிறது.
"சிவா. நாம ரெண்டு பேரும் நாளைக்கு கீழ்மின்னலுக்குப் போறோம். ரெடியா இரு" என்று சொல்லிவிட்டுப் போனாள்.
"எங்கேயிருக்கு" என்றேன்.
"இரத்தினகிரின்னு கேள்விப் பட்டதில்லையா?" என்றாள் காமினி "பட்டிமலைக்குப்பத்து நீலக் கற்கள் பதித்த கோவில் அது. மிகவும் அற்புதமான அருள் கொண்ட முருகன். அந்த வேலில் இருக்கும் சக்தி எங்கும் இல்லை, அந்த வைரங்களுக்கு அப்படி ஒரு சக்தி. தெரியுமா?" என்றவளின் கண்களில் அப்படி ஒரு ஒளியை இதற்கு முன் கண்டதில்லை.
--------------------------
தரையெல்லாம் சிவந்தேயிருந்தது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் அளவுக்குச் செங்கொன்றைப் பூக்கள் சிதறிக் கிடந்தன. மலைப் படிகளில் தாவித் தாவி ஏறிக் கொண்டிருந்தாள். ஒரு நிமிடம் அவளுக்கு யாராவது மந்திரித்து விட்டார்களோ என்று தோன்றுமளவுக்கு அதிவேகத்தில் ஏறிக் கொண்டிருந்தாள்.
திடீரென்று நின்று திரும்பினாள். அவள் மீதிருந்து வீபூதி வாசனை வருவது போன்று எனக்குத் தோன்றியது.
என்னைப் பார்த்து,
அருணையும் இலஞ்சியும் (திருச்)செந்தூர் திருப்பழனி
அடியர் மன பங்கயம் (திருச்)செங்கோடு இடைக்கழியும்
அனவரத நீலமலர் முத்து எறி சுனைப் புனலில்
அருவி குதி பாய் தரு செருத்து அணி என் வெற்பும் எனும்
அலகில் திருப்பதியில் பயில் கற்பகா
அடவி அனுபவத்தனி நிருத்தன இரத்த வாடையன்
ஆறு மா மாதர் பயோதர பந்தியில்
ஆரவே பால அமுதாரு நெடுந்தகை.
உரத்த குரலில் பாட ஆரம்பித்தாள் காமினி. இவளோடு வந்ததே தவறோ என்ற பயம் வர ஆரம்பித்தது.
"சிவா. என் கழுத்தை மெதுவாக நெறி" என்றாள்.
அவள் முகத்தில் இருந்த வெறித்தனம் எனக்குள் அதீத பயத்தை உண்டாக்கியது. நான் திடுக்கிட்டுத் திரும்பிப் படிகளில் இறங்கி ஓட ஆரம்பித்தேன். கீழ் படிக்கு வந்து திரும்புகையில் அவள் உச்சிப்படி வாசலில் நிற்பதைக் கண்டேன்.
என் தோளை ஒரு முதியவர் தொட்டு கூப்பிட்டார். "தம்பி ஆரவல்லி விடோபா கோவிலுக்குப் போ, அங்கே உனக்கு வேலனைக் காக்கும் வேலை இருக்கு. போ... இந்தா முருகனருள்" என்றார். அவர் எனக்குக் கொடுத்த வீபூதிப் பொட்டலத்துக் காகிதம் ஏதோ புத்தகத்தின் ஜெராக்ஸ் போலத் தெரிந்தது. வீபூதியைத் தட்டிவிட்டுப் பார்த்தில் இப்படியிருந்தது.
அருணையு மிலஞ்சியுஞ் செந்தூர்தி ருப்பழநி
யடியர்மன பங்கயஞ் செங்கோடி டைக்கழியும்
அநவரத நீலமலர் முத்தெறிசு னைப்புனலி
லருவிகுதி பாய்தரு செருத்தணியென் வெற்புமெனும்
அலகில் திருப்பதி யிற்பயில் கற்பகாடவி
யநுபவ னத்தனி ருத்தன ரத்தவாடையன்
ஆறுமா மாதர் பயோதர பந்தியி
லாரவே பாலமு தாருநெ டுந்தகை
(அருணகிரிநாதர் - பூத வேதாள வகுப்பு பக்கம் 21)
நிமிர்ந்து பார்த்தால் யாரையும் காணவில்லை. காமினி வேகமாக என்னை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தாள். என்னையும் கடந்து ஓடிக் கொண்டே "சிவா இனிமே இங்க நிற்காதே! ஓடு" என்று விரைந்தாள். நான் வேகமாக ஓடிச் சென்று குவாலிஸை உசுப்பினேன்.
சிறிது தூரம் வேகமாய் சென்று வேலூர் பாதையை அடைந்ததும் யாரும் பின்தொடரவில்லை என்றறிந்து நிதானப்படுத்திக் கொண்டேன்.
"தண்ணி கொடுங்க கொஞ்சம்" என்றேன்.
அவள் கொஞ்சம் அருந்திவிட்டு எனக்கும் தந்தாள். குடித்துவிட்டு "என்னாச்சு" என்றேன்.
"முருகனின் வேலைக் காணவில்லை" என்றாள் அவள்.
திடுக்கிட்டேன் நான். நாவெல்லாம் வரண்டு மிகவும் பதட்டமாக இருந்தது. உள்ளுணர்வு ஏதும் பேசாதே என்றது. உள்ளுணர்வு எப்போதும் தவறுவதில்லை. அதனால் அப்படியே பின்பற்றினேன். ஏனோ அவளிடம் அந்த விபூதிப் பொட்டலம் பற்றி பகிர்ந்து கொள்ளத் தோன்றவில்லை. அறைக்குத் திரும்பியதும் தலையில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு படுத்துக் கொண்டாள் அவள். எனக்கும் மிகவும் அயர்ச்சியாக இருந்தது. சோபாவில் சரிந்து படுத்துக் கொண்டேன்.
போர்வையை விலக்கி என்னை அழைத்தாள் அவள். "இந்தத் தலைவலியால் செத்தே போயிடுவேன் போலருக்கு சிவா" என்றாள்.
"முதல்ல போய்த் தொலை, அப்படியாவது எனக்கு விடுதலை கிடைக்கட்டும். உன்னால் எனக்கு பெரிய பிரச்சினை ஆகிடும் போலருக்கு" என்றேன் என்னை அறியாமலேயே.
அவளுக்கு கோபம் வந்து விட்டது. எழுந்து நின்றாள். அப்படியே தள்ளாடி கீழே சரிந்தாள். மூக்கிலும் வாயிலும் ரத்தம் கசியத் துவங்கியது.
--------------------
"மிஸ்டர் சிவா. நான் டாக்டர் பரந்தாமன். மூச்சுக் குழாய் படுமோசமா ரப்ச்சர் ஆகியிருக்கு, இந்தளவுக்கு பாதிப்பு வரும்படி என்ன ஆயிற்று? அப்படி என்னதான் நடந்திருக்கும்?" என்று கேட்டார் டாக்டர்.
திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி எதுவும் பேசாமல் இருந்தேன். கொஞ்சம் பதட்டத்தை மறைத்துக் கொண்டு "எனக்குத் தெரியலை டாக்டர். நாங்கள் ரூம்மேட்ஸ். அவங்க செய்யும் ஒரு ஆராய்ச்சி ப்ராஜக்ட் விஷயமா ஒரு வருஷம் கான்ட்ராக்டில் இருக்கிறோம். செலவைக் குறைக்க ஒரே அறையில் இருக்கிறோம்" என்றேன். குரலில் மெல்லிய நடுக்கம் வந்தததைத் தவிர்க்க முடியவில்லை.
"எப்படியோ? உங்களுக்கு ஏதும் தெரியவந்தால் பகிருங்கள். அப்போதான் இன்னும் ஃபோகஸ்டா மெடிகேட் செய்ய முடியும். இப்போதைக்கு நிலைமை பரவாயில்லை. ஆனால் இன்னொரு தரம் இப்படியானால் என்னாகும்னு தெரியாது" என்றார்.
"அவளுக்கு கொஞ்சம் சைகலாஜிகல் பிரச்சினையும் இருக்கும் போலத் தெரிகிறது டாக்டர்" என்றேன் மெதுவாக.
"என்ன சொல்றீங்க" என்று கேட்டார் டாக்டர்.
"அடிக்கடி சூயிசைடு அட்டம்ட் செய்வாள் டாக்டர். ஷி இஸ் ஹியரிங் வாய்ஸஸ்"
டாக்டர் கூர்மையாய் என்னைப் பார்த்தார்.
"அவள் கிட்டத்தட்ட இறப்பை நெருங்கும் போது அவளுக்கு சில உள்ளுணர்வுகள் மற்றும் குரல்கள் கேட்கிறது. அவை பெரும்பாலும் கோவில்களில் இருக்கும் இரகசிய அறைகள் மற்றும் புதையல்களைப் பற்றியதாகவே இருக்கிறது. இவற்றை குறித்து வைத்து அரசாங்கத்துக்கு கொடுப்பதற்காக அவள் ஆவலோடு இருப்பதால் நானும் அவளுக்கு உதவியாளனாக சேர்ந்தேன்." என்றேன்.
"நீங்கள் சொல்வதில் எத்தனை உண்மையிருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் இதைப்பற்றி உடனடியாக போலீஸிடம் தெரிவித்துவிடுவது நல்லது என்றபடியே டாக்டர் "இவங்களை பத்திரமா பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி இருப்பவர்கள் குரல்கள் கேட்கும் போது தன்னையும் மீறிய அதிக பலத்தோடு விளங்குவார்கள்" என்றார் டாக்டர்.
"இப்போது கூட அவளுக்கு ஏதோ குரல்கள் கேட்டுக் கொண்டிருக்கும் டாக்டர். கவனித்துப் பாருங்கள்..அவள் இமைகள் மூடியிருந்தாலும், விழிகள் வேகமாக அசைகிறது" என்று கொஞ்சம் நடுங்கிக் கொண்டே சொன்னேன்.
எனக்கு பயமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஒன்றுமில்லாத ஒன்றிற்காகவா இவ்வளவு நாள் உழைத்துக் கொட்டிக் கொண்டிருந்தேன். பக்கம் பக்கமாய் தட்டச்சு செய்து, திருத்தி எழுதி, என் நேரமெல்லாம் இப்படியா விரயம் செய்தேன். இதற்கு நேரிடையாக புராணங்களைப் படித்திருந்தாலும் ஏதும் உண்மையாகவே அறிந்து கொண்டிருக்கலாம். ஒருவேளை தப்பித்தவறி அவள் கழுத்தை நெறிக்கும்போது செத்திருந்தால் எனக்கு கொலை பழி வேறு சேர்ந்து கொண்டிருந்திருக்கும். என்னை முழு முட்டாளாக்கி விட்டாளே இவள் என்று மனதிற்குள்ளேயே மிகவும் ஆதங்கப்பட்டுக் கொண்டேன். இவளை என்ன செய்தால் தகும் என்றும் நினைத்துக் கொண்டேன்.
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகில் இருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். புதிய தெம்புடன் ஓடத் துவங்கினாள். அதிர்ச்சியில் சிறிது உறைந்து நின்ற நான், நர்ஸின் கூக்குரலால் சுதாரித்து அவளைத் துரத்தத் துவங்கினேன்.
டாக்டர் மற்றும் சில நர்ஸுகள் சேர்ந்து காமினியை பலவந்தமாய் தூக்கி வந்து மயக்கமருந்து செலுத்தி படுக்க வைத்தார்கள்.
"அவளைக் கொன்னுரு" என்று எனக்கு யாரோ கட்டளையிட்டார்கள்.
"சரி சிவா" என்றேன் நான்.
சிவா மெல்ல அவளருகில் சென்று "ஸாரி... எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
என்னால் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர ஏதும் செய்ய முடியவில்லை.
"அவளைக் கொன்னுடு சிவா" என்றேன்.
"சரி சிவா" என்றான் சிவா. சிவா அவள் கழுத்தை மெல்ல நெரிக்க ஆரம்பித்தான்.
"என் கழுத்தை மெதுவாக நெறிக்கமுடியுமா?" என்று புன்னகைத்தபடியேதான் கேட்டாள் அவள்.
டாக்டர் உடனே அவளுக்கு அருகில் சென்று காதுகளில் "காமினி... வெல்டன்... எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே..." என்று பாராட்டினார் பரந்தாமன்.
பின் என்னிடம் வந்து மெதுவான குரலில் "இப்போது இவங்க ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு பாருங்க" என்றார்.
"மத்தளி கொட்டிய முற்று மடிப்பன
காரென முழங்கு குரலேறுதுடி சந்த்ரவளை
வீரமுரசுந்திமிறு டாரிகுட பஞ்சமுகி
கரடிபறை யங்கனந் தங்கோடி கொட்டுவன
முறைமுறை வந்தநின் றொன்றோடு கிட்டுவன
கசரதப தாகினி யரக்கர்துணி பட்டுவிழ
களமுழுதும் வாழியதி ருப்புகழ்மு ழக்குவன
கடியகு ணத்த சினத்த சகத்ர யோசனை
நெடிய கழுத்த சுழித்த விழித்த பார்வைய
காதநூ றாயிர கோடி வளைந்தன
பூதவே தாள மநேகவி தங்களே"
என்று உரத்தக் குரலில் பாடிக் கொண்டிருதேன் நான். விபூதி வாசனை மெல்ல பரவத்துவங்கியது.
விபூதி வாசனை - சவால் சிறுகதை
Posted by
Vidhoosh
on Tuesday, September 21, 2010
Labels:
கதை,
சிறுகதைப் போட்டி
33 comments:
puriuthu aana puriyalai
சிறுகதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
பா படத்துல அமிதாப் பச்சன் சொல்றாமாதிரி எனக்கு
ரௌண்ட் ரௌண்ட் ரௌண்ட வருது !!
//"சிவா" என்றழைத்தாள் காமினி.
"என்ன" என்றேன். கோபமாய் இல்லாத போது மட்டும்தான் முழுப்பெயரிட்டே அழைப்பாள். மற்ற சமயங்களிலெல்லாம்
சிவா.//
/"சிவா" என்றழைத்தாள் காமினி.//
"மற்ற சமயங்களிலெல்லாம்
சிவா."
ரெண்டும் ஒண்ணு இல்லையா ?
நானும் களத்திலே இறங்குறேன்
வெற்றி பெற வாழ்த்துகள்!
vaazhthukkal.. nalla muyarchi:)
நல்லா இருக்குங்க.
விவரிப்பில் உயிரோட்டம் இருக்கு.
போட்டியின் வாக்கியங்கள் ஜாடிக்கேற்ற மூடியாக செயற்கைத்தனம் இல்லாமல் பொருந்துகிறது.
வாழ்த்துக்கள்.
அன்பின் விதூஷ்
சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா:)))
வெற்றி பெற வாழ்த்துகள்.
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்..
செல்லாது செல்லாது இது சந்திரமுகி கத! :))
குவாலிஸ்ல சோஃபாவா?
--
:)
நன்றி எல்.கே. :) கொஞ்சம் நிதானமா படிச்சுப் பாருங்க.
சிரிப்பான் என்ன சொல்ல வரது? :)) btw, நர்சிம் பதிவில் ஒரு கதைக்கு உங்கள் முடிவு 100% பொருத்தம் என்றே நினைக்கிறேன். அவர் தளத்தில் பெரியதாக விவாதிக்க ஈடுபாடு இல்லை, சரி போகட்டும் என்று விட்டேன். அதையும் தவிர, நீங்கள் உங்கள் பதிவில் விளக்கம் என்ற பெயரில் விவரித்தது கொஞ்சம் obscene ஆகி விட்டது விசா. :( ரைட்டு, அன்றே உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அப்புறம் உங்கள் இஷ்டம். :)
சித்ரா: நன்றி :) பங்கேற்ப்பதே வெற்றிதான், பரிசு... இன்னும் "king"கரர்கள் இருக்கிறார்கள் இந்த field-டில்.. நான் சும்மா சும்மா... :))
ருத்ர வீணை: ரௌண்ட் ரௌண்ட்தான், இதுதான் தோன்றியது, அந்த வாசகங்கள் ஒரு frame மாதிரி கற்பனை blocker ஆகி விட்டது. இன்னும் என்னென்ன மாதிரி கதைகள் வருகிறது என்று படிக்க ஆசை. பார்க்கலாம்.
நசர்: :) சிங்கம் ஒன்னு புறப்பட்டதே...
டி.வி.ஆர். சார். நன்றி சார்.
கேபிள்: நன்றீஸ். :)
கே.ரவிசங்கர்: :) நன்றிங்க. sorry, ரொம்ப நாளா யாருக்கும் அதிகம் comments இட முடிவதில்லை. ரீடரில் படிக்கிறேன். :(
சீனா சார்: ரொம்ப நன்றி. :)
வித்யா: :)) முருகா....
முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ....எனவோதும் ...
அமைதி: நன்றிங்க... :)
ஆவ்வ்.. //அறைக்குத் திரும்பியதும் // என்று எழுதி இருக்கேனே ஷங்கர்... சந்திரமுகியா... ?? :) உங்க கற்பனைக்கு அளவே இல்லாம போச்சு.. இந்தா வாறன்.
எப்பா!! என்னா ஒரு டெரர் கதை!!
இடையிடையே வரும் பாட்டும், முடிவும்தான் புரியலை. (முழுசுமே புரியாத கவுஜைக்கு இது எவ்வளவோ பர்வால்ல).
அப்றம் ஒரு நியூஸ், சில இளைஞர்கள் போதை மருந்துகள் கிடைக்காத சமயம், இப்படி கழுத்தை நெரிக்க வைத்து போதை வரவழைப்பார்களாம்!! (hallucination)
சூப்பர்ப் வித்யா
வாழ்த்துக்கள் வெற்றி பெறுவதற்கு!!!
அரே அரே அரே அரே அரே....
தேவுடா தேவுடா ரத்னாகிரி தேவுடா...
வெற்றி பெற வாழ்த்துக்கள்....
வெற்றி பெற வாழ்த்துகள்!
//யாரோ கட்டடையிட்டார்கள்//
என்னதிது கட்டடை ஒட்டடைன்னு..? :))
யூ மீன் கட்டளையிட்டார்கள்..?
நல்லா இருக்கு. எதுக்கும் ரெண்டாம் தரம் படிக்கறேன். :p
ஸ்ரீதர் நாராயணன் இந்த கதையை படிக்கனும்னு அந்த முருகனை வேண்டிக்கறேன். :))
ஹுசைனம்மா: அந்த நியூஸ் படிச்ச நினைவில் எழுதியதுதான் :)
சக்தி: :)) நன்றீஸ்.
கிரி: :)) நன்றி
நன்றி நவநீதன் / உழவன்... :)
அம்பி : வாங்கோ.. என்ன இன்னும் குத்தம் கண்டுபிக்க ஆள் வரலேன்னு பார்த்துண்டே இருந்தேன். :)) சொல்லி அனுப்பி ஸ்ரீதரையும் நாலு குத்தம் கண்டு பிடிச்சு எழுத சொல்லுங்க. :))
கதை வித்தியாசமாக இருக்கு.
கதை நல்லாருக்கு.. ஆனா அந்த போட்டி வாக்கியங்கள் ஒட்டாம இருக்கு..
அட்லீஸ்ட் இங்க ->டாக்டர் உடனே அவளுக்கு அருகில் சென்று காதுகளில் "காமினி... வெல்டன்... எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே..." என்று பாராட்டினார் பரந்தாமன்
செம கான்செப்டுங்க.. போட்டிக்காக எழுதாம தனியான கதையா வந்தா பட்டையக் கிளப்பி இருக்கும்.. அந்த வாக்கியங்கள உள்ள நுழைக்கிற முயற்சிலதான் கொஞ்சம் பிசிறு தட்டுது..மத்தபடி எனக்கு ரொம்பப் பிடிச்சு இருக்கு..:-)))
'மிகச்சிறந்த sharing button'- tell a friend sharing button for every posts in your blog
http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html
5 important blogs for bloggers
http://ramasamydemo.blogspot.com/2010/09/5-important-blogs-for-bloggers.html
Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு
http://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html
add subscribe via email gadget
http://ramasamydemo.blogspot.com/2010/09/add-subscribe-via-email-gadget-for-your.html
'மிகச்சிறந்த sharing button'- tell a friend sharing button for every posts in your blog
http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html
5 important blogs for bloggers
http://ramasamydemo.blogspot.com/2010/09/5-important-blogs-for-bloggers.html
Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு
http://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html
add subscribe via email gadget
http://ramasamydemo.blogspot.com/2010/09/add-subscribe-via-email-gadget-for-your.html
பிக்ஷன் ரொம்ப நல்லா வந்திருக்கு.. 2/3 வரைக்கும் எதுவுமே யூகிக்க முடியல.. சஸ்பென்சை நல்லா கொண்டு போனீங்க..
கடைசியில அவசரமா எழுதி முடிச்ச மாதிரி இருக்கு.. முடிவும் சரியா புரியாம.. விபூதி = drug? அதனால சிவாவுக்கும் hallucination வந்துட்டதா?
முதல் வாக்கியம் நல்ல பொருத்தம்.. ஆனா இறுதியா டாக்டர் சொல்றது ஒட்டல..
உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்
வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்
ம்ம்ம் நல்லாயிருக்கே. நீங்கெல்லாம் எழுதினது தெரிஞ்சிருந்தா நான் எழுதியிருக்கவே மாட்டேனே :)
வித்தியாசமாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்..
எனது கதையையும் படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.. நன்றி
வாழ்த்துகள் விதூஷ். கதை குறித்து ஒரு வார்த்தை. அசத்தல்.
கதை நல்லா இருக்கு . வாழ்த்துகள்
//ஸ்ரீதர் நாராயணன் இந்த கதையை படிக்கனும்னு அந்த முருகனை வேண்டிக்கறேன். :))//
வந்திட்டோம்ல. குரல் உட்டதுக்கு அம்பிண்ணாக்கு நன்றிண்ணா.
விதூஷ்... அருமையான முயற்சி. ஏறக்குறைய இதைப் போன்ற கருவில் ஒரு கதை எழுதி கிடப்பில் போட்டு வைத்திருக்கிறேன்.
கொஞ்சம் டிங்கரிங் செய்திருந்தால் வடிவ நேர்த்தி வந்திருக்கும். வாழ்த்துகள்க்கா!
நல்லா எழுதியிருக்கீங்க. நானும் எழுதியிருக்கேன் "வைரம் உன் தேகம்"ங்கற தலைப்பில்
http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html
Post a Comment