(என்னை) அடக்குவார் இல்லாமல் போய்விட்டதே

ஒரு நாள் செல்வந்தர் ஒருவர் காட்டு வழியே பயணித்துக் கொண்டிருந்தார். மூன்று திருடர்கள் அவரை அடித்து அவரிடம் இருந்த செல்வங்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டனர்.

முதல் திருடன் அவரைப் பார்த்து "இப்போது இவனிடம் எதுவுமே மிஞ்சவில்லை. இவனைக் கொன்று விட்டால்தான் சரியாக இருக்கும். இல்லையென்றால் இவன் காவல்காரர்களிடம் சொல்லி விடுவான்" என்கிறான். இப்படி சொல்லிக் கொண்டே தன்னிடம் இருந்த குறுவாளை எடுக்கிறான் முதல் திருடன்.

இரண்டாவது திருடன் "பொறுமையாக இரு.. நமக்கு வேண்டியது செல்வங்கள்தானே. அவைதான் கிடைத்து விட்டனவே. இவனைக் கொல்வதால் என்ன லாபம்? இவனை மரத்தில் கட்டிப்போட்டு விட்டு நாம் ஓடிவிடலாம்" என்று கூறுகிறான். மூன்றுபேருமாக செல்வந்தனை மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள்.

சிறிது தொலைவு சென்றதும் மூன்றாம் திருடனுக்கு மனதில் ஒரு கவலை ஏற்படுகிறது. "பாவம் அந்த செல்வந்தன். உதவிக்கு யாரும் கிடைக்கவில்லையென்றால் பசி-தாகத்தில் இறந்து விடுவான். காட்டு விலங்குகள் அவனை சாப்பிட்டுவிடும்." என்று பரிதாபத்தோடு அவன் மட்டும் திரும்பி வந்து செல்வந்தனை கட்டிலிருந்து விடுவித்தான். மூன்றாம் திருடன் செல்வந்தனை பொதுப்பாதை வரை அழைத்து வந்து விட்டுவிட்டு "இந்தப் பாதையில் நேராகச் சென்றால் உன் கிராமம் வந்து விடும்" என்று கூறிவிட்டுச் செல்கிறான்.

வழியில் மகாராஜாவின் படையொன்று இவரைத் திருடன் என்று கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். மகாராஜாவின் அந்தரங்கப் பணியாளர் ஒருவருக்கு இச்செல்வந்தரைப் பற்றி ஏற்கனவே தெரியும் என்பதால் விடுதலை செய்யும்படி மகாராஜாவுக்கு பரிந்துரை செய்கிறார். மகாராஜாவும் உண்மையறிந்து விடுதலை செய்கிறார். இதனால் மகாராஜாவிற்கு மாதம் தவறாமல் தான் ஈட்டும் செல்வங்களில் ஒரு பகுதியை அனுப்பித் தருகிறார் செல்வந்தர். மகாராஜாவும் செல்வந்தரும் நல்ல நண்பர்கள் ஆகினர். செல்வந்தர் எப்போது வேண்டுமானாலும் அரண்மனைக்குள் சுதந்திரமாக வந்து போகும் படியாக அமைந்தது இந்த நட்பு.

ஒரு முறை தன் இல்லத்து விழாவுக்கு மகாராஜாவை அழைக்கிறார் செல்வந்தர். மகாராஜாவும் தன் அந்தரங்கப் பணியாளருடன் வருகிறார். அந்தரங்கப் பணியாளரை விருந்தின்போது அலட்சியத்துடன் நடத்தி வெளியே நிற்கும்படி செய்கிறார் செல்வந்தர்.

இதனால் மனம் வருந்தும் அந்தரங்கப் பணியாளர் இச்செல்வந்தருக்கு எப்படியாவது புத்தி புகட்ட வேண்டும் என்று நினைக்கிறார். ஒரு முறை மகாராஜாவின் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மகாராஜாவின் காதில் படும்படி "இந்த செல்வந்தனை அடக்குவார் இல்லாமல் போய்விட்டதே.. இப்படி அந்தப்புரம் வரை செல்கிறானே!" என்று புலம்பினார். அவ்வளவுதான். அந்த செல்வந்தர் வருவதை தடை செய்யும் படியும் தன்னை சந்திக்கவே முடியாதபடியுமாக உத்தரவிட்டார் மகாராஜா. செல்வந்தருக்கோ ஒரே குழப்பம் - என்னவாயிற்றோ என்று. மிகவும் மனம வருந்தினார். அந்தரங்கப் பணியாளரின் நினைவு வந்து அவரை வீட்டிலேயே சந்திக்க சென்றார் செல்வந்தர். "இளையயோரைப் பகையாதே" என்கிறார் அந்தரங்கப் பணியாளர். அடாடா இதுதான் நடந்ததா.. என்று மனம் வருந்துகிறார் செல்வந்தர். இதைச் சரி செய்யும்படி வேண்டிக் கொள்கிறார்.

மறுநாள் மகாராஜாவின் அறையை சுத்தம் செய்யும் போது 'இதென்ன! மகாராஜா சாப்பிடும் போதெல்லாம் தும்மல் வந்து உணவை இறைக்கிறாரே" என்று புலம்புகிறார். என்ன உளறுகிறாய் என்று மகாராஜா கோபிக்கவும் பணியாளர் "வயதானதால் இரவு உறக்கம் வரவில்லை.... இப்படித்தான் அரைதூக்கத்தில எதையேனும் உளறிவிடுகிறேன் மகாராஜா.. என்னை மன்னியுங்கள்."
என்கிறார். மகாராஜாவும் இவரை முழுமையாக நம்புகிறார். செல்வந்தர் பற்றிய செய்தியும் புரளிதான் என்றறிந்து செல்வந்தரை மன்னித்து நண்பனாக ஏற்கிறார்.

கதை நன்றி: நைஜீரியா இராகவன் அவர்கள்

எப்படியோ கதைன்னு ஒன்று சொன்னால் கருத்து சொன்னால்தானே கதை முடிந்ததாக அர்த்தமாகும்.... கருத்தை இந்தக் காலத்துக்கு ஏற்றமாதிரி மாற்றிக் கொள்ளுங்கள்.... பெரிய ஆளுமைகள், அல்லது தன்னை ஆளுமையாக நினைப்பு கொண்டிருப்பவர்களின் நட்பும், அவர்களின் கார் ஓட்டிகள், சமையல்காரர்கள், பெர்சனல் அஸிஸ்டன்டு-கள், ஆஃபிஸ் பாய்கள் போன்றவர்களின் பகையும் ஆபத்துக்கு வழிவகுக்கும். ஒரு கோல்கேட் புன்னகையை மட்டுமே இவர்களுக்கு எப்போதும் தரத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது கால் கிலோ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா-வும் தரலாம்.

48 comments:

நேசமித்ரன் said...

செம மொக்கையா இருக்குங்க கதை
சிறுவர் மலர் கதை போல

நாற்றங்காலில் பகிர்ந்திருக்கலாம் :)

Vidhoosh said...

எவ்ளோ பெரிய மேசெஜு மஞ்ச கலர்ல போட்டிருக்கேன்.. இதைப் போய் மொக்கைன்னு சொல்றீங்களே. இதுகுள்ள பெரிய மேனேஜ்மென்ட் கான்செப்ட் ஒளிஞ்சுகிட்டு இருக்குங்க நேசன். :))

நேசமித்ரன் said...

ஆஹா உள்குத்து மேட்டரா

நமக்கு வேண்டாம் சா...மி அரசியல்

மீ தி டரியல் எஸ்கேப்பு

Vidhya Chandrasekaran said...

யக்கோவ் அந்த மஞ்சா கலர் மெசேஜில் ஒளிந்திருக்கும் ரசசியத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். விரைவில் உண்மை அம்பலமாகும்.

நசரேயன் said...

தலைப்பை பார்த்துவிட்டு என்னவோ .. ஏதோன்னு வந்தா , இங்கே ஒரு அறிவுரை மழையா இருக்கு

Vidhya Chandrasekaran said...

பாருங்க. நான் ஸ்மைலி எல்லாம் போடல. நான் நெம்ப சீரியசா பேசறேன்.

தமிழ் அமுதன் said...

சரி... இந்த கதைக்கும், முதல்ல வந்த அந்த த்ரீ திருடர்ஸ் க்கும் என்ன சம்பந்தம்...?

அதான் புரியல..!

தமிழ் அமுதன் said...

///நேசமித்ரன் said...

ஆஹா உள்குத்து மேட்டரா

நமக்கு வேண்டாம் சா...மி அரசியல்

மீ தி டரியல் எஸ்கேப்பு///

உள் குத்து மேட்டரா..! ம்ம்ம்..நமக்கு ஒன்னும் விளங்கல
இந்த மாதிரி உள் குத்து மேட்டர் பதிவு போட்டா எதாச்சும் க்ளூ போடுங்க... மண்டை காயுது ;)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கதை நல்லா இருக்கோ இல்லையோ!

உங்களுக்கு கதை சொல்ல வருது!

:)))

வால்பையன் said...

மூணூ திருடனுங்க இதுல எதுக்கு வர்றாங்க!

தமிழ் சினிமா எடுக்க நீங்க சரியான ஆள். தேவையில்லாத கேரக்டர், காட்சிகள் எல்லாம் புகுத்த உங்களுக்கு நல்லா வருது!

:)

ஆதவா said...

நல்லா கதையெழுதீறிங்க... ஆனா சின்னப் பசங்களுக்கு மட்டும்னு ஒரு முன்குறிப்பு போட்டிருக்கலாம்!!
எனிவே, கடைசியா வந்த மெஸெஜ், நல்லது!

Radhakrishnan said...

மகாராஜாவுக்கு சுய புத்தி கிடையாது போல. அப்படிப்பட்ட அரசரை கொண்ட அரசு எப்படி விளங்கும்? நல்ல கதை. திருடர்கள் கட்டி போடவில்லை எனில் மகாராஜாவை செல்வந்தர் சந்திக்க வாய்ப்பில்லை என கொள்க.

வால்பையன் said...

// திருடர்கள் கட்டி போடவில்லை எனில் மகாராஜாவை செல்வந்தர் சந்திக்க வாய்ப்பில்லை என கொள்க. //

சினிமா தான் மூணு மணி நேரம் ஓடனும்னு கட்டாயம். இது கதை,

பணம் தொலைத்த செல்வந்தர் என்று ஆரம்பத்திருக்கலாம்!


ஒருநாட்டு அரசனை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய குடியானவனுக்கு அரசர் நிறைய உதவி செய்து நண்பனாகவும் வைத்து கொண்டார் என்று ஆரம்பிக்கலாம்!

இப்படி எவ்வளவோ இருக்கு? திருடர்கள் எதுக்கு கதையில் வர்றாங்க, அவுங்க மூணு பேர் கேரக்டர் வித்தியாசம் இங்கே நமக்கு எதுக்கு, கதையின் நீதி சிறியோரை மதித்தலா!? காட்டுக்குள் தனியா போகாதேவா? அல்லது நல்ல திருடனா பார்த்து திருடக்குடுவா!?

சிறுவர் கதை என்பதால் கேள்வி கேட்கக்கூடாதா?
ஏன்னா அதெல்லாம் மேஜிக்கல் ரியலிசத்தில் சேரும்!

:)

(எனக்கு கேள்வி கேட்க ரொம்ப பிடிக்குமுங்க)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//(என்னை) அடக்குவார் இல்லாமல் போய்விட்டதே//

Forwarded to Sri baskar

T.V.ராதாகிருஷ்ணன் said...

//(என்னை) அடக்குவார் இல்லாமல் போய்விட்டதே//

Forwarded to Sri baskar

a said...

//
கதை நன்றி: நைஜீரியா இராகவன் அவர்கள்
//

ரொம்ப தெளிவா இருக்கீங்க....

Radhakrishnan said...

:) அருமை அருண். நல்லாவே கேள்வி கேட்கறீங்க.

ஆனாலும் பாருங்க.

அந்த திருடர்கள் கதையில் வந்துவிட்டார்கள்.

அதற்கு என்னவாக இருக்கும் என யோசிப்பதுதான் சரியாக இருக்கும்,

எதற்கு வர வேண்டும் என யோசிப்பது எப்படி சரியாகும்.

இந்த கதையின் தொடக்கமே மிகவும் வித்தியாசமாக இருக்கிறது எனும் ரீதியில் படித்து பாருங்கள்.

இந்த கதையின் நீதி, கதை என்ன சொல்ல வருகிறது என்பதை அவரவர் சிந்தித்து கொள்வதுதான் சரி.

ஒன்று நடந்தது, அது எப்படி நடந்தது, எதற்கு நடந்தது. அவ்வளவுதான். அதுதான் கதை. இதை மாற்றி எழுதினாலும் கதைதான், ஆனால் அந்த கதை இந்த கதையாக இருக்காது.

இந்த கதையின் நீதி வேண்டுமெனில் ஒரு தனி பதிவே எழுதலாம். அவ்வளவு விசயங்கள் உள்ளடக்கிய கதை இது. நான் கதை விடலீங்க. ;)

வால்பையன் said...

//இந்த கதையின் நீதி வேண்டுமெனில் ஒரு தனி பதிவே எழுதலாம். //

அப்ப பதிவின் கடைசில் இருக்கும் நீதி எதுக்கு!, அப்படியே புனைவு மாதிரி விட்டுட்டா ஆளாளுக்கு ஒண்ணு நினைச்சுகுவோமே!

நட்புடன் ஜமால் said...

இராகவ் அண்ணன் சொன்ன கதையா!!!

பா.ராஜாராம் said...

பதிவு அருமை. பகிர்விற்கு நன்றி.

இங்ஙனம்,
ஜ்யோவ்ராம் சுந்தர்.

மரா said...

சென்ற வாரம் தான் மூன்ரு பதிவர்களை சந்தித்தேன்னு சொன்னீங்க. இப்புடி புனைவு எழுதிப்போட்டீங்க.
சிவசிவா.....ஆமையை பொறாட்டி போட்டு அடிச்சாதான் சாகும் :)

நான் என்ற வேலையை பாக்குறேன்.நமக்கு எதுக்கு ஊர்வம்பு...சிவ சிவா

இராகவன் நைஜிரியா said...

எப்போது ஒரு கதையை சொல்லியாகிவிட்டதோ, அப்போதோ அங்கேயே அந்த ஆசிரியனின் வேலை முடிந்து விடுகின்றது... வாசகர்கள் அதற்கு மேல் அவர்களாகவே கற்பனை பண்ணிக் கொள்ள வேண்டும். அதில் கேள்விகள் கேட்பது ஆசிரியனுக்கு பிடிப்பதில்லை. நன்றி நேசமித்ரன்..

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...
இராகவ் அண்ணன் சொன்ன கதையா!!! //

இவ்வளவு அப்பாவியா நீங்க ??

இராகவன் நைஜிரியா said...

// Vidhoosh(விதூஷ்) said...
எவ்ளோ பெரிய மேசெஜு மஞ்ச கலர்ல போட்டிருக்கேன்.. இதைப் போய் மொக்கைன்னு சொல்றீங்களே. இதுகுள்ள பெரிய மேனேஜ்மென்ட் கான்செப்ட் ஒளிஞ்சுகிட்டு இருக்குங்க நேசன். :)) //

அடுத்து இந்த கான்சப்ட்டை வைத்து, தம்பி நேசன் ஒரு கவிதை படைப்பார்.

இராகவன் நைஜிரியா said...

// நேசமித்ரன் said...
ஆஹா உள்குத்து மேட்டரா

நமக்கு வேண்டாம் சா...மி அரசியல்

மீ தி டரியல் எஸ்கேப்பு //

யூ டூ நேசா?

இராகவன் நைஜிரியா said...

// தமிழ் அமுதன் said...
சரி... இந்த கதைக்கும், முதல்ல வந்த அந்த த்ரீ திருடர்ஸ் க்கும் என்ன சம்பந்தம்...?

அதான் புரியல..! //

சில பேர் இராகவனைக்கூடத்தான் வலைப்பதிவர் என்று சொல்லிகிட்டு இருக்காங்க... அதையெல்லாம் கேள்வி கேட்காகம இத மட்டும் கேட்கறீங்க..

இராகவன் நைஜிரியா said...

// வித்யா said...
பாருங்க. நான் ஸ்மைலி எல்லாம் போடல. நான் நெம்ப சீரியசா பேசறேன். //

ஓ... அப்ப ஸ்மைலி போட்டா காமெடின்னு அர்த்தமா?

இராகவன் நைஜிரியா said...

// வழிப்போக்கன் - யோகேஷ் said...
//
கதை நன்றி: நைஜீரியா இராகவன் அவர்கள்
//

ரொம்ப தெளிவா இருக்கீங்க.... //

ரொம்பவே தெளிவா இருக்காங்க...

எறும்பு said...

ராகவன் அண்ணே சொன்ன கதைய இப்படி சொதபீடீங்க... ஒரு கதையை முழுசா சொல்ல முடியலை. நீங்க எல்லாம்...
சரி அந்த மூணு திருடங்கள்ல நீங்க ஒண்ணா?

எறும்பு said...

//T.V.ராதாகிருஷ்ணன் said...

//(என்னை) அடக்குவார் இல்லாமல் போய்விட்டதே//

Forwarded to Sri baskar///

பாவம் பாஸ்கர்

எறும்பு said...

//Vidhoosh(விதூஷ்) said...

எவ்ளோ பெரிய மேசெஜு மஞ்ச கலர்ல போட்டிருக்கேன்..//

ஆத்தா, அது மஞ்சள் இல்லை காவி. இதன் மூலம் நீங்கள் ஒரு இந்துத்துவவாதி எனபது நிரூபணம் ஆகிறது. காவியை மஞ்சள் என்று சொல்லி உங்க இந்துத்துவ கருத்துக்களை அப்பாவி வாசகன் மேல் திணிக்க்ரீர்கள்.

எறும்பு said...

//யக்கோவ் அந்த மஞ்சா கலர் மெசேஜில் ஒளிந்திருக்கும் ரசசியத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். விரைவில் உண்மை அம்பலமாகும்.//

Vidhya, கடந்த புதன் அடையாரில் இருக்கும் vegnation வந்து இருந்தீங்கன்னா அம்பலம் ஆகி இருக்கும். இப்ப விதூஷ் எஸ்கேப்.

மேல் விபரங்களுக்கு விதூஷ்..

நேசமித்ரன் said...

//
Blogger இராகவன் நைஜிரியா said...

எப்போது ஒரு கதையை சொல்லியாகிவிட்டதோ, அப்போதோ அங்கேயே அந்த ஆசிரியனின் வேலை முடிந்து விடுகின்றது... வாசகர்கள் அதற்கு மேல் அவர்களாகவே கற்பனை பண்ணிக் கொள்ள வேண்டும். அதில் கேள்விகள் கேட்பது ஆசிரியனுக்கு பிடிப்பதில்லை. நன்றி நேசமித்ரன்..//

ரைட்டு ...

ஊர்ல இருந்து இந்தப் பக்கம் வந்துதானே ஆகனும் வாங்க ...

நன்றி அண்ணே

எறும்பு said...

// நேசமித்ரன் said...

செம மொக்கையா இருக்குங்க கதை //

நேசமித்ரன்,
கதை ராகவன் என்று கார்ட் போட்டும் இப்படி சொன்னா எப்படி?.

வேற வழியில்லை.. விதூஷ புராணத்தின் படி, உங்களையும் ராகவன் அண்ணாவையும் ஒரே ரூம்ல அடச்சு, அவரு நாள் பூரா பேசி இல்ல இல்ல மொக்கை போட்டு,நீங்க காதுல ரத்தம் வழிய வழிய கேக்கணும்.

நேசமித்ரன் said...

//அடுத்து இந்த கான்சப்ட்டை வைத்து, தம்பி நேசன் ஒரு கவிதை படைப்பார்//

நீங்க வேற இல்ல இங்க

சின்னப் பையன பார்த்தா பாவமா இல்லையாண்ணே

நீங்க கும்முனா சிங்கம் குட்டிய தூக்குற மாதிரி

ஊர் கூடு கும்முனா கழுதைப் புலிங்ககிட்ட சிக்குன சிங்கம் மாதிரி சின்னா பின்னம் ஆகுடுமே :)

எறும்பு said...

//// வித்யா said...
பாருங்க. நான் ஸ்மைலி எல்லாம் போடல. நான் நெம்ப சீரியசா பேசறேன். //

ஓ... அப்ப ஸ்மைலி போட்டா காமெடின்னு அர்த்தமா?///

சில பேர் சீரியஸ்ஸா சொல்லிட்டு திட்டு வாங்காம இருக்க ஸ்மைலி போடுவாங்க..

:)))
:)))

நேசமித்ரன் said...

//யூ டூ நேசா?//

நோ கொல வெறி ப்ளீஸ்

Vidhoosh said...

என்னா மேன் நடக்குது இங்க... இன்னாதிது கூட்டம் போட்டுக்கிட்டு...

எறும்பு said...

//Vidhoosh(விதூஷ்) //

ஏன் உங்க பேர தமிழ்லையும் ஆங்கிலத்திலும் எழுதி இருக்கீங்க.. உங்க ப்ளாக எத்தனை englishkaaran படிக்கிறான்..
நீங்கள் வழக்கமாக புகுத்தும் சமஸ்க்ரிததை ஏன் விட்டுடீங்க?

எறும்பு said...

//ரைட்டு ...

ஊர்ல இருந்து இந்தப் பக்கம் வந்துதானே ஆகனும் வாங்க ...
//

விடாதீங்க.. உங்க உதவிக்கு ஆள் வேணுமின்னா சொல்லுங்க.. இங்க இருந்து அனுப்புறோம்.
:):)

வித்யா

நானும் ஸ்மைலி போட்டுட்டேன்

எறும்பு said...

//என்னா மேன் நடக்குது இங்க... இன்னாதிது கூட்டம் போட்டுக்கிட்டு...//

ஆத்தா, கடை கல்லா கட்டினா பிரியாணி பொட்டலம் வாங்கி தரேன்னு சொல்லிட்டு இப்ப என்ன?

நேசமித்ரன் said...

//சில பேர் இராகவனைக்கூடத்தான் வலைப்பதிவர் என்று சொல்லிகிட்டு இருக்காங்க... அதையெல்லாம் கேள்வி கேட்காகம இத மட்டும் கேட்கறீங்க.//

உலக நாயகன் எங்கள் நைஜீரிய வலைசங்கத்தலைவர் அண்ணல் ராகவனை வலைப்பதிவர் இல்லையென்று சொல்பவர் இன்னும் மண்ணில் உளரோ

எங்கே நைஜீரியாவின் சூப்பர்ஸ்டார்
தளபதி அணிமா

எங்கே இளஞ்சிங்கம் இளமுருகன் தங்க வேலு

எங்கே புரட்சி வேள் புண்ணாக்கு மூட்டை பாலா

( ம்ஹூம் இம்புட்டு நேரம் பூட்டுன வீட்டு முன்னாடிதான் சவுண்டக் குடுத்தோமா ..)

நேசமித்ரன் said...

//Blogger Vidhoosh(விதூஷ்) said...

என்னா மேன் நடக்குது இங்க... இன்னாதிது கூட்டம் போட்டுக்கிட்டு...//

வந்துட்டாங்கையா சிரிப்பு போலீஸ் தமிழ் சினிமா மாதிரி கட்சீல

எங்கையா போய்டீக ...

Vidhoosh said...

வித்யா: அம்பலமாகட்டும்.. அப்புறம் பாத்துக்கலாம்.

நசரேயன்: ஞானக் கண்ணால் பார்த்தால் கல் கூட கடவுள்-னு எங்க கமலஹாசன் சொல்லிருக்கார்..

மிஸ்டர் டமில் அமுடன்: காசு கொடுத்து டிக்கட் வாங்கி ரோபோ பாக்கும் போது இந்தக் கேள்விய கேளுங்க..

அ.வெ.ஜோ.பா.. ரொம்ப கஷ்டம்பா.. உங்க பேரை டைப்பரதுக்குள்ள....ஆவ்வ்...

வாலு: மிஸ்டர் டமில் அமுடன் யாருக்கிட்ட கேள்வி கேக்கராரோ அவர் பதில் சொல்லட்டும் நானும் சொல்றேன்.. கேள்வி கேட்பதில் உங்களை ஜெயிச்சு நிக்கிறார் ஒரு ஆள்.. சும்மா இன்னும் பச்ச புள்ள மாதிரி அதையே சொல்லிக்கிட்டு... :)) கடேசில இருக்கும் நீதி சொன்னாத்தான் கதை முடிஞ்சதா ஆகும்... இலக்கணம் அப்படி.

ஆதவா.. :)) இது பெரியவங்களுக்குத்தான்...

வி.ரா.கி.. கரெக்ட்டு அதான் அதேதான்... :))

டி.வி.ஆர்.சார்... :))

யோகேஷ்: :-))

ஜமால்: :)) என்னவோ போங்க சார்.. நீங்க இப்டியே நல்லவரா இருந்துருங்க.

பாரா அண்ணே... நீங்களுமா அண்ணே ஐக்கியமாயிட்டீறு அங்க...

ராவணா: அப்போ சிவனேன்னு இருக்கணும்... எங்க பாடுங்க..

வாங்க அண்ணே.. நை நை அண்ணே..

எறும்பு: காக்க பிரியாணி கொடுத்தாதான் திருந்துவீறு..

நேசன்: கடைய பூட்டுறதே இல்லை.. இபோதான் சாப்ட்டு வரேன்..

பா.ராஜாராம் said...

// பாரா அண்ணே... நீங்களுமா அண்ணே ஐக்கியமாயிட்டீறு அங்க//

எங்க, வித்யா?

shunmuga said...

மத்த இரண்டு திருடர்க யாரு என்ரு சொல்லவில்லை. அதில் ஒருவர் விதுஷ் ஒருவர் வித்யா ஒருவர் யார் ?

R.Gopi said...

ராகவன் அண்ணா எழுதிய சிறுவர் மலர் கதை அற்புதம்...

அதை பகிர்ந்த விதூஷ்... ஆகிய ரெண்டு பேருக்கும் என் நன்றி....

R.Gopi said...

ராகவன் அண்ணாவின் அடுத்த அம்புலிமாமா கதைக்காக வெயிட்டிங்...

என்னோட ட்ராமா கூட கேட்டுட்டு சொல்றேன்னு இன்னும் எதுவும் சொல்லல... அதையும் கொஞ்சம் என்னன்னு கேட்டு சொல்ல சொல்லுங்க விதூஷ்....

Post a Comment