இதய நாற்காலியில் இருந்த ஆணிகள்

ஏ கொசுவே! என்னை கடித்தாய் நீ!
அது உன் குணம்!
உன்னை அடிக்க முடியாமல்
நீ கடித்த இடத்தை பளீரென
நானே அடித்துத் தவிக்கிறேன்!
நீ தப்பித்ததன் காரணம்
பறந்து போய் விட்டதால் மட்டுமே என
கர்வப் படாதே! நீ திமிர் வளர்க்கும்
உன் உடம்பில் என் இரத்தம்!
===============================
உன்னை யாரும் கவர்ந்து சென்று விடக்கூடாதென
தினமும் தினமும் இரவில் வருவேன்
நீ இருக்கும் தெருவிற்கு.
whistle-லும் அடிப்பேன் சத்தமாய்
உன் வீட்டு வாசலில் நின்று.
பிறகு பெருங்குரலெடுத்து கத்தி
அழைப்பேன் உன்னை நான்
"watchman வந்திருக்கேன்மா!"
==================================
என் இதயம், kidney, liver எல்லாம் நீயே
நான் தினம் தினம் மூழ்கும் அன்பெனும் river நீயே
என் வாழ்வில் இனிமேல் forever நீயே
நேரம் கெட்ட நேரத்தில் வரும் fever நீயே
===================================
ஏதும் காலடி ஓசை கேட்கும் போதெல்லாம்
அது நீதான் என்றே நம்புகிறேன்
காற்று இலேசாய் சலசலக்கும் போதெல்லாம்
அது நீதான் என்றே நம்புகிறேன்
மல்லிகை மணம் வீசும் போதெல்லாம்
அது நீதான் என்றே நம்புகிறேன்
கல கலவென்ற சிரிப்பொலி கேட்டால்
அது நீதான் என்றே நம்புகிறேன்.
எனக்கு நீ ஒரு (செல்லப்) பேய்!!!
============================================
என் இதயத்தை மட்டும் தான்
திருடி என்னை காலி செய்தாய்
என்றே நான் நினைத்தேன்
என் வீட்டுக்கு நீ வரும் வரை!!!
============================================



.

10 comments:

R.Gopi said...

இப்போது தான் முதல் வருகை தந்தேன் உங்கள் வலை தளத்திற்கு

மிக நன்றாக உள்ளது........

தொடர்ந்து வருவேன்........

வாழ்த்துக்கள்.......

நேரம் கிடைக்கும் போது என் வலைத்தளத்திற்கும் வருகை தாருங்கள்.


www.edakumadaku.blogspot.com

www.jokkiri.blogspot.com

அகநாழிகை said...

வித்யா,
ஏன் இப்பூடி கொலை வெறி.......
000
முதல் தவிர மற்ற எல்லாவற்றையும் மிக இரசித்தேன்.

சீக்கிரமே பச்சையுடை கிடைக்க வாழ்த்துக்கள்.

//என் இதயம், kidney, liver எல்லாம் நீயே
நான் தினம் தினம் மூழ்கும் அன்பெனும் river நீயே
என் வாழ்வில் இனிமேல் forever நீயே
நேரம் கெட்ட நேரத்தில் வரும் fever நீயே//

சிரிப்பு வந்துவிட்டது.

‘சூப்பர்‘ இப்படி யாருக்கும் போட்டதில்லை.

உங்கள் கவிதைகள் சூப்பர் என்று சொல்ல வைத்து விட்டீர்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Vidhoosh said...

நன்றி கோபி. நிச்சயம் உங்கள் எழுத்துக்களைப் படிக்கிறேன்.

நன்றி வாசு. அதென்ன பச்சையுடை??? ;)

எனக்கு தெரிந்து

1. பச்சை நிறம் நோய் நுண்மக்கொல்லி மருந்து போல் செயல்படுகிறது.

2. இந்த நிற உடையணிந்தால் உடற்பயிற்சி செய்தால் கிடைக்கக்கூடிய நன்மைகள் கிடைக்கும். பெருமூளையை உடல் நலனுக்கு ஏற்பச் சமன் செய்து வைத்திருக்கும்.

3. பிட்யூட்டரி சுரப்பி சிறப்பாக இயங்க இந்தப் பச்சை நிறம் உதவும்.

4. "அறிவுத் தெளிவு" உண்டாகும்.

;)

நேசமித்ரன் said...

ஆகா
இது என்ன 'கவிஜ'
நீங்களும் கிளம்பிடீகளா?
நடக்கட்டும் .. நடக்கட்டும்....!
forever fever- aa இல்லாம இருந்தா சரி
:)
nice

ச.முத்துவேல் said...

அடடா! கவுஜ தொகுப்பு அதுக்குள்ள முடிஞ்சுபோச்சே.

தலைப்புல ஆரம்பிச்ச குறும்பு, முழுக்கவும் தொடர்ந்தது. ரசிக்க முடிந்தது.

நந்தாகுமாரன் said...

hmmm ... கஷ்டகாலம் ... கவிதைக்கு ... கொடுமைங்க ...

யாத்ரா said...

\\என் இதயம், kidney, liver எல்லாம் நீயே
நான் தினம் தினம் மூழ்கும் அன்பெனும் river நீயே
என் வாழ்வில் இனிமேல் forever நீயே
நேரம் கெட்ட நேரத்தில் வரும் fever நீயே\\

அருமை :)

வாசு சொன்னது போல் இந்த இடத்தில் எனக்கும் பயங்கரமாய் சிரிப்பு வந்துவிட்டது.

:)

Vidhoosh said...

நன்றி நேசமித்ரன் - இதைஎல்லாம் கவிதை என்று அழைக்க மனமில்லை. அதான் நசரேயன் பாணியில் "கவுஜ".
===================
நன்றி நந்தா. வருத்தப் படவேண்டாம். லேபிளையும் படியுங்க. இதை கவிதை என்றே கூறவில்லை நான்.
===================
வாங்க யாத்ரா. நல்லா இருக்கீங்களா? வாய் விட்டு சிரிச்சா நல்லதுதான். ரொம்ப சீரியஸ் ஆக இருந்து விட்டது இந்த வாரம். அதான் கொஞ்சம் relaxing!!! :))

Anonymous said...

கொசு கவிதை சூப்பருங்க...

விக்னேஷ்வரி said...

நீ திமிர் வளர்க்கும்
உன் உடம்பில் என் இரத்தம்! //

அட.

ஒரு மாதிரி தான் இருக்கு கவிதைத் தொகுப்பு. நடத்துங்க.

Post a Comment