யார் சுதந்திரத்துக்கு ரெட் அலெர்ட்



பி.ஜே.பியில் இணைந்திருக்கும் புது உறுப்பினர் பசுபதிநாத் முதல் திருப்பதி வரை நக்சல்கள் பரவி இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். அப்படியொண்ணும் குறைச்சு சொல்லிவிடவில்லை. நிகழ்வுகளை பார்த்தால் விஷம் போல தென் மாநிலங்களில் நக்சல்வாதம் பரவி வருகிறது என்றே நம்பத் தோன்றுகிறது. நாம் எதற்ககெல்லாம் கவலைப் படுவது? புல்லாங்குழல் வாசிக்கிறதா, பச்சை விறகு வச்சு மூட்டிய அடுப்பை ஊதுரதான்னு நம்ம அரசியல் தலைவர்கள் எல்லோரும் கையை பிசைந்து கொண்டு, முடிவாக புல்லாங்குழல் ஊதினால் வரும் இன்னிசை மனசுக்கு இதமாய் இருக்கு என்றே முடிவு கட்டி விட்டார்கள். இதில் அண்ணன் தம்பி பிரச்சினை வேறு? குடும்பத் தலைவர்களாக வேறு இருந்துத் தொலைக்க வேண்டி இருக்கிறது. இந்தப் பாடுபடுவதற்கு செல்வியாகவே இருந்திருக்கலாம் போலருக்கு.

ஜவான்களுக்கே மரணக்குழி வெட்டிய பிறகு, முழித்துக் கொண்டு, வேட்டிய மடிச்சு கட்டி வெட்டியான் வேலை செய்ய தலைவர்கள் எதற்கு? ஆளுமை ஆள்வதற்கா ஆள்வதைக்கா?

தவறென்று ஒப்புக் கொண்டார்களாம்... வேறென்ன செய்வீர்கள் அண்ணே!!! சரீன்னு நிரூபிக்க முடிந்திருந்தால் அதையும்தான் செய்திருப்பீர்கள்.

ஆளுமைக்கான ஆள் பலம் கொண்டதால் ஆளும் கட்சியும், கொஞ்சம் குறைந்ததால் பலம் இருப்பதாகக் கருதப் படும் எதிர்கட்சியும் statement கொடுத்து கடமையைத் தீர்த்தாகி விட்டது. எத்தனை நஷ்டம், திறமையான ஜவான்களின் மரணங்கள், அவர்களது training மீதான செலவினங்கள், குடும்பத்துக்கான நஷ்ட ஈடுகள், என்று மக்கள் வரிதானே போகப் போகிறது என்ற அலட்சியமா? கட்சிகாரர்கள் எல்லோரும் வேண்டிய அளவு வாங்கிக் கொண்டுதானே அவர்களுக்கு வாகான போஸ்டிங் பண்ணிக் கொடுத்திருப்பீர்கள்? வெறும் statement என்ன செய்து விடப்போகிறது, வெண்ணைவெட்டி statement?

மேற்கு வங்காளம், ஒரிசா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட், உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டிஸ்கர், ஆந்திரா போன்ற இடங்களில் மட்டுமே நக்சல்கள் ஊடுருவி இருந்தனர், இப்போது மெல்ல உத்திரகண்டம், புது தில்லி, பஞ்சாப் போன்ற இடங்களிலும் இவர்களது காலடிகளின் நாராச ஓசை கேட்க ஆரம்பித்திருக்கிறது. சென்ற நவம்பர் 2006-ல் புது தில்லியில் நடந்த நக்சல் சம்மேளனம், அதை தொடர்ந்து விநியோகிக்கப் பட்ட கை நோட்டீசுகள், போஸ்டர்கள் போன்றவை நம் அரசாங்கத்தின் குறட்டையொலியின் உச்சம்.

காமெடி பீஸ் ஆகிப் போன எதிர்க்கட்சிக்கு இப்போதுதான் நக்சல்கள் தென்னிந்தியாவில் சிகப்பு கம்பளம் விரித்து வைத்திருப்பது தெரிகிறது. அடடா... இப்போ என்ன செய்வது? லட்சுமண ரேகையாச்சே...

மார்ச் 2007-குள்ளேயே நக்சல்கள் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ஊடுருவியாகி விட்டது. சாதாரண மக்களுக்கே இத்தனை செய்திகளும் அதிர்ச்சி தரும்போது, இத்தனை செய்திகள் அரசாங்கத்துக்கு ஏற்கனவே கிடைத்திருந்தும் சிவராஜ் பாட்டில் அவர்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்த அபரிமித நம்பிக்கையோடு statements கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

நக்சல்வாதிகளின் கூடாரமாய் இருக்கும் பஸ்தர், தன்தேவாட், பிஜப்பூர், நாராயண்பூர், கான்கேர், ராஜ்னாந்தகான்வ், என்ற வகையில் சட்டிஸ்கரில் மட்டும் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் நக்சல்களின் ஆளுமையில் இருக்கிறது. ஜனநாயகத்தின் உச்சமாக, ஏதும் குற்றங்கள் நிகழ்ந்தாலும் கூட மாலை ஐந்து மணிக்கு மேல் காவல்நிலையத்திற்கு மக்கள் போகக் கூடாது என்று நக்சல்கள் தடை விதித்துள்ளனர். காவலர்களும் இவர்களுக்கு பயந்து சிவில் உடைகளில்தான் வேலை செய்கிறார்கள். மேற்கு வங்காளத்தின் நிலை இன்னும் கேட்கவே வேண்டாம். வளர்த்த கடா மாரில் பாய்ந்த கதையானது.

தாய்நாடாச்சே!!! இன்னும் "டாய்"ன்னு பயமுறுத்தினால் உச்சா போய்விடும் கைக்குழந்தையாகவே இருக்கும் ஜனநாயகத்தை அரசியல் ஆயாக்கள் பேணுகிறார்கள் போலும், யார் என்ன செய்தால் என்ன? மின்சாரம் வேறு இல்லையடா, கும்பகர்ணா இன்னும் விசிறு!!!

யாருப்பா அங்க.... பாராட்டு விழாவுக்கு பந்தல் கட்டுங்க..

37 comments:

pudugaithendral said...

ஆந்திராவில் இருக்கும் பல மாவட்டங்கள் நக்சல்களால் பாதிக்கப்பட்டு, நக்ஸல்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எனும் பட்டம் பெற்று அதை சரி செய்ய பண ஒதுக்கீடும் நடந்திருக்கு.

பதிவே போட்டிருந்தேன்.


பாராடுவிழாவுக்கு பந்தலா கட்டிடுவோம்.

VISA said...

நமக்கெல்லாம் ஒரு வேலையும் அடுத்த வேளை சோத்துக்கு
கொஞ்சம் உத்திரவாதமும் எளிதில் கிரிமினல் ஆக்கப்பட முடியாத
ஒரு மெல்லிய பாதுகாப்பு வளையமும் இருப்பதால் தான் நாம் இன்னும் நக்சல்கள் ஆகாமல் இருக்கிறோம்.

எறும்பு said...

ஓட்டு போடாச்சு.. பதிவுக்கு இல்லை.. பறவைக்கு தண்ணி வைக்க சொன்னதுக்கு... வாழ்க வளமுடன்..

:)

VISA said...

//ஓட்டு போடாச்சு.. பதிவுக்கு இல்லை.. பறவைக்கு தண்ணி வைக்க சொன்னதுக்கு... வாழ்க வளமுடன்..//

அவசரப்பட்டு ஓட்டு போட்டுட்டீங்களே.
பறவைக்கு தானே சொன்னாங்க எறும்புக்கு தண்ணி காட்ட சொல்லலியே.....:)

சைவகொத்துப்பரோட்டா said...

//யாருப்பா அங்க.... பாராட்டு விழாவுக்கு பந்தல் கட்டுங்க..//

மண்டபமே ரெடி பண்ணிரலாம் :))

Vidhoosh said...

நன்றி தென்றல்: பண ஒதுக்கீடு யாருக்கு போனது என்பது தெரியாதே?

நன்றி விசா: சரிதான் பிரான்க். அது தென் மாநிலங்களில் வெகு வேகமாக பரவி வருவது எதைக் குறிக்கிறது. நம் தென்னக இளைஞர்களுக்கு வேலையின்மையும், நம்பிக்கையின்மையும் ஜாஸ்தியாகி விட்டது. :(

எறும்பு: கொடுத்த காசுக்கும் மேலே கூவுறீங்க. எறும்பு பொடி தூவிடுவேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்க வளமுடன்..

Anonymous said...

உலக வங்கியில கடன வாங்கினோமா,அத அப்படியே நம்ம Accountkku transfer பண்ணினோமா,அப்புறம் அரசாங்க காசுல வெளிநாட்ட சுத்தி பாத்தோமன்கிரதுதான் இந்த வீணாப்போன அரசியல் வாதிகளோட வேலை....
இதில நாட்டுல எவன் இருக்கான், எவன் செத்தா இவனுகளுக்கு என்ன......
Two years back i was in orissa and west bangal for one government project and i have roamed entire orrisa for my project purpose...Most of the villages not having their basic facilities like school,transport.....That time i was thinking about my village and i was in saferside since my village have power and school...
இந்த அரசியல்வாதி நாயிக என்னத்த கிழிச்சாங்க இத்தனை வருசமா...?? -- போங்கடா போய் உங்க பத்தொம்போதவது பொண்டாட்டிக்கு முதுகுல மஞ்ச தேச்சி விடுங்க...அவளுக்கு அப்படியே ஒரு பாராட்டு விழாவும் ஒரு சிலையும் வையுங்கடா அல்லக்கைகளா...??

நேசமித்ரன் said...

காத்திரமான பதிவு

தேவையான நேரமும் கூட
இதிலும் பண ஒதுக்கும் நரசியல் நாதிகள் ச்சே !

பறவை தண்ணீர் மேட்டருக்கு சல்யூட்

எறும்பு said...

//அவசரப்பட்டு ஓட்டு போட்டுட்டீங்களே.
பறவைக்கு தானே சொன்னாங்க எறும்புக்கு தண்ணி காட்ட சொல்லலியே.....:)//

அண்ணே,
"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

எறும்பு said...

//
எறும்பு: கொடுத்த காசுக்கும் மேலே கூவுறீங்க. எறும்பு பொடி தூவிடுவேன்//

ஆத்தா, பறவைக்கு தண்ணி வைச்சுட்டு எறும்ப கொல்வேன்னு சொல்றீங்க.. இந்த சின்ன பூச்சி மேலையும் கொஞ்சம் கருணை காட்டுங்க..
போற வழிக்கு புண்ணியமா போகும்

VISA said...

பிஹார் ஒரிசா போன்ற வட மாநிலங்களில் பெண்கள் வயதுக்கு வந்த பிறகு பள்ளிக்கூடம் போவதில்லை. காரணம் அங்கே கழிப்பறைகள் இருப்பதில்லை. - பிரபல நாளிதழ்.

பெண்கள் இடஒதுக்கீடுக்கு ஆதரித்தும் எதிர்த்தும் கும்மாளமிடும் அரசியல்வாதிகள் கிராமங்களில் குறைந்Tஹது 33% பள்ளிகளிலாவது கழிப்பிட வசதி இருக்கவேண்டும் என்று ஒரு உத்தரவு போடுங்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

யாருப்பா அங்க.... பாராட்டு விழாவுக்கு பந்தல் கட்டுங்க..

:))) இப்படி ரொம்ப சவுண்டா சொல்லாதீங்க, அப்புறம் யாராச்சும் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிடப்போறாங்க.

எஸ்.எம்.எஸ் (குருவிக்கு தண்ணி)மேட்டரை சூப்பரா கவர் பேஜ்ல போட்டுட்டீங்க, அஷ்டாவதானி :)

Santhappanசாந்தப்பன் said...

பந்தல் அவுங்களுக்கு, பாடை நமக்கு! என்னத்த சொல்ல!

இந்த வெண்ணை வெட்டிங்க எப்பவுமே இப்படித்தான்...

ஆமா, நக்சல்கல்லாம், IPL பாக்குறாங்களா?

Paleo God said...

வலுவான காரணங்களுக்காய் துவங்கப்படும் போராட்டங்கள் எல்லாமே, ஒரு கட்டத்தில் பாதை மாறிப் போய் விடுகிறது. பணமும் அதிகார மமதையுமே காரணம். அரசியல் வியாதிக்கு மருந்தில்லை.:(
--
எப்படியோ 2012 ல் எல்லாம் சரியாகும்.:)

பா.ராஜாராம் said...

அமித்தம்மா..

//அஷ்டாவதானி//

அமித்தம்மா,

இப்படியெல்லாம் பொருத்தமான வார்த்தை உங்களிடமிருந்துதான் தெறிக்கும்.

பிடிச்சு தொங்கிக்கிறேன்.

Vidhya Chandrasekaran said...

சூடு தெறிக்கிறது..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இதெல்லாம் ஆட்சியாளர்களுக்குப் பெரிதல்ல!

அண்டை தேசங்களுக்கு எப்படி ஆயுதம் வழங்கி அப்பாவி மக்களைக் கொல்லலாம் என்பதே இத்தாலி பெருமாட்டியாரின் கொள்கையும், அந்த பொம்மையின் கொள்கையும்!

சை கிந்த்!

Chitra said...

தாய்நாடாச்சே!!! இன்னும் "டாய்"ன்னு பயமுறுத்தினால் உச்சா போய்விடும் கைக்குழந்தையாகவே இருக்கும் ஜனநாயகத்தை அரசியல் ஆயாக்கள் பேணுகிறார்கள் போலும், யார் என்ன செய்தால் என்ன? மின்சாரம் வேறு இல்லையடா, கும்பகர்ணா இன்னும் விசிறு!!!

யாருப்பா அங்க.... பாராட்டு விழாவுக்கு பந்தல் கட்டுங்க..


.......
அனல் தெறிக்க சொல்லிய விதத்துக்கு பாராட்டுக்கள்.

என்றுதான் இந்திய அரசியலில் ஒரு மாற்றம் வருமோ......

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குருவி மேட்டர் ஸுப்பருப்பா..
தில்லியில் எப்பவுமே வைப்போம் இருந்தாலும் இந்த வெயிலில் கூடுதல் கவனம் எடுத்துக்கிறேன்..நன்றி ..

காமராஜ் said...

கோபத்தில் கொப்பளிக்கும்
எள்ளல் நடை, அழகு வித்யா. ஆனால் ஒரு முறை பாராளுமன்றம்,அல்லது,நீதிமன்றம்,அல்லது காவல் நிலையத்துக்கு வெறுங்காலோடு போய் அருகிருந்து பார்க்கவேண்டும்

அம்பிகா said...

நியாயமான கோபம் கொப்புளிக்கிறது வார்த்தைகளில்.
அவசியமான பகிர்வு.

Sanjai Gandhi said...

தியாகிகள் மீது நடவடிக்கை எடுக்க சொல்ல எத்தனை தைரியம் உங்களுக்கு.. அவர்களும் இந்நாட்டு மன்னர்களாம்.. தீவிரவாதிகளாய்ப் பார்க்கக் கூடாதாம்.. செத்த் ஜவான்கள் எல்லாம் வரப்பு சண்டையில் இறந்தார்களாம்.. வாழ்க ஜனநாயகம்.. வாழ்க அருந்ததி அல்லக்கைராய்கள்..

Anonymous said...

உங்களைப்போலவாகள் எழுதும் இப்படிப்பட்ட பதிவுகள் எதை நோக்கி எழுதப்படுகின்றன என்று எனக்குப்புரியவைல்லை.

கொஞசம் விள்க்குவீர்களா?

rajasundararajan said...

நம் வீட்டு நாயாகவே இருந்தாலும் அதன் சாப்பாட்டுத் தட்டைப் பறித்தால் கடிக்க வரும். ஜனநாயகம் என்பது வயிற்றுக் கோட்டுக்கும் சற்று மேல்.

வவ்வால் said...

P.c's aggressive statement about naxals +vedanda industries = naxal attack@ dandewade. If u dont understand this means nothing to say. U have to read and learn more on this issue.

ஜெய்லானி said...

////யாருப்பா அங்க.... பாராட்டு விழாவுக்கு பந்தல் கட்டுங்க..//

யாருக்கு ??

ஏழர said...

சமூக அறிவு, அரசியல் அறிவு, பொது அறிவு போன்றவையின் பற்றாக்குறை இது போன்ற பதிவுகள் எழுதப்படும் போதுதான் தெரிகின்றது...

பறவைக்கு தண்ணீர் வைப்பதன் மனிதாபிமானம் பழங்குடியினரின் உயிர் என வரும்போது மறைந்து போவது அப்பட்டமான போலித்தனம். இந்த வரி புரியவில்லையெனில் முதல் வரியை மீண்டும் வாசிக்கவும்

நன்றி

நந்தாகுமாரன் said...

நல்ல காரம்

கிருஷ்ண மூர்த்தி S said...

அங்கே தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ஆதிவாசிகள், விவசாய நிலத்தை இழந்து விட்டுப் பிழைப்புக்கு வழியில்லாமல் தவிக்கும் விவசாயிகளுடைய பிரச்சினைகள் என்று நக்சல்கள்,மாவோயிஸ்டுகள் பிரச்சினை என்று பொத்தாம்பொதுவாகப் பூச்சாண்டி காட்டப் படுகிற விஷயத்துக்குப் பின்னால் இருக்கிறது விதூஷ்!

அதைப் பற்றி எவரும் கவலைப் படுவதாக, குறைந்தபட்சம் தெரிந்துகொண்டதாகக் கூடக் காணோம்!

Vidhoosh said...

நன்றி புதுகை தென்றல்,

நன்றி விசாபிரான்க்,

நன்றி சைவகொத்துபரோட்டா,

நன்றி டி.வி.ஆர்.சார்,

நன்றி நல்லவன் கருப்பு,

நன்றி நேசன்மித்திரன்,

நன்றி எறும்பு ராஜகோபால்,

நன்றி அமித்தம்மா (ஹையோ ஹையோ கஷ்டாவதானி!!:)),

நன்றி பிள்ளையாண்டான்,

நன்றி ஷங்கர்,

நன்றி ராஜாராம் (கை வலிக்கப் போகுதுண்ணே),
நன்றி வித்யா,

நன்றி அத்திவெட்டி ஜோதிபாரதி,

நன்றி சித்ரா,

நன்றி முத்துலெட்சுமி,

நன்றி காமராஜ் சார்(அருகிருந்து பார்த்ததாலே எழுதி இருக்கேன் சார்:),

நன்றி அம்பிகா,

நன்றி சஞ்சய்காந்தி ட்ரேட் மார்க்,

நன்றி ராஜசுந்தர்ராஜன் சார்: சரிதான் சார். வயித்து பாடு பெரும்பாடுதான்.

நன்றி ஜோ அமலன் ராயன் பெர்னாண்டோ: ஏன் சார்? எல்லாப் பதிவையுமே கண்ணால் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை நோக்கித்தான் எழுதுகிறேன். நீங்க?

நன்றி வவ்வால்

நன்றி ஜெய்லானி: யாருக்காவது நோட்டு மாலையும் போடப் போகிறீர்கள் என்றால் சொல்லி அனுப்புங்க சார்.

நன்றி ஏழர

நன்றி நந்தா

நன்றி கி.மூ. சார். நல்லா இருக்கீங்களா? உலகப் பெரியண்ணன் அமெரிக்கா அமைதி வளர்த்த கதை மாதிரியாகிடப் போகுதேன்னு ஒரு பயம்தான் சார். :(

ஹுஸைனம்மா said...

ஆயுதம் எடுப்பவர்கள், ஆதார பிரச்னையைத் தீர்க்க எந்தளவு முயல்கிறார்கள் என்பது தெரியவில்லை; (சில சமயம் அவர்களுமே ஒரு கூடுதல் பிரச்னையாகிப் போகிறார்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு!!) ஆனால், அப்பாவிகளின் உயிரைப் பறிப்பதில் ஏன் இத்தனை வன்மமோ?

இது ஒரு சைக்கிளாக, (cycle) ஆயுதம் எடுப்பவன் - அப்பாவி மக்கள் - ஆயுதம் ஏந்தியவன் என்று நடக்கும்; மத்தளமாக, மக்கள் நடுவில் எப்பவும்போல!!

Anonymous said...

//நன்றி ஜோ அமலன் ராயன் பெர்னாண்டோ: ஏன் சார்? எல்லாப் பதிவையுமே கண்ணால் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை நோக்கித்தான் எழுதுகிறேன். நீங்க?
//


Reply to this question has been put up by Krishnamoorthy.

அவர் உங்களைக்கேட்கிறார்: நீங்கள் நினப்பதுபோல பொத்தாம்பொதுவாக ஒரு பக்கமே சரியென முடிவெடுத்துவிட முடியாது என்கிறார். இதுவே என்னிலையும்.

உஙகள் பதிவின் நோக்கம் வெறும்பாமரத்தனமாகத்தான் இருக்கிறது.

ஏதோவொன்று நடக்கிறது. உடனே வெளிப்பார்வைக்கு அதில் ஈடுபட்ட ஒரு சாராரை வில்லனாக்குகிறது. இது பொதுப்பார்வை. This is not an analysis. I dont say you should not take that stand. But you should arrive at it on your own, without regard to popular opinion.

Your post echoes popular opinion, written in a language to please those who hold that opinion. Naturally, they stood and clapped!!

That is why, Krishnamoorthy writes, perhaps there is another side to the issue, which he somewhat outlines.

77 CRPF men were massacred.

Questions are:

Who sent them and why did they walk into their death so easily?

Why they need to be sent at all?

Why did not Indian govt find a better way to resolve the issue, instead of 'gun for gun, bullet for bullet' method?

Was the problem of Kahsmir resolved by such method?

Was the problem north east resolved by such method?

Dont say, it succeeded somewhere, so here.

Places are different; people are different; causes are different. How one size fits all?

More and more people are getting alienated.

Do you agree with Ms Roy's argument that the Indian government wants to favour the rich and mighty who want to exploit the forests for their own?

She says if the MNCs are booted out from there, the problem resolves itself.Do you agree with it?

Above are some samples questions. I myself dont know the answer, because I never pretend to write a blogpost on it. You do. So, the onus is on you.

Also remember, PC has come to be criticised by his own men, for his mindlessness in tackling this issue. So, not Roy, but within government itself, the opinion is divided.

Alas, not within your coterie of friends. Strange.

This is an Indian issue, but you waste time in making sarcastic references to your pet local hates.

How small you are in manipulating a national issue to insert your pet hates and likes!

Vidhoosh said...

ஹா ஹா ஹா.. நன்றி for the nice quotes from various websites. Jo Amalan Rayen Fernando, true that I am too small, equally much smaller to respond on any of these queries, and having too much of time to share my opinions. Thanks for visiting. Hope you had a great weekend:))

Anonymous said...

nothing to say i agree with nallvan karupu

Anonymous said...

hi nallavan

ஏழர said...

Above are some samples questions. I myself dont know the answer@@@

Jo உங்க கேள்விகளுக்கான விடையை நீங்க இங்க தேடலாமே

http://www.vinavu.com/category/operation-green-hunt/

Post a Comment