oversightட்டில் இந்திர பார்த்தசாரதி என்று எழுதிவிட்டேன். தவறை சுட்டியதற்கு நன்றி பாலா. :)
கிருஷ்ண தந்திரம் (இந்திரா சௌந்தரராஜன்) நேற்று இரவு படித்தேன். வழக்கமான இ.சௌ. ஸ்டைல்.. ஆனால் குழலோசை நிறைந்து பக்கமெல்லாம் விரவிக் கிடந்தது. விலை ரூ.250 திருமகள் பதிப்பகம்.. நிறையா எழுத்துப் பிழை விட்டிருந்தாங்க. நிறையா வரிகள் அழிக்கப் பட்டு விட்டதோ என்று தோன்றியது..
நான் லெண்டிங் லைப்ரரியில் இருந்து வாங்கிப் படித்தேன்.
"ஐயோ தமிழ் நாவல் உலகம் முதியவர்களின் கூடாரமாகி விட்டதே....... " என்று என்னுரையில் ஆசிரியர் புலம்பிக் கொண்டே ஆரம்பிக்கிறார்.
தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் 55 வாரங்கள் தொடராக வந்தது. 55 வாரங்கள் தொடராக வந்திருப்பது வாசகர்களின் ஆவலையே காட்டுகிறது.
கோட்டைபுரத்து வீடு விகடனில் படிச்சதுதான் இ.சௌ.வை முதன் முதலில் படிக்க ஆரம்பிச்சது. ஒரு வகை obsession ஆகிப் போனது இவர் எழுத்து ஸ்டைல்.
ஆன்மிகம், மர்மம், கொஞ்சம் நவீனம் என்று ரொம்ப ரொம்ப எளிதாக இருக்கும் எழுத்து. நேற்று இரவு பத்தரை மணிக்கு படிக்க ஆரம்பித்தேன், இரண்டு மணிக்கு படிச்சு முடிச்சுதான் தூக்கம் வருவது போல உணர்ந்தேன்.
செல்லப்பாவின் ஆன்மா மரத்தடியில் மாஸ்டருக்கு காட்சியளிக்கும் போது, chair-ரில் இருந்த சாதாரண காசித்துண்டை பார்க்கும் போதே கொஞ்சம் திகிலாக இருந்தது.
யக்ஞன் என்பவனின் கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் விவரிக்கப் பட்டு இருக்கலாமோ என்று தோன்றுகிறது. திடீர்னு வந்து திடீர்னு செத்து திடீர்னு பிழைச்சு வரார். கடைசியில் இவர் என்ன ஆனார்னே தெரியல..
பைராகி வரும் இடங்கள் எல்லாமே கலக்கல்.. கதையே இவர்தான்.. பட்டர் சாலக்கிராமங்களை திரௌபதி குளத்தில் போட்டு 'இதை எடுத்துக் கொண்டு கிருஷ்ணன் வருவான்" என்று சொல்லுகிறார். ஆனால் பைராகியே சாலக்கிராமங்களை எடுத்து வெளியே வரும்போது நாமே கோவில் பட்டரை ஒரு எள்ளல் பார்வையோடு பார்ப்பது போல தோன்றவைப்பது ஆசிரியரின் வெற்றி.
நல்ல நாவல்.. வருங்காலத்தில் 'அருந்ததி' புகழ் அனோஷ்கா ரிட்டையர் ஆகி டிவியில் நடிக்க வந்தால், இந்தக் கதையின் நாயகியாக இருக்கலாம். மெகா சீரியலாக எடுத்தால் சுமார் ஐநூறு வாரங்கள் கூட இழுத்தடிக்கலாம்..
====================
ஒரு நாள் சாயந்திரம் மழையில் வெளியே விளையாடப் போக முடியாம, டாம் அண்ட் ஜெர்ரி வையுன்னு ஒரே அடம்.. சரின்னு சேனல் மாற்றி வைக்கும் போது ராஜ் டிவியில் திரிஷாவின் மூக்கை காட்டி'இது யார்ன்னு' பதினைந்து நிமிஷத்துக்குள் சொன்னால் 6000 ரூபாய் பரிசு என்று ஒரு அறிவிப்பாளர் அறிவித்துக் கொண்டே இருந்தார். சரி எத்தனை பேர்தான் கூப்பிட்டு பேசறாங்கன்னு பார்க்கலாமேன்னு கொஞ்சம் பார்த்துக் கொண்டிருந்தேன். நாலாவது நிமிஷம் வரை யாருமே கூப்பிடலை. அந்த அறிவிப்பாளரும் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தார்.
'அம்மா!! டாம் அண்ட் ஜெர்ரி' என்று சொல்லிக் கொண்டே இருந்தாள் ... கொஞ்சம் இரு ப்ளீஸ், யாராவது ஒருத்தராவது இந்த ப்ரோக்க்ராமை பார்கிறானான்னு தெரிஞ்சுக்கலாம்.. என்றேன். பொறுமை இழந்த எம்பொண்ணு டிவீ கிட்ட போயி "டேய்... எச்சல கொஞ்சம் முழுங்குடா" என்றாளே பார்க்கணும்.. :)))
இசௌ-வின் கிருஷ்ண தந்திரம் & எச்சல முழுங்குடா
Posted by
Vidhoosh
on Tuesday, August 17, 2010
Labels:
ஊஞ்சல்
15 comments:
எச்சிலை எதுக்கு முழுங்கனும், விடாம பேசிகிட்டே இருந்தானா?
விதூஷ்... இபா எப்பங்க இப்படி எழுதினார். அது இந்திராசௌந்திரராஜன் இல்ல..?
:) thanks bala. oversight ... :(
"தொட தொட தங்கம்" படிச்சு பாருங்க!!
வால்பையன்: ஆமா.. ஒரு செகண்ட் கூட நிறுத்தலைங்க
மூக்கு பிடிக்க சாப்பிடறதுன்னு கேள்விபட்டிருக்கேன். கண்ணு மறைக்க சாப்பிட்டு பதிவு போட்டா இப்படித்தான் ஆகும்:))))))
//"டேய்... எச்சல கொஞ்சம் முழுங்குடா" //
:)
//"டேய்... எச்சல கொஞ்சம் முழுங்குடா" //
ஏன்..எச்சி முழுங்கற கேப்ல “டாம் அண்ட் ஜெர்ரி” க்கி மாத்தி கிடா வெட்டலாம்னு பாக்கறாங்களா உங்க பொண்ணு ?? விட மாட்டோம்ல...நிருத்தாதடா...முச்சி நிக்கிறவரைக்கும்.... :))
நான் கூட ரெக்கமண்ட் பண்றேன்...”தொடத் தொடத் தங்கம்”
//எம்பொண்ணு டிவீ கிட்ட போயி "டேய்... எச்சல கொஞ்சம் முழுங்குடா" என்றாளே பார்க்கணும்.//
நச் :)
follow
அவர் நாவல்கள் எப்போதுமே வித்தியாசமாக இருக்கும்
எம்பொண்ணு டிவீ கிட்ட போயி "டேய்... எச்சல கொஞ்சம் முழுங்குடா" என்றாளே பார்க்கணும்.. :)))
பொண்ணு டிவிய பார்த்து சொன்னங்களா இல்ல?
http://marumlogam.blogspot.com
இந்திரா செளந்திராஜன் கதை விவரிப்பு நன்றாக இருந்தது 500 வாரம் மெகாசீரியல் நிஜமாக நடக்கலாம்
எச்சில் முழுங்காமல் பேசும் பலரை குழந்தைகள் பார்த்து பார்த்து திட்டுவது இயல்பாகி விட்டது
விமர்சனத்தில் பல குழந்தைகள் திட்டுவது போலவும் உள்ளது :-)
நன்றி ஜேகே
ராஜ் டிவி மேட்டரே வேற. நான் ஒரு கால் பண்ணினேன் (ரொம்ப வெட்டியா இருக்கேன்னு தெரியுதா). அவங்க என் காலை பத்து நிமிடங்களுக்கு மேல ஹோல்ட் பண்ணாங்க. டிவிய உத்துப் பாத்தாத் தெரியும். 'your call may be put on hold' அப்படிங்கற டிஸ்க்ளைமர். பணம் பறிக்கிறதுக்காக நடக்கிற பகல் கொள்ளை அது.
Post a Comment