தற்போது இருக்கும் பரமபதம்
பரமபத சோபானம் என்ற இவ்விளையாட்டு இந்தியாவில் விளையாடப்பட்டு வரும் தொன்மையான விளையாட்டு. ஹிந்துத்துவம் மற்றும் ஆன்மீகத்தின் மதிப்பை இளையவர்களுக்கு (குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு) கற்றுத் தர உருவாக்கப் பட்டது. மோக்ஷ பதம், பரம பதம், மோக்ஷபத் (ஹிந்தி), மோக்ஷ படமு (தெலுங்கு), என்று இந்தியாவில் வடக்கு மற்றும் தெற்கில் பலவாறு அழைக்கப் படும் இவ்விளையாட்டை பதிமூன்றாம் நூற்றாண்டின் கவிஞரான ஞானதேவர் என்பவர் உருவாக்கியதாகக் கருதுகிறார்கள். ஆனால் இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இவ்விளையாட்டு விளையாடப்பட்டு வருவதற்கான குறிப்புக்கள் உள்ளன. ஆரம்பத்தில் தசபதம் என்று 10 x 10 கட்டங்களில் விளையாடப் பட்டு, பின் நூறு கட்டங்களாக வளர்ந்ததாகச் சான்றுகள் கூறுகின்றன.
தொன்மையான பரமபதம் (துணியில் வரையப் பட்டது)
பரமபதத்தின் ஏணிகள் புண்ணியத்தையும், பாம்புகள் பாவத்தையும் குறிக்கிறது. ஆரம்பத்தில் உருவாகிய பரமபதத்தில் பன்னிரெண்டாம் இடம் உண்மையையும், ஐம்பத்தொன்றாம் இடம் நம்பிக்கையையும், ஐம்பத்து ஏழாம் இடம் பெருந்தன்மையையும், எழுபத்தாறாம் இடம் ஞானத்தையும், எழுபத்தெட்டாம் இடம் சன்யசத்தையும் குறிக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் மட்டும் தான் ஏணிகள் இருக்கும். இந்த ஏணிகள் கருணை, அருள், கம்பீரம், நிறைவேற்றம், அறிவு, ஆற்றல், வெற்றி, அதிருஷ்டம், முன்னேற்றம், ஜயம் போன்றவைகளைச் சென்றடைய உதவும்.
நாற்பத்தொன்றாம் கட்டத்தில் கீழ்ப்படியாமை, நாற்பத்து நான்காம் கட்டம் அகந்தை, நாற்பது ஒன்பதாம் கட்டம் ஈனம், ஐம்பத்து இரண்டாம் இடம் களவு/திருட்டு, ஐம்பத்து எட்டாம் இடம் பொய்/புரட்டு, அறுபத்து இரண்டு மதுபானம் அருந்துதல், அறுபத்து ஒன்பது கடன், எழுபத்து மூன்று கொலை, எண்பத்து நான்கு கோபம்/வெஞ்சினம்/வஞ்சம், தொண்ணூற்று இரண்டு கர்வம், தொண்ணூற்று ஐந்து பெருமை, தொண்ணூற்று ஒன்பது காமம் ஆகிய இடங்களில் பாம்புகள் காணப்பட்டன. பாம்புகள் ஏழ்மை, வறுமை, தரித்திரம், செல்வம்/அறிவு வற்றுதல், ஆதரவற்ற நிலை, பிச்சை போன்ற கட்டங்களைக் கொடுக்கும்.
இரண்டு முதல் நான்கு பேர் வரை விளையாடக் கூடிய இந்த விளையாட்டு, தாயக்கட்டை உருட்டி அதில் வரும் எண்ணுக்குத் தகுந்தவாறு கட்டங்களில் காயை நகர்த்திச் செல்ல வேண்டும். விளையாட்டை ஆரம்பிக்க 'தாயம்' அதாவது 'ஒன்று' விழ வேண்டும். முதலில் மோக்ஷம் பெற்றவர் வெற்றி பெற்றவராவார்.
நூறாம் கட்டம் நிர்வாணம் அல்லது மோக்ஷம் என்று அழைக்கப் பட்டது.
1892-ஆம் ஆண்டு பிரிட்டிஷார்கள் (மில்டன் பிராட்லி - Milton Bradley) இவ்விளையாட்டை இங்கிலாந்துக்குக் கொண்டு சென்று, snake & ladders / Chutes என்ற பெயரில் விக்டோரியன் முறைப்படி மாற்றினார்கள்.
1943-ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு இவ்விளையாட்டு சென்றைடைந்த நேரத்தில் நல்லொழுக்க நெறிகள் மாற்றத்திக்கு ஆளாகி இருந்தன.உண்மையில் குறைந்து இருந்தன என்ற சொல்லலாம். கனடாவில் tobogaan runs என்றழைக்கப் படுகிறது.
தொன்மை வாய்ந்த இந்த விளையாட்டு snake and ladders மூலம் அழிந்து விட்டது. இப்போதெல்லாம் யாரும் விளையாடுகிறார்களா?
இன்றும் சிலர் வைகுண்ட ஏகாதசி அன்று இரவெல்லாம் கண்விழித்து இவ்விளையாட்டை விளையாடுகிறார்கள். படத்தை பெரிதாக்கிப் பார்க்கலாம். தெலுங்கில் உள்ளது. (நன்றி விக்கிமீடியா)
.
13 comments:
நான் அறிந்திராத தகவல்கள்...
நன்றி...
எங்கள் சிறுவர் சிறுமி பருவத்தில் பாம்பும் ஏணியும்தான் எங்கள் பொழுது போக்கு.
வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் வருவது சகஜமப்பா என்ற பாடத்தை எங்கள் சின்ன இதயத்தில் புகுத்திய விளையாட்டு.
பக்கோடா பேப்பர் கூட கம கமக்குது...
கலக்கறீங்க விதூஷ். அறிந்திராத தகவல்கள் தந்தமைக்கு நன்றி.
நான் சின்ன வயதில் விளையாடியது.....
இப்ப எங்க பரமபதம் ஷீட் கிடைப்பதில்லை.....
இது ஒரு வாழ்க்கையை பிரதிபலிக்கும்
ஒரு விளையாட்டு....
பகிர்விக்கு நன்றி..........
செம டாபிக்!! நல்ல தகவல்கள்!
அருமை!
-கேயார்
அம்மணி!
அடுத்த பதிவு 150-வது!
2009-ல் 150வது பதிவு...கலக்குங்க!
வாழ்த்துக்கள்!!
எழுத்து பரமபதத்துல உங்களுக்கு ஏணி மட்டுந்தேன்!
பாம்பே இல்ல!! என்ஜமாய்!
-பருப்பு ஆசிரியர்
நானும் விளையாண்டுருக்கேன்!
ஆனா இதை விட ரம்மி தான் எனக்கு பிடிச்ச விளையாட்டு, இதே போல் விடிய விடிய விளையாடலாம்!
அதிலும் பாம்பும், ஏணியும் கண்ணுக்கு தெரியாமல் ஒளிந்திருக்கும், ரம்மி விளையாட தெரிந்தவர்களுக்கு புரியும்!
//இப்போதெல்லாம் யாரும் விளையாடுகிறார்களா?//
ஏன் இல்லை ரம்மி, மூணு சீட்டு
புது புது தகவல்கள்! :)
என்ன நண்பரே
அருமையான தகவல்களை சொல்லிவிட்டு
கடைசியில் படத்தை தெலுங்கில் போட்டு விட்டீர்களே
நான் என் பிள்ளைக்கு சொல்லி கொடுக்கலாம் என்று இருக்கிறேன்
தமிழ் பரமபதம் கிடைத்தால் வலைதளத்தில் பதிவேற்றவும்
என் மின்னஞ்சல் tamilspeaks@gmail.com
அனைவருக்கும் வணக்கம், இந்த விளையாட்டுகள் இந்த தலைமுறையுடன் முடியாமல் அடுத்த அடுத்த தலைமுறையினருக்கும் சேர வேண்டும். நான் சிறுவர்மணி 1997 முதல் 2008 வரை பதிவில் சில தாய விளையாட்டுகளை விளையாடி உள்ளேன்.ஆனால் அதை எடுத்து வைக்க முடியவில்லை,தற்போது என் குழந்தைகளுக்கு கொடுக்க முடியவில்லை,தேடிவருகிறேன்.தயவு செய்து யாரவது இந்த பதிப்புகளை காண முடிந்தால் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள் gmail: rs8098096@gmail.com
Post a Comment