இஃது தாம்பிரவர்னி தீர்த்தலிருந்து பிரம்மஞானம் பெற்றருளிய பிரிட்டிஷ்கார ஆராய்ச்சிகாரார்கள் எல்லோரும் திருத்தியும் விளக்கியும் கூடியுங்குறைத்தும் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர்களிடம் ஒரு ஆய்வு செய்து பசும்பால் குடித்தால் மனுஷனுக்கு ரொம்ப நல்லதென்றும், வடமொழியில் தலையாய க்ஷேத்ரியமென்றும் தில்லி தர்பாரில் "சுக்குமி-ளகதிம-துரம்" என்ற ஆராய்ச்சியாளரின் வேண்டுகோளின்படி பதிப்பிக்கப்படுகிறது.
நூல்மான்மியமாக சம்மானம் ஏதுங் குறைச்சுக் கூட சகலலோகரக்ஷகி ராணியின் தர்பாரிலிருந்து சல்லி கூட வுத்தமாதிகாரிகளுக்கு நிர்ணயம் பண்ணப் பிற்பாடு சும்மா வேணுமுட் காந்திருந்த சேவார்த்திகளால் கூட வழங்கப் படாத காரணங் காட்டி, இந்த நிமித்தஞ் சர்வா ராய்ச்சிக்காரர் மானியத்தை சேமிக்கும் மோக்ஷா பேக்ஷையோடு, பண முடிப்பு தந்தாதரவு தரும் அடையத்தக்க பிரயோஜனத்தை யடைந்தா னந்தபூர்த்திகளாய் என்றுமி ருக்கலாமென்பது என் சித்தம் சித்தம் சித்தம்.
(யாருப்பா ஓடறது.. நில்லுங்கோ.. தலை முடியிலே எல்லாம் குதிகால் படலாமோ?? )
குருபரம்பரை வணக்கஞ் செய்து வுத்தமாதிகாளை யெல்லாம் ப்ரார்த்திச்சுண்டு நமஸ்காரம் பண்ணி, வ்யாக்யானோ பந்யாச விஸ்தாரங்கள் தாத்பரியங்களை யெல்லாம் நிச்சயஞ் செய்கின்ற சாமர்த்தியம் அடியவளுக்கு சித்த குறைச்சு சிருக்கரதுங் காரணத்தாலே சொற் பேதங்களை, குற்றங்களை யெல்லாம் மன்னிச்சருள சமதமாதிசக்ததயாளு ஸ்ரீ ஸ்ரீ யமராஜனை ஹ்ருதயஞ் சொல்லுகிறோம். ததாஸ்து.
அதாகப்பட்டது பசு.. அது தரும் பாலைக் குடித்தால் நோய் நொடி யெல்லாம் காலத்தினாலேயும், தேசத்தினாலேயும், வஸ்துவினாலேயும் சித்தாவதேது? அவன் சகல சோகங்களையுங் கடந்து லக்ஷனமாக த்தானே யிருப்பன். பாலைத் தவிர வேறே சாதனமில்லை. நித்தியம் ஒரு லோட்டா பாலை தேகமெனும் மாயாவுடலுக்குள்ளே வாயினாலே அருந்தி யாதொருத்த னறிகிறானோ; அவனே லபித்தவன்.
(ஓடப் படாதுன்னேன்... மூச்சிரைக்கறது பாருங்கோ...)
(இன்னிக்கு இது போதும். நாளைக்கும் வரும்)
மகா ராஜ ஸ்ரீ யமராஜன் ரிடர்ன்ஸ்
Posted by
Vidhoosh
on Friday, February 5, 2010
Labels:
Humour,
நகைச்சுவை,
யமராஜன் ரிடர்ன்ஸ்
25 comments:
அது நம்மள நோக்கித் தான் வருது. ஒடுங்க ஒடுங்க:)))
சுக்குமி - ளகுதி - ப்பிலி தான் நான் கேள்விப்பட்டது.
:-)))
வரணும்..வரணும்.
//அது நம்மள நோக்கித் தான் வருது. ஒடுங்க ஒடுங்க///
நம்மள நோக்கிதான் வருது.எந்த பக்கதுலேர்ந்து வருதுன்னு தெரியலையே. இருந்தாலும் ஒடுங்க
ஒடுங்க இன்னும் வேகமா ஒடுங்க
நிக்காம ஒடுங்க
//நித்தியம் ஒரு லோட்டா பாலை தேகமெனும் மாயாவுடலுக்குள்ளே வாயினாலே அருந்தி யாதொருத்த னறிகிறானோ; //
அதுக்காக கண்ணுகுட்டிக்கு கூட வைக்காம லோட்டா லோட்டாவா குடிச்ச எப்படி?!?!
:)
வாங்க வாங்க. இப்படி ஓடினா எப்டி? :)) திப்பிலிய பால்ல போட்ட திரிஞ்சுடும் அதுனால சுக்கு+மிளகு+அதிமதுரம். :))
நன்றி ராஜாராம் அண்ணா
அட கட்டெறும்பு... ஆறு கால் இருந்தாலும் அந்த வேகத்துல ஓடமுடியாது.
//அது நம்மள நோக்கித் தான் வருது. ஒடுங்க ஒடுங்க///
//நம்மள நோக்கிதான் வருது.எந்த பக்கதுலேர்ந்து வருதுன்னு தெரியலையே. இருந்தாலும் ஒடுங்க
ஒடுங்க இன்னும் வேகமா ஒடுங்க
நிக்காம ஒடுங்க//
repeatey....repeatey....repeatey....
லோலாயான நடை
விசயம் புரிந்தது, ஆனால் ஓடுவது எவ்வாறு? எழுத்தைப் படித்து மயங்கி விழுந்துவிட்டேன்.
எல்லாரும் ஓடறாங்க? சரி.. என்னனு தெரியலே.. உயிர் பிழைக்க நாமளும் ஓடுவோம்... ரைட்
காப்பாத்துங்க...காப்பாத்துங்க
அது ரொம்ப கோபமா இருக்கு...
நீங்க தமிழ்பதிவர்னு சொன்னாங்க... வேற பாஷைல பதிவு போடறீங்க???
என்ன எல்லாரும் இப்டி ஓடறீங்க.. அப்ப நாளைக்கு வரணுமா வேணாமா.. அதான் வரும்னு சொல்லிட்டேன்ல. எல்லாரையும் கட்டி வச்சு கதாகலாட்சேபம் பண்ணிடவேண்டியதுதான்
என்ன நாஞ்சிலாரே: :)) இது தமிழ்தான் ஓய்..
பரண்லேர்ந்து எடுத்த பழைய புஸ்தகத்த அங்கேயே வச்சுடுங்க... எல்லாரும் மிரள்றாங்க பாருங்க...
நாட்டு நலன் கருதி வெளியிடுவோர் ப்ளாகர்ஸ் நலச்சங்கம்.
:)
கட்டெறும்பு: உண்மையில் அதே மாதிரியான எழுத்துருக்களையும் பயன்படுத்தனும்னுதான் ஆசைப்பட்டு இத்தனை நாளா வெளியிடாம வச்சிருந்தேன். :)) நாளைக்கு வரும்.
//லோலாயான நடை//
ம்ம் ஆவட்டும் சீக்ரம்ணேன்
மார்க்க பந்து
மொதொ சந்து
மொதொ பாராவிலயே ஓடிட்டேன்..
இப்பேர்ப் பட்டபர மார்த்தமுண் டாகியதொரு அதிப்ரம் மப்ரயத்தனம் பண்ணியெழு தப்பட்டிருக்கிறஸா ஹித்யங்குறித்துசாங் கோபாங்கமாக சம்பா ஷணைபண் ணுவதற்கு சித்த முண்டாகியிருந் தாலுங்கூடதற்கா லமாகப்பட்டது சொற்பமா கவிருக்கிறபடியால் தேவரீ ரோடபிரசாசனத் தைவாசித்தென் அபிப் ராயத்தை ஸ்பஷ்டமா கத்தெரி விப்பதற் குப்பின்னொரு நாள்வருவேன் என்றுமிகவும் தெண்டனிட் டுத்தெரிவித் துப்பின் னங்கால்பிட ரியிற்பட இவிடத் திலிருந்து தலப் ரஸ்தம் செய் யலாகிறேன்
நீங்க டமில்ல இடுகை போடும்போது வந்து படிக்கிறேன்
//அண்ணாமலையான் said...
எல்லாரும் ஓடறாங்க? சரி.. என்னனு தெரியலே.. உயிர் பிழைக்க நாமளும் ஓடுவோம்... ரைட்//
hahaha
Vithya what u did ..??
thanga mudiyala sirippu ma....
:-)))
நன்றி நேசன் அண்ணா
நன்றி அஷோக்
நன்றி சேட்டைக்காரன்: :)) சூப்பர்ங்க கலக்கிட்டீங்க.
நன்றி நசரேயன்: இது தமிழ்தாங்க தளபதி.
நன்றி தேனம்மை:
இரண்டு வருஷம் முன்னாடி முந்நூறு பக்கம் கொண்ட புத்தகம் ஒன்றை நண்பர் ஒருவர் "திருப்பி நடைமுறைத் தமிழில் எழுதித்" தரச்சொன்னார். எழுதுகிறேன் எழுதுகிறேன் எழுதிக் கொண்டே இருக்கிறேன். இதில் கவனிக்கப் படவேண்டிய அதி முக்கியமான விஷயம் அந்த நண்பருக்கு எழுபது வயசுங்க:)) எப்படியும் ஜூன் மாசத்துக்குள் முடிச்சுடுவேன். இது முழுதும் சொந்த முயற்சியில் சொந்த ஆர்வத்தில் செய்தது என்பதால் உங்கள் எல்லோருக்கும் பி.டி.எப் கோப்பு அனுப்புவேன். பழசு புதுசு இரண்டையுமே.. :))
என்ஜாய் மாடி...
இதத்தான் இன்னிக்கி செத்தா நாளைக்கு பால்ன்னு சுருக்கமா சொல்லிட்டாங்களே :))
என்னது 300 பக்கமா..??!!
இருங்கப்பு நானும் ஒடியாறேன்
(பெரிசுங்க்ளுக்கு வேற வேலையே இல்ல :) )
//முக்கியமான விஷயம் அந்த நண்பருக்கு எழுபது வயசுங்க:))//
tell about your friend. I will tell about you..
70 years old vidhya...
mika mootha pathivar vidyaa....
:)
ஓடுங்க ஓடுங்க நிக்காம ஓடுங்க...பசும்பாலுக்கு இப்புடியா...?
//அது நம்மள நோக்கித் தான் வருது. ஒடுங்க ஒடுங்க///
யப்பா எந்த பக்கம் ஓடறதுன்னு தெரியலியே...
//நித்தியம் ஒரு லோட்டா பாலை தேகமெனும் மாயாவுடலுக்குள்ளே வாயினாலே அருந்தி யாதொருத்த னறிகிறானோ; //
கன்னுக்குட்டிக்கு ஒரு மடக்கு கிடைக்குமா, இல்லைன்னா...........!!!
//Vidhoosh said...
என்ன எல்லாரும் இப்டி ஓடறீங்க.. அப்ப நாளைக்கு வரணுமா வேணாமா.. அதான் வரும்னு சொல்லிட்டேன்ல. எல்லாரையும் கட்டி வச்சு கதாகலாட்சேபம் பண்ணிடவேண்டியதுதான்//
எல்லாரையும் கட்டி வச்சு கதாகாலாட்சேபமா!!! நான் இதை ரொம்ப வன்மையாகவும், கூடவே கொஞ்சம் மென்மையாகவும் கண்டிக்கிறேன்...
என்னது 300 பக்கமா, 50 மைல் வேகத்துல, 500 மைலாவது ஓடி கடந்துடணும்........15-20 நிமிஷத்துக்குள்ள...........
//"திருப்பி நடைமுறைத் தமிழில் எழுதித்" தரச்சொன்னார்//
நேரா எழுதுனாலே நேரம்பிடிக்கும். இதுல திருப்பி எழுதுனா, ரெண்டு வருஷம் என்ன, எட்டு, பத்து கூட ஆகலாம்!! அதுவரைக்கும்..
Post a Comment