**காதலில் தோற்றல்**
கிறுக்கி வைத்த
வார்த்தைகளால்
வரைந்து வைத்த
எல்லா முகத்திற்கும்
புத்தன் என்றே பெயர் வைத்தேன்
குடையை மழை
நனைத்து கொண்டிருந்தது
**காத்திருப்பு**
ஒரு நிமிஷம் யுகமாகும்
மந்திரத்தைப் பற்றி
தவணை முறையில்
தற்கொலை செய்யும்
என்னிடம் கேளுங்கள்
**நோய்**
இன்னும் முற்றவில்லை
உயிர் இருந்து
கொண்டிருக்கிறது
**சாயும் காலம்**
கூலி தின்ற பொழுதுகளை
எண்ணிக் கழிக்கும் சாயும் காலம்
**அன்னியம்**
மரக்கதவில் வயது தெரியவில்லை
கதவின் இப்புறம் நான்
அந்தப்பக்கம் யாரோ
அறிமுகம் ஆனதும்
அன்னியமாகிறோம்
யார் இருக்கிறார் இந்த வீட்டில்?
**நீ பௌர்ணமி**
நம் கண்ணுக்கு தெரியாதாதால் அமாவாசை (இது சும்மாதான்............. நசரேயனுக்காக)
39 comments:
எல்லாமே நல்லா இருக்குங்க. :-)
மனதில் தோன்றியதை எழுதுவது கவிதைத்துவம் ஆகிவிடுகின்றன.
ஹலோ நண்பர்களே.. டிஸ்கி போடாமல் விட்டுட்டேன். ஆஹா ஓஹோன்னு சொல்ற அளவுக்கு ஒன்னும் இல்லை. நிஜமாவே போஸ்ட் இட் வரிகள்தான் இவை. சும்மா தோன்றியவை.
வரைந்து வைத்த
எல்லா முகத்திற்கும்
புத்தன் என்றே பெயர் வைத்தேன்
குடையை மழை
நனைத்து கொண்டிருந்தது
மரக்கதவில் வயது தெரியவில்லை
கதவின் இப்புறம் நான்
அந்தப்பக்கம் யாரோ
அறிமுகம் ஆனதும்
அன்னியமாகிறோம்
யார் இருக்கிறார்
தளம் வேறுதான் ஆனால் இன்னும் கொஞ்சம் தணிக்கை செய்தால் பிளாட்டினதுகள் கிடைக்கலாம்
ஜென்தனத்தின் பொதுமைக்கு பக்கத்தில் எழுதப் பெற்றிருக்கும் வரிகள் !
:)
மூன்று முறை
நேசமித்ரன் அழித்த
முத்துக்கள் பற்றி
அறிய ஆசை !!
//**நோய்**
இன்னும் முற்றவில்லை
உயிர் இருந்து
கொண்டிருக்கிறது
//
This one is Good.
வெறும் ம்ம்ம் மட்டும்:)
விஜய் நடிக்கும் படத்திற்கு
சுறா என்று பெயர் வைக்கலாம்
சுறா நடித்த படத்திற்கு ஜாஸ்
என்றும் பெயரும் வைக்கலாம்
ஆனாலும்
சுறா
ஒருபோதும்
நடித்ததே இல்லை!!
இன்னும் முற்றவில்லை
உயிர் இ(ற)ருந்து
கொண்டிருக்கிறது
அருமை வித்யா!
எல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கு. :-)
நசரேயன்,
லவ் ஆல். :-) அப்புறம் வர்றேன்.
//மூன்று முறை
நேசமித்ரன் அழித்த
முத்துக்கள் பற்றி
அறிய ஆசை !!//
மணிஜி; சொல்ல முடியாது சார் :))
அ
து
பி
ர
ம்
ம
ர
ஹ
சி
ய
ம்
சில புரிகிறது. சில புரியலை. What to do??
ரசித்தேன்.
//சும்மா தோன்றியவை.//
தோன்றாமையில் தோன்றியமை நன்று...
//இன்னும் முற்றவில்லை
உயிர் இருந்து
கொண்டிருக்கிறது//
ரொம்ப நல்லாயிருக்கு மேடம்.
அன்னியம்**
மரக்கதவில் வயது தெரியவில்லை
கதவின் இப்புறம் நான்
அந்தப்பக்கம் யாரோ
அறிமுகம் ஆனதும்
அன்னியமாகிறோம்
யார் இருக்கிறார் இந்த வீட்டில்?
இது class விதூஷ் .
போறபோக்கில சும்மா தூள் கிளப்பிடீங்க
//விஜய் நடிக்கும் படத்திற்கு
சுறா என்று பெயர் வைக்கலாம்
சுறா நடித்த படத்திற்கு ஜாஸ்
என்றும் பெயரும் வைக்கலாம்
ஆனாலும்
சுறா
ஒருபோதும்
நடித்ததே இல்லை!!//
யோவ் வெண்ணை ! விஜய் மட்டும் எப்பய்யா நடிச்சாரு?
டெஸ்ட்
வெகு அருமை விதூஷ்!!! சும்மா எழுதியது என்றால் நம்ப முடியவில்லை!!!
கவிதைக்கென்று தனியாகத் தளம் வைத்துக்கொண்டு அதில் இதை எழுதியிருந்தீர்கள் என்றால் இதற்குக் கிடைக்கும் வரவேற்பே வேறு!! உண்மையில் வெகு சிறப்பான கவிதைகள்!!
அருமை வித்யா
all r good. really it does its purpose. i enjoyed all lines.
பூங்கொத்து விதூஷ்!
நன்றாக உள்ளது
வாழ்த்துக்கள்
விஜய்
எல்லாமே ரொம்ப நல்லா இருக்குங்க, ரொம்ப பிடிச்சிருக்கு.
//கிறுக்கி வைத்த
வார்த்தைகளால்
வரைந்து வைத்த
எல்லா முகத்திற்கும்
புத்தன் என்றே பெயர் வைத்தேன்
குடையை மழை
நனைத்து கொண்டிருந்தது//
கிறுக்கன்னு பெயர் வைத்து வைத்து இருக்கணும்
//ஒரு நிமிஷம் யுகமாகும்
மந்திரத்தைப் பற்றி
தவணை முறையில்
தற்கொலை செய்யும்
என்னிடம் கேளுங்கள்//
நிரந்தரமா தற்கொலை பன்னனுமுனா என்கிட்டே கேளுங்க, இவங்க கடை விலாசத்தை கொடுக்கிறேன்
//
இன்னும் முற்றவில்லை
உயிர் இருந்து
கொண்டிருக்கிறது//
ஏன்னா அது பேயா இருக்கு
//கூலி தின்ற பொழுதுகளை
எண்ணிக் கழிக்கும் சாயும் காலம்//
பிழை இருக்கிறது தாயே, சரக்கு அடித்து சாயும் காலம் என்று இருக்க வேண்டும்
//
மரக்கதவில் வயது தெரியவில்லை
கதவின் இப்புறம் நான்
அந்தப்பக்கம் யாரோ
அறிமுகம் ஆனதும்
அன்னியமாகிறோம்
யார் இருக்கிறார் இந்த வீட்டில்?//
அங்க என்ன கன்னம்பூச்சி விளையாட்டா நடக்கு
//நம் கண்ணுக்கு தெரியாதாதால் அமாவாசை//
கண்ணுக்கு தெரிஞ்சா பவுர்ணமியா
:-))
ஒவ்வொரு வரிகளையும்
ரசித்தேன் விதூஷ்.
நசரேயன்,
வந்தேன்.வென்றேன். :-)
ரசித்தேன்..:)
நல்ல இருக்கிறது
வரலாற்றுத் தொன்மங்களுடன் எழுதப்பட்டுள்ள நகைச்சுவைக் கட்டுரை நன்கு உள்ளது
நன்றி சித்ரா
நன்றி வைராகி... :)
நேசன்: அதாங்க... சூப்பர்... தோணுவதை எல்லாம் சும்மா நோட்டில் scribble பண்ணி பண்ணி வைச்சுகிறது. ஒரு நாள் கவிஞர் ராஜாசுந்தர்ராஜன் சார் தொலைபேசியில், twitter-ரில் எழுதி வையுங்க, தொலைந்து போகாது என்றார். அப்படியே இரண்டு நாள்தான் செய்ய முடிந்தது. எல்லா இடத்திலும் ட்வீட்ட முடியறதில்லையே. அதான், இப்படி. ஜென்தன பொதுமை என்பதெல்லாம் ரொம்ப உயரம்.. எனக்கு acrophobia நிறையாவே உண்டு...
நன்றி விசா பிரான்க்
நன்றி வித்யா
நன்றி ஷங்கர். ஐங்.. என்னதுங்க..
நன்றி ஜமால் :) அதான் அதேதான்.
நன்றி ராஜாராம் அண்ணா.
நன்றி மோகன் குமார்: நிகழ்வுகள் கொடுக்கும் அனுபவத்தில் தோன்றியவை... கொஞ்சம் முழுமை பெறாத உணர்வுகள் என்றும் கொள்ளலாம். :)) என்ன செய்வது :(
மாதவராஜ் சார்: !! நன்றி :)
பாலாசி: ம்ம்.. ஆமாம். பலா ஷங்கரின் பரிந்துரையில் கும்பம் பற்றிய ஒரு ஜென் கவிதை படிச்சேன். ஷங்கருக்கு நல்ல ரசனை, இன்னும் கொஞ்சம் வாசிப்பும் இருந்தால் நல்ல எழுத்தாளராக ஆவார். அவர் தளத்தில் அந்தக் கவிதை இருக்கு இப்படி:
முப்பது ஆரங்கள் ஒரு கும்பம்
இவையே ஒரு சக்கரம்
என்றாலும்
எதுவுமற்ற கும்பத்தின் துளைப்பற்றியதே
சக்கரத்தின் பயன்பாடு
மண்ணில் வனைந்த பானையில்
ஏதுமில்லாத வெற்றிடம் பற்றியதே
பானையின் பயன்பாடு
சுவரில் சுவரில்லாததே சன்னலும் கதவும்.
சுவர்கள் கரையிட்ட வெற்றிடம் பற்றியதே
அறையில் பயன்பாடு.
எனவே
இருப்பது உளதாக்குகிறதெனில்
இல்லாதது பயன்பாடாகிறது.
=======================
சரவணகுமார்: நன்றிங்க. :) என் பெயர் விதூஷ்-மட்டும்தாங்க. அப்படி அறியப்படுவதையே விரும்புகிறேன்.
நன்றி பத்மா.
மணிஜி.... தஞ்சாவூரு குசும்பு உங்க தலை நிறையா வச்சிருக்காரு கடவுள். டெஸ்டில் ஜஸ்ட் பாஸ் செய்து விட்டீங்க.
நன்றி தேவன்மாயம்: தேவன்மாயம் என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்த பெயர்களில் ஒன்று. :) தனியாகத் இன்னொரு தளமா .... தள்ளாடி போயிடுவேன். :)) ரொம்ப நன்றிங்க.
நன்றி "போலீஸ்கார்" டிவிஆர் சார். :)
நன்றி மதுரை சரவணன். :)
நன்றி அருணா... :)
நன்றி விஜய் :)
நன்றி ராமசாமி கண்ணன்
நன்றி யாத்ரா செந்தில்: என்ன சார். வெளி உலகம்னு ஒன்னு இருக்கு இன்னும், தெரியுதா...?? :)) வீட்டம்மிணி சௌக்கியமா?
நசரேயன் கிர்ர்...... சாகித்ய அகாடெமிக்கு ஒரு கதையே எழுதலாம்ங்க நீங்க. அத்தனை humour :)) இன்னும்ம் சிரித்துக் கொண்டே இருக்கேங்க.. அதான் உங்களை பௌர்ணமின்னு சொல்லி ஐஸ் எல்லாம் வச்சேனே... :))
ஜெய்லானி: நன்றிங்க. :)
நன்றி ஹேமா. :)
ஆஆ you too, ராஜாராம் அண்ணா.. :))
நன்றி மணிநரேன்
நன்றி நீச்சல்காரன்
நன்றி அப்துல்லா
நன்றி லதானந்த்
//
**காதலில் தோற்றல்**
**நோய்**
**அன்னியம**
//
intha 3-um pidichchurunthathu...
//
முப்பது ஆரங்கள் ஒரு கும்பம்
இவையே ஒரு சக்கரம்
என்றாலும்
எதுவுமற்ற கும்பத்தின் துளைப்பற்றியதே
சக்கரத்தின் பயன்பாடு
மண்ணில் வனைந்த பானையில்
ஏதுமில்லாத வெற்றிடம் பற்றியதே
பானையின் பயன்பாடு
சுவரில் சுவரில்லாததே சன்னலும் கதவும்.
சுவர்கள் கரையிட்ட வெற்றிடம் பற்றியதே
அறையில் பயன்பாடு.
எனவே
இருப்பது உளதாக்குகிறதெனில்
இல்லாதது பயன்பாடாகிறது.
//
ithu oru arputhamaana pakirvu....mikka nantri mam:)
//மரக்கதவில் வயது தெரியவில்லை
கதவின் இப்புறம் நான்
அந்தப்பக்கம் யாரோ
அறிமுகம் ஆனதும்
அன்னியமாகிறோம்
யார் இருக்கிறார் இந்த வீட்டில்?//
good one
அருமை மேடம்
Post a Comment