ஒரு மரம் ஒரு நான்




மூச்சின் ஆரோகண அவரோகணத்தில்
அசையும் சில இலைகள்
முதிர்ந்துதிர்ந்து கொண்டிருக்கும்
இலைகள் எழுப்பும் ஓசையில்
சுருதி குறைந்தது குறித்த முனகல்
வானைத் தொட உயர்ந்து கொண்டே
போகும் கிளைகளின் பெருமையும்
தொக்கி நிற்கும் இலைகளின் நிழலும்
வேர்களுக்கு இதமாயிருக்கலாம்
இலைகளைச் சுடும் வெப்பத்தின் மீதான புலம்பல்
விழுதுகளை ஊஞ்சலாக்கி விளையாடும்
குழந்தைகளின் சிரிப்பொலியில்
கரைந்து வரும் குளிர் காற்றின் நெகிழ்வில்
இன்னும் காத்திருக்கும் குழந்தைகளின்
ஏக்கம் நிறைந்தப் பார்வைகள் - அவர்களின்
கேள்விக்குக் காத்திருக்கும் எனதொரு பதில்
காட்சிப் பொருளாகலாம் சில கற்பக விருட்சங்கள்
பார்த்துக் கொள்ளுங்கள் இவைதான் விழுதுகள்,
காய்களும், கிளைகளும் தண்டும் இலைகளும்
காணக்கிடைக்காமல் போகலாம், இன்றே
பெறுங்கள் போதி மரத்தின் நிழலையும்
என் முதுகில் பச்சைக் குத்திச் செல்லும்
காதலின் முகவரிகள் மீது சாய்ந்து நிற்கும்
சில அப்பாக்களின் மிதி வண்டிகள்
சில  சூதாட்டங்களும் வியாபாரங்களும்
நீதியாகக் கிடைக்கும் சில சாபங்களின் சாட்சியாய்
சில மரங்களை வாசிக்கலாம் புத்தகமாக
சாட்சி மணியடிக்கும் மௌன மரம்
ஒரு நாள் பேசலாம் தன்னைப் பற்றி.

(உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் உரையாடல் கவிதைப் போட்டிக்காக)

போட்டிக் கவிதைகளை இங்கே காணலாம்.



.

32 comments:

நந்தாகுமாரன் said...

நல்லா இருக்கு வித்யா ... ரொம்ப நீட்டி முழக்காமல் இருந்திருக்கலாம் ... எனினும் நன்று ... எனக்குப் பிடித்திருக்கிறது இக்கவிதை ... வெற்றி பெற வாழ்த்துகள்

பா.ராஜாராம் said...

வாவ்!எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வித்யா!(என்ன பங்காளி இப்படி பண்ணீட்டிங்க..)வாழ்த்துக்கள் வித்யா!

PPattian said...

என் சின்ன மண்டைக்கு புரிந்தும் புரியாமலும் இருக்கு :)

வெற்றி பெற வாழ்த்துகள்

ரௌத்ரன் said...

வாழ்த்துக்கள் வித்யா...கவிதை நல்லாருக்கு ;)

இன்றைய கவிதை said...

மேடம்! பன்முகத் திறமை கொண்ட
உங்களின் படைப்புகள் மேன்மேலும்
செழித்தோங்க வாழ்த்துக்கள்!

-இன்றைய கவிதை அன்பர்கள்

Nathanjagk said...

கவிதையை விமர்சித்து பழக்கமில்லாத பழக்கத்தால் எப்போதும் போல்..... இங்கும் எனக்குண்டான ஒரு வரியை தேடிப்பிடித்து இதற்குள் இளைப்பாறிக் கொள்கிறேன்! ......அது, இதுவாகிப் போனதில் எனக்கொன்றும் ஆச்சரியமில்லை:
//சில மரங்களை வாசிக்கலாம் புத்தகமாக//
இங்கு தானே தூளிக்கட்டிக் கொண்டு தனக்குத்தானே தாலாட்டு(ம்) பாடும் குழந்தையாகிக் கொள்கிறேன்!

Nathanjagk said...

ஸாரி மறந்து விட்ட ஒரு வார்த்தையை ​சேர்த்துக் ​கொள்ள இப் பின்னூ.:
இங்கு தானே தூளிக்கட்டிக் கொண்டு தனக்குத்தானே தாலாட்டு(ம்) பாடும் குழந்தையாகிக் கொள்கிறேன் வித்தூஸ்!

Nathanjagk said...

//Open your mouth at once and let me see,' demanded Yashoda, pulling him close to her. Krishna knew that he wasn't getting very far by struggling. Krishna opened his mouth. Yashoda looked. She was startled and could only exclaim ‘Ah!’ She did not see mud in Krishna's mouth. But she saw all the worlds!//

மன்னிக்கலாம் என்​னை நீங்கள்!
நந்தா ​சொல்லித்தான் இங்கு வருகிறேன். என் முதல் காலடி! அதுதான் ஒரு ​பெரு மயக்கம்.. எப்படி இத்த​னை நாள் இ​தை தவறவிட்​டோம் என்பதாக...!

நான் இப்ப ய​சோதா 'ஆ'!

ப்ரியமுடன் வசந்த் said...

பின்னுறீங்க

கவிஞர்வித்யா..

வாழ்த்துக்கள்..

Vidhoosh said...

நந்தா: நீங்கதான! அட! இந்த முறை shortlist-டாவது ஆயிடுவேன் போலருக்கே. அதற்கான அறிகுறிகள் உங்கள் comment-டில் தெரியுதே!

ராஜாராம்: நாம் போட்ட டீல் அப்படியே இருக்கும். கவலை வேண்டாம். உங்கள் அளவுக்கு உணர்வுகள் பேசவில்லை. ஒரு நகரவாசி போல நாசூக்காய் தொட்டு செல்கிறது இக்கவிதை. உங்கள் கவிதைகள் கிராமத்துக் காதல் போல. :))

பு.பட்டியன்: அதிக சிரமம் வேண்டாம். ஒரு மரம் போல ஒரு பெண் என்று பாருங்கள். simple.

ரௌத்ரன்: நன்றி

கே.ஆர். / இன்றைய கவிதை குழுவினர்களுக்கு ரொம்ப நன்றி.

ஜெகநாதன்: சராமாரியாய் போட்டுத் தாக்கிட்டீங்க. என் மகளே என்னைத தாயாக பிறக்க வைத்தாள். அவள் மூலம் கண்ட உலகம் அதிகம். ஒரு நிலையில் அவளே என் உலகமாகவும் ஆகிப் போனாள். அவ்வளவுதான்.

வசந்த்: நன்றிங்க.

--அன்புடன்
விதூஷ் @ வித்யா

மண்குதிரை said...

வாழ்த்துக்கள். கவிதை நல்லா இருக்குங்க

கமலேஷ் said...

அருமையான கவிதை
நல்ல வரிகள்..
ரொம்ப பிடிச்சிருக்கு...

S.A. நவாஸுதீன் said...

//சில மரங்களை வாசிக்கலாம் புத்தகமாக
சாட்சி மணியடிக்கும் மௌன மரம்
ஒரு நாள் பேசலாம் தன்னைப் பற்றி.//

அருமையா வந்திருக்கு வித்யா. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

உயிரோடை said...

க‌விதை எப்போஓஓஓஒ முடியும் என்று இருந்த‌து. ந‌ன்றாக‌ இருக்கின்ற‌து வித்யா. வாழ்த்துக‌ள் வெற்றி பெற‌

"உழவன்" "Uzhavan" said...

நல்லாருக்கு. வாழ்த்துக்கள் :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வெற்றி பெற வாழ்த்துகள்

Vidhoosh said...

நன்றி மண்குதிரை.

நன்றி கமலேஷ்

நவாஸ். நன்றிங்க

ஓஓ லாவண்யா.. :)) நன்றி

உழவன் - நன்றி

டி.வி.ராதாக்ருஷ்ணன்: நன்றிங்க.

பூங்குன்றன்.வே said...

//கரைந்து வரும் குளிர் காற்றின் நெகிழ்வில்
இன்னும் காத்திருக்கும் குழந்தைகளின்
ஏக்கம் நிறைந்தப் பார்வைகள் - அவர்களின்
கேள்விக்கு காத்திருக்கும் எனதொரு பதில்//

இந்த வரிகள் ரொம்பவும் ரசிக்க வைத்தது.கவிதை ரொம்ப அனுபவிச்சு எழுதி இருக்கீங்க வித்யா !!!

ஜெனோவா said...

எனக்கு மிகப் பிடித்திருந்தது !
வெற்றி பெற வாழ்த்துக்கள் வித்யா !

இரவுப்பறவை said...

ரொம்ப நல்லா இருக்குங்க....
வெற்றி பெற வாழ்த்துக்கள்...

தேவன் மாயம் said...

வித்யா! வாழ்த்துக்கள்!! இப்போதுதான் இப்படியொரு போட்டி விசயமே தெரியுது!!

யாத்ரா said...

கவிதையை முழுமையாக ரசித்தேன், பல இடங்களின் கவித்துவத்தில் லயித்து திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருந்தேன், ரொம்ப நல்ல கவிதை, வாழ்த்துகள்.

நசரேயன் said...

என்னைக்காவது விளக்கம் போட்டு பதிவு போடும் போது கருத்து சொல்லுறேன். போட்டியிலே வெற்றி பெற வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan said...

//சில சூதாட்டங்களும் வியாபாரங்களும்
நீதியாகக் கிடைக்கும் சில சாபங்களின் சாட்சியாய்
சில மரங்களை வாசிக்கலாம் புத்தகமாக//


அருமை விதூஷ்

வெற்றி பெற வாழ்த்துக்கள்

முகமூடியணிந்த பேனா!! said...

அருமை வித்யா ...

வெற்றி பெற வாழ்த்துகள்!!!!

Ashok D said...

நாந்தாவுக்கு நான் ரிப்பிட்டு போட்டுக்குனு அப்டியே அப்பிட்டு ஆகறேன் :P

Vidhoosh said...

பூங்குன்றன்: நன்றிங்க
ஜெனோவா:நன்றிங்க
இரவுப்பறவை:நன்றிங்க
தேவன் மாயம் : நன்றிங்க
//இப்போதுதான் இப்படியொரு போட்டி விசயமே தெரியுது!!//நீங்களும் களத்தில் குதிங்க.

யாத்ரா:நன்றிங்க

நசரேயன் : விளக்கமா? :))

தேனம்மை லக்ஷ்மணன்: நன்றிங்க

முகமூடியணிந்த பேனா: நன்றிங்க

Sakthi said...

பிரம்மாதம்... எனக்குத்தான் இப்புடி எல்லாம் எழுத வருவனாங்குது.. சக்தி...!

அவனி அரவிந்தன் said...

ஆழியில் முத்துக்குளிப்பதைப் போல ஒரே மூச்சில் படிக்க வேண்டியிருந்தது. முத்தாகவே ஒளிர்கிறது கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

பாலச்சந்தர் said...

arumai vidhya:)

Senthilkumar said...

வெற்றி பெற வாழ்த்துகள்!

Radhakrishnan said...

முதலில் அவசரமாக வாசித்துப் போனதில் கவிதையை சிதறவிட்டேன். பின்னர் நிறுத்தி நிதானமாக வாசித்தபோது வார்த்தைகளை உட்கிரகித்தபோது கவிதை வானளவு உயர்ந்து நிற்கிறது.

மரம் பிறருக்கு பயன் தரும், நாமும் பிறருக்கு பயன்படுவோம்.

ஆரோகணம், அவரோகணம்!

சுருதி குறைந்ததால் வரும் வேதனை.

மரத்தின் வளர்ச்சியால் பெருமை.

இலைகள் தரும் குளுமை என கவிதைகளில் வரும் வார்த்தைகளும் சரி, பின்னர் வரும் கவிதையின் ஏக்கங்களும் சரி கவிதை முழு அர்த்தம் பெற்று விடுகிறது.

வெற்றி பெற வாழ்த்துகள் வித்யா.

Post a Comment